2. ஆபிரகாம்

ஆபிரகாம், இயேசு பிறப்பதற்கு ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பாகப் பிறந்து, மெசொப்பொத்தாமியா என்கிற, நவீனக்கால ஈராக் தேசத்தில் வளர்ந்தான் (அ) வாழ்ந்துவந்தான். தேவன், தாம் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் தோட்டத்தில் தரிசனமானதைப்போலவே, ஒரு நாள் ஆபிரகாமுக்கும் தரிசனமானார்.
“… நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமா(னார்)” (அப்போஸ்தலர் 7:2).
காணப்படக்கூடிய வடிவில் தேவன் ஒரு மனிதனுக்குத் தோற்றமளிப்பதாயிருந்தால், அந்த மனிதன் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு பரிசுத்தவானாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒருவேளை நீங்கள் நினைக்கக்கூடும். உண்மையில், நிலைமை எதிர்மாறானதாக இருந்தது. ஆபிரகாம், விக்கிரகங்களைச் சேவித்துவந்தான் (யோசுவா 24:2). ஆகவே, தேவனே முதலடி எடுத்து, ஆபிரகாமுக்குத் தம்மை வெளிப்படுத்தினார். அது ஏறக்குறைய, “இந்த மனிதர்கள் என்னைத் தேடி வருவார்களென நான் காத்திருந்தால், அவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள். நானே அவர்களைத் தேடுவேன், நானே அவர்களைக் கண்டுபிடிப்பேன், மற்றும் நானே அவர்களை ஆசீர்வதிப்பேன்,” என்று தேவன் சொல்வதைப்போன்றதாகும். ஆபிரகாம் தேவனைத் தேடுவதற்கு நெடுங்காலம் முன்பாகவே, தேவன் ஆபிரகாமைத் தேடிவந்தார். அவ்வாறே, நாம் தேவனைத் தேடுவதற்கு முன்பே, தேவன் நம்மைத் தேடுகிறார்.
வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது
ஆபிரகாமுக்குத் தேவன் தரிசனமானபோது, அவர் அற்புதமானதொரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார்.
“நான் உன்னை ஆசீர்வதி(ப்பேன்) . . . பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்…” (ஆதியாகமம் 12:2, 3).
ஆபிரகாமுக்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்தம், நமக்காகவும் மற்றும் உலகிலுள்ள அனைவருக்காகவும் வழங்கப்பட்டதொரு வாக்குத்தத்தமாகும். பழைய ஏற்பாடு ஆபிரகாமின் சந்ததியினர்மீது கவனம் செலுத்துகிறது. ஏனெனில் உலகிலுள்ள பிற சந்ததியினர் தேவையில்லை என்பதால் அல்ல. மாறாக, உலகிலுள்ள மற்றவர்கள் மிக முக்கியம் என்பதும், ஆபிரகாமின்மூலமாகப் பூமியிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பதே தேவனுடைய திட்டம் என்பதும்தான் காரணம்.
மீண்டும் தேவனுடைய ஏராளமான நன்மையைக் கவனியுங்கள். நாம் தேவனைவிட்டு வழிவிலகிச் சென்று, நமது சொந்தக் கடவுள்களை அல்லது நமது சொந்தத் தீர்மானங்களைத் தேவனுக்குரிய இடத்தில் வைத்துவிட்டோம். தலைமுறைகள் தேவனை எதிர்த்து முரட்டாட்டம்செய்ததால், மானுடக் குடும்பம் எங்கிலும் தீமை பெருக்கெடுத்துள்ளது. இருப்பினும், ஏதோ ஒரு சிலரை மட்டுமல்ல, மாறாக பூமியின் அனைத்துக் குடும்பங்களையும் ஆசீர்வதிக்கவேண்டுமென்பதே தேவனுடைய வாஞ்சையாய் இருக்கிறது.
ஆனால் தேவனுடைய ஆசீர்வாதம் எவ்வாறு வரும்?
ஆபிரகாமின் சந்ததியின்மூலமாகவே தமது ஆசீர்வாதம் வரும் என்று தேவன் வாக்குப்பண்ணினார் (ஆதியாகமம் 22:18). ஆனால் ஆபிரகாம் வயதுசென்றதொரு மனிதனாயிருந்தான். மேலும், அவனுக்குச் சந்ததியுமில்லை. ஆகவே, இந்த வாக்குத்தத்தம் எப்படி நிறைவேற்றப்படக்கூடும்?
ஆண்டுகள் உருண்டோடின, ஆபிரகாமும் காத்திருந்தான். அவனது மனைவியான சாராள், தேவன் அவளுக்கொரு குழந்தையை வாக்கருளியபோது, நகைத்தாள் (ஆதியாகமம் 18:12). ஆனால் தேவன் தமது வார்த்தையில் என்றென்றும் உண்மையுள்ளவர். தேவனின் வாக்குத்தத்தம் நிறைவேறியது. சாராள் தனது முதிர்வயதில் ஈசாக்கைப் பெற்றெடுத்தாள் (ஆதியாகமம் 21:2-3). ஒவ்வொரு குழந்தையும் விலையேறப்பெற்றதுதான். ஆனால் அத்தனை வாக்குத்தத்தங்களும் சார்ந்திருக்கும் ஒரு குழந்தைக்காக இவ்வளவு நீண்ட காலம் காத்திருந்தபின் பிறந்த ஈசாக்கு, ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் மிகச்சிறந்த பொக்கிஷமானான்.
நிறைவேற்றப்பட்டதொரு வாக்குத்தத்தம் மக்களனைவரையும் ஆசீர்வதிப்பதான தேவனுடைய வாக்குத்தத்தம், கற்பனைக்கெட்டாத விலைக்கிரயத்தில் நிறைவேற்றப்படும். அந்த விலைக்கிரயத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்னவென்றால், ஆபிரகாமைத் தேவன் சோதித்தறிந்ததான, வேதனை மிகுந்த கதையாகும். “அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்” (ஆதியாகமம் 22:2).
பலியிடுவதற்கான தேவை என்ன என்று ஆபிரகாம் ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை. தேவனுடைய ஆசீர்வாதம் உலகத்தின் தேசங்களைச் சென்றடையவேண்டுமானால், ஏதோ ஒரு மாபெரும் பலிசெலுத்தப்படவேண்டியது அவசியம் என்பதை அவன் புரிந்துகொண்டதுபோல் தோன்றுகிறது.
ஆபிரகாமின் இடத்தில் உங்களையே வைத்துப்பார்க்க முயற்சியுங்கள். நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?
ஆபிரகாம், செய்யும்படித் தேவன் தனக்குக் கூறிய காரியம்குறித்துப் போராடியிருக்கலாம். “தேவனுக்காகப் பலியைச்செலுத்த என்னை அழைத்திருக்கிறார். ஆனால், நான் எப்படி என் குமாரனை ஒப்புக்கொடுக்கமுடியும்? எல்லா ஜனங்களுக்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவருவதுதான் தேவனுடைய திட்டம். ஆனால் அவர் சொல்வதை நான் செய்யாவிடில், அது எப்படி நிகழமுடியும்? எனது சந்ததியின்மூலமாக உலகத்தை ஆசீர்வதிப்பதே தேவனுடைய வாக்குத்தத்தம். ஆனால் ஈசாக்கு மரித்துப்போனால், அந்த வாக்குத்தத்தம் எவ்வாறு நிறைவேற்றப்படமுடியும்? அத்துடன், சாராளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?”
ஆபிரகாம் பலவிதமான போராட்டங்களினூடாகக் கடந்துசென்றிருந்தாலும், தேவனுக்குக் கீழ்ப்படிவதை அவன் தெரிந்துகொண்டான்.
“ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள். அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போ(னார்கள்)” (ஆதியாகமம் 22:6-8).
ஈசாக்கு, பலமுள்ள வாலிபக் காலத்தில் இருந்திருக்கலாம். அவன் தன் தோள்களின்மேல் கட்டைகளைச் சுமந்துவந்தான். அவன் விரும்பியிருந்தால், ஆபிரகாமைச் சுலபமாக மேற்கொண்டிருக்க முடியும். ஆனால், ஈசாக்கு அப்படிச் செய்யவில்லை. அவன் தன் ஜீவனை ஒப்புக்கொடுக்க மனதாயிருந்தான். ஆகவே, இங்கே நீங்கள் காண்பது என்னவெனில், தன் குமாரனை ஒப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கும் ஒரு தகப்பனையும், தன்னையே ஒப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கும் ஒரு குமாரனையும்தான். இந்தக் காரியத்தில், அவர்கள் இருவருமே ஒருமனமுள்ளவர்களாய் இருந்தார்கள். எதற்காகவென்றால், உலகிற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்பொருட்டு.
அவர்கள் அந்த மலையின் உச்சியை வந்தடைந்தபோது, ஆபிரகாம் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
“பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே … பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே … என்றார்” (ஆதியாகமம் 22:10-12).
தேவன் ஆபிரகாமைச் சோதித்தார், ஆனால், ஆபிரகாம் தன் குமாரனை ஒப்புக்கொடுக்க அவர் அனுமதிக்கவில்லை. “தேவன் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார்,” என்று ஆபிரகாம் சொன்னதுபோலவே, தேவனே அதை அருளிச்செய்தார்.
“ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்;அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்” (ஆதியாகமம் 22:13).
ஓர் ஆட்டுக்கடா, ஈசாக்குக்குப் பதிலாகப் பலியிடப்பட்டது. அந்த ஆட்டுக்கடா பலிபீடத்தின்மேல் ஏற்றப்பட்டதால், ஈசாக்கின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டது. ஓர் ஆட்டுக்கடாவின் ஜீவன், ஈசாக்கின் ஜீவனைவிடவும் மிகவும் குறைந்த மதிப்புள்ளது. ஆனால், தேவன் குறைந்த மதிப்புடையதொரு பலியை அப்போதைக்கு ஏற்றுக்கொண்டார். ஏனெனில், ஒருநாள் சிறந்ததொரு பலியானது செலுத்தப்படும். ‘தேவனுடைய ஆசீர்வாதம் உலகிற்கு வர என்ன விலைக்கிரயம் செலுத்தப்படவேண்டும்? என் குமாரனைப் பலியாக்குவதைவிடச் சிறந்த பலி எதுவாக இருக்கக்கூடும்’ என்று ஆபிரகாம் யோசித்திருக்கவேண்டும்.
இந்தச் சம்பவத்துக்கு நாம் இருவிதங்களில் பதில் அளிக்கவேண்டியிருக்கும்: முதலாவது, ஒருவர் தனது சொந்தக் குமாரனையே பலியாக ஒப்புக்கொடுப்பதை நினைத்து, நீங்கள் திகிலில் உறைந்து போய்விடுவீர்கள் என்று நம்புகிறேன். அப்படித்தான் நீங்கள் உணரவேண்டியிருக்கும்.
இரண்டாவது, இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டும் உண்மையை நீங்கள் பிரமிப்புடன் உற்று நோக்குவீர்கள் என்று நம்புகிறேன். ஆபிரகாம் செய்ய அனுமதிக்காத காரியத்தைத் தேவன் செய்தார். அவர் தமது குமாரனை ஒப்புக்கொடுத்தார். அவரது குமாரன், தம்மையே ஒப்புக்கொடுத்தார். உலகின் அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவருவதற்கான தேவனுடைய வாக்குத்தத்தம், அவரது குமாரனாகிய இயேசுவின்மூலமாக வந்தது. மேலும், கற்பனைக்கெட்டாத விலைக்கிரயத்தினால் இந்த ஆசீர்வாதம் நம்மை வந்தடைந்தது.
தியானிப்பதற்கும் கலந்துரையாடுவதற்குமான கேள்விகள்
1. நாம் தேவனைத் தேடுவதற்கு முன்பே, தேவன் நம்மைத் தேடுகிறார் என்பதைக் கேள்விப்படும்போது, உங்கள் மனதில் முதலாவது தோன்றுவது என்ன?
2. தேவன் உங்கள் சார்பில் இருக்கிறார் அல்லது எதிராக இருக்கிறார் என்பதில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
3. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் காணக்கூடிய தேவனுடைய ஆசீர்வாதத்தின் அடையாளங்கள் என்ன?
4. ஆபிரகாம் ஏன் தேவனுக்குக் கீழ்ப்படிந்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவனது இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என நினைக்கிறீர்கள்?
5. தேவன் உங்களைச் சோதிக்கிறார் என்று நீங்கள் என்றாவது உணர்ந்ததுண்டா? அவ்வாறு உணர்ந்தபோது, நீங்கள் எப்படிப் பதிலளித்தீர்கள்?