4. தாவீது

பிற தேசங்கள், ஒரு நிலையான தலைமையைக் கொண்டிருந்தன. தேவஜனங்களும், ஒரு ராஜாவை விரும்பினார்கள். சவுல் என்ற பெயருடைய முதல் ராஜா, பெருத்த ஒரு ஏமாற்றமானான். அவன் ஆணவமிக்கவனும், வஞ்சகமானவனும், (அ) தந்திரம் நிறைந்தவனும், புத்தியீனனுமாயிருந்து, காலப்போக்கில், மென்மேலும் நிலையற்றவனாகவும் மாறிப்போனான். தேவன் தமது இருதயத்தையே பிரதிபலிக்கக்கூடியவனாயிருந்த, வேறொரு ராஜாவை மனதில் வைத்திருந்தார். ஆகவே கர்த்தருடைய வழிநடத்துதலின்படி, தீர்க்கதரிசி சாமுவேலினால் தாவீது அபிஷேகிக்கப்பட்டான் (1 சாமுவேல் 16:13). ஆனால் தாவீது சிங்காசனத்தில் ஏறுமுன், பல ஆண்டுகள் கடந்துபோயின.
தாவீது, கோலியாத்தின்மீது பெற்ற வெற்றியைக்குறித்து ஜனங்கள் கேள்விப்பட்டபோது, அவன் அவர்களது கவனத்தை ஈர்த்தான். ஓர் அரக்கனைப்போன்ற இந்த மனிதன், ஒன்பது அடி உயரமானவன். அவனது ஆயுதவர்க்கம் 125 பவுண்டுகள் எடைகொண்டது. மற்றும் இரும்பு முனைகொண்ட நீண்டதோர் ஈட்டியையும் அவன் பிடித்திருந்தான்.
ஒவ்வொரு நாள் காலையிலும் கோலியாத், தேவஜனங்களை நிந்திக்கும்படியாகப் புறப்பட்டு வந்தான்.
“… உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள், அவன் என்னிடத்தில் வரட்டும். அவன் என்னோடே யுத்தம்பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராயிருப்போம்ளூ நான் அவனை ஜெயித்து அவனைக் கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராயிருந்து, எங்களைச் சேவிக்கவேண்டும்…” (1 சாமுவேல் 17:8-9).
இஸ்ரவேலர்கள் என்ன செய்வதென்று அறியாதிருந்தார்கள். கோலியாத்திற்கு எதிராகத் தோற்றுப்போவார்கள் என்று அவர்களனைவரும் உணர்ந்தார்கள். ஆகவே, தாவீது வந்து அவனுடன் யுத்தம்பண்ண முன்வரும்வரை, நிந்தனையும், அவமானமும் தொடர்ந்தன.
பள்ளத்தாக்கின் மறுபுறத்தில் அந்த இராட்சஸனை (அ) அரக்கனை எதிர்கொண்டபோது, தாவீது, பரிதாபத்திற்குரிய அளவுக்குச் சிறியவனாகக் காணப்பட்டிருக்கவேண்டும். ஆனால் கோலியாத், தேவனுக்கு எதிர்த்து நின்றான், தேவனோ தாவீதோடிருந்தார்.
“தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்ளூ அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்துபோனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்” (1 சாமுவேல் 17:49).
தாவீதின் வெற்றி, வேதாகமத்தின் மையக் கதைக்குள் நமக்கொரு தெளிவான புரிதலைத் தருகிறது. தாவீதின் காலத்திற்கு ஓராயிரம் ஆண்டுகளின்பின், தாவீது ராஜாவின் சந்ததியான இயேசு, யுத்தக் களத்திற்கு வந்து நமது மாபெரும் சத்துருக்களை எதிர்கொண்டார். இயேசு தோற்றுப்போயிருந்தால், நமக்கு யாதொரு நம்பிக்கையும் இருந்திருக்காது. ஆனால் இயேசு, பாவம், மரணம் மற்றும் நரகம் ஆகிய நம் மாபெரும் எதிரிகள்மீது வெற்றிசிறந்தார். ஆகவே, அவரது ஜனங்களும் அவரது வெற்றியில் பங்கடைவார்கள்.
பழைய ஏற்பாட்டு ராஜாக்களுள் தாவீது, சந்தேகத்துக்கிடமின்றி மிகச்சிறந்தவன். அவனது தலைமைத்துவத்தின்கீழ், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களும் ஒரே இனமாக ஒன்றிணைக்கப்பட்டிருந்தார்கள். தேவனுடைய ஜனங்களை ஒடுக்கிவந்த சத்துருக்கள், பின்னுக்குத் தள்ளப்பட்டு, தேவஜனங்கள் செழிப்படைந்தனர். தேவஜனங்கள் இதற்குமுன்பு ஒருபோதும் இல்லாத அளவுக்குப் பலத்த பாதுகாப்பும், செழித்தோங்கும் பொருளாதாரமும், மற்றும் நிலையான தலைமைத்துவமுமாக, மிகவும் சிறப்பாக இருந்தனர்.
மேலானதொரு ராஜா நமக்குத் தேவை
மாபெரும் காரியங்களைச் சாதித்தவனாகிய தாவீது, திடமனமாய்க் கிரியை செய்கிறவனும், துடிப்பான மனிதனுமாயிருந்தான். ஆனாலும் அவன், மாபெரும் வீழ்ச்சிகளையும் அடைந்தான். சிலவேளைகளில் நாம், அவனது முன்மாதிரியினால் அவனிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். வேறு சில நேரங்களில் நாம், அவனது வீழ்ச்சியினால் அவனிடமிருந்து மாறுபட்டும் கற்றுக்கொள்கிறோம்.
தாவீது, தனது அதிகார வலிமையைத் துஷ்பிரயோகம் செய்து, பத்சேபாள் என்னப்பட்ட ஒரு பெண்ணுடன் விபசாரம் செய்தான். அவள் கர்ப்பந்தரித்தபோது, ராஜாவின் இராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த அவளது கணவன் உரியாவைத் தாவீது திரும்ப அழைப்பித்து, அவனை வீட்டிற்கு அனுப்பினான். அதனால், குழந்தை பிறக்கும்போது, உரியாவும், மற்ற அனைவருமே, இது உரியாவின் குழந்தை என்று கருதிக்கொள்வார்கள் என்று அப்படிச் செய்தான். ஆனால் உரியா, உத்தமமான ஒரு மனிதனாயிருந்தான். தன் உடன்பணியாளர்களாயிருந்த யுத்த மனுஷர், யுத்தக்களத்தில் தங்கள் உயிரைப் பணயம்வைத்துப் போராடிக்கொண்டிருக்கும்போது, தன் வீட்டின் சௌகரியங்களை அனுபவிக்க அவன் மறுத்துவிட்டான்.
ஆகவே தாவீது உரியாவை, அவனது தளபதிக்கு ஒரு குறிப்பெழுதி முத்திரையிடப்பட்ட கடிதத்துடன், யுத்தத்துக்கே திருப்பியனுப்பினான்:
“… மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனைவிட்டுப் பின்வாங்குங்கள்…” (2 சாமுவேல் 11:15).
உரியாவின் மரணச் செய்தி பத்சேபாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவனுக்காக அவள் துக்கம் அநுசரித்த நாட்களுக்குப் பிறகு, தாவீது அவளை அழைத்தனுப்பினான். அவள் அவனுக்கு மனைவியானாள். தேவன் அதை அறிந்திருந்தார் என்ற ஒன்றைத் தவிர, மூடி மறைத்தல் முழுவதும் நிறைவேறிவிட்டது, “தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது” (2 சாமுவேல் 11:27).
தேவனுடைய கற்பனைகளைத் தாவீது மீறிவிட்டான். அவன், பிறனுடைய மனைவியை இச்சித்துவிட்டான். அவன் பத்சேபாளிடமும், உரியாவிடமும் பொய் சொல்லிவிட்டான். அவன் பிறனுடைய மனைவியைக் களவாடிவிட்டான். அவன் விபசாரம் செய்துவிட்டான். மற்றும் அவன், அவள் கணவனின் உயிரையே பறித்துவிட்டான்.
தாவீதின் இரகசியப் பாவத்தைக்குறித்து அவனைக் கண்டனம்பண்ணும்படியாக, தீர்க்கதரிசியான நாத்தானைத் தேவன் அனுப்பினார். தன் வீட்டிற்கு வந்த ஒரு விருந்தினனுக்கு விருந்துசெய்யும்படியாக, ஓர் ஏழை மனிதனின் ஒரேயொரு ஆட்டுக்குட்டியைத் திருடிய, ஓர் ஐசுவரியவானைப்பற்றிய கதையொன்றை நாத்தான் தாவீதிடம் கூறினான். ஒரு ராஜாவாக, தேசத்தில் நீதிக்குப் பொறுப்பேற்கவேண்டிய தாவீது, இந்தக் கதையைக் கேட்டுக் கடும் கோபங்கொண்டான்.
“அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” (2 சாமுவேல் 12:5), என்றான்.
“அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: ‘நீயே அந்த மனுஷன்….,’ என்றான்” (வசனம் 7).
“அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: ‘நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்,’ என்றான்” (வசனம் 13).
பாவியின் வழி கடினமானது. தனது சொந்தப் பாவத்தினால் பிறரது வாழ்வில் ஏற்படுத்தப்பட்ட வேதனையின் பிரதிபலிப்பாகத் தாவீது, தன் சொந்தக் குடும்பத்தில் ஆழ்ந்த வேதனையை அனுபவித்தான். ஆனால் தாவீது, மனந்திரும்பியதொரு பாவியின் வழியில் நடந்தான். தேவனும் இந்தக் கடினமான பாதையில் அவனுடனேகூட நடந்தார் (காண்க சங்கீதம் 51). தேவனோடுகூட நடக்கிறதான, எவ்வளவுதான் கடினமான, எந்தப் பாதையாயினும், அவருடன் நடக்காத எந்தச் சுலபமான பாதையைவிடவும், சாலச்சிறந்தது.
தாவீதின் அனைத்துச் சாதனைகளையும் மீறி, மேலானதொரு ராஜாவுக்கான தேவை நமக்கிருப்பதை, அவனது கதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. தாவீதுக்கும், இயேசுவுக்கும் இடையிலான வேறுபாடு, மிகவும் கவனிக்கத்தக்கது. தாவீது, தன்னைத்தானே காத்துக்கொள்ள உரியாவின் ஜீவனை ஒப்புக்கொடுத்தான். ஆனால் இயேசு, மற்றவர்களை இரட்சிக்கத் தம் சொந்த ஜீவனையே ஒப்புக்கொடுத்தார்.
தாவீதுக்குத் தேவன் ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார்
தாவீது, தேவனைக் கனம்பண்ணும்படியாக ஓர் ஆலயத்தைக் கட்ட விரும்பினான். ஆனால் தேவனுக்கோ, வேறு திட்டங்கள் இருந்தன. ஆகவே, அவர் அவற்றை ஒரு பிரமிக்கத்தக்க வாக்குத்தத்தத்தில் பிரகடனம் செய்தார் (அ) அறிவித்தார்.
“… நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன். அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்ளூ அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்” (2 சாமுவேல் 7:12-14).
வேதாகமக் கதையானது, மக்களனைவருக்கும் தேவனுடைய ஆசீர்வாதம் எப்படி வரும் என்பதைப்பற்றியது. தேவன் ஏற்கெனவே, ஆபிரகாமின் ஒரு வழித்தோன்றல்மூலமாகத் தமது ஆசீர்வாதம் வருமென்று வாக்குப்பண்ணியிருந்தார். இப்பொழுதோ, ஓராயிரம் ஆண்டுகளின்பின்பாக, தாவீதின் சந்ததியில் வரக்கூடிய ஒரு ராஜாவின்மூலமாக, அந்த ஆசீர்வாதம் வருமென்று தேவன் வெளிப்படுத்தினார்.
நாம் புதிய ஏற்பாட்டிற்கு வரும்போது, அதன் முதல் வசனம்,
“ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு” (மத்தேயு 1:1), என்று சொல்கிறது.
ஆபிரகாமுக்கும், தாவீதுக்கும் உரைக்கப்பட்ட, தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றப்படுவது இயேசு ஒருவரில்மட்டுமே. பூமியின் அனைத்துக் குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்படுவது அவர் ஒருவரில்மட்டுமே. அவரே என்றென்றைக்கும் ஆளுகைசெய்கிற ராஜாவானவர். அவர், தாவீதின் வம்சாவளியிலே பிறந்தார். ஆனால், தேவனே அவருடைய பிதாவானவர். அவரோ, தேவனுடைய குமாரனாவார்.
தியானிப்பதற்கும் கலந்துரையாடுவதற்குமான கேள்விகள்
1. தாவீது ராஜா, பத்சேபாளுடன் பாவத்தில் ஈடுபட்டான் என்பதைக் கேட்கும்போது, உங்களது மனதில் தோன்றியது என்ன?
2. பாவம், மரணம், மற்றும் நரகம் ஆகியவை, நமது மிகப்பெரிய சத்துருக்கள் என்பதில் நீங்கள் உடன்படுகிறீர்களா? ஏன்?
3. தாவீது, தனது இரகசியப் பாவத்துடன் வாழ்ந்தது, எப்படிப்பட்டதாயிருந்திருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
4. நீங்கள் ஓர் இரகசியப் பாவத்தில் வாழ்ந்திருந்தீர்கள் என்றால், நாத்தானைப்போன்ற ஒரு நபரைத் தேவன் உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று நீங்கள் விரும்புவீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை?
5. நீங்கள் எப்பொழுதாவது, தேவனுக்காக ஏதாவதொன்றைச் செய்ய விரும்பி, ஆனால் உங்களது நல்ல நோக்கங்களுக்கான அந்த வாசலைத் தேவன் அடைத்ததுண்டா?