8. சிலுவையிலறையுண்டார்

இயேசு, பட்டயங்களோடும், தடிகளோடுங்கூடிய பெருங்கூட்டத்தினரால் சூழப்பட்டு, ரோமப் போர்ச்சேவகர்களால் கைதுசெய்யப்பட்டார். பின்பு, அன்று இரவே, விசாரணைக்குமேல் விசாரணையாக வைத்து, பிரதான ஆசாரியன், ராஜா, மற்றும் பொந்தியு பிலாத்து ஆகியோரிடம், அவர் இங்குமங்குமாக அலையவிடப்பட்டார். ரோமாபுரியின் ஆளுநரான பிலாத்து, இயேசு குற்றமற்றவர் என்று அறிவித்தும், கூட்டத்தினரிடமிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக, அவன் இயேசுவை வாரினால் அடிக்கப்படும்படி உத்தரவிட்டான். ஆனால் அந்தக் கூட்டத்தினர் திருப்தியடையாதபோது அவன், இயேசுவைச் சிலுவையில் அறையப்படும்படிக்கு ஒப்புக்கொடுத்தான் (யோவான் 19:16).
அந்தச் சிலுவையில் நிகழ்ந்துகொண்டிருந்தவற்றையெல்லாம் கவனித்தபோது, தேவதூதர்களின் மனங்களில் என்னவெல்லாம் தோன்றியிருக்கக்கூடும்? தேவனுடைய குமாரனானவர் இவ்வுலகில் பிறந்தபோது மனுஷ சரீரமெடுத்ததைப் பார்த்தபோதே, அவர்கள் ஆச்சரியத்தில் திகைத்துப்போயிருப்பார்கள். இப்பொழுதோ, அந்தச் சரீரம் ஒரு வாரினால் கிழிக்கப்பட்டு, முட்களாலான ஒரு கிரீடம் அவர் சிரசில் பதிக்கப்பட்டு, அவரது கரங்களிலும், பாதங்களிலும் ஆணிகள் கடாவப்பட்டிருந்ததை அவர்கள் பார்த்தார்கள்.
சிலுவையிலே, மனிதனின் பாவம், அதன் முழுப் பயங்கரத்தையும் எட்டியது, மற்றும் அதன் மிகக் கோரமான முகத்தையும் காட்டியது. தேவனுடைய கட்டளைகளையெல்லாம் மீறிவிட்டு, இப்பொழுது நாம் தேவகுமாரனைச் சிலுவையிலறைந்துகொண்டிருந்தோம். மனித வரலாற்றிலேயே, தேவனுடைய நியாயத்தீர்ப்பு விழுந்திருக்கக்கூடிய ஒரு தருணம் எப்பொழுதாவது இருந்திருக்குமானால், அது இதுதான்.
தேவனுடைய நியாயத்தீர்ப்பு அந்த நாளில் வருமென்று, கிறிஸ்து அறிந்திருந்தார். ஆனால் அவர், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34), என்று கதறிக் கூப்பிட்டார். அவர், “அதை அவர்கள்மேல் விழவிடாதேயும். அது என்மேல் விழட்டும். அவர்களது பாவத்தின் மீதான உமது நியாயத்தீர்ப்பின் இடிதாங்கியாக நான் இருக்கட்டும்,” என்று சொன்னார். இதுதான் சுவிசேஷத்தின் மையப் பகுதியாகும். நாம் மன்னிக்கப்படும்படியாக இயேசு, நமது பாவங்களுக்கான தண்டனையைத் தாமே ஏற்றுக்கொண்டார்.
“பிதாவே, இவர்களுக்கு மன்னியும்,” என்கிற இயேசுவின் ஜெபம், அவரிடத்தில் வருகிறதான ஒவ்வொரு நபருடைய பாவத்தையும் மூடுகிறதாயிருக்கிறது. அந்த ஜெபம், அவரைச் சிலுவையில் ஆணிகளால் அறைந்தவர்களின் பாவங்களையே மூடக்கூடுமானால், உங்களுடைய அனைத்துப் பாவங்களையும்கூட மூடுவதற்கு, அதனால் கூடும்.
பரதீசு திறக்கப்படுகிறது
இயேசுவின் இருபுறங்களிலும், இரண்டு கள்ளர்கள் சிலுவைகளில் அறையப்பட்டிருந்தனர். குற்றங்களால் நிறைந்த வாழ்வையே தங்கள் வாழ்க்கை முறையாய்க் கொண்டிருந்த அவர்கள், மனித நியாயத்தீர்ப்பின் தண்டனையை அனுபவித்துக்கொண்டிருந்தனர். விரைவிலேயே, மரணம் அவர்களது பாடுகளிலிருந்து அவர்களை விடுவித்துவிடும். ஆனால் அதன்பின்பு, அவர்கள் தேவ சமூகத்திற்குள் பிரவேசித்து, தேவ நீதியை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அவர்களது நிலைமை, நம்பிக்கையற்றதாகக் காணப்பட்டது.
அவர்கள் இருவருமே கூட்டத்தினருடன் சேர்ந்துகொண்டு இயேசுவை நிந்தித்தார்கள் (மத்தேயு 27:44). ஆனால், மரணம் நெருங்கி வரவர, ஏதோவொரு மாற்றம் உண்டாயிற்று. அவர்களுள் ஒருவன், விரைவிலேயே தேவ சமூகத்திற்குள் பிரவேசிப்பதைப்பற்றிய ஒரு புதிய உணர்வை அடைந்தான். மற்றொரு கள்ளன் தொடர்ந்து இயேசுவை நிந்தித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில், இந்த மனிதன்: “நீ தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?” என்று அவனைக் கடிந்துகொண்டான். இயேசு, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்,” என்று ஜெபித்ததை அவன் கேட்டிருந்தான். ஒருவேளை இயேசு, அவனையும் மன்னிக்கக்கூடும்.
அவன், “(இயேசுவே), நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி, இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” (லூக்கா 23:42-43).
பரதீசு! இம்மனிதன் தன் வாழ்க்கையைத் துயரத்துக்கேதுவாக வீணாக்கிவிட்டான். ஆனால் இயேசு, குறைவில்லாத, நித்திய சந்தோஷத்திற்குரிய ஒரு வாழ்வுக்குள், மரணத்தின் வழியாகவே உடனடியாக இடமாற்றம் செய்வதாக, அவனுக்கு வாக்குக்கொடுத்தார். நரகத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த இந்த மனிதன், திடீரென்று தான் பரலோகத்தின் சந்தோஷத்திற்குள், இயேசுவின் காரணமாகப் பிரவேசிக்கப்போகிறதைக் கண்டான். இயேசு, அந்தக் கள்ளனுக்கு மட்டுமல்ல, தம்மில் விசுவாசம்கொள்கிற யாவருக்கும், தேவனுடைய பிரசன்னத்திற்கும், ஆசீர்வாதத்திற்கும் திரும்பிவருகிற வழியைத் திறந்துவைத்தார்.
சூரியன் இருளடைந்தது
இயேசு, மனிதர்களின் நியாயத்தீர்ப்பை அனுபவித்தார். இப்பொழுது அவர், தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் சகிக்கப்போகிறார். அவர் தமது பாடுகளின் மையப்பகுதிக்குள் பிரவேசிக்கும்போது தேவன், சூரியனை இருளடையச் செய்தார்: “அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று” (லூக்கா 23:44).
இந்த அந்தகாரமான நேரத்தில் இயேசு, நமது குற்றத்தைச் சுமந்துகொண்டு, தேவ கோபாக்கினியைத் தமக்குள் ஈர்த்துக்கொண்டார். இவை அனைத்தையும், அவர்தாமே, தமது பிதாவினுடைய அன்பின் ஆறுதலின்றித் தனியொருவராய்ச் சகித்தார். மற்றும் அவரது பாடுகளின் ஆழத்தில் அவர், “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார் (மாற்கு 15:34).
அந்தப் பயங்கரமான அந்தகாரத்தில் இயேசு என்ன செய்துகொண்டிருந்தார் என்று, தேவன் நமக்குக் கூறுகிறார்:
“அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்” (1 பேதுரு 2:24).
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு,
நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்;
நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது;
அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து,
அவனவன் தன்தன் வழியிலே போனோம்;
கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும்
அவர்மேல் விழப்பண்ணினார் (ஏசாயா 53:5-6).
இயேசு கிறிஸ்து மூலமாகத் தேவன், பாவிகளைத் தம்முடன் ஒப்புரவாக்கிக்கொள்கிறார் என்ற அற்புதமான சத்தியத்தை இந்த வேத வசனங்களும், மற்றும் இவைபோன்ற அநேக வேத வசனங்களும், சுட்டிக்காட்டுகின்றன.
மரணம் வீழ்த்தப்பட்டது
மூன்று மணி நேரங்களுக்குப் பிறகு, அந்தகாரம் கடந்துபோனது. இயேசுவின் மீது ஊற்றப்பட்ட நியாயத்தீர்ப்பு, முற்றிலுமாய் வடிந்தோடவிடப்பட்டு, நிறைவேறித் தீர்ந்தது. நீதி பூரணப்பட்டது. இயேசு, “முடிந்தது” (யோவான் 19:30), என்று ஜெயமாய் முழங்கினார்.
தேவஜனங்களை மீட்பதற்குத் தேவைப்பட்ட அனைத்துமே நிறைவேற்றப்பட்டுத் தீர்ந்தன: மன்னிப்பு வெளிப்பட்டது, ஆக்கினைத் தீர்ப்பு நீக்கப்பட்டது, மற்றும் இயேசுவில் விசுவாசம்கொள்ளப்போகிற யாவருக்காகவும் பரலோகம் திறக்கப்பட்டது.
“இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்” (லூக்கா 23:46). யாரேனும் மரிக்கும்போது, அவர்களால் பேசவேமுடியாத அளவுக்கு வரும்வரை, அவர்களது குரல், பெலவீனமாகிக்கொண்டே வருகிறது. மரிக்கும் தறுவாயில், யாருமே மகா சத்தமாய்ப் பேசுவதில்லை. ஆனால் இயேசு மகா சத்தமாய்ப் பேசினார்.
இயேசு மரணத்தைக் கண்டு, கலங்கிவிடவில்லை. அவர், “ஒருவனும் அதை (என் ஜீவனை) என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு” (யோவான் 10:18), என்று சொன்னார். கிறிஸ்துவின் ஜீவன், எடுக்கப்படவில்லை. மாறாக, அது கொடுக்கப்பட்டது. அவர் தம்மைத்தாமே நமக்காக ஒப்புக்கொடுத்தார்.
விசுவாசிப்போர் அனைவருக்காகவும் இயேசு, மரணத்தின் தன்மையை மாற்றியிருக்கிறார். அவர் மரித்தபோது, நமக்கு வரவேண்டியதான நியாயத்தீர்ப்பும், ஆக்கினைத்தீர்ப்பும், அவர்மீது ஊற்றப்பட்டன. “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” (ரோமர் 8:1).
தியானிப்பதற்கும் கலந்துரையாடுவதற்குமான கேள்விகள்
1. இயேசு சிலுவையில் மரித்ததைக்குறித்து, உங்கள் மனதில் முதலாவது தோன்றுவது என்ன?
2. இயேசு, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்,” என்று சொன்னார். நீங்கள் குற்றமற்றவராயிருந்தும் சிலுவையின் பாடுகளையும், நிந்தையையும் சகிக்க நேர்ந்திருந்தால், நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள் என்று நினைக்கிறீர்கள்?
3. எந்தக் கள்ளனுடன் நீங்கள் உங்களை அதிகம் அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள்? இயேசுவை நிந்தித்தவனுடனா? அல்லது இயேசுவிடம், தன்னை நினைத்தருளும்படிக் கேட்டவனுடனா? ஏன்?
4. இயேசு ஏன் சிலுவையில் மரித்தார் என்று உங்களைக் கேட்கும் ஒரு நண்பரிடம், நீங்கள் என்ன விளக்கம்தருவீர்கள்?
5. இயேசுவைப்போல நீங்களும் நம்பிக்கையோடு மரிப்பதிலிருந்து உங்களைத் தடுக்கக்கூடிய ஏதாவதொன்று, உங்கள் வாழ்க்கையில் இருக்கிறதா?