6. பிறந்தார்

இயேசுவின் பிறப்பு, அவர் மற்ற மனிதர்களைப்போன்றவர் அல்ல என்பதற்கு முதல் சான்றாகும். அது நிகழ்ந்தது இப்படித்தான்: மரியாள், யோசேப்பு என்னும் பெயருடைய ஒரு நபருடன் திருமணத்துக்காகத் தயாராகிக்கொண்டிருந்த ஒரு இளம் கன்னிகையாயிருந்தாள். தேவன் அவளிடத்தில் ஒரு தேவதூதன்மூலமாகப் பேசினார். அவன் அவளுக்குத்…
Previous Post
5. எஸ்றா
Next Post
8. சிலுவையிலறையுண்டார்
பிறந்தார்

இயேசுவின் பிறப்பு, அவர் மற்ற மனிதர்களைப்போன்றவர் அல்ல என்பதற்கு முதல் சான்றாகும். அது நிகழ்ந்தது இப்படித்தான்: மரியாள், யோசேப்பு என்னும் பெயருடைய ஒரு நபருடன் திருமணத்துக்காகத் தயாராகிக்கொண்டிருந்த ஒரு இளம் கன்னிகையாயிருந்தாள். தேவன் அவளிடத்தில் ஒரு தேவதூதன்மூலமாகப் பேசினார். அவன் அவளுக்குத் தோன்றி, அவளை நோக்கி:

“மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக” (லூக்கா 1:30-31), என்று சொன்னான்.

மரியாள் ஒரு கன்னிகையாயிருந்ததால் தேவதூதனைப் பார்த்து, “இது எப்படியாகும்?” (வசனம் 34), என்று கேட்டாள். தேவதூதரின் பதிலானது, மிக அற்புதமானதோர் இரகசியத்தை வெளிப்படுத்துகிறது. அது என்னவென்றால்,

“பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்” (1:35).

தேவதூதன் சொன்னவை அனைத்தையும் மரியாள் புரிந்துகொள்ளமுடியாமல் போயிருக்கக்கூடும். ஆனால் விசுவாசத்தின் ஒரு கிரியையில், அவள் தேவனுடைய திட்டத்துக்குத் தன்னையே அர்ப்பணித்து: “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” (லூக்கா 1:38), என்றாள்.

இயேசுவின் பிறப்புக்குச் சற்றுமுன், தேசத்திலுள்ள ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த இடத்தில் குடிமதிப்பு எழுதவேண்டுமென்று அகஸ்துராயன் ஒரு கட்டளை பிறப்பித்தான். இதனால், மரியாளும், யோசேப்பும் பெத்லகேமுக்குப் போகவேண்டியிருந்தது. அந்தச் சிறிய பட்டணத்திலிருந்த அனைத்துச் சத்திரங்களும், ஏற்கெனவே நிரம்பிவிட்டன. ஆகவே மரியாளும், யோசேப்பும், மிருகங்களுடன் தங்களுக்கான ஒரு தங்குமிடத்தைக் கண்டுபிடித்தனர். அங்குதான் இயேசு பிறந்தார்.

“அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்” (லூக்கா 2:7).

இயேசு இரட்சகரும் ராஜாவுமாயிருக்கிறார்

இரண்டு நிகழ்வுகள் இல்லாவிட்டால், இயேசுவின் பிறப்பை உலகம் தவறவிட்டிருக்கக்கூடும்.
முதலாவது, ஒரு தேவதூதன் மேய்ப்பர்களுக்குத் தோன்றி அவர்களை நோக்கி,

“பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக்கா 2:10-11).
அந்த மேய்ப்பர்கள் துரிதமாய்ப் பெத்லகேமுக்குப் போய், மரியாளையும், யோசேப்பையும், மற்றும் பிள்ளையையும் கண்டார்கள். அவர்களது சந்திப்பிற்குப்பின்பு, அவர்கள் பெற்றுக்கொண்ட அந்த நற்செய்தியை அவர்களால் கூடுமானவரை அனைவருக்கும் அறிவித்தார்கள்.

அவர்கள் சொன்னதைக் கேட்டவர்கள் யாவரும், “மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்(டு) அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்” (லூக்கா 2:18). இது உண்மையாயிருந்தால் என்னாகும்? அது நல்லதொரு தொடக்கமாயிருக்கிறது. தேவன் ஒரு இரட்சகரை அனுப்பினாரென்றால், அங்கே உங்களுக்கொரு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் தேவனோடு சமாதானத்தை அடையமுடியும். உங்கள் பாவங்களும், வீழ்ச்சிகளும் முடிவல்ல. நீங்கள் மன்னிக்கப்படமுடியும். நீங்கள் மீட்டெடுக்கப்படமுடியும்.
இரண்டாவது, இயேசு பிறந்தபோது தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி, கிழக்கிலிருந்து ஞானிகள் வந்தார்கள். அவர்கள் எருசலேமுக்கு வந்தபோது, அவர்கள்:

“யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்(று)” (மத்தேயு 2:2), கேட்டார்கள்.

இந்த ஞானிகள் அநேகமாக, ராஜாக்களாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, தங்கள்மீது இயேசுவுக்கு இருக்கும் அதிகாரத்தை அவர்கள் அங்கீகரித்தனர். இயேசு, ராஜாவாயிருக்கிறார். ராஜாக்களும்(கூட) அவரைப் பணிந்துகொண்டனர்.

அப்படியெனில், இயேசு ராஜாவாக இருக்கிறாரென்பதற்குப் பொருள் என்ன? அதற்கு, அவரே நமது வாழ்வில் நாம் எதை நம்புவது, எப்படி வாழ்வது என்பதை வழிநடத்தும் அதிகாரம் உடையவர் என்பது பொருள். ஆனால் கிழக்கிலிருந்து வந்த ராஜாக்கள் அவரைப் பணிந்துகொண்டபோது, ராஜாவாயிருந்த ஏரோது அவரை அழிக்கவேண்டுமென்று வெகு தீவிரமாயிருந்து, பெத்லகேமிலும், அதின் சகல எல்லைகளிலுமிருந்த (இரண்டு வயதுக்குட்பட்ட) எல்லா ஆண்பிள்ளைகளையும் கொல்வதற்கு ஆணையிட்டான்.
இயேசுவைக்குறித்து மக்கள் இன்னும் பிளவுபட்டுத்தான் கிடக்கிறார்கள். சிலர் அவரை இரட்சகர் என்று விசுவாசித்து, அவரை ராஜாவாகப் பணிந்துகொள்கிறார்கள்;  மற்றவர்கள் அவரது இரட்சிப்பைத் தேவையற்றது என்று கண்டு, (அ) கருதி, அவர் தங்கள் வாழ்வை ஆளுகைசெய்வதை மறுப்பதன்மூலம் அவருக்கு எதிர்த்து நிற்கிறார்கள். அவர் பிறந்த தருணத்திலிருந்தே அது இப்படித்தான் இருந்துவருகிறது.

ஆகையால், ஒவ்வொருவர் வாழ்வின்மீதும் ஆளுகைசெய்ய, இயேசு ஏன் அதிகாரமுடையவராய் இருக்கவேண்டும்?

இயேசு தேவனாயிருக்கிறார்

மரியாளின் குழந்தை, “தேவனுடைய குமாரனாக” இருப்பார் (லூக்கா 1:35), என்று தேவதூதன்
அவளுக்கு அறிவித்தான். பின்பு, யோசேப்புக்குத் தேவதூதன் தோன்றும்போது, இம்மானுவேல் என்பவராக இயேசு அறிவிக்கப்படுகிறார். அதற்கு, “தேவன் நம்மோடிருக்கிறார்” (மத்தேயு 1:23), என்று பொருள்.

மரியாள், ஒரு கன்னிகையாயிருந்தாள். அவளது குழந்தை, தேவனின் நேரடியான முன்முயற்சியின் விளைவாகவே பிறந்தது. அதில் யோசேப்பு ஒன்றும் செய்வதற்கு இல்லை. மரியாளின் கர்ப்பத்திற்குள் வந்த ஜீவனானது, பரிசுத்த ஆவியானவருடைய ஒரு சிருஷ்டிக்கும் கிரியையின் வாயிலாக, அங்கே மனுஷ ரூபமாய் வந்தது. மனுக்குலத்திலிருந்து ஓர் இரட்சகர் தோன்றுவதற்காகத் தேவன் காத்திருக்கவில்லை. அவர் மனுக்குலத்திடம் வந்தார். மரியாளிடமிருந்து மனுஷ ரூபமெடுத்து, தேவன் மனிதரானார்.

நமது வாழ்க்கை, நாம் நம்முடைய தாயின் கருவில் கர்ப்பந்தரிக்கப்பட்டபோது தொடங்கியது. அந்தத் தருணத்திற்கு முன்பாக, நாம் பிறக்கவுமில்லை, உயிரோடுமில்லை. ஆனால் இயேசுவின் விஷயத்தில், அது வித்தியாசமாயிருந்தது. அவரது வாழ்க்கை, மரியாளின் கர்ப்பத்தில் தொடங்கவில்லை. மாட்டுத் தொழுவத்தில் அவர் பிறக்குமுன், பரலோகத்தில் தேவனுடைய நித்திய ஜீவியத்தில் பங்குள்ளவராயிருந்தார்.

இயேசு, பிதாவின் மகிமையிலும், பிதாவின் அன்பிலும், எப்பொழுதுமே பங்குள்ளவராயிருந்துவருகிறார் (யோவான் 17:5, 24). ஆனால்,

“அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” (பிலிப்பியர் 2:6-7).

இயேசு ஒரு மனிதராயிருக்கிறார்
தேவன், எவ்வாறு மனுஷ ரூபமெடுத்து, ஒரு குழந்தையாகப் பிறக்கமுடியும் என்று நம்மால் ஒருபோதும் முழுமையாகப் புரிந்துகொள்ளவே முடியாது. ஆனால் அவர் அப்படிப் பிறந்தார் என்பதே, புதிய ஏற்பாட்டின் முக்கியக் கூற்று ஆகும். இதுவே அவரை நமக்கு இரட்சகராக இருப்பதற்குத் தகுதிப்படுத்துகிறது.

பிரிவினைக்குள்ளாகிவிட்ட இரண்டு தரப்பினரிடையே மத்தியஸ்தராக இருக்கும் ஒருவரைக் கற்பனைசெய்யுங்கள். அவர், குற்றமிழைக்கப்பட்டவரைச் சுற்றி ஒரு கரத்தையும், குற்றமிழைத்தவரைச் சுற்றி மற்றொரு கரத்தையும் வைத்து, அவர்களிருவரையும் ஒருசேரக் கொண்டுவருகிறார். இயேசுவே, தேவனுக்கும் நமக்கும் இடையேயான அந்த மத்தியஸ்தர் (1 தீமோத்தேயு 2:5). இயேசு, தேவனோடு ஒன்றாயிருப்பதாலும், நம்மோடும் ஒன்றாயிருப்பதாலும், அவரால் நம்மை இரட்சிக்கமுடியும்.

தேவன் எப்படி ஒரு மனிதரானார் என்கிற அற்புதம், புத்திக்கெட்டாத ஓர் இரகசியமாகும். ஆனால் அதை அறிந்துகொள்வதன்மூலம், வேதாகமம் இயேசுவைப்பற்றிக் கூறும் மற்ற அனைத்துக் காரியங்களையும், நாம் உணர்ந்துகொள்ள அது ஏதுவாக இருக்கிறது. இயேசுவில், தேவன் ஒரு மனிதரானார் என்றால், பின்பு அவரது சாட்சிகள், அவரது அற்புதங்கள் மற்றும் அவரது உயிர்த்தெழுதல் ஆகியவை, நமக்கு வியப்பூட்டுபவையாக இருக்கக்கூடாது. மற்ற எல்லாவற்றையும் நமக்கு விளங்கப்பண்ணுகிற இரகசியம், தேவனின் மானுடப் பிறப்பே ஆகும்.

தியானிப்பதற்கும் கலந்துரையாடுவதற்குமான கேள்விகள்
1. இயேசு ஒரு கன்னிகையிடமிருந்து பிறந்தார் என்று கேள்விப்படும்போது, உங்கள் மனதில் முதலாவது தோன்றுவது என்ன?
2. இயேசுவின் பிறப்பு, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி என்று தேவதூதர்கள் சொன்னார்கள். உங்களுக்கு அது நற்செய்திபோலத் தோன்றுகிறதா?
3. இயேசுவைக்குறித்து மக்கள் இன்னும் பிளவுபட்டுத்தான் கிடக்கிறார்கள். அவருக்கான எதிர்விளைவுகளாக, நீங்கள் கண்டவை யாவை?
4. இயேசுவைப்பற்றி நீங்கள் உங்கள் இருதயத்தில் ஒரு பதற்றத்தை அல்லது முரண்பட்ட நிலையை உணர்கிறீர்களா? அது ஏன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
5. உங்கள் வாழ்க்கையின்மீது ஆளுகைசெய்ய இயேசுவுக்கு அதிகாரம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை?

Series : வேதாகமத்தின் கண்ணோட்டம்