3. மோசே

மோசேயின் வாழ்க்கையே ஆபத்தில்தான் ஆரம்பமாகிறது. இனப்படுகொலை என்கிற இழிவானதொரு செயலால், ஆபிரகாமின் வம்சாவளியில் பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நைல் நதியிலே போட்டுவிடும்படிப் பார்வோன் தன் ஜனங்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான் (யாத்திராகமம் 1:22). ஆனால் மோசேயின் தாயோ, தன் மகனைக் காப்பாற்ற ஒரு திட்டத்தை…
Previous Post
2. ஆபிரகாம்
Next Post
4. தாவீது
மோசே

மோசேயின் வாழ்க்கையே ஆபத்தில்தான் ஆரம்பமாகிறது. இனப்படுகொலை என்கிற இழிவானதொரு செயலால், ஆபிரகாமின் வம்சாவளியில் பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நைல் நதியிலே போட்டுவிடும்படிப் பார்வோன் தன் ஜனங்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான் (யாத்திராகமம் 1:22). ஆனால் மோசேயின் தாயோ, தன் மகனைக் காப்பாற்ற ஒரு திட்டத்தை வகுத்தாள். அவள் ஒரு நாணற்பெட்டியில் அவனைக் கிடத்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே ஒளித்துவைத்தாள்.

ஒருநாள், பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள். அவள் அந்தப் பெட்டியைக் கண்டு, அதற்குள்ளே இருந்த பிள்ளையின்மீது இரக்கமுற்று, மோசேயைத் தன் அரண்மனைக்குக் கொண்டுவந்து, அவனை அங்கே வளர்த்தாள். மோசே, பணத்தினால் பெறக்கூடிய அனைத்து ஆடம்பரங்களும் சூழ வளர்ந்துவந்தான். ஆனாலும், தான் அந்த அரண்மனையைச் சேர்ந்தவன் அல்ல என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் ஆபிரகாமின் சந்ததியைச் சேர்ந்தவன். அத்துடன் அவனது ஜனங்கள் பிரச்சினையில் இருந்தார்கள். ஆகவே அவன் அரண்மனையைவிட்டு வெளியேறி, தேவனின் ஆசீர்வாதத்தை வாக்குத்தத்தமாய்ப் பெற்ற ஜனங்களுடனேகூட தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான்.

தேவன், தமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவரவும், தாம் வாக்குப்பண்ணின தேசத்திற்குள் வழிநடத்தவும், மோசேயை நியமித்தார் (ஆதியாகமம் 12:7). இந்தக் காலக்கட்டத்தில், ஆபிரகாமுடைய சந்ததியினரின் எண்ணிக்கை, 600,000 ஆண்கள் (யாத்திராகமம் 12:37). எனவே, அந்த முழுச் சமூகத்திலும் ஏறக்குறைய இருபது இலட்சம் எபிரெய ஜனங்கள் இருந்திருக்கக்கூடும்.

இந்த ஜனங்கள், பார்வோனின் பணியாளர்களாயிருந்தனர். எனவே முதலில் அவன், அவர்களைப் போகவிட மறுத்தான். ஆனால் தேவன் மோசேயின்மூலமாக அனுப்பிய தொடர்ச்சியான வாதைகளின்பின்பு அவன் மனம் மாறி, தேவஜனங்கள் புறப்பட்டுப்போக அனுமதித்தான் (யாத்திராகமம் 12:31). ஆனால் அவர்கள் சென்றபின்பு, பார்வோன் மீண்டும் தன் மனதைக் கடினப்படுத்திக்கொண்டு, தனது சேனைகளை அவர்களுக்குப் பின்னே அனுப்பினான்.

ஜனங்கள் சிவந்த சமுத்திரத்தை வந்தடைந்தபோது, அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டதுபோல் காணப்பட்டது. ஆனால் தேவன், சமுத்திரத்தினூடே அவர்களுக்காக ஒரு பாதையை உண்டாக்கினார்.

பின்பு, “மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்ளூ அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்க்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்ளூ ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்ளூ அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது” (யாத்திராகமம் 14:21-22).

ஆனால் பின்தொடர்ந்து வந்த சேனைகள் சமுத்திரத்தைக் கடக்க முயற்சித்தபோது தேவன்,
மதிலாக நின்ற அந்த ஜலம், அவர்கள்மேல் விழுந்து புரளும்படிச் செய்தார். மாபெரும் அழிவிலிருந்து தாங்கள் தப்புவிக்கப்பட்டபோது, தேவனைத் தவிர வேறு யாருமே இந்த அற்புதத்தை நிகழ்த்தியிருக்கமுடியாது என்பதைத் தேவஜனங்கள் அறிந்தார்கள்.

தேவன் மோசேயினிடத்தில் பத்துக் கற்பனைகளைக் கொடுத்தார்இந்த மாபெரும் விடுதலையின்பின்பு மோசே, சீனாய் மலைக்குத் தேவஜனங்களை வழிநடத்தினான். அங்கே, தேவன் அவர்களுக்குப் பத்துக் கற்பனைகளைக் கொடுத்தார்.

“தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:

உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
2. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். …
3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாகளூ …
4. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாகளூ ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாகளூ ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்ளூ … …
5. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
6. கொலை செய்யாதிருப்பாயாக.
7. விபசாரம் செய்யாதிருப்பாயாக.
8. களவு செய்யாதிருப்பாயாக.
9. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
10. பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாகளூ பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்” (காண்க. யாத்திராகமம் 20:1-17).

இந்தக் கற்பனைகளெல்லாம், தேவனுடைய குணாதிசயங்களின் நேரடிப் பிரதிபலிப்புக்களாய் இருக்கின்றன. தேவனைப் பிரதிபலிக்கிற ஒரு வாழ்வை வாழும்படியாகத் தமது ஜனங்களைத் தேவன் அழைக்கிறார். நீங்கள் விபசாரம் செய்யக்கூடாது என்பது ஏன்? ஏனெனில், தேவன் உண்மையுள்ளவர். நீங்கள் களவு செய்யக்கூடாது என்பது ஏன்? ஏனெனில், தேவன் நம்பத்தக்கவர். நீங்கள் பொய் சொல்லக்கூடாது என்பது ஏன்? ஏனெனில், தேவன் சத்தியத்தைப் பேசுகிறவர்.

அன்புகூருவதென்றால் என்ன என்பதையும் இந்தப் பத்துக் கற்பனைகளும் விவரிக்கின்றன. முதல் நான்கு கற்பனைகள், தேவனிடத்தில் அன்புகூருவது எப்படிப்பட்டது என்று நமக்குக் கூறுகின்றன. தேவனிடத்தில் அன்புகூருவது என்பது, அவரையே முதலாவதாக வைப்பதையும், அவர் இருக்கிறவண்ணமாகவே அவரைப் பற்றிக்கொள்வதையும், அவரது நாமத்தைக் கனம்பண்ணுவதையும், மற்றும் அவருக்கு நமது நேரத்தைக் கொடுப்பதையும்பற்றியது. கடைசி ஆறு கற்பனைகளும் நமது அயலாரிடத்தில் அன்புகூருவது எப்படிப்பட்டதென்பதைக் கூறுகின்றன. பிறரிடத்தில் அன்புகூருவது என்பது, கனம்பண்ணவேண்டிய இடத்தில் கனம்பண்ணுவதையும், பிறரது நலன்களில் சிறப்பான முன்னுரிமைகொடுத்துச் செயல்படுவதையும், உண்மையுள்ளவர்களாய் இருப்பதையும், எடுத்துக்கொள்வதைவிடவும், கொடுப்பதையும், உண்மையையே பேசுவதையும், பிறருக்குத் தேவன் கொடுத்திருப்பவற்றைக்குறித்து களிகூர்வதையும்பற்றியது.

தேவன் மோசேயினிடத்தில் பலிகளைக் கட்டளையிட்டார்

இந்தக் கற்பனைகளெல்லாம் எப்பொழுதும் நிறைவேற்றப்படுகிறதோர் உலகம் சிறப்பான விதத்தில் நன்றாகவே இருக்கும். ஆனால், மலையின் உச்சியில் மோசே பத்துக் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டிருந்தபோது, மலையின் அடிவாரத்தில் தேவஜனங்கள் அவற்றை மீறிக்கொண்டிருந்தார்கள்.

மோசே இல்லாத நேரத்தில், அவனது சகோதரன் ஆரோன், பொன்னினால் கன்றுக்குட்டியின் வடிவிலான ஒரு விக்கிரகத்தைச் செய்தான். அப்பொழுது ஜனங்கள், “இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்” (யாத்திராகமம் 32:4). ஆகவே தேவன் மோசேயை நோக்கி, “நீ இறங்கிப்போளூ எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்” (யாத்திராகமம் 32:7), என்று சொன்னார்.

தேவஜனங்கள், முதல் கட்டளையை மீறிவிட்டார்கள். மோசே அவர்களை மனந்திரும்புதலுக்கு அழைத்தான். அவர்களில் மிகப்பெரும்பாலானோர் மனந்திரும்பினார்கள். ஆனால் அவர்கள் மன்னிக்கப்படுவதற்குமுன்பாக, ஏதோவொன்று தேவைப்பட்டது. ஒரு குற்றம் இழைக்கப்பட்டுவிட்டால், அதற்கான விலையைச் செலுத்தவேண்டியிருக்கும். எபிரெயர் 9:22-ன் படி, “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.”

நியாயப்பிரமாணத்தைத் தேவன் கொடுக்கும்போது, தமது ஜனங்களிடத்தில் பலிகளையும் அவர் கொடுத்தார். தேவனுடைய மனதிலும், இருதயத்திலும் மன்னிப்பும், மறுசீரமைப்பும், மீட்டெடுத்தலும், எப்பொழுதுமே இருந்தன. நியாயப்பிரமாணத்தின் முழுமையான தண்டனைகளைச் சந்திப்பதிலிருந்து, தேவஜனங்கள் பாதுகாக்கப்பட்டனர் என்பதையே பலிகள் குறிப்பிடுகின்றன.

வேதாகமத்தின் தொடக்க நிலையிலேயே, தேவன் நம்மை இயேசுவின் வருகைக்காக ஆயத்தப்படுத்துகிறார். பழைய ஏற்பாட்டில் உள்ள பலிகள், தேவகுமாரனானவர் இந்த உலகிற்கு ஏன் வரவேண்டியிருந்தது என்பதைக் காண்பிக்கின்றன. மிருகபலிகள் சுட்டிக்காட்டமட்டும் கூடுமானதாயிருந்ததை, இயேசு செயலில் காண்பித்தார். அவர் நமது பாவங்களுக்காகப் பரிகாரம் செய்தார்.

அதனால், அவர்மீதுள்ள விசுவாசத்தின்மூலமாகப் பாவமன்னிப்பு உண்டாயிருக்கிறது.தியானிப்பதற்கும் கலந்துரையாடுவதற்குமான கேள்விகள்
1. தேவன், சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்ததன்மூலம், தமது ஜனங்களை மீட்டார் என்று கேள்விப்படும்போது. உங்களது மனதில் தோன்றுவது என்ன?
2. எந்தக் கற்பனை, இப்பொழுதுள்ள உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமாகக் காணப்படுகிறது? ஏன்?
3. உங்களுக்கு மிகவும் சவாலாகத் தோன்றுகிற கற்பனை எது? ஏன்?
4. பத்துக் கற்பனைகளை ஜனங்கள் மீறினால், அவர்கள் எவ்வாறு மன்னிக்கப்படமுடியும்?
5. ஒவ்வொருவரும் பத்துக்கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதான ஓர் உலகில், நீங்கள் வாழ விரும்புவீர்களா?

Series : வேதாகமத்தின் கண்ணோட்டம்