பறத்தல் – அறிமுகம் (அ) முன்னுரை

நீங்கள் கிராண்ட் கேன்யன் பெரும்பள்ளத்தாக்கிற்கு ஒரு சுற்றுப்பயணம் போகத் திட்டமிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 277 மைல்கள் நீளமும், பதினெட்டு மைல்கள் அகலமும், மற்றும் ஒரு மைலுக்கும் அதிக ஆழமுமான, இந்தப் பரந்து, விரிந்த அதிசயத்தை
நன்கு ஆராய்வதுதான் உங்களது குறிக்கோள். அப்படியெனில், நீங்கள் எங்கே தொடங்குவீர்கள்?
நீங்கள் பள்ளத்தாக்கின் விளிம்பையொட்டி உங்கள் வாகனத்தை ஓட்டத் தீர்மானித்தால்,அதன் நீளம் மற்றும் அகலத்தைக்குறித்து அறியலாம். ஆனால் அதன் ஆழத்தை அறியமுடியாது. நீங்கள் பள்ளத்தாக்கிற்குள் இறங்கி நடக்கத் தீர்மானித்தால், அதன் ஆழம்
மற்றும் அகலத்தை அறிவீர்கள். ஆனால் அதன் நீளத்தை அறியமாட்டீர்கள்.
வாகனத்தில் சென்றாலோ, கிராண்ட் கேன்யனில் நடந்து சென்றாலோ, பள்ளத்தாக்கைப் பல்வேறு வழிகளில் அனுபவப்பூர்வமாக அறிந்துகொள்ளமுடியும். ஆனால் கிராண்ட் கேன்யன்மீது, பறந்துசெல்கிற வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், அதுவே சிறப்பான
தொடக்கமாக இருக்கும்.
விமானத்தில் பறந்து செல்லும்பொழுதும், சில வரம்புகள் இருக்கும். நீங்கள் உங்கள் கால்களால் நடந்து சென்றால்மட்டுமே கண்டறிந்துகொள்ளக்கூடிய அதிசயங்களின் உலகம் என்று ஒன்று இருக்கிறது. ஆனால் பறக்கும்போது அதன் விசாலத்தையும், அழகையும் காண்பதுமட்டும் அல்லாமல், நீங்கள் வாகனத்தினாலோ, நடைப்பயணமாகவோ செல்லும்போது கவனித்துப் பார்க்கவேண்டிய இடங்கள் எதுவென்று தெரிந்துகொள்ளலாம்.
ஃப்ளை த்ரூ த பைபிள் என்பது, முழு வேதாகமத்தைக்குறித்த மிக உன்னதமான ஓர் ஆய்வு ஆகும். நிறைய செய்திகளைப்பற்றிப் பேசவேண்டியிருப்பதால், நாம் விரைவாய்ச் செல்லப்போகிறோம். இந்தச் சுருக்கமான கண்ணோட்டத்தில், தேவன் யார் என்பதையும், நீங்கள் யார் என்பதையும், இயேசு யார் என்பதையும், மற்றும் அவர் உங்களுக்கு வழங்குவது என்ன என்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்ள உங்களுக்கு உதவும்.
நமது பயணம், பழைய ஏற்பாட்டுப் புத்தகத்துடன் தொடங்குகிறது. ஆதாம், ஆபிரகாம், மோசே, தாவீது, மற்றும் எஸ்றா ஆகிய ஐந்து நபர்களை அங்கே நாம் சந்திக்கப்போகிறோம். அதன்பின்பு சுவிசேஷங்களில், இயேசுவின் வாழ்விலிருந்து, அவரது பிறப்பு, சோதனைகள், சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், மற்றும் பரமேறுதல் ஆகிய ஐந்து நிகழ்வுகளைப் பார்ப்போம். அடுத்ததாகப் புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தின் நிருபங்களில், விசுவாசிப்போர் அனைவருக்கும் தேவன் வழங்குகிறதான, பரிசுத்த ஆவியானவர், விசுவாசம், மன்னிப்பு, திருச்சபை, மற்றும் பரலோகம், ஆகிய ஐந்து ஈவுகளைப்பற்றிச் சிந்திப்போம்.
வேதாகமத்தில் நாம் பார்க்கிற நிகழ்வுகள், வேறொரு காலக்கட்டத்தில் நிகழ்ந்தவைகள். எனவே, சில விஷயங்கள் புதியவைகளாக அல்லது அறிமுகமற்றவையாகத் தோன்றினால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதீர்கள். அது உங்களைச் சலிப்படையவிடாதீர்கள்.
வேதாகமத்தைத் திறக்கும்போது, நீங்கள் புதியதோர் உலகைக் கண்டறிந்துகொள்வீர்கள்.
ஒருவேளை நீங்கள், ‘நான் வேதாகமத்தை நம்புகிறேனா என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியவில்லை, ’ என நினைத்துக்கொண்டிருக்கலாம். அதனால் குழப்பம் ஏதுமில்லை. நீங்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறீர்கள் என்பதில் மகிழ்கிறேன். தயவுசெய்து, தேவன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும், அவர் என்ன செய்திருக்கிறார் என்பதையும் பாருங்கள்.
வேதாகமம், கடந்த காலத்தின் ஒரு நினைவுச்சின்னமாக இருப்பதைக்காட்டிலும், தேவன் இன்று(ம்) உங்களிடம் பேசுவதற்கான ஒரு ஊடகமாக இருக்கிறது என்பதை நீங்கள் காணலாம்.