14. திருச்சபை

திருச்சபையைக்குறித்து எண்ணும்போது, உங்கள் மனதிற்குத் தோன்றுவது என்ன? பல வர்ணக் கண்ணாடி ஜன்னல்களா? கனமான மர இருக்கைகளா? நீண்ட, சலிப்பூட்டும் பிரசங்கங்களா? (ஆனால்) வேதாகமம், “… கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, … … … தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” (எபேசியர் 5:25), என்று சொல்கிறது.
இயேசு, பல வர்ணக் கண்ணாடி ஜன்னல்கள், மர இருக்கைகள், மற்றும் நீண்ட, சலிப்பூட்டும் பிரசங்கங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுக்கவில்லை என்பதைப்பற்றி நீங்கள் நிச்சயத்தோடிருக்கலாம். எனவே, திருச்சபை என்பது என்ன? (மற்றும்) இயேசு ஏன் திருச்சபைக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுக்குமளவுக்கு, அவ்வளவாய்த் திருச்சபையின்மீது அன்புகூர்ந்தார்?
இயேசு, திருச்சபையைக்குறித்து இரண்டு தருணங்களில்மட்டுமே பேசினார். அவர் சொன்னது, திருச்சபையைக்குறித்த வரையறையை நமக்கு வழங்குகின்றது.
இயேசு திருச்சபையைப்பற்றி என்ன சொன்னார்
இயேசு முதன்முறையாகத் திருச்சபையைப்பற்றிப் பேசியபோது, எல்லாக் காலங்களிலும் மற்றும் எவ்விடத்திலும் உள்ள அனைத்து விசுவாசிகளைப்பற்றிக் குறிப்பிட்டார். பேதுரு, இயேசுவிலுள்ள தனது விசுவாசத்தை அறிக்கைசெய்தபோது, இயேசு அவனிடம்:
“மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” (மத்தேயு 16:18),
என்று சொன்னார்.
இவ்விடத்தில் இயேசு, எல்லாக் காலங்களிலும் மற்றும் எவ்விடத்திலும் உள்ள அனைத்து விசுவாசிகளையும்பற்றிப் பேசினார்: “நான் என் சபையைக் கட்டுவேன்” – ஒருமை! அனைத்து விசுவாசிகளையும் கொண்டிருக்கிறதான, ஒரே திருச்சபைதான் இருக்கிறது, அதை இயேசு கிறிஸ்துவே கட்டியெழுப்புகிறார். மேலும் அவர், இந்தத் திருச்சபைக்கு விரோதமாகப் “பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்வதில்லை,” என்று வாக்குத்தத்தம்பண்ணியிருக்கிறார்.
இங்கே கிறிஸ்து, ஓர் உள்ளுர்த் திருச்சபையைப்பற்றி அல்லது ஒரு சபைப் பிரிவைப்பற்றிப் பேசவில்லை. சரியான வழியைவிட்டு விலகி, மூடப்பட்ட சபைகளையும், சபைப் பிரிவுகளையும்குறித்த சோகக் கதைகள் உலகெங்கிலும் உண்டு. ஆனால் கிறிஸ்து கட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் திருச்சபையானது, ஜீவனுள்ளதாயும், ஆரோக்கியமாயும் இருக்கிறது. அது எக்காலத்திலும், எவ்விடத்திலும் இருக்கக்கூடிய, அனைத்து விசுவாசிகளையும் ஒன்றிணைத்துவருகிறது. மற்றும் அதன் ஒரு பெரியதொரு பகுதியானது, ஏற்கெனவே பரலோகத்தில் இருக்கிறது.
இரண்டாம் முறையாக இயேசு சபையைப்பற்றிப் பேசியபோது, ஓர் உள்ளுர் விசுவாசிகளின்
கூடுகையைப்பற்றித்தான் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
“உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; . . . அவன் செவிகொடாமற்போனால், . . . இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; . . .” (மத்தேயு 18:15-17).
“அதைச் சபைக்குத் தெரியப்படுத்து.” இது: “எக்காலத்திலும், எவ்விடத்திலுமுள்ள அனைத்து விசுவாசிகளுக்கும் அதைத் தெரியப்படுத்து,” என்று நிச்சயமாகப் பொருள்படமுடியாது. எவராலும் அதைச் செய்யமுடியாது. இயேசு இங்கே, ஓர் உள்ளுர் விசுவாசிகளின் திருச்சபையைப்பற்றித்தான் தெளிவாகப் பேசியிருக்கிறார்.
எனவே, சபை என்னும் வார்த்தையை, நம் ஆண்டவர் இரண்டு விதங்களில் பயன்படுத்தினார்: முதலாவது, எக்காலத்திலும், எவ்விடத்திலும் உள்ள அனைத்து விசுவாசிகளையும் விவரிப்பதற்காக. இரண்டாவது, ஆராதிப்பதற்காகத் தேவனால் (தெரிந்து) அழைக்கப்பட்டு, ஊழியம் செய்வதற்காகத் தேவனால் அனுப்பப்பட்ட, உள்ளுர் விசுவாசிகளின் திருச்சபையை விவரிப்பதற்காக.
திருச்சபை என்பது, தாங்களாகவே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் மக்கள் குழு அல்லது நண்பர் குழு அல்ல. இயேசு, ஜனங்களைத் தம்மில் விசுவாசம்கொள்ளும்படியாகச் செய்து, அவர்களை உள்ளுர்ச் சபைகளில் கூட்டிச் சேர்த்துத் தமது திருச்சபையைக் கட்டியெழுப்புகிறார்.
தேவனுடைய நோக்கம்
திருச்சபை, எவ்வளவு முக்கியமானது? நான் இயேசுவில் விசுவாசம்கொண்டிருந்து, சில நல்ல கிறிஸ்தவ நண்பர்களைக்கொண்டிருந்தால், எனக்கு ஏன் ஒரு சபை தேவைப்படுகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதில்: திருச்சபையானது, இவ்வுலகில் தேவனுடைய நோக்கத்துக்கான மையப்பகுதியாகும் என்பதுதான். பவுல்,
“உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக, (இயேசு கிறிஸ்துவைக்கொண்டு) எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு . . .” (எபேசியர் 3:10, 11),
என்று, தேவனுடைய திட்டத்தைக்குறித்துப் பேசுகிறான்.
உன்னதங்களிலுள்ள துரைத்தனங்கள் மற்றும் அதிகாரங்கள் என்பவை, தேவதூதர்கள் – அதாவது, தேவனை ஆராதிப்பதற்கும், அவருக்கு ஊழியம்செய்வதற்கும், தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஆவிக்குரிய ஜீவன்களைக் குறிக்கும். தேவன், தமது ஞானமும், தமது மகிமையும் அறியப்படும்பொருட்டு, அனைத்தையும் சிருஷ்டித்தார். தேவன்,
“திருச்சபையின்மூலமாக” இதை நிறைவேற்றுவார்.
தொலைந்துபோன பாவிகள் இயேசுவினிடத்தில் கொண்டுவரப்பட்டு, தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டு, அவரது திருச்சபைக்குள் ஒன்றுகூட்டிச் சேர்க்கப்படும்போது, தேவதூதர்கள் பிரமித்து, “தேவன் செய்ததைப் பாருங்கள்!” என்று சொல்கிறார்கள். உள்ளுர்த் திருச்சபையின் விசுவாசிகளான நாம், பற்பல வேறுபாடுகளுக்கு மத்தியில், ஒருவரிலொருவர் அன்புகூர்ந்து, நமது அநேகப் பாவங்களையும், தவறுகளையும் ஒருவருக்கொருவர் மன்னித்து, நம் சொந்தத் தேவைகளுக்கு முன்பு பிறரது தேவைகளை வைக்கும்போது, தேவனுடைய கிருபையின் அழகு வெளிப்படுத்தப்படுவதைத் தேவதூதர்கள் காண்கிறார்கள்.
திருச்சபையானது, இவ்வுலகில் தேவனுடைய நோக்கத்துக்கான மையமாகும். கிறிஸ்துவின் திருச்சபையின் ஓர் அங்கத்தினராயிருப்பது என்பது, நாம் கொண்டாடவேண்டிய ஒரு பாக்கியமாகும்.
மகிமையானதோர் எதிர்காலம்
திருச்சபையின் தற்போதைய நிலைக்கும், அதன் வருங்கால நிலைக்குமிடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. இன்றைக்கு இருக்கும் எந்தவொரு சபையையும் பாருங்கள். அது, திருச்சபை எப்படி இருக்கவேண்டும் என்று தேவன் அழைத்திருக்கிறாரோ, அதிலிருந்து மிகத்தொலைதூரம் விலகியிருப்பதை நீங்கள் காண்பீர்கள். இதுதான் உங்களது அனுபவம் என்றால், நீங்கள் திருச்சபையின்மீது நம்பிக்கையைக் கைவிட்டிருக்கக்கூடும். ஆனால் இயேசு, ஒருபோதும் தமது திருச்சபையைக் கைவிடமாட்டார்.
“. . . கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” (எபேசியர் 5:25-27).
இயேசு திருச்சபையின்மீது, அதன் கறைதிரை முதலான அனைத்துடனும் அன்புகூர்கிறார். நாம் அவரைப்போன்றவர்களானால், நாமும் அதன்மீது அன்புகூர்வோம். இயேசு, திருச்சபைக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். நாம் அவரைப்போன்றவர்களானால், நாமும் அதற்கு ஊழியம்செய்வோம்.
இயேசு தமது திருச்சபைக்காக, இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். ஸ்நானத்தினால் நாம் சுத்திகரிக்கப்படுவதுபோல, திருவசனமாகிய வேதாகமத்தினால் திருச்சபையைத் தேவன் கழுவிச் சுத்திகரிக்கிறார். இதுவே, நாம் திருச்சபையின்மூலம் இணைந்து வாழும் வாழ்க்கைக்கான மாதிரியாக இருக்கிறது. இயேசுவின் அழகு படிப்படியாகவும் மற்றும் அதிகமதிகமாகவும் நம்மில் காணப்படும்பொருட்டாக, நாம் திருவசனத்தினால் கழுவப்படுகிறோம்.
பின்பு, இயேசு தம் திருச்சபைக்காக என்ன செய்யப்போகிறார் என்று நமக்குக் கூறப்படுகிறது.
அவர், “கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்(வார்)” (எபேசியர் 5:27). திருச்சபையானது, எப்படியெல்லாம் இருக்குமாறு கிறிஸ்து அதை அழைத்திருக்கிறாரோ, அதுபோலவே ஒரு நாள் ஆகிவிடும்.
சிண்ட்ரெல்லாவின் கதையைச் சிந்தியுங்கள். அவள் அழகற்ற தன் இரு சகோதரிகளால் ஏளனம் செய்யப்படுகிறாள். ஆனால் முடிவிலோ, ஓர் இளவரசரை மணந்துகொள்ள அவள் நியமிக்கப்பட்டிருக்கிறாள். திருச்சபையும் இதேபோல்தான் உலகத்தால் ஏளனம் செய்யப்படுகிறது. ஆனால் அது, கிறிஸ்துவின் மணவாட்டியாகும். அதன் எதிர்காலம், மகிமையானது. இயேசு, திருச்சபையைத் தமக்குமுன் மகிமையாய் நிறுத்திக்கொள்வார்! மேலும் அந்த நாளில், அவரது திருச்சபைக்குரியவராய் இருப்பதற்காக நீங்கள் மிகவும் மகிழ்ந்து, களிகூருவீர்கள்.
தியானிப்பதற்கும் கலந்துரையாடுவதற்குமான கேள்விகள்
1. திருச்சபை என்னும் ஈவைக்குறித்து, உங்கள் மனதில் முதலாவது தோன்றுவது என்ன?
2. நீங்கள் ஒரு திருச்சபையில் பங்கேற்கிறீர்களா? ஆம் எனில், அது எவ்வாறு உங்களை ஆசீர்வதித்துள்ளது? (அ) அது எவ்வாறு உங்களுக்கு ஆசீர்வாதமாயுள்ளது? நீங்கள் சந்தித்திருக்கக்கூடிய சில சவால்கள் எவை?
3. நீங்கள் ஒரு திருச்சபையில் பங்கேற்கவில்லை என்றால், உங்களைத் தடுப்பது எது? நீங்கள் சென்று பார்க்கக்கூடியதொரு திருச்சபை அருகாமையில் உள்ளதா?
4. திருச்சபைக்கான இயேசுவின் திட்டங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்குறித்து, உங்களுக்கு மிகவும் வியப்பூட்டுவது எது?
5. பூரணமானதொரு திருச்சபையைத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு நபரிடம், நீங்கள் என்ன சொல்வீர்கள்?