15. பரலோகம்

மனித வரலாற்றின் முடிவில், தேவன் என்ன செய்வார் என்பதை, வேதாகமத்தின் கடைசிப் புத்தகம் நமக்குக் கூறுகிறது. இதை, அப்போஸ்தலனாகிய யோவானுக்குத் தேவன் ஒரு தரிசனத்தில் வெளிப்படுத்தினார்: “பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்ளூ முந்தின வானமும் முந்தின பூமியும்…
Previous Post
14. திருச்சபை
பரலோகம்

மனித வரலாற்றின் முடிவில், தேவன் என்ன செய்வார் என்பதை, வேதாகமத்தின் கடைசிப் புத்தகம் நமக்குக் கூறுகிறது. இதை, அப்போஸ்தலனாகிய யோவானுக்குத் தேவன் ஒரு தரிசனத்தில் வெளிப்படுத்தினார்:
“பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்ளூ முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயினளூ சமுத்திரமும் இல்லாமற்போயிற்று” (வெளிப்படுத்தல் 21:1).

புதிய வானம் மற்றும் புதிய பூமியைக் காணும்போது கிடைக்கும் சந்தோஷங்கள், நமது எவ்விதமான கற்பனைக்கும் அப்பாற்பட்டவை. ஆனால் தேவன், இனி வரப்போகின்றவற்றைக்குறித்த ஒரு முன்னோட்டத்தைத் தமது ஜனங்களாகிய நமக்குச் சித்திரித்துக் காட்டுவதற்காக, நகரம் மற்றும் தோட்டம் ஆகிய இரண்டு காட்சிகளைப் பயன்படுத்துகிறார்.

“. . . நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்ளூ அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது” (வெளிப்படுத்தல் 21:2).

புதிய நரகம், பரலோகத்தைவிட்டு இறங்கிவருவதை யோவான் கண்டபோது, உடனடியாக அதன் உருத்தோற்றத்தை, அவன் அடையாளம் கண்டுகொண்டான் – அது எருசலேம் என்று! அது, சந்தேகத்திற்கே இடமின்றி அவனுக்கு மிகவும் பரிச்சயமானதாய் இருந்தது.
வேதாகமக் கதையில் எருசலேம், மிக முக்கியத்துவம்வாய்ந்த நகரமாகும். இந்த இடத்தில்தான் தேவன் தமது ஜனங்களைச் சந்திக்கும்படி இறங்கிவந்தார். பழைய எருசலேம், தேவனுடைய பிரசன்னம் இறங்கிவந்ததான, ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கொண்டிருந்தது. புதிய எருசலேமோ, தேவனுடைய பிரசன்னம் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் ஒரு பரிசுத்த ஸ்தலமாகவே இருக்கிறது.

யோவான், சிங்காசனத்திலிருந்து வந்ததொரு பெருஞ்சத்தத்தைக் கேட்டான். அது:

“இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது. அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்ளூ அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்ளூ இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லைளூ முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது” (வெளிப்படுத்தல் 21:3-4).

யோவான் அந்த நகரத்தை, வெளியிலிருந்தே பார்த்துக்கொண்டிருந்தான். தனது தரிசனத்தில் அவன், நகரத்துக்கு உள்ளே வருமாறு அழைக்கப்பட்டபோது அழகியதொரு தோட்டத்தை

அவன் கண்டான்.

“பின்பு (அந்தத் தூதன்), பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி, தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான். நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், . . . ஜீவவிருட்சம் இருந்தது” (வெளிப்படுத்தல் 22:1-2).

வேதாகமக் கதையானது, ஒரு தோட்டத்தில் தொடங்கியது. அந்தத் தோட்டத்தில் மரங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று ஜீவவிருட்சம் ஆகும். யோவான், இதன் முக்கியத்துவத்தை உடனடியாக உணர்ந்திருப்பான் – இது மீட்டெடுக்கப்பட்ட பரதீசு. மேலும், புதிய பரதீசானது, ஆதாம் இழந்துபோனதான பரதீசைவிடவும் மிகவும் மகிமையானதாய் இருக்கும்.

வேதாகமத்தின் தொடக்கத்தில், ஆதாமுக்கும், ஏவாளுக்கும் ஓர் இல்லம், வேலை, திருமணம், மற்றும் அவரது பிரசன்னத்தில் திளைத்திருக்கும் இன்பம், ஆகிய ஈவுகளை தேவன் வழங்கினார். ஆனால் அந்தக் கதையின் முடிவில் நம்மில் யாரொருவரும் இதுவரை அறிந்திருக்கக்கூடியதைவிட, மேலானதொரு வாழ்வு, மேலானதொரு வேலை, மேலானதொரு ஐக்கியம், மற்றும் மேலானதொரு சந்தோஷம் ஆகியவற்றைத் தேவஜனங்கள் பெறுவார்கள்.

மேலான வாழ்வு

“பின்பு (அந்தத் தூதன்), பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி(யை), எனக்குக் காண்பித்தான். . . . நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்” (வெளிப்படுத்தல் 22:1-2).

ஏதேன் தோட்டமானது, ஆதாமுக்கும், ஏவாளுக்கும் ஓர் அற்புதமான இல்லமாயிருந்தது. ஆனால் அதில், மாதந்தோறும் பல்வேறுவிதமான கனிகளைத் தரக்கூடிய மரங்கள் ஒருபோதும் இல்லை!

இது, பரலோகத்தில் வாழ்க்கை ஒருபோதும் சலிப்பூட்டுவதாக இருக்காது என்பதைக் கூறுகிறது. அங்கே எப்பொழுதுமே ஏதேனும் ஒரு புதுமை இருக்கும். இயேசு, எப்பொழுதுமே புதிய கண்டுபிடிப்புகளுக்குள் நம்மை வழிநடத்துவார். மேலும், இந்த உலகத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த சந்தோஷங்களாய் இருந்தவையெல்லாம், தேவனின் புதிய சிருஷ்டிப்பில் நீங்கள் அனுபவிக்கப்போகிற சந்தோஷங்களுக்கான ஒரு சிறிய மாதிரி மட்டுமே.

மேலான வேலை

“. . . தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, . . . தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்” (வெளிப்படுத்தல் 22:3, 5).
நாம் பரலோகத்தில் என்ன செய்வோம் என்பதைக் கவனியுங்கள்: நாம் ஆராதிப்போம், நாம்
பணிவிடைசெய்வோம், மற்றும் நாம் ஆளுகைசெய்வோம். நாம் அரசாளுவதைப்பற்றித் தேவன் பேசும்போது, வாழ்க்கை ஒழுங்குள்ளதாயும், உங்களது கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவரப்பட்டதாயும் இருக்கும் என்று அவர் நமக்குக் கூறுகிறார்.
இனி நாம், காலத்தின் கொடுமைக்குக் கீழ்ப்பட்டிருக்கமாட்டோம். இனியும் நாம், எதிர்பாராத உணர்ச்சி வெள்ளங்களால் அல்லது சுய விருப்பத்தின் தூண்டுதல்களால் வாழமாட்டோம். அத்துடன், இனியும் நாம் மரணத்திற்கும், ஆபத்துக்கும் கீழ்ப்பட்டிருக்கமாட்டோம்.
நமது வாழ்வு ஒழுங்குள்ளதாயிருக்கும், நமது வேலை திருப்திகரமாயிருக்கும், மற்றும் நமது உறவுகள் பரிபூரணப்படும். நாம் எப்பொழுதும் விரும்பியதைப்போலவே, தேவனுக்கு ஊழியம்செய்வோம், மற்றும் நாம் செய்வதனைத்துமே அவருக்கு ஆராதனையாக ஒப்புக்கொடுக்கப்படும்.

மேலான ஐக்கியம்

ஏதேன் தோட்டமானது, ஒரே ஒரு மனுஷனாலும், ஒரு மனுஷியாலும் அனுபவிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுதோ, மகா திரள்கூட்டமானது தேவனுடைய நகரத்தின் வாசல்கள் வழியே உள்ளே வந்துகொண்டிருக்கிறது.

“அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள் . . .” (வெளிப்படுத்தல் 21:12-13).

புதிய எருசலேமுக்குப் பன்னிரண்டு வாசல்கள் இருந்ததை, யோவான் பார்த்தான். அந்த வாசல்கள் வடக்கையும், தெற்கையும், கிழக்கையும் மற்றும் மேற்கையும் நோக்கியிருந்தன. மேலும், அவையனைத்தும் திறந்தே இருந்தன (வெளிப்படுத்தல் 21:25). வேதாகமக் கதையின் தொடக்கத்தில், பரதீசுக்குப் போகும் வாசல் அடைக்கப்பட்டது. ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியை, வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்துடன் கேரூபீன்கள் காவல்செய்தனர்.

ஆனால் இயேசு, நியாயத்தீர்ப்பின் பட்டயத்தை உடைத்திருக்கிறார். இப்பொழுது தேவதூதர்கள், அவருக்குச் சொந்தமானவர்கள் அனைவரையும் வரவேற்பதற்கு, வாசல்களில் நிற்கிறார்கள். உலகிலுள்ள அனைத்துக் கண்டங்களிலிருந்தும் ஜனங்கள் – அனைத்துக் கோத்திரங்களிலிருந்தும், தேசங்களிலிருந்தும், இயேசு கிறிஸ்துவால் இரட்சிக்கப்பட்ட, திரள்கூட்டமான அனைத்து ஜனங்களும் – வந்துகொண்டிருக்கிறார்கள் (வெளிப்படுத்தல் 21:24-26).

மேலான மகிழ்ச்சி

பரலோகத்தில், தேவனுடைய பிரசன்னமே நமது மேலான சந்தோஷமாயிருக்கும். ஏதேன் தோட்டத்திற்குத் தேவன் ஒரு விருந்தினராக இறங்கிவந்து, தம்மையே வெளிப்படுத்தினார். ஆனால் புதிய சிருஷ்டிப்பில், தேவன் இனி ஒரு விருந்தினராக இருக்கமாட்டார். தேவன், தம் ஜனங்களுடனேகூட வாசமாயிருப்பார். மேலும் நாம், “அவரது சமுகத்தைத் தரிசிப்போம்”
(வெளிப்படுத்தல் 22:4).

தேவனுடைய பிரசன்னத்தில் நமக்குக் கிடைக்கப்போகும் அவரது இறுதியான பரிசு, நித்திய சந்தோஷமாகும். மேலும், அவர் இந்த ஈவை இலவசமாக உங்களுக்கு வழங்குகிறார்: “தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்” (வெளிப்படுத்தல் 21:6). பரலோகம், நீங்கள் சம்பாதிக்கக்கூடுமான ஒரு வெகுமதி அல்ல. மாறாக, அது நீங்கள் பெற்றுக்கொள்ளவேண்டியதோர் ஈவாகும்.

இந்த ஈவு உங்களுக்குரியதாய் இருக்கும்படியாகவே, இயேசு இந்த உலகிற்குள் வந்தார். அவர் உங்களுக்காகச் சிலுவைக்குச் சென்றார். அவர் உங்களுக்காக மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் நித்திய ஜீவனை உங்களுக்கு வழங்குகிறார். ஆனால் நீங்கள் வரவேண்டும்.

“தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்ளூ விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” (வெளிப்படுத்தல் 22:17).

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம்கொள்ளுங்கள். அவர் வழங்குவதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
“. . . கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்” (வெளிப்படுத்தல் 22:21).
தியானிப்பதற்கும் கலந்துரையாடுவதற்குமான கேள்விகள்

1. பரலோகமாகிய ஈவைக்குறித்து உங்கள் மனதில் முதலாவது தோன்றுவது என்ன?
2. பரலோகத்தைப்பற்றி உங்களது கவனத்தைக் கவரும் ஒரு காரியம் என்ன? எதை நீங்கள் மிகவும் இரசித்து, அனுபவிக்கப்போகிறீர்கள்?
3. வெளிப்படுத்தல் 21:3-4-லிருந்து உங்களை மிகவும் உற்சாகப்படுத்துகிற வாக்குத்தத்தம் என்ன? ஏன்?
4. பரலோகத்தில், தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கும்போது, நீங்கள் எவ்வாறு நடந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறீர்கள்?
5. ஒரு நாள் பரலோகத்தில் இருப்பீர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை?

Series : வேதாகமத்தின் கண்ணோட்டம்