1. ஆதாம்

வேதாகமத்தின் தொடக்கத்தில் நாம் பார்ப்பது என்னவென்றால், தேவன், வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்பதாகும் (ஆதியாகமம் 1:1). தேவன், சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அதன்பின்பு அவர் தாவரவகைகளையும், மீன்களையும், பறவைகளையும், மற்றும் மிருகஜீவன்களையும் உண்டாக்கினார். ஆனால்,
அவரது தலைசிறந்த படைப்பு இன்னும் நிகழவில்லை.
“பின்பு தேவன்: ‘நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக…’ என்றார்” (ஆதியாகமம் 1:26).
எபிரெய மொழியில் “மனுஷன்” என்பது, ஆதாம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அங்குதான் ஆதி மனிதன் தனது பெயரைப் பெறுகிறான். ஆதாம் தேவனுடைய சாயலாக உண்டாக்கப்பட்டான். அவனைக்குறித்த இந்த சத்தியமே உங்களைக்குறித்த சத்தியமாகவும் இருக்கிறது. அவனைப்போலவே, நீங்களும் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள். சாயல் என்பது ஒரு பிரதிபலிப்பு ஆகும். தேவன், தமது சுபாவத்தையும், குணாதிசயத்தையும் மற்றும் மகிமையையும் நீங்கள் பிரதிபலிக்கும்
விதத்திலேயே உங்களை உண்டாக்கியிருக்கிறார். அதனால், உங்கள் வாழ்க்கை, தனித்தன்மைவாய்ந்த கௌரவமும், மதிப்பும்கொண்டது.
தேவன் ஆதாமைப் படைக்கும்பொழுது, பூமியின் மண்ணிலிருந்து ஒரு சரீரமாக உருவாக்கி, பின்பு அவர், அதற்குள் ஜீவசுவாசத்தை ஊதினார், ஆதாம் ஜீவாத்துமாவானான் (ஆதியாகமம் 2:7). இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னவென்றால், நமது மனங்களும், உடல்களும் பலவீனமானவை, மற்றும் நமது வாழ்க்கை தேவனிடமிருந்து வந்த ஒரு ஈவு என்பதால், நாம் எப்பொழுதும் அவரையே சார்ந்திருக்கிறோம் என்பதாகும்.
தேவன், அற்புதமான பரிசுகளால் ஆதாமின் வாழ்க்கையை நிரப்பினார். அவர் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, அதை ஆதாமுக்கு அவனது வீடாகக் கொடுத்தார் (ஆதியாகமம் 2:8). மிருகஜீவன்களுக்கெல்லாம் பெயரிடுகிறதான, திருப்திகரமான வேலையை அவர் ஆதாமுக்குக் கொடுத்து, அந்த மிருகங்களையெல்லாம் அவனிடத்தில் கொண்டுவருவதன்மூலம், ஆதாமின் அந்தப் பணியில் தாமும் பங்கேற்றார் (ஆதியாகமம் 2:19). ஆனால், ஆதாம் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று தேவன் கண்டார். அவர் ஏவாளைச் சிருஷ்டித்து, அதன்பின்பு “அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.” அவள் அவனுடைய மனைவியானாள் (ஆதியாகமம் 2:22).
இல்லம், வேலை, மற்றும் திருமணம் ஆகிய யாவும் தேவனிடமிருந்து வரும் நல்ல ஈவுகள். இல்லம் என்பது, தேவன் உங்களைக் குடியமர்த்தும் இடமாகும். எந்த இல்லமும் பரிபூரணமானதல்ல, ஆனால் நீங்கள் செழித்தோங்குவதற்குச் சிறந்த இடம், தேவன்
உங்களுக்காக ஆயத்தப்படுத்தியுள்ள இடமேயாகும்.
வேலை என்பது, நீங்கள் செய்யும்படித் தேவன் உங்களுக்குத் தரும் பணியாகும். தேவனுடைய கிரியை, ஒழுங்கின்மையை மாற்றி ஒழுங்கைக் கொண்டுவருகிறது; அவர் அழகானவைகளைச் சிருஷ்டிக்கிறார்; அவர் தாம் உண்டாக்கிய அனைத்தையும் பாதுகாத்துப் போஷிக்கிறார். தேவன் செய்ததைப்போல நீங்கள் உங்கள் வேலையில் செய்யும்போது, நீங்களும் தேவனுடைய கிரியையை வெளிப்படுத்துகிறீர்கள்.
திருமணம் என்பது, மற்றொரு நபருடன் இணைந்து வாழும்படித் தேவன் அருளும் ஈவாகும். ஆதித் திருமணத் தம்பதிகள் மத்தியில் சில பிரச்சினைகள் இருந்தன. ஆனால் தங்கள் nபிரச்சினைகள் எதுவாக இருப்பினும், ஆதாமுக்கும், ஏவாளுக்கும் தாங்கள் தேவனால்
ஒன்றிணைக்கப்பட்டவர்கள் என்பதில் ஒருபோதும் எந்தச் சந்தேகமும் ஏற்பட்டிருக்கமுடியாது.
ஆனால் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் தேவன் அளித்த மாபெரும் பரிசு என்னவென்றால், தேவனோடுள்ள நட்புறவின் பரிசாகும். தேவன் காணப்படக்கூடாதவர். ஆனால் அவர், காணப்படக்கூடிய வடிவத்தில், தோட்டத்தில் தோன்றினார். ஏனெனில், அவர் ஆதாமும்,
ஏவாளும் தம்மை அறிந்துகொள்ளவேண்டுமென்று விரும்பினார் (ஆதியாகமம் 3:8). இந்தத் தோற்றங்கள், தேவனை நாம், நமது சிருஷ்டிகராக மட்டுமின்றி, நமது நண்பராகவும் அறிந்துகொள்ளவேண்டுமென்கிற, அவரது இருதயத்தின் தீவிரமான விருப்பத்தைக்
காண்பிக்கின்றன.
வேதாகமக் கதையின் மையத்தில், இயேசு கிறிஸ்துவில் தேவன் ஒரு மனிதனாக ஆனார். எனவே, காணப்படக்கூடிய தோற்றங்களில் பழைய ஏற்பாட்டில் தேவன் தோன்றும்போது, நமக்கு அவை விசித்திரமானவையாக இருக்கக்கூடாது. அது, தேவனுடைய குமாரனானவர், மண்ணுலகில் மனிதராகத் தாம் வரும் காலம்வரையில் காத்திருக்கமுடியாததைப்போன்று
காணப்படுகிறது.
பேரழிவிற்கு நேராக
ஆதாமுக்கும், ஏவாளுக்கும் தேவன் ஒரே ஒரு கட்டளையைக் கொடுத்தார்:
“ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ
புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” (ஆதியாகமம் 2:17).ஆதாமும், ஏவாளும் ஏற்கெனவே நன்மையைப்பற்றி அறிந்திருந்தனர். மேலும், தேவன்அவர்களைத் தீமையிலிருந்து பாதுகாக்க விரும்பினார். எனவே இந்தக் கட்டளையானது,
தேவனுடைய அன்பின் அற்புதமான ஒரு வெளிப்பாடாகும்.
தோட்டத்திற்குள் ஒரு சர்ப்பத்தின் வடிவில் நுழைந்த ஒரு சத்துருதான், தீமை அனைத்தின் மூலாதாரம். அவன், தேவனுடைய கட்டளையைக்குறித்துக் கேள்வியெழுப்பி, தேவனுடைய எச்சரிக்கையைப் புறந்தள்ளி, ஏவாளை அவளுக்கே சொந்தக் கடவுளாக மாற்றும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தைக் கொடுத்து, ஈர்த்தான்.
ஆதாமும், ஏவாளும் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின்கனியைப் புசித்தனர். அந்தக் கீழ்ப்படியாமையின் செயல்மூலம், அவர்கள் தீமையைக்குறித்த அறிவை அடைந்தனர். அப்பொழுதுமுதல், நாமனைவருமே அந்த அறிவுடனேயே வாழ்ந்துவருகிறோம்.
பாவம் என்று வேதாகமம் குறிப்பிடுகிற, கீழ்ப்படியாமையின் இந்த முதல் கிரியை, பயங்கரப் பேரழிவிற்கு வழிநடத்தியது. “அவர் (தேவன்) மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்” (ஆதியாகமம் 3:24).
தோட்டத்திலிருந்து துரத்திவிடப்பட்ட நிலையில், ஆதாமும், ஏவாளும், வலி, முரண்பாடு, விரக்தி மற்றும் மரணம் ஆகியவை தங்கள் அனுபவத்தில் பின்னிப் பிணைந்திருக்கிறதான, மிகவும் வித்தியாசமானதோர் உலகில் தாங்கள் இருக்கக் கண்டார்கள். அவர்கள்
பரதீசிலிருந்து புறம்பே தள்ளுண்டுபோயினர். அத்துடன், அங்குத் திரும்பிச் செல்லவும் வழியேதுமில்லை. ஆனால் அவர்கள் வெளியேற்றப்படுமுன், முதல் மனுஷனுக்கும், மனுஷிக்கும், ஒரு சாபம் மற்றும் ஒரு வாக்குத்தத்தத்தின் வழியாகத் தேவன், நம்பிக்கையை அளித்தார்.
இரட்சகரைப்பற்றிய வாக்குத்தத்தம்
ஆதாமைத் தோட்டத்திலிருந்து வெளியேற்றுமுன், தேவன் சர்ப்பத்தைச் சபித்தார். “நீ …… சபிக்கப்பட்டிருப்பாய்” (ஆதியாகமம் 3:14). இந்தச் சாபத்தை உச்சரித்ததன்மூலம், தேவன் தீமையை அழிவுக்குக் கையளித்தார். தீமை நிலைநிற்காது. அது அழிக்கப்பட்டுவிடும்.
ஆதாமினிடமாய்த் திரும்பிய தேவன், “சபிக்கப்பட்டிரு…” என்று சொல்ல ஆரம்பிக்க, ஆதாம் மூச்சைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்திருக்கவேண்டும். தேவன் சர்ப்பத்தைச் சபித்துவிட்டார். இப்பொழுது அவர் ஆதாமையும் சபிக்கப்போவதுபோல் காணப்படுகிறது. ஆனால் “நீ சபிக்கப்பட்டிருப்பாய்,” என்று ஆதாமிடம் சொல்வதற்குப் பதிலாக, “பூமி உன் நிமித்தம்
சபிக்கப்பட்டிருக்கும்” (ஆதியாகமம் 3:17), என்று தேவன் சொன்னார். பூமி என்ன தவறு செய்தது?
பூமியின்மீதான சாபம், தேவன் யாரென்று நாம் அறிந்துகொள்ள உதவுகிறது. அவர் எப்பொழுதுமே பாவத்தைக் கையாண்டு, அதை அழித்துவிடுவார். ஆனால் தேவனால், தமது நியாயத்தீர்ப்பை நம்மிடமிருந்து விலக்கித் திசைதிருப்பி, நாம் அவருடன் ஒப்புரவாக்கப்பட இடமளிக்கமுடியும்.
பூமியைத் தேவன் சபித்தபின்பு, ஓர் இரட்சகர் வருவாரென்று அவர் வாக்குத்தத்தம்பண்ணினார்.
அவர் சர்ப்பத்தைப் பார்த்து:
“உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும்
பகை உண்டாக்குவேன்;
அவர் உன் தலையை நசுக்குவார்,
நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்” (ஆதியாகமம் 3:15).
பழைய ஏற்பாட்டின் மற்ற அனைத்துப் பகுதிகளுமே, இந்த இரட்சகரையே நமக்குக் காட்டுகிறது. அவர் யார், அவர் என்ன செய்திருக்கிறார், மற்றும் அவர் அளிக்கும் ஆசீர்வாதத்தில் நாம் எவ்வாறு பங்கடையமுடியும் என்பவற்றைக் கண்டடைய, நாம்
அறிந்திருக்கவேண்டியது என்னவென்று அது நமக்குக் கூறுகிறது.
ஆதாமின் கதையிலிருந்து, தேவன் யாரென்று நாம் அறிந்துகொள்கிறோம். தேவன் நம்மைப் படைத்தவர். அவரே அனைத்துக்கும் உரிமையாளர். நாம் அவருக்குரியவர்கள். தேவன் நல்லவர். நமது வாழ்விலும், நமது உலகிலும் காணப்படும் அனைத்து நன்மைகளும், அவரது கரத்திலிருந்து வந்த அன்பின் ஓர் ஈவாகும். மேலும், நாம் யாரென்றும் நாம் கற்றுக்கொள்கிறோம். நாம் தேவனுடைய சாயலாகவும், மற்றும் பூமியின் மண்ணிலிருந்தும் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு மனித வாழ்வும், தனித்தன்மைவாய்ந்த கௌரவமும், மதிப்பும்கொண்டது. அத்துடன், ஒவ்வொரு நபரும் அனைத்துக்காகவும் தேவனையே சார்ந்துள்ளார்.
ஆதாமின் வாழ்க்கை வரலாறு, நமது உலகம் ஏன் இவ்வளவு பிரச்சினைக்குரியதாய் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் நமக்கு உதவுகிறது. உங்கள் வாழ்விலும், உலகிலும் இருக்கிற, துயரமான, மற்றும் தீமையான அனைத்தின் வேர்களைத் தேடினால்,
அவை தேவனுக்கெதிரான ஆதாமுடைய முரட்டாட்டத்தின் பேரழிவில் போய் நிற்கும். ஆதாமின் பாவம், தீமைக்கான வாசலைத் திறந்துவிட்டு, அவனும், (மற்றும் அதன் காரணமாகவே நாமும்) பரதீசிலிருந்து வெளியேற்றப்பட வழிவகுத்தது. உலகில் காணப்படும்
போர், பேராசை, வெறுப்பு, மற்றும் வன்முறை ஆகிய அனைத்தும், தீமையினால் நிகழ்ந்த விளைவுகளாகும். வறட்சி, பூமியதிர்ச்சிகள், வியாதிகள், மற்றும் மரணம் ஆகிய அனைத்தும், சாபத்தினால் வந்த விளைவுகளாகும்.
இதுதான் வேதாகமக் கதையின் தொடக்கம். ஆனால் அதுவே முடிவல்ல. ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரான ஒருவர், தீமையின்மீது ஜெயங்கொள்வார் என்று தேவன்
வாக்குப்பண்ணியிருக்கிறார்.
தியானிப்பதற்கும் கலந்துரையாடுவதற்குமான கேள்விகள்
1. நாம் தேவனுடைய சாயலாக உண்டாக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக்
கேள்விப்படும்போது, உங்களது மனதில் தோன்றுவது என்ன?
2. ஏதேன் தோட்டத்தில் வசிப்பதைக்குறித்து, எது உங்களுக்கு மிகவும் பிடித்ததென்று
நீங்கள் நினைக்கிறீர்கள்? நீங்கள் ஏன் அதைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
3. தேவன், தம்மை நாம் அறிந்துகொள்ளவேண்டுமென்று விரும்புகிறாரென்பதைக்
கேள்விப்படுவது, உங்களுக்கு வியப்பூட்டுகிறதா? ஏன் அல்லது ஏன் இல்லை?
4. ஆதாம் மற்றும் ஏவாள் ஆகியோருடைய கீழ்ப்படியாமையின்
பின்விளைவுகளைக்குறித்து, உங்களது மனதில் தோன்றுவது என்ன? உங்களுக்கு ஏன்
அப்படித் தோன்றுகிறது?
5. நமது உலகம் ஏன் இவ்வளவு பிரச்சினைக்குரியதாய் இருக்கிறது என்பதைப்பற்றிய,
தேவனின் விளக்கத்தைக் கேட்டபின்பு, நமது உலகத்துக்கு எப்படிப்பட்ட இரட்சகர்
தேவைப்படுகிறார் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? இந்த இரட்சகர் என்ன
செய்யவேண்டியிருக்கும்?