13. மன்னிப்பு

மன்னிப்பு என்பது அழகானதொரு பரிசாகும். பாவம்செய்த ஒருவர் மனந்திரும்பும்போதும், யாருக்கெதிராகப் பாவம்செய்யப்பட்டதோ, அவர் மன்னிக்கும்போதும் அவர்களிருவரும் ஒப்புரவாக்கப்பட்டு, சமாதானத்தையும், சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார்கள். இந்தச் சந்தோஷத்தை அறிந்துகொள்வதற்கான முதல் படி என்னவெனில், நாம் எந்த அளவுக்கு மன்னிக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் கண்டுணர்வதாகும். நாம் தேவனிடத்தில்…
Previous Post
12. விசுவாசம்
Next Post
14. திருச்சபை
மன்னிப்பு

மன்னிப்பு என்பது அழகானதொரு பரிசாகும். பாவம்செய்த ஒருவர் மனந்திரும்பும்போதும், யாருக்கெதிராகப் பாவம்செய்யப்பட்டதோ, அவர் மன்னிக்கும்போதும் அவர்களிருவரும் ஒப்புரவாக்கப்பட்டு, சமாதானத்தையும், சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார்கள்.
இந்தச் சந்தோஷத்தை அறிந்துகொள்வதற்கான முதல் படி என்னவெனில், நாம் எந்த அளவுக்கு மன்னிக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் கண்டுணர்வதாகும். நாம் தேவனிடத்தில் நமது பாவங்களை மன்னிக்கும்படியாக ஜெபிக்கவேண்டும் என்று இயேசு நமக்குக் கற்பிக்கிறார். அவர் பாவத்தைக் கடன்கள் என்று விவரிக்கிறார். “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” (மத்தேயு 6:12; மேலும் காண்க. லூக்கா 11:4).

நாம் அனைவரும் கடனாளிகளே

நாம் ஒவ்வொருவருமே, உறவுகளின் ஒரு வலைக்கூட்டமைப்பில் வாழ்கிறோம். அதில் நமக்கென்று பொறுப்புக்களும், கடமைகளும் இருக்கின்றன. தேவன்மட்டும் இந்த வலைக்கூட்டமைப்பிற்கு வெளியில் நிற்கிறார். தேவன் யாருக்கும் கடன்பட்டவர் அல்ல. ஆனால் தேவனுக்கும், பிறருக்கும் நாம் செலுத்தவேண்டிய கடன் ஒன்று நமக்கிருக்கிறது. அதை ஒரே வார்த்தையில் சுருக்கமாகக் கூறக்கூடுமானால், அது: அன்பு என்பதே.

“… உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக …” (லூக்கா 10:27).

நமது பாவங்களைக்குறித்து நினைக்கும்போது, நாம் செய்த தவறுகளையே முதலில் நினைப்பது நம் வழக்கம். ஆனால் இங்கே நாம் செய்யத் தவறியது என்ன என்பதில்தான் நாம் தொடங்கவேண்டும். தேவனுக்கு ஒவ்வொரு நாளும் அர்ப்பணிப்புடன்கூடியதொரு அன்பின் வாழ்வைக் கொடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம், ஆனாலும் கடன்பட்டுள்ளதை நாம் செலுத்தவில்லை. நாம் எப்பொழுதுமே நமது அயலாரின் சிறப்பான நலனை நாடுவதற்குக் கடமைப்பட்டவர்களாய் இருக்கிறோம். நமது கணவன்மார்களிடமும், மனைவிமார்களிடமும், பெற்றோர்களிடமும், பிள்ளைகளிடமும், நண்பர்களிடமும், உடன்பணியாளர்களிடமும், மற்றும் நமது எதிரிகளிடமும்கூட, அன்பாயிருக்கக் கடன்பட்டுள்ளோம். ஆனால் நாம் எவ்வளவுதான் நேசித்தாலும், அந்தக் கடன் ஒருபோதும் முழுவதுமாய்ச் செலுத்தப்படுவதில்லை.

நமக்கும் கடன்பட்டவர்கள் இருக்கிறார்கள்

கடனாளிகள் என்றால், உங்களுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுக்காமல் இருக்கும் மக்கள் என்பது பொருள். விழுந்துபோனதோர் உலகத்தில் நாம் வாழ்கிறோம். ஆகவே, நீங்கள் தேவனுக்கும், பிறருக்கும் செலுத்தவேண்டியதைச் செலுத்தத் தவறியதுபோலவே, பிறரும்
தேவனுக்கும், உங்களுக்கும் செலுத்தவேண்டியதைச் செலுத்தத் தவறுவார்கள்.

தேவன் நம்மை மன்னித்ததுபோல, நமக்கெதிராய்த் தவறிழைத்தவர்களையும், நம்மை அழிவுக்குள்ளாக்கியவர்களையும் மற்றும் ஏமாற்றியவர்களையும், நாமும் மன்னிக்குமாறு அழைக்கிறார்:

“ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (எபேசியர் 4:32).

ஆகவே நாம் பெற்றுக்கொண்ட மன்னிப்பே, பிறரை நாம் மன்னிப்பதற்கான துவக்கமாகும்.

நாம் எவ்வாறு மன்னிக்கப்படக்கூடும்?
இயேசு, “எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்,” (மத்தேயு 6:12) என்று ஜெபிக்கும்படி நமக்குப் போதிக்கிறார். அது மிகப்பெரியதொரு வேண்டுகோள் ஆகும். நீங்கள் பத்து இலட்சம் ரூபாய்கள் கடன்பட்டுள்ள ஒருவரிடம் சென்று, “இந்தக் கடனைத் தள்ளுபடிசெய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்,” என்று சொல்வதாகக் கற்பனைசெய்யுங்கள். ஆனால் இயேசு, தேவனிடத்தில் அதனினும் பெரியதொரு வேண்டுதலைச் செய்யுமாறு நம்மை அழைக்கிறார்.

நமது பாவங்களை மன்னிக்குமாறு தேவனிடத்தில் கேட்கும்போது, அவரிடம் வெறுங்கையுடன் நாம் வருகிறோம். நாம் தேவனிடத்தில்: “பிதாவே, நான் நல்லதொரு தாயாக, நல்லதொரு மாணவனாக, அல்லது நல்லதொரு கிறிஸ்தவனாக இருப்பதன்மூலம், என் பாவத்தை உம்மிடத்தில் ஈடுசெய்துகொள்வேன்,” என்று ஓர் ஒப்பந்தத்தைச் செய்ய முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக நாம், “பிதாவே, என்னால் (கடனைச்) செலுத்தமுடியவில்லை. உமது இரக்கத்துக்காக உம்மிடத்தில் கேட்கிறேன். எனது கடனை மன்னித்து, கறை, திரையின்றித் துடைத்து, நான் செலுத்தவேண்டியதை ரத்துசெய்தருளும்,” என்று சொல்கிறோம்.

நீதியும், பரிசுத்தமுமுள்ளதொரு தேவன், அவர் நமக்குக் கட்டளையிட்டவற்றை நாம் மீண்டும் மீண்டும் கைக்கொள்ளத் தவறுவதை, எவ்வாறு மன்னிக்கமுடியும்? இந்தக் கேள்வி, வேதாகமக் கதையின் மையக் கருப்பொருளுக்கே நம்மைக் கொண்டுசெல்கிறது. நாம் செய்யத் தவறியதை, இயேசு செய்தார். அவர், பரிபூரணமானதொரு அன்பின் வாழ்வை வாழ்ந்தார். தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறவை அனைத்தையும் நிறைவேற்றி, அதன்பின்பு தமது பரிபூரணமான ஜீவனை, நம் சார்பில் ஒப்புக்கொடுத்தார். நாம் செலுத்தவேண்டிய கடனை, இயேசு செலுத்தினார்.

பாவிகளாகிய நாம், விசுவாசத்திலும், மனந்திரும்புதலிலும், தேவனுடைய குமாரனாகிய இயேசுவை நோக்கிப் பார்க்கும்போது, தேவன் நம்மை மன்னிக்கிறார்.

“எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய
நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது” (லூக்கா 24:46-47).

ஒருவேளை நீங்கள் மனந்திரும்புதலில் தேவனிடம் வந்தபோது, அவர் உங்களிடம்: “நீ பயிற்சிக் காலத்தில் இருக்கிறாய், உன் மனந்திரும்புதல் உண்மையானதா என்பதைக் காலம்தான் கூறும்,” என்று சொன்னதாக வைத்துக்கொள்வோம். ஒருவேளை அதில் நீங்கள் தவறிவிட்டால் தேவன் உங்கள்மீது கோபமடைவார் என்பதையும் நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் உங்களை நிரூபித்தாகவேண்டும். அது, தாங்கமுடியாததொரு சுமையாயிருக்கும்.

ஆனால் உங்களைப் பயிற்சிக் காலத்தில் நிறுத்துவதைக்காட்டிலும், மேலானதொன்றை இயேசு உங்களுக்காக வைத்திருக்கிறார். நீங்கள் மனந்திரும்புதலில் இயேசுவிடம் வரும்போது, அவர் உங்களைக் “குற்றவாளி அல்ல!” என்று தீர்ப்பளிக்கிறார். அவர் மன்னிக்கிறார். அவர் ஒப்புரவாக்குகிறார். பயிற்சிக் காலத்தைவிடவும், மன்னிப்பு என்பது சாலச்சிறந்ததாகும்!

“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்”; (1 யோவான் 1:9).

“பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.” (சங்கீதம் 103:11, 12).

“ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” (ரோமர் 8:1).

மன்னிப்பு என்பது, உங்களை நீங்களே நிரூபிக்கத் தேவன் தரும் ஒரு வாய்ப்பு அல்ல. (மாறாக,) மன்னிப்பு என்பது, உங்களுக்கெதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் தேவன் நீக்கிவிட்டு, உங்களது பதிவேட்டைச் சுத்திகரித்து, அதை என்றென்றைக்கும் சுத்தமுள்ளதாக்குவது ஆகும்.

நாம் எவ்வாறு மன்னிக்கமுடியும்?

மன்னிப்பது என்பது, ஒருபோதும் எளிதானதல்ல. ஆனால் நீங்கள் வேறொரு நபரை மன்னிப்பதற்குப் போராடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கான நற்செய்தி இதோ: தேவனின் மன்னிப்பைப் பெறுவது, பிறரை மன்னிப்பதற்கு உங்களுக்குப் புதியதோர் ஆற்றலைத் தரும்.

இயேசு, “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” (மத்தேயு 6:12), என்று ஜெபிக்கக் கற்பித்தார். இது, நாம் தேவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், மற்றும் நாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குவதற்குமிடையே நெருங்கிய தொடர்பிருப்பதைக் குறிக்கிறது. இந்தத் தொடர்பு, நாங்கள் மற்றும் எங்கள் என்கிற சொற்களில் அடங்கியுள்ளது. இந்த ஜெபமானது, “என் கடன்களை எனக்கு மன்னியும்,” என்பதல்ல. மாறாக, அது, “எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்,” என்பதாகும்.
இந்த ஜெபத்தை ஜெபிக்கும்போது, தேவனிடத்தில் நீங்கள் செலுத்தவேண்டிய உங்கள் கடன்களை மன்னிக்குமாறு மட்டுமல்ல, மாறாக, பிறர் உங்களுக்குச் செலுத்தவேண்டிய கடன்களை மன்னிக்குமாறும் நீங்கள் கேட்கிறீர்கள். “பிதாவே, எங்களுக்கு மன்னியும்,” என்பது, “நான் உம்மை நேசிக்கத் தவறியதை எனக்கு மன்னியும்;  மற்றும் அவர் என்னை நேசிக்கத் தவறியதை அவருக்கும் மன்னியும்,” என்பதைக் குறிக்கிறது. இதற்கு எதிர்மறையான ஒரே ஜெபம் என்னவெனில்: “பிதாவே, எங்களுக்கு மன்னியாதேயும். நானும் மன்னிக்கமாட்டேன், மற்றும் நீர் மன்னிப்பதையும் நான் விரும்பவில்லை,” என்பதாகும். ஆனால் அவ்விதமான ஜெபத்தை யார்தான் ஜெபிக்க விரும்புவார்கள்? பிறரை மன்னிக்குமாறு உங்கள் இருதயத்தைத் தேவன் திறக்கும்போது அது, அவர் தமது மன்னிப்பைப் பொழிவதற்கு, அவருக்காகத் திறந்திருக்கும்.

தியானிப்பதற்கும் கலந்துரையாடுவதற்குமான கேள்விகள்
1. மன்னிப்பின் பரிசைக்குறித்து உங்கள் மனதில் முதலாவது தோன்றுவது என்ன?
2. தேவனுக்கு நீங்கள் செலுத்தவேண்டிய கடனை, நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்?
3. 1 (மிகச்சிறியது) முதல் 10 (முழுமையும்) வரையிலான அளவுகோலில், உங்களது
கடன் எந்த அளவுக்குத் தேவனால் மன்னிக்கப்பட்டுள்ளது? ஏன்?
4. நீங்கள் தற்போது யாரையேனும் மன்னிக்கமுடியாமல் போராடுகிறீர்களா?
5. நீங்கள் தேவனிடத்தில் விசுவாசத்திலும், மனந்திரும்புதலிலும் வந்தால், அவர்
உங்களுக்கு எவ்விதமாகப் பதிலளிப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏன்?

Series : வேதாகமத்தின் கண்ணோட்டம்