12. விசுவாசம்

இயேசு, தம் சீஷர்களுடன் ஒரு படகில் ஏறி, உறங்கிய நிகழ்வைச் சுவிசேஷங்கள் பதிவுசெய்துள்ளன. அந்த ஏரியில் ஒரு புயல் வீசியதால், அந்தப் படகு தண்ணீரால் நிரம்பத் தொடங்கியது.
சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து, “ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்” (லூக்கா 8: 24). இயேசு (எழுந்து), காற்றையும், அலைகளையும் அதட்டினார். அப்பொழுது மிகுந்த அமைதல் உண்டாயிற்று. பின்பு இயேசு, தமது சீஷர்களை நோக்கி, “உங்கள் விசுவாசம் எங்கே?” என்றார் (வசனம் 25). அவர்களது விசுவாசத்தின் உண்மைத்தன்மையைக்குறித்து இயேசு கேள்வி எழுப்பவில்லை. மாறாக, அவர்கள் இருந்த சூழ்நிலையின்மீது தங்கள் விசுவாசத்தை ஏன் அவர்கள் பயன்படுத்தவில்லை என்றே அவர் கேள்வி எழுப்பினார்.
விசுவாசமானது, பயன்படுத்தப்படவேண்டும். அது தானாகவே செயல்படுவதில்லை. உங்கள் வீட்டிலுள்ள வெப்பமூட்டும் கருவி ஒரு தெர்மோஸ்டாட்டில் செயல்படுகிறது. உங்களுக்குத் தேவைப்படும் ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பநிலையில் தெர்மோஸ்டாட்டை அமைக்கிறீர்கள். வெப்பநிலையானது, நீங்கள் அமைத்திருக்கும் அளவுக்குக் கீழே குறையும்போது, உங்கள் அனல் மூட்டும் கருவி தானாகவே செயல்படத் தொடங்கும்.
ஆனால் விசுவாசம், அப்படித் தானாகவே செயல்படுவதில்லை. மாறாக விசுவாசமானது, நீங்கள் தற்போது சந்திக்கும் ஒரு காரியத்தில், முழு ஈடுபாட்டுடன் இயேசுவை விசுவாசிப்பதில் அடங்கியுள்ளது.
விசுவாசம் என்பது, உடலில் அதிகம் பயன்படுத்தப்படும்போது, வலிமையடைகிற தசைப்பகுதி போன்றதாகும். உங்கள் காலில் முறிவு ஏற்பட்டால், உங்கள் தசைகள் பலவீனமடையும். ஏனெனில், அவை பயன்பாட்டில் இல்லை. தசைகள் இழுக்கப்படும்போது வலிமையடைகின்றன. அதேபோல, தேவனின் வெளிப்படுத்தப்பட்ட வாக்குத்தத்தங்களை நம்பவும், மற்றும் அவரது மறைவான திட்டங்களை விசுவாசிக்கவும் வேண்டியிருக்கிற கடினமான சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும்போது, விசுவாசமும் வளர்கிறது.
விசுவாசம் என்றால் என்ன?
விசுவாசம், இரண்டு அம்சங்களை உள்ளடக்கியது ஆகும். அவற்றுள் முதலாவது இயேசுவை நம்புவதும், மற்றும் இரண்டாவது இயேசுவை விசுவாசித்துச் சார்ந்துகொள்வதும் ஆகும். இவையிரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும்.
சில நேரங்களில் நம்பிக்கை என்னும் வார்த்தை, ஒன்றின் உண்மைத்தன்மையை அறிவதைக் குறிக்கும். யாக்கோபு, “பிசாசுகளும் விசுவாசித்து (நம்பி), நடுங்குகின்றன,” என்று சொல்கிறான் (யாக்கோபு 2:19). பிசாசுகள், இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அறிந்திருக்கின்றன, அதனால் அவை நடுங்குகின்றன. ஆனால் விசுவாசம் என்பது, குறிப்பிட்ட காரியங்கள் உண்மையானவை என்று நம்புவதைவிடவும் மேலானது. விசுவாசம், நாம் நம்பியிருக்கிற அந்த ஒருவரின் நம்பகத்தன்மையைச் சார்ந்திருப்பதை உள்ளடக்கியதாகும்.
தேவன் வெளிப்படுத்தியுள்ளவற்றில் அவரை நம்புவதனாலும், அவர் மறைவாய் வைத்திருப்பவற்றில் அவரைச் சார்ந்துகொள்வதாலும், நாம் விசுவாசத்தைப் பயன்படுத்துகிறோம் (உபாகமம் 29:29). தேவன், தமது குமாரனை வெளிப்படுத்தியிருக்கிறார் மற்றும் அவர், அவரது வாக்குத்தத்தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், தேவன் இரகசியமாய் வைத்துவைத்திருக்கும் பல காரியங்கள் உள்ளன. நாளை என்ன நடக்கும் என நமக்குத் தெரியாது. ஆனால், தேவன் மறைவாய் வைத்திருப்பவற்றைக்குறித்து, நாம் அவரை விசுவாசிக்கிறோம் காரணம், அவர் வெளிப்படுத்தியுள்ளவற்றை நாம் நம்புகிறோம். தேவன், “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று சொல்லியிருக்கிறார் (எபிரெயர் 13:5). விசுவாசமானது, தேவன் இன்று கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்தை நான் நம்புவதால், நாளைக்காகவும் நான் அவரை விசுவாசிக்கமுடியும், என்று சொல்வதாகும்.
விசுவாசம் செய்வது என்ன?
விசுவாசம் என்பது, கனிகள் பழுத்துக் குலுங்கும் ஜீவனுள்ளதொரு மரம்போன்றதாகும்.
1. விசுவாசம், உங்கள் புரிந்துகொள்ளுதலைத் திறந்துவிடும். “விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், …. அறிந்திருக்கிறோம்” (எபிரெயர் 11:3).
2. விசுவாசம், பிறரது நன்மைக்காகக் கிரியை செய்யும்படி நம்மை வழிநடத்தும். “விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்” (எபிரெயர் 11:7).
3. விசுவாசம், கீழ்ப்படிதலுக்கு நேராக உங்களை வழிநடத்தும். “விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்” (எபிரெயர் 11:8).
4. விசுவாசம், உங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்.
“(அவர்கள்) அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்”
(எபிரெயர் 11:16).
5. விசுவாசம், மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். “விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்” (எபிரெயர் 11:20).
6. விசுவாசம், உங்களை ஆராதிப்பதற்கு வழிநடத்தும். “விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர்
இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்” (எபிரெயர் 11:21).
விசுவாசம் ஏன் இவையனைத்தையும் செய்கிறது? அதன் ஜீவனும், ஆற்றலும் எங்கிருந்து வருகின்றன?
விசுவாசம் நம்மை இயேசுவுடன் இணைக்கிறது
விசுவாசம், நம்மை இயேசு கிறிஸ்துவுடன் இணைக்கிறது. அதனால் நாம் அவருடையவர்களாகிறோம் மற்றும் அவர் நம்முடையவராகிறார். இயேசு,
“நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (யோவான் 15:5), என்று சொன்னார்.
வேதாகமம், ஒரு விசுவாசியைக் கிறிஸ்துவுக்குள் இருக்கும் ஒரு நபராக விவரிக்கிறது.
“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17).
(மேலும்) வேதாகமம், கிறிஸ்து நமக்குள் தங்கியிருக்கிறார் என்றும் நமக்குச் சொல்கிறது.
“கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலாத்தியர் 2:20).
விசுவாசமானது, நாம் இயேசு கிறிஸ்துவுடனேகூட இணைக்கப்படுவதற்கும், அதன்மூலம் அவரது ஜீவன் நமக்குள் பாய்வதற்குமான வழியாகும்.
இந்த ஐக்கியத்தை விவரிக்க, வேதாகமம் ஒரு திருமணத்தை உவமையாகப் பயன்படுத்துகிறது.
“இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்” (எபேசியர் 5:31-32).
திருமண உறவு உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும். அது எவ்வாறு உங்கள் வாழ்க்கையை மாற்றுகிறது என்பது, நீங்கள் யாரைத் திருமணம் செய்துகொள்கிறீர்கள் என்பதைப்பொறுத்தது. விசுவாசம் நம்மை இயேசுவோடு இணைத்து, அவருடன் நம்மை ஒன்றிக்கச்செய்கிறது. இயேசுவைப்பொறுத்தவரை, ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்து, சோதனைகளைச் சகித்து, நம் பாவங்களைச் சுமந்து தீர்க்குமளவுக்கு, இந்த ஐக்கியம் முக்கியத்துவம்வாய்ந்ததாகும். நம்மைப்பொறுத்தவரை, அவரது மாறாத அன்பையும், அவரது பரிபூரண நீதியையும், மற்றும் அவரது உயிர்த்தெழுந்த ஜீவனையும் பெற்றுக்கொள்ளுமளவுக்கு, இந்த ஐக்கியம்
முக்கியத்துவம்வாய்ந்ததாகும்.
நீங்கள் இந்த ஐக்கியத்தை அனுபவிக்கவேண்டுமானால், உங்களுக்கும், இயேசு கிறிஸ்துவுக்குமிடையே ஒரு நேரடியான உறவு இருக்கவேண்டும். மேலும், இந்த உறவு இரண்டு நிபந்தனைகளைக்கொண்டது: ஒன்று, இயேசு உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்; மற்றொன்று, நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ஒரு திருமண ஆராதனையில், மணமகனிடம்: “இந்தப் பெண்ணை நீங்கள் உங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறீர்களா?” என்று கேட்கப்படுகிறது. பின்பு, மணமகளிடம்: “இந்தப் புருஷனை உங்கள் கணவராக ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறீர்களா?” என்று கேட்கப்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு, இயேசுவினிடத்தில்: “பாவிகளோடு ஐக்கியம்கொள்வதுடன் தொடர்புடைய அனைத்தையும் (உம்மேல்) ஏற்றுக்கொள்ள நீர் மனதாயிருக்கிறீரா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு இயேசு, சிலுவையிலே தமது திறந்த கரங்களுடன்: “நான் மனதாயிருக்கிறேன்,” என்று பதிலளித்தார்.
இப்பொழுது, இந்த ஐக்கியத்தை உருவாக்கும் பரிசுத்த ஆவியானவர், உங்களிடம்: “இயேசுவை நீ உன் இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறாயா? அவருக்குப் பிரியமில்லாதவை அனைத்தையும் விட்டுவிட்டு, நீ உயிரோடு வாழும் காலமளவும், அவரைமட்டுமே கரம் பற்றிக்கொள்ள மனதாயிருக்கிறாயா?” என்று கேட்கிறார்.
அதற்கு விசுவாசம், “நான் மனதாயிருக்கிறேன்,” என்று பதிலளிக்கிறது.
திருமண ஆராதனையில் பதிலளிப்பதைப்போலவே, “நான் மனதாயிருக்கிறேன்,” என்று விசுவாசம் பதிலளிப்பதும், ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதாக இருக்கமுடியாது. ஆனால் இந்த அர்ப்பணிப்பின் வார்த்தைகள், வாழ்க்கை மாற்றத்துக்கு ஏதுவாக இருக்கின்றன.
தியானிப்பதற்கும் கலந்துரையாடுவதற்குமான கேள்விகள்
1. விசுவாசமாகிய வரத்தைக்குறித்து, உங்களுடைய மனதில் முதலாவது தோன்றுவது என்ன?
2. வேதாகமத்திலிருந்து கற்றுக்கொண்டு, நீங்கள் விசுவாசிக்க ஆரம்பித்திருக்கும் காரியங்கள் எவை?
3. தற்போது உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதியில், நீங்கள் அதிகமாய் விசுவாசத்தைச் செயல்படுத்தவேண்டிய தேவையிருக்கிறது?
4. உங்கள்மீதே நீங்கள் விசுவாசம்கொள்வதற்கும், இயேசு கிறிஸ்துவின்மீது நீங்கள் விசுவாசம்கொள்வதற்கும் இடையேயான வேறுபாடு என்ன?
5. இயேசு தாம் சிலுவைக்குச் சென்றபோது, நமக்காக ஓர் அர்ப்பணிப்பைச் செய்தார். நீங்கள் அவருக்கு உங்களையே அர்ப்பணித்திருக்கிறீர்களா?