5. எஸ்றா

தெற்கிலிருந்த இரண்டு கோத்திரங்கள், தாவீதின் சந்ததியில் வந்த ராஜாக்களின் ஆளுகையின்கீழ் தொடர்ந்தன. இந்த ராஜாக்களில் பெரும்பாலானோர், பிற தெய்வங்களை ஆராதிக்கும்படி மக்களை வழிநடத்தினர். இந்த விக்கிரகாராதனை, தேவனுக்கு மிகவும் விரோதமான காரியமாய் இருந்தது. அதனால் தேவன் தமது ஜனங்களை, அவர்களது சத்துருக்களின் கைகளில் ஒப்புக்கொடுத்தார்.
பாபிலோனின் ராஜா, எருசலேம் பட்டணத்திற்கெதிராய் முற்றுகையிட்டு, அதைக் கற்குவியலாக்கி, நிர்மூலமாக்கிவிட்டான். அவன், தேவாலயத்தை அழித்து, பட்;டணத்தில் மீதியானவர்களைப் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துக் கொண்டுபோனான். எசேக்கியேலின் புத்தகம், தானியேலின் புத்தகம், மற்றும் புலம்பல் ஆகமம் ஆகியவை, இந்த இருண்ட காலப்பகுதியில்தான் எழுதப்பட்டன. ஆனால் தேவன், எப்பொழுதும் தமது வாக்குத்தத்தத்தைக் காக்கிறார். மிகவும் இருண்ட இந்த காலப்பகுதியிலும்கூட, தேவஜனங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருந்தது.
“இதை என் மனதிலே வைத்து,
நம்பிக்கைகொண்டிருப்பேன்.
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே,
அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
அவைகள் காலைதோறும் புதியவைகள்ள;
உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்ள;
ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்” (புலம்பல் 3:21-24).
தேவஜனங்கள் சிறைப்பட்டுப்போய் எழுபது ஆண்டுகளுக்குப்பின், புதிதாய் உதயமான மேதியா-பெர்சியா ராஜ்யத்தின்முன்பாக, பாபிலோன் வீழ்ச்சியடைந்தது. புதிய ராஜாவான, கோரேஸ், சிறைப்பட்ட யூதர்களுள் யாரேனும் எருசலேமுக்குத் திரும்பிச் செல்ல விரும்பினால், அவர்கள் தாராளமாய்ச் செல்லலாம் என்று ஆணை பிறப்பித்தான். எனவே, ஏறத்தாழ ஐம்பதினாயிரம் மக்களடங்கிய ஒரு குழு, தேவனுடைய பட்டணத்திலே ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குகிற தரிசனத்துடன் புறப்பட்டது.
பெரும்பாலான தேவஜனங்கள், சிறையிருப்பிலேயே தங்கிவிட்டனர். ஆனால் எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், எருசலேமுக்குத் திரும்பிவரும்படி இரண்டாவதாக ஒரு குழுவை, எஸ்றா வழிநடத்தினான். எஸ்றா, ஆசாரியனும், வேதபாரகனுமாயிருந்தான். மேலும்,
தேவனுடைய கரம் அவன்மேல் விசேஷித்த விதமாய்த் தங்கியிருந்தது:
“… அவன் (எஸ்றா) … தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந்ததினால் எருசலேமுக்கு வந்தான்” (எஸ்றா 7:9).
“அப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடே கூடவரும்படி சேர்த்துக்கொண்டேன்” (எஸ்றா 7:28).
“… எங்கள் தேவனுடைய கரம் எங்கள்மேலிருந்து, வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது” (எஸ்றா 8:31).
எஸ்றாவின் கதை, அவர் தேவனுக்காக என்ன செய்தார் என்பதைப்பற்றியது அல்ல. மாறாக, தேவன் அவர்மூலமாக என்ன செய்தார் என்பதைப்பற்றியதாகும்.
தேவஜனங்களை மீட்டெடுத்தல்
எஸ்றா எருசலேமுக்கு வந்தபோது, தேவஜனங்கள் தங்களைச் சுற்றிலுமிருந்த தேசங்களின் அருவருப்பான, விக்கிரகாராதனைப் பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டுவிட்டதைக் கண்டான் (எஸ்றா 9:1-4). எஸ்றா, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் தலை மற்றும் தாடியிலுள்ள மயிரைப் பிடுங்கிக்கொண்டு,
“என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்குமேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று. இப்பொழுதும் எங்கள் தேவனே, நாங்கள் இனி என்ன சொல்லுவோம்; தேவரீர் …. கற்பித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம்” (எஸ்றா 9:6, 10), என்று கதறினான்.
சிறைப்பட்டவர்களின் முதல் குழுவினர் எருசலேமுக்குத் திரும்பிவந்து எண்பது ஆண்டுகள் கழித்து அவர்களது பேரப்பிள்ளைகள், கர்த்தரை ஆராதிப்பதற்கும், அவருக்கு ஊழியம் செய்வதற்குமான, தங்களது விசேஷித்த அழைப்பைக்குறித்த தரிசனத்தை இழந்துவிட்டனர். ஆனால் தேவன், தமது ஜனங்கள் மத்தியில் மாபெரும் மீட்டெடுப்பை வழிநடத்த, எஸ்றாவைப் பயன்படுத்தினார்.
“அவன் … தேவனுடைய தயவுள்ள கரம் (அவ)ன்மேலிருந்த(து). (ஏனெனில்) கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்” (எஸ்றா 7:9-10).
வேதத்தை எஸ்றா கற்று, அதற்குக் கீழ்ப்படிந்தபோது, தேவனுடைய கரம் அவன்மேலிருந்தது. அவ்வாறே, தேவனுடைய வார்த்தை உங்களில் இருக்கும்போது, தேவனுடைய கரம் உங்கள்மேலும் இருக்கும்.
தேவஜனங்களை மீட்டெடுக்க எஸ்றா பயன்படுத்திய வியூகம் என்னவென்றால், தேவனுடைய வார்த்தையை மையமாகக்கொண்டு அவர்களை ஒன்றுசேர்ப்பதாகும்.
“அப்படியே ஏழாம் மாதம் முதல்தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தைப் புருஷரும் ஸ்திரீகளும், கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்(தான்)” (நெகேமியா 8:2).
லேவியர்கள், தேவனுடைய வார்த்தையை வாசிப்பதினாலும், விவரிப்பதினாலும், மற்றும் அதைப் பயன்படுத்தும்படி விளங்கப்பண்ணுவதினாலும், அவனுக்கு ஒத்தாசையாயிருந்தார்கள்:
“அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்” (நெகேமியா 8:8).
வசனத்தைக் கேட்டவுடன், தேவஜனங்கள் செய்த முதல் காரியம், கண்ணீர்விட்டு அழுததேயாகும். காரணம், தேவனுடைய கற்பனைகளை நிறைவேற்றுவதிலிருந்து எவ்வளவு தூரமாய்த் தாங்கள் விலகியிருந்தார்கள் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்: “ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுத(ார்கள்)” (நெகேமியா 8:9).
தேவனுடைய வார்த்தையின் வெளிச்சம் நம் வாழ்வில் வரும்போது, நாம் அவரைவிட்டு எவ்வளவு தூரமாய் இருக்கிறோம் என்பதை நாம் அறிந்து, நமது நிலையை உணர்கிறோம். ஆகவே, வேதாகமத்தைத் திறந்தவுடன் முதலாவது உங்களுக்குத் தோன்றுவது, உங்களது சொந்தத் தகுதியின்மையைப்பற்றிய உணர்வுதான் எனில், அதற்காக வருத்தப்படாதீர்கள். தேவனுடைய வார்த்தை உங்களை அங்கே கொண்டுவரும், ஆனால் அது அங்கேயே உங்களை ஒருபோதும் விட்டுவிடாது.
பின்பு எஸ்றா, “விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” (நெகேமியா 8:10), என்று சொன்னான். வேதாகமத்தைத் திறப்பது, மாபெரும் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது ஏனெனில், தொடக்கமுதல் இறுதிவரை, வேதாகமம் என்பது சுவிசேஷம் (அ) நற்செய்தி ஆகும். தேவஜனங்கள் தங்கள் பாவங்களிலும், தோல்விகளிலும் ஆட்கொள்ளப்பட்டவர்களாகவே வீட்டிற்குத் திரும்பிச் செல்லவில்லை. வேதாகமம் திறக்கப்பட்டபோது, அவர்கள் தேவனுடைய கிருபையையும், இரக்கத்தையும் கண்டடைந்தார்கள். இது அவர்களுக்குப் பெலன் தந்தது.
காத்திருப்பு தொடர்கிறது
ஆதாம், ஆபிரகாம், மோசே, தாவீது, மற்றும் எஸ்றா ஆகியோரது கதைகளிலிருந்து, தேவன் இடைவிடாது வேலைசெய்துகொண்டேயிருந்தார் என்பதை நாம் காண்கிறோம். அவர், தமது வார்த்தையைப் பேசும்படியாக அநேகத் தீர்க்கதரிசிகளையும், ஜனங்களின் சார்பாக ஜெபங்களையும், பலிகளையும் ஏறெடுக்கும்படியாக அநேக ஆசாரியர்களையும், ஜனங்களை ஜெயமாக வழிநடத்தும்படியாக அநேக ராஜாக்களையும் எழுப்பினார். ஆனால் அவர்கள் அனைவரது முயற்சிக்குப் பிறகும், மிகச் சிறிதளவு மாற்றமே ஏற்பட்டது.
தேவஜனங்கள் தேவனைவிட்டு வழி விலகிக்கொண்டே இருந்தார்கள், தேவனும் அவர்களைத் தம்மிடம் திரும்ப அழைத்துக்கொண்டே இருந்தார். பழைய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகத்தில், தேவன்,
“நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (மல்கியா 3:7).
ஏதேன் தோட்டத்தில் தேவன் கூறிய சாபமானது, அவரது ஜனங்களின்மீது இன்னும் தொங்கிக்கொண்டிருந்தது.
“நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள்” (மல்கியா 3:9).
தேவஜனங்கள் இன்னும் காத்துக்கொண்டிருந்தார்கள்.
“குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறதுள;
முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாதுள;
அது தாமதித்தாலும் அதற்குக் காத்திருள;
அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை” (ஆபகூக் 2:3).
ஆனால் தேவன், ஓர் இரட்சகர் வருவார் என்று வாக்குத்தத்தம்பண்ணிவிட்டார்.
“சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு;
எருசலேம் குமாரத்தியே, கெம்பீரிள;
இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்ள;
அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரு(மாயிருக்கிறார்) (சகரியா 9:9).
இயேசு கிறிஸ்து பிறந்தபோது, தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேற்றப்பட்டது. பழைய ஏற்பாடு, இயேசு ஏன் நமக்குத் தேவை என்று விளக்குகிறது. புதிய ஏற்பாடு, அவர் வந்தபோது என்ன நிகழ்ந்தது என்பதை நமக்குக் கூறுகிறது.
தியானிப்பதற்கும் கலந்துரையாடுவதற்குமான கேள்விகள்
1. தேவன் தமது ஜனங்களை அவர்களது சத்துருக்களின் கைகளில் ஒப்புக்கொடுத்ததற்கு, உங்களது மனதில் முதலாவது தோன்றுவது என்ன?
2. நீங்கள் வேதாகமத்தைத் திறக்கும்போது, தேவனுடைய ஆசீர்வாதத்தின் கரம் உங்கள்
வாழ்க்கையின்மீது இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா?
3. உங்களைக் கலக்கமடையச்செய்த அல்லது தகுதியற்றவராக உணரச்செய்த ஏதாவதொன்று வேதாகமத்தில் இருக்கிறதா? ஆம் எனில், அது எது?
4. தேவனுடைய கிருபை மற்றும் இரக்கத்தின் ஒரு தெளிவான கண்ணோட்டத்தை, நீங்கள் எங்கே பார்த்திருக்கிறீர்கள்?
5. பழைய ஏற்பாட்டில் நீங்கள் கற்றுக்கொண்டதிலிருந்து, நமக்கொரு இரட்சகர் தேவை என்று ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்களுக்கொரு இரட்சகர் தேவையென்று நீங்கள் நினைக்கிறீர்களா?