9. உயிர்த்தெழுந்தார்

உயிர்த்தெழுதல் நாளன்றைய காலைப் பொழுதின் நிகழ்வுகளை, மிகச்சரியாக வரிசைப்படுத்துவது, உறுதியாய்க் கூறுவதற்குக் கடினமானதாகும். ஏனெனில், சுவிசேஷங்களை எழுதிய ஒவ்வொருவருமே, (அ) நால்வருமே, உயிர்த்தெழுதலைக்குறித்த வெவ்வேறு அம்சங்களின்மீது தங்கள் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார்கள்.
இயேசுவின் சரீரத்தைக் கந்தவர்க்கங்களால் சுற்றிக் கட்டும்படியாக, சில பெண்கள் அதிகாலையிலே கல்லறையினிடத்தில் சென்றார்கள் (லூக்கா 24:1). கல்லறையானது, ஒரு கல்லினால் மூடப்பட்டு, முத்திரையிடப்பட்டுவிட்டது என்பதை அவர்கள் அறிந்திருந்ததால், அதற்குள் நுழைவதற்கு யார் தங்களுக்கு உதவுவார்கள் என்று அவர்கள் குழம்பினார்கள் (மாற்கு 16:3). ஆனால் அவர்கள் அங்கே வந்துசேர்ந்தபோது, அந்தக் கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டார்கள். மேலும், அந்தக் கல்லறை வெறுமையாயிருந்தது (லூக்கா 24:2-3).
மகதலேனா மரியாள் மிகவும் மனக்கலக்கம் அடைந்திருந்தபடியால், மற்ற இரண்டு பெண்களையும் கல்லறையண்டையிலேயே விட்டுவிட்டு, உடனே ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும், யோவானிடத்திலும் போய்: “கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்” (யோவான் 20:2).
இந்தச் செய்தியைக் கேட்டபோது, பேதுரு கல்லறையினிடத்திற்கு ஓடி, அது வெறுமையாயிருக்கக் கண்டு அவன், “சம்பவித்தைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்” (லூக்கா 24:12). மற்ற சீஷர்களும் அதேபோன்ற உணர்வையுடையவர்களாகவே காணப்படுகிறார்கள். இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை அவர்கள் முதன்முதலில் கேட்டபோது (அ) கேள்விப்பட்டபோது, “இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை” (லூக்கா 24:11).
மகதலேனா மரியாள் சென்றபின்பு, கல்லறையருகிலேயே நின்ற மற்ற பெண்மணிகளுக்கு ஒரு தேவதூதன் தோன்றி, அவர்களை நோக்கி:
“பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்…” என்றான் (மாற்கு 16:6).
மாற்கு, “நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையைவிட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள்” (மாற்கு 16:8), என்று இதைப் பதிவுசெய்கிறார்.
மீண்டும் சொல்வதானால், நிகழ்வுகளின் மிகச்சரியான வரிசைக் கிரமத்தை உறுதிப்படுத்திக்கொள்வது என்பது, கடினமான காரியமாகும். ஆனால் இதுவே சிறந்த (அ) சாத்தியமான வரிசைப்படுத்துதல் (அ) நிரல்படுத்துதல் என்று தோன்றுகிறது. அந்தக் கல்லறை வெறுமையாயிருந்தது என்பதும், உயிர்த்தெழுந்த கர்த்தருடனான (அ) ஆண்டவருடனான எண்ணற்ற சந்திப்புகளின்மூலம், சீஷர்கள் விசுவாசத்தை அடைந்தார்கள் என்பதும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட விதத்தில் தெளிவாகத் தெரிகின்றன.
உயிர்த்தெழுதலின் தோற்றங்கள் (அ) காட்சிகள் (அ) தரிசனங்கள் கல்லறை வெறுமையாயிருந்தது என்பதையும், இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்துவிட்டார் என்று தேவதூதர்கள் அறிவித்துவிட்டனர் என்பதையும், சீஷர்கள் அறிந்திருந்தனர். ஆனால் உயிரோடெழுந்த கர்த்தரை அதுவரை (அ) இன்னும் ஒருவரும் காணவில்லை (அ) பார்க்கவில்லை.
மகதலேனா மரியாள், வெறுமையான கல்லறையினிடத்துக்குத் திரும்பிவந்து, அங்கே அழுதுகொண்டிருந்தாள். ஆனால் இயேசு அவளுக்குத் தரிசனமாகி, அவளைப் பெயர்சொல்லி அழைத்தபோது, அவளது துக்கம் சந்தோஷமாக மாறிற்று. அவள் சென்று சீஷர்களிடம், “நான் கர்த்தரைக் கண்டேன்,” என்று அறிவித்தாள் (யோவான் 20:16, 18). இதுவே உயிரோடெழுந்த கர்த்தரின் முதல் தரிசனம்.
இதற்கிடையே (அ) இதனிடையே (அ) இப்படியிருக்கையில், கல்லறையிலேயே காத்திருந்த பெண்கள், அவர்களுக்குத் தோன்றிய தேவதூதனைக் கண்டு மிகவும் பயந்ததனால், கல்லறையைவிட்டு விரைவாய் ஓடினார்கள். ஆனால் வழியில், “இயேசு அவர்களுக்கு எதிர்ப்பட்டார்” (மத்தேயு 28:9). இது உயிரோடெழுந்த கர்த்தரின் இரண்டாம் தரிசனம் ஆகும்.
பின்பு பேதுருவுக்கும், (லூக்கா 24:34; 1 கொரிந்தியர் 15:5). மற்றும் எம்மாவு என்னும் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் நடைப்பயணமாய்ப் போய்க்கொண்டிருந்த இரண்டு சீஷர்களுக்கும் (லூக்கா 24:13-35), கர்த்தர் தரிசனமானார். இவை, உயிர்த்தெழுதலின் மூன்றாம் மற்றும் நான்காம் தரிசனங்களாகும்.
ஐந்தாம் தரிசனம், உயிர்த்தெழுதலின் முதல் நாளன்று மாலையிலேயே, பூட்டிய கதவுகளின் பின்னே சீஷர்கள் ஒன்றாய்க் கூடியிருந்தபோது நிகழ்ந்தது.
“இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் … அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்)” (லூக்கா
24:36-43).
தாங்கள் ஓர் ஆவியைக் காண்கிறதாக நினைத்ததே, சீஷர்களுடைய மனங்களில் முதலாவது தோன்றிய உணர்வு என்பதைக் கவனியுங்கள். அவர்கள் அவரைத் தொட்டுப்பார்த்தார்கள். அவர்கள் அவருடன் சேர்ந்து புசித்தார்கள். அவர்கள் அவரது கைகளையும், கால்களையும் பார்த்தார்கள். சிலுவையில் அறையுண்டவரான இயேசு, மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்துவிட்டார்.
பயந்துபோயிருந்த இந்தச் சீஷர்களிடத்தில் இயேசு பேசிய முதல் வார்த்தை சமாதானம். கெத்செமனே தோட்டத்தில் இயேசு கைதுசெய்யப்பட்டபோது, அவர்களனைவரும் அவரைக் கைவிட்டு ஓடிப்போனார்கள். அவர்களனைவருமே தங்கள் எஜமானரைத் (அ) போதகரைத் தாங்கள் தவறவிட்டுவிட்டதை (அ) ஏமாற்றிவிட்டதை அறிந்திருந்தனர். ஆனால் உயிர்த்தெழுந்த கர்த்தர் அவர்களுக்குச் சமாதானத்தை வழங்கினார்.
மற்ற சீஷர்கள் கர்த்தரைக் கண்டபோது, தோமா அவர்களுடனேகூட இருக்கவில்லை. “அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, … என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்” (யோவான் 20:25).
எட்டு நாட்களுக்குப்பின்பு, நம் கர்த்தர் ஆறாம் முறையாகத் தரிசனமானார். சீஷர்கள் ஒன்றுகூடியிருந்தனர். மேலும் இம்முறை, தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்.
கதவுகள் பூட்டியிருந்தபோதும், இயேசு வந்து அவர்கள் நடுவே நின்று: “உங்களுக்குச் சமாதானம்” (யோவான் 20:26), என்றார்.
தோமா, பிரமிப்பூட்டுகிற (அ) வியக்கத்தக்க ஆதாரம் ஏதுமிருந்தாலொழிய, தான் விசுவாசிக்கமாட்டேன் என்று சொல்லியிருந்தான். இயேசு அவன் விரும்பியதை அவனுக்குக் கொடுத்தார்: “நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, … என்றார்” (யோவான் 20:27).
தோமாவின் அவிசுவாசம் உட்பட, அவனைப்பற்றிய அனைத்தையும் இயேசு அறிந்திருந்தார். ஆனால் அவர், அதற்குப்பின்பும் தோமா தம்முடைய சீஷனாய் இருக்கவேண்டுமென விரும்பினார். ஆகவே இயேசு அவனிடம், “அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்” (யோவான் 20:27). தன் முழங்கால்களில் விழுந்து, “என் ஆண்டவரே! என் தேவனே!” (யோவான் 20:28), என்று அறிக்கையிடுவதைத்தவிர, தோமாவுக்கு வேறென்ன செய்யக்கூடுமாயிருந்தது? (அ) செய்யக்கூடும்?
தோமா விசுவாசிக்க மறுத்ததற்காக, இயேசு அவனைத் தள்ளிவிட்டுவிடவில்லை. அவர் தோமாவைச் சந்தித்து, அவனை விசுவாசத்திற்குள் நடத்தினார். ஒருவேளை நீங்கள் விசுவாசத்தில் தடுமாறியிருக்கலாம் (அ) போராடியிருக்கலாம். ஒருவேளை உங்களால் விசுவாசிக்கமுடியவில்லை என உணர்ந்திருக்கலாம். தோமாவுக்குத் தாம் செய்த அதே உதவியை, இயேசு உங்களுக்கும் செய்ய ஆயத்தமாயிருக்கிறார்.
ஆகவே, உயிர்த்தெழுந்த கர்த்தரை நாம் எப்படிச் சந்திக்கிறோம்? அந்தக் கேள்விக்கு யோவான் நேரடியாகப் பதிலளிக்கிறான்.
“இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” (யோவான் 20:31).
கிறிஸ்தவ விசுவாசம் என்பது, குருட்டாட்டமாய் இருளிலே தாவுவதல்ல (அ) தாவிக்குதிப்பதல்ல. இயேசுவில் உள்ள விசுவாசத்தில், நாம் மெய்யறிவுடன் (அ) பகுத்தறிவுடன் ஓரடி எடுத்து வைக்கக்கூடிய ஆதாரப்பூர்வமான (அ) உறுதியான சான்று, சுவிசேஷங்களில் நமக்கு முன்பாக வைக்கப்படுகிறது. தோமா, இயேசுவின் கைகளையும், விலாவையும் கண்டான். நாம் அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் இயேசு, “காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்,” என்றார் (யோவான் 20:29).
உயிர்த்தெழுதலின் (அ) உயிர்த்தெழுந்த சரீரம்
இயேசு, தம்மை விசுவாசிப்போர் யாவரும் தமது உயிர்த்தெழுதலில் பங்குள்ளவர்களாவர் (அ) பங்கடைவர் என்று வாக்குப்பண்ணியுள்ளார்.
“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்” (யோவான் 11:25).
அனைத்து மதங்களுமே, மரிப்பதற்குப் (அ) மரணத்துக்குப் (அ) இறப்புக்குப் பின்பான ஒரு வாழ்வைக்குறித்த ஏதோ ஒருசில கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் உயிர்த்தெழுதல் என்பது, கிறிஸ்தவத்துக்கேயுரிய தனித்துவமாகும். நற்செய்தி (அ) சுவிசேஷம் என்பது, இயேசு உயிரோடிருக்கிறார் என்பது மட்டுமே அல்ல, ஆனால் இயேசு உயிரோடெழுந்தார் என்பதும் ஆகும்! இந்த வித்தியாசத்தைப்பற்றிச் (அ) வேறுபாட்டைப்பற்றிச் சிந்திப்பது மதிப்புவாய்ந்தது ஆகும்.
தேவனுடைய குமாரனானவர், மனுஷ சரீரமெடுப்பதற்கு முன்பாகப் பரலோகத்தில் உயிரோடிருந்தார் (அ) ஜீவனுடையவராயிருந்தார். எனவே, அவர் ஏன் சிலுவையிலறையுண்ட தமது சரீரத்தை அப்படியே கல்லறையிலேயே விட்டுவிட்டுப் பிதாவினிடத்துக்குத் திரும்பவில்லை? சொல்லப்போனால், அது வெறும் தசையும், எலும்பும்தானே? அதற்காக ஏன் அக்கறைகொள்ளவேண்டும்?
அப்பொழுதும்கூடத் தேவதூதர்கள் உயிர்த்தெழுதல் நாளன்று காலையில் தோன்றி, “அவரது சரீரம் இங்கே கல்லறையில்தான் இருக்கிறது, ஆனால் கவலைப்படாதீர்கள், அவரது ஆவி பிதாவானவருடன் பரலோகத்தில் இருக்கிறது,” என்று சொல்லியிருக்கமுடியும். உண்மையில், ஒரு கிறிஸ்தவர் மரிக்கும்போது, அவரது அடக்க ஆராதனையில் நாம் அதைத்தானே தெளிவுபடச் சொல்கிறோம்?
ஆனால் நாம் சுவிசேஷங்களில் காண்பது அதுவல்ல. இயேசு, “குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்” (யோவான் 6:40).
மனிதர்கள், ஆத்துமா மற்றும் சரீரத்தின் அற்புதமான இணைப்பு (அ) ஒன்றிணைவு (அ) கூட்டமைப்பு (அ) சங்கமம் ஆவார்கள். மேலும், நமது ஒரு பகுதியை மட்டும் இரட்சிப்பதற்காக அல்ல, நம்மை முழுமையாகவே இரட்சிப்பதற்காகத்தான் இயேசு இந்த உலகிற்கு வந்தார். தமது பிரசன்னத்தின் சந்தோஷத்திற்குள் நித்திய நித்தியகாலமாய், நம்மை ஆத்துமாவும், சரீரமுமாகக் கொண்டுவரவே அவர் வந்தார்.
தியானிப்பதற்கும் கலந்துரையாடுவதற்குமான கேள்விகள்
1. வெறுமையான கல்லறையைக்குறித்து உங்கள் மனதில் முதலாவது தோன்றுவது என்ன?
2. சீஷர்கள் வெறுமையான கல்லறையைக் கண்டறிந்தபோது, இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்துவிட்டார் என்று உடனடியாக ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
3. தோமாவைப்போல, “நான் ஒருபோதும் விசுவாசிக்கமாட்டேன்,” என்று என்றாவது நீங்கள் சொன்னதுண்டா? ஆம் எனில், ஏன்?
4. 1 (பலவீனமானது (அ) குறைந்தபட்சமானது) முதல், 10 (கடுமையானது (அ) அதிகபட்சமானது) வரையிலுமான அளவுகோலில், இங்கே வழங்கப்பட்டுள்ள,
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கான ஆதாரங்களைப்பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? நீங்கள் ஏன் அவ்வாறு பதிலளித்தீர்கள்?
5. இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார் என்று நீங்கள் மெய்யாகவே விசுவாசித்தால், அது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை (அ) வேறுபாட்டை உருவாக்கும்?