11. பரிசுத்த ஆவியானவர்

அந்தச் சபையில் தற்போது 120 உறுப்பினர்கள் இருப்பதாக, தேவாலய உறுப்பினர் பட்டியல் விவரங்கள் குறிப்பிடுகின்றன என்று, அதன் இயக்குநர் தெரிவித்தார். அவர்கள் சொந்தக் கட்டிடம் எதுவும் இல்லாமல், நகரத்தில் வாடகைக்கு எடுத்த அறையில் சபைகூடிவந்தனர்.
அவர்களது ஜெபக்கூடுகையில் அநேகர் கலந்துகொண்டுவந்தனர். அத்துடன், வெறுமையாக இருக்கும் தலைமைத்துவப் பதவியை எவ்வாறு நிரப்புவது என்பதைப்பற்றி அநேகக் கலந்துரையாடல்களும் நிகழ்ந்துவந்தன. ஆனால், அதைத் தவிர அதிகம் எதுவும்
நடைபெறவில்லை.
அவர்களின் சமூகத்திற்கு நற்செய்தியைக் கொண்டுசெல்லும் பணி, அவர்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. மிகக்குறைவான மக்கள்தான் அங்கே இருந்தனர். அவர்களிடம் மிகக்குறைந்த பணம்தான் இருந்தது. மேலும் அவர்கள் சந்திக்கும் இடத்திற்கு வெளியே நிலவிய கலாசாரம், அவர்களுடைய செய்திக்கு மிகக்குறைவான ஆதரவையே கொடுத்தது. அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தின் தொடக்கத்தில், திருச்சபை அப்படித்தான் இருந்தது.
ஆனால் அவையனைத்தையும் மாற்றிவிடக்கூடியதொரு நிகழ்வைப்பற்றி, இயேசு (அவர்களிடம்) பேசியிருந்தார்.
இன்னும் சில நாட்களுக்குள் அவர்கள், “பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம்” பெறுவார்கள் (அப்போஸ்தலர் 1:5).
அவர்கள் நீண்ட காலம் காத்திருக்கத் தேவை ஏற்படவில்லை. இயேசு பரலோகத்திற்கு ஏறிச் சென்ற(பின்பு) பத்தே நாட்களில், பெந்தெகொஸ்தே என்றழைக்கப்பட்ட ஒரு பண்டிகை நாள் வந்தது. அது ஒரு மாபெரும் கொண்டாட்டமாய் இருந்தது. அதற்காகப் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த விருந்தினர்களால் எருசலேம் நிரம்பி வழிந்தது (அப்போஸ்தலர் 2:5). அந்த நேரத்தில்தான் பரிசுத்த ஆவியானவர், திருச்சபையின்மேல் ஊற்றப்பட்டார்.
பரிசுத்த ஆவியானவரின் வரமானது, அனைத்தையும் மாற்றிவிடுகிறது. பரிசுத்த ஆவியானவர் நமக்கு நம் பாவத்தைக்குறித்துக் கண்டித்து உணர்த்துகிறார், புது வாழ்வைக் கொண்டுவருகிறார், நம் இருதயங்களில் விசுவாசத்தை உருவாக்குகிறார், மற்றும் இயேசு நமக்காகச் சிலுவையில் நிறைவேற்றியுள்ள அனைத்தையும் நமக்குப் பயன்படுமாறு செய்கிறார். அவற்றால் நாம், தேவனுடன் சமாதானமாயிருக்கிறோம், கிறிஸ்துவின் சாயலில் வளர்கிறோம், மற்றும் கடைசியில் பரலோகத்தில் பூரணமாக்கப்படுகிறோம்.
பலத்த காற்றைப்போல ஒரு முழக்கம்
“பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று” (அப்போஸ்தலர் 2:1-2).
பண்டைய உலகில் அநேக மொழிகளில், “காற்று,” “மூச்சு,” மற்றும் “ஆவி,” ஆகியவற்றைக் குறிப்பிட, ஒரே சொல்தான் பயன்படுத்தப்பட்டது. காற்றின் ஒலி, அதிக ஓசையுள்ளதாகவும், நீண்ட நேரம் நீடிப்பதாகவும் இருக்கிறதே தவிர, மற்றபடி அது மூச்சின் ஒலிக்கு ஒத்ததாகவே இருக்கிறது. இயேசு, தாம் பரலோகத்திற்கு ஏறிச் செல்லும் முன்பாக, சீஷர்கள்மேல் ஊதி: “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்,” என்று சொன்னார் (யோவான் 20:22). அந்த நேரத்தில் இயேசு, பெந்தெகொஸ்தே நாளன்று நிகழப்போவதை விவரித்துக்கொண்டிருந்தார்.
ஆகவே, ஒரு சில நாட்கள் கடந்தபின்பு, சீஷர்கள் பலத்த காற்றைப்போன்றதொரு சத்தத்தைக் கேட்டபோது, அவர்கள் உடனடியாக அதை, இயேசு தங்கள்மேல் ஊதியதான சத்தத்துடன் தொடர்புபடுத்தி, இது இயேசு அளித்த வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலே என்று அடையாளம் கண்டுகொண்டார்கள்.
வேதாகமத்தின் தொடக்கத்தில் தேவன், ஆதாமுக்குள் ஜீவ சுவாசத்தை ஊதினார். தேவன் ஜீவ சுவாசத்தை ஊதும்வரை உயிரற்றதோர் உடல், நிலத்தின்மீது கிடந்தது. அதற்குப்பின்பு ஆதாம், ஜீவனுள்ள நபராக ஆனான். திருச்சபையானது, கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறது. ஆனால் அவர் தமது ஆவியின் ஜீவனை அதற்குள் ஊதும்வரை, அது உயிரற்றதோர் சடலத்தைப்போலவே இருந்தது. தேவன் தமது ஜீவனைத் தம் ஜனங்களுக்குள்ளே ஊதினார். அதனால், அவர்கள் அதன்பின்பு ஒருபோதும் முன்புபோல் இல்லை.
மகத்தான அக்கினிப் பந்துகள்
“அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது” (அப்போஸ்தலர் 2:3).
அவ்வறையில் இருந்த ஒவ்வொரு நபரின்மேலும் அமரும்படியாக ஓர் அக்கினிப் பந்து, தனித்தனியான அக்கினிச் சுடர்களாக, அல்லது அக்கினி “நாவுகளாகப்” பிளவுபட்டு, இறங்கி வந்தது. இதேபோன்ற ஒன்று, இதற்குமுன்பும் நிகழ்ந்துள்ளது. பழைய ஏற்பாட்டில் ஒரு முட்செடியின்மேல், நின்று எரிந்துகொண்டிருந்த அக்கினி ஜுவாலையிலே, தேவன் மோசேக்குத் தரிசனமானார். இதில் வியப்பூட்டும் காரியம் என்னவெனில், அந்த முட்செடியும் வெந்துபோகவில்லை, இந்தச் சீஷர்களும் எரிந்துபோகவில்லை.
தேவன் அக்கினியிலே தரிசனமானபோது, எகிப்திலே தேவஜனங்களை அவர்களுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து நடத்திவரும் பொறுப்பை, மோசேக்கு நியமித்தார். இப்பொழுதோ, பெந்தெகொஸ்தே நாளிலே, அதே அக்கினி அடையாளத்தின்மூலமாகத் தேவன், தமது திருச்சபைக்குரிய பொறுப்பை நியமித்தார்.
தேவனின் அக்கினி இறங்கியபோது, அந்த அறையில் நீங்களும் இருப்பதாகக் கற்பனைசெய்ய முயற்சியுங்கள். அது யார்மீது தங்கும் என்று நினைக்கிறீர்கள்? பேதுருவின் மீதா, யாக்கோபின் மீதா, யோவானின் மீதா, அல்லது ஒருவேளை அப்போஸ்தலர்கள் பன்னிருவரில் ஒவ்வொருவர் மீதுமா?
அந்த அக்கினி இறங்கி வரும்போது, அது தனித்தனிச் சுடர்களாகப் பிளவுபடுகிறது. நீங்கள்
அண்ணாந்து பார்க்கும்போது, இந்த அக்கினி ஜுவாலைகளில் ஒன்று, உங்களை நோக்கி வந்துகொண்டிருப்பதை உணர்கிறீர்கள். நீங்கள் அந்த அறை முழுவதும் உள்ள மற்ற அனைவரையும் பார்க்க, அக்கினி ஜுவாலையானது ஒவ்வொரு நபரின் மீதும் தங்குவதை நீங்கள் காண்கிறீர்கள்.
பழைய ஏற்பாட்டில் தேவன், தமது ஜனங்களில் சிலருக்குத் தமது பிரசன்னத்தையும், வல்லமையையும் அளித்தார். இப்பொழுதோ, அவர் தமது ஆவியை அவர்களனைவருக்குமே வழங்கிக்கொண்டிருந்தார். தேவன், இவ்வுலகில் தமது நோக்கத்தை நிறைவேற்றுகிற பொறுப்பை, ஒவ்வொரு விசுவாசிக்கும் நியமித்துக்கொண்டிருந்தார்.
அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசினார்கள்
“அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்” (அப்போஸ்தலர் 2:4).
திடீரென்றும், தன்னிச்சையாகவும், நூற்றிருபது விசுவாசிகளுள் ஒவ்வொருவரும், தாங்கள் ஒருபோதும் கற்றறிந்திராத மொழிகளில், தங்களால் பேசமுடிகிறது என்பதைக் கண்டார்கள்.
இது, நீண்ட காலத்திற்குமுன்பு, நிகழ்ந்ததன் ஒரு நேரெதிர் நிகழ்வாக இருந்தது. வேதாகமக் கதையின் தொடக்கத்தில், தேவன் இறங்கி வந்து, பாபேல் கோபுரத்தில் மனிதனுடைய பாஷையைக் குழப்பிவிட்டதன்மூலம், அவனது முரட்டாட்டத்தின் வேகத்தைக் குலைத்துப்போட்டார். (ஆதியாகமம் 11).
என்ன நிகழ்ந்தது என்பதைக் கற்பனைசெய்வது ஒன்றும் கடினமானதல்ல. ஒரே மொழியைப் பேசிய மக்களனைவரும் ஒன்றிணைக்கப்பட்டனர். பின்பு, வேறுபட்ட பாஷைக் கூட்டத்தினர், ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்து, பூமியின்மீதெங்கும் பரவிச் சென்றனர்.
பெந்தெகொஸ்தே நாளோ, அதற்கு முற்றிலும் எதிரிடையாயிருந்தது. வானத்தின் கீழிருக்கிற சகல தேசங்களிலுமிருந்து, ஜனங்கள் எருசலேமிலே கூடிவந்திருந்தார்கள் (அப்போஸ்தலர் 2:5). தேவனின் ஆவியானவர் இறங்கிவந்தபோது, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அவர்கள் தங்களுடைய சொந்த மொழிகளில் பேசக் கேட்டார்கள்.
பாபேலில், குழப்பத்திற்கும், மக்கள் சிதறடிக்கப்படுவதற்கும் ஏதுவாயிருந்த பாஷைகள், தேவனிடமிருந்து வந்த நியாயத்தீர்ப்பாயிருந்தன. பெந்தெகொஸ்தே நாளிலோ, புரிந்துகொள்ளுதலுக்கும், மக்கள் ஒன்றுகூட்டிச் சேர்க்கப்படுவதற்கும் வழிநடத்துவனவாயிருந்த பாஷைகள், தேவனிடமிருந்து வந்த ஆசீர்வாதமாயிருந்தன.
ஒவ்வொரு கோத்திரத்துக்கும் மற்றும் தேசத்துக்கும்
(எருசலேம்) பட்டணத்திலிருந்த ஜனக்கூட்டத்தார் அந்தக் காற்றின் ஓசையைக் கேட்டபோது, என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகக் காற்று வந்த திசையை நோக்கி விரைந்தார்கள் (அப்போஸ்தலர் 2:6). அவர்கள் வந்து சேர்ந்தபோது, தேவன் செய்த (மகத்துவமான) கிரியைகளை, விசுவாசிகள் பல்வேறு பாஷைகளிலே விவரிப்பதைக் கேட்டார்கள்.
அன்றையத்தினம் நீங்கள் எருசலேமின் விருந்தினராக வந்திருப்பீர்களானால், உங்களது மொழியைப் பேசுகிற யாராவது ஒருவரை நீங்கள் தேடிப்பார்த்திருப்பீர்கள். அன்று நடந்ததும் அதுதான். அவர்கள், சிறு குழுக்களாக ஒவ்வொரு விசுவாசியையும் சுற்றிச் சூழ்ந்துகொண்டு, தேவனின் கிரியைகளைத் தாங்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியிலே கேட்டார்கள்.
பூமியின் அனைத்துக் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பதான தேவனுடைய வாக்குத்தத்தம், நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்தது. அது இன்றும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இயேசுவில், தேவன் செய்திருக்கிறார் என்பதன் நற்செய்தி, அனைத்து மக்களுக்குமானது. அது ஒவ்வொரு மொழியிலும் அறிவிக்கப்படவேண்டுமென்று, தேவன் விரும்புகிறார். மேலும், விசுவாசிப்போர் ஒவ்வொருவருக்குமே, இந்த நற்செய்தியை மற்றவர்களுக்குக் கொண்டுசெல்வதில் ஒரு பங்கு இருக்கிறது.
யாருடைய மொழியை உங்களால் பேசமுடியும்? ஒருவேளை, குழந்தைகளும் மற்றும் இளைஞர்களும் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் உங்களால் பேசமுடியும். ஒருவேளை, வேறொரு கலாசாரத்தைச் சேர்ந்த மக்களைத் தொடர்புகொள்ள உங்களுக்கு உதவும் ஒரு மொழியை நீங்கள் பேசக்கூடும். அல்லது ஒருவேளை, ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதன்மூலம், நீங்களே மற்றவர்கள் இயேசுவின் சுவிசேஷத்தைக் கேட்பதற்கான ஒரு வழியாக மாறலாம்.
உங்களைச் சுற்றி ஜனங்களின் ஒரு வட்டாரத்தைத் தேவன் வைத்திருக்கிறார். அவர்களுக்குத் தேவன் என்ன செய்திருக்கிறார் என்கிற நற்செய்தியைக் கொண்டுசெல்லக்கூடியவர் நீங்கள்தான்.
காற்று, அக்கினி, மற்றும் நாவுகள் இன்று
பெந்தெகொஸ்தே நாளின் குறிப்பிடத்தக்கதான நிகழ்வுகளை, நாம் எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும்? தேவன், தமது ஜனங்களிடையே என்ன செய்ய விரும்புகிறார் என்பதைக் காற்று, அக்கினி மற்றும் நாவுகளின் மூலமாக, நமக்குக் கற்பிக்கிறார்.
தேவன், தமது ஜனங்களுக்குள்ளே தமது ஜீவசுவாசத்தை ஊதுகிறார். அது நிகழும்போது திருச்சபையானது, இனி வெறும் மனித ரீதியில் செயல்படுகிற, உள்நோக்குடைய ஒரு ஸ்தாபனமாக இல்லாமல், தேவனுடைய ஜீவனால் நிரம்பியுள்ள, (உயிர்த்)துடிப்புள்ள ஒரு சரீரமாக அது இருக்கிறது.
தேவன், தமது ஜனங்களுள் ஏதோ ஒரு சிலரைமட்டும் ஊழியத்திற்காக நியமிக்கவில்லை. மாறாக நம் அனைவரையுமே நியமித்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவில் விசுவாசம்கொள்ளும் ஒவ்வொரு விசுவாசியின்மீதும், சர்வவல்லவரான தேவனின் பிரசன்னமும், வல்லமையும் தங்கியுள்ளன. மேலும், தேவனுடைய மாபெரும் நோக்கம் என்னவெனில், தேவஜனங்கள்மூலமாக, அனைத்துத் தேசங்களுக்கும் தமது ஆசீர்வாதம் கடந்துசெல்லவேண்டும் என்பதேயாகும்.
தியானிப்பதற்கும் கலந்துரையாடுவதற்குமான கேள்விகள்
1. பரிசுத்த ஆவியானவரின் வரத்தைக்குறித்து, உங்கள் மனதில் முதலாவது தோன்றுவது
என்ன? பரிசுத்த ஆவியானவரின் வரத்தை நீங்கள் பெற்றிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை?
2. பரிசுத்த ஆவியானவர், உங்கள் வாழ்க்கையில் கிரியைசெய்வதை எப்படி நீங்கள் கண்டிருக்கிறீர்கள்?
3. பரிசுத்த ஆவியானவர், பிறர்மூலமாகக் கிரியைசெய்வதை எப்படி நீங்கள் கண்டிருக்கிறீர்கள்?
4. இயேசுவைப்பற்றிக் கேள்விப்படவேண்டிய தேவையில் இருப்பவர்களாக, உங்களைச் சுற்றித் தேவன் யாரை வைத்துள்ளார்? நீங்கள் எப்படி அவர்களுக்குச் சுவிசேஷத்தைக் கொண்டுசெல்லமுடியும்?