யோசேப்பின் கதை

உலக வரலாற்றில் இதுவரை நடந்த மாபெரும் நிகழ்வுக்கு எனக்கு ஒரு சிறப்பு இடம்…

உலக வரலாற்றில் இதுவரை நடந்த மாபெரும் நிகழ்வுக்கு எனக்கு ஒரு சிறப்பு இடம் கிடைத்தது.

நான் மரியாளோடு திருமணம் செய்ய நியமிக்கப்பட்டிருந்தேன். அவள் உலகத்தின் இரட்சகரைப் பெற்றெடுக்க தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியாது. மரியாளினுடைய பிள்ளையைப் பற்றி நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், அவருடைய பிறப்புக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதே. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சேர்க்கை புனிதமானது என்றும், அது திருமணத்திற்காகப் பாதுகாக்கப்படுகிறது என்றும் நாங்கள் அறிந்திருந்தோம். நான் மரியாளுக்காக என்னை பாதுகாத்தேன், மரியாள் எனக்காகத் தன்னைப் பாதுகாத்தாள். மரியாள் அந்தச் செய்தியுடன் என்னிடம் வந்தபோது நான் முற்றிலும் நொறுங்கிப்போனேன்.

அவள் தனது வாழ்வில் நடந்தவற்றை என்னிடம் சொல்வது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடியாது. ஒரு தூதனைப் பற்றி அவள் ஏதோ ஒன்று சொன்னாள், ஆனால் எனக்கு நினைவில் இருப்பது, அவள் “கர்பமாயிருக்கிறேன்” என்ற வார்த்தையைச் சொன்னது மட்டுமே. நான் கலங்கினேன். என் திருமணத்திற்கான எதிர்பார்ப்பு ஒரு கனவாக மாறியது .

அந்தத் திருமணத்தை நான் தொடர்வதற்கு வழியே இல்லை. என் நம்பிக்கையைக் கெடுத்த ஒருவருடன் நான் எப்படி வாழ முடியும்? ஒரு மனிதன் இல்லாமல் எந்தப் பெண்ணும் குழந்தை பெறுவதில்லை என்று எனக்குத் தெரியும். குறைந்தபட்சம், அந்தக் காலகட்டத்தில் நான் அதை அப்படித்தான் பார்த்தேன்.

நான் மரியாளை அதிகமாக நேசித்ததால் அவளை நான் காயப்படுத்த விரும்பவில்லை , ஆனால் அந்த திருமணத்திற்கு உடன்படுவது எனக்கு சாத்தியமாக தோன்றவில்லை.

மரியாள் யூதேயாவில் உள்ள தன் உறவினரான எலிசபெத்துடன் சென்று அங்கே தங்குவதே சிறந்தது என்று நினைத்ததாக என்னிடம் கூறினாள். என் உலகம் சிதறுண்டது. ஒரு நிமிடம் நான் நேசித்த பெண்ணைத் திருமணம் செய்ய ஆசையோடு காத்திருந்தேன், ஆனால் அடுத்த நிமிடம் என் தச்சுக்கடையில் தனிமையில் துயரத்தோடு அமர்ந்திருந்தேன்.

தேவன் என்னுடன் பேசிய விதம்

ஒரு நாள் இரவில், என் வாழ்க்கையில் ஒருபோதும் நடக்காத ஒரு அனுபவம் எனக்குக் கிடைத்தது. ஒரு கர்த்தருடைய தூதன் கனவில் எனக்குத் தோன்றி, “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்று சொன்னான்.

ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்.”

நான் விழித்தெழுந்தபோது, ஜெப ஆலயத்தில் நான் கற்ற ஒரு வேத வசனம் என் நினைவுக்கு வந்தது. தேவன் தாம் மேசியாவை அனுப்புவதாக வாக்குப்பண்ணியிருந்தார். இந்த மீட்பர் உலகிற்கு எப்படிப் பிறப்பார் என்பதை ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபோது, அவர், “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்” என்று சொல்லியிருந்தார்.

ஒரு கன்னிகையா! இன்னும் அதிகமாகச் சொல்லவேண்டுமானால், ஏசாயா தீர்க்கதரிசி கூறியபடி ஒரு கன்னிகைக்குப் பிறக்கும் குழந்தை இம்மானுவேல் என்று பெயரிடப்படுவார், அதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். ஆதி காலம் முதற்கொண்டே, தேவன் உலகிற்கு ஒரு மீட்பரை அனுப்பப் போவதாக வாக்குறுதி அளித்திருந்தார். தேவன் தமது வாக்குறுதியை நிறைவேற்றப் போகிறாரா? சிறிதளவில் துவங்கிய விசுவாசம் பின்னர் உறுதியான விசுவாசமாக மாறியது .

நான் என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டேன். நான் தெற்கே யூதேயாவுக்கு விரைந்தேன், என் அன்பான மரியாளை என் கைகளில் அணைத்து, நடந்ததை அவளிடம் சொல்ல ஆவலுடன் காத்திருந்தேன்.

நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்,” என்றேன். “

ஒரு கர்த்தருடைய தூதன் என் கனவில் எனக்குத் தோன்றினார்.” மரியாள் சிரித்தாள், அவள் ஆச்சரியப்படவில்லை என்பதை நான் உணர்ந்தேன்.

அவர் என்ன சொன்னார்?” என்று அவள் கேட்டாள்.

மூன்று விஷயங்கள்,” என்றேன். “முதலாவது, அவர் நான் பயப்பட வேண்டாம் என்று சொன்னார். பின்னர் அவர், உனக்குள் உற்பத்தியாயிருப்பது பரிசுத்த ஆவியினால் உண்டானது என்று சொன்னார்…”

மரியாளால் தனது சந்தோஷத்தை அடக்க முடியவில்லை. “யோசேப்பே, ஒரு தூதன் எனக்குத் தோன்றினார் என்று நான் உங்களிடம் முன்னமே சொல்ல முயற்சித்தேன்! அவர் என்னிடம் சொன்னதைத்தான் உங்களிடமும் சொன்னார்! தூதன் என்னைக் கலங்காதே என்று சொன்னார், பின்னர் எனக்கு ஒரு குமாரன் பிறப்பார் என்று சொன்னார். நான் கன்னிகையாயிருக்கையில் இது எப்படி ஆகும் என்று கேட்டபோது, இது பரிசுத்த ஆவியின் கிரியையாக இருக்கும் என்று அவர் என்னிடம் சொன்னார். “பரிசுத்த ஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்.”

எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதைக் கண்டு திகைத்துப்போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

இன்னும் ஒன்று இருக்கிறது,” என்று என் கதையை முடிக்க ஆவலுடன் சொன்னேன். “அந்தக் குழந்தைக்குரிய பெயரையும் தூதன் எனக்குக் கொடுத்தார்.”

சொல்லுங்கள்,” என்று மரியாள் எதிர்பார்ப்புடன் கண்களை விரித்தாள்.

அந்தத் தூதன் அவரை இப்படி அழைக்கச் சொன்னார்…” என்று நான் நிறுத்தினேன், நான் முடிப்பதற்குள், மரியாள் “இயேசு!” என்றாள்.

அது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன்.

அதையே என்னிடமும் தூதன் சொன்னார்,” என்றாள் அவள்.

தேவனுடைய கிருபையினால், எங்கள் இருவருக்கும் ஒரே வெளிப்பாட்டை அவர் கொடுத்து, எங்களை ஒன்று சேர்த்ததை நினைத்து நாங்கள் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டோம். தேவன் தம்முடைய குமாரனை உலகிற்கு அனுப்பிக் கொண்டிருந்தார், அந்த இரட்சிப்பின் நோக்கத்தின் மையத்தில் எங்கள் சிறிய வாழ்க்கையும் அடங்கியிருந்தது. அதைப் பற்றி நான் சிந்திக்கச் சிந்திக்க, அது எனக்கு மிகவும் மலைப்பாகத் தோன்றியது.

தேவன் எனக்கு சொன்னதற்குக் கீழ்ப்படிந்து, நான் மரியாளை என் மனைவியாக வீட்டிற்குக் அழைத்து வந்தேன், மேலும் குழந்தை பிறக்கும் வரை நான் அவளுடன் எந்தவிதமான ஐக்கியமும் கொள்ளவில்லை.

பெத்லெகேமை நோக்கி எங்களது பயணம்

சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு புதிய அரசாங்க ஆணையைப் பற்றிய செய்தியுடன் ரோமாபுரியிலிருந்து ஒரு செய்தியாளன் எங்கள் ஊருக்கு வந்தான். மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக, மக்கள் அனைவரும் தங்கள் குடும்ப பூர்வீக ஊருக்குத் திரும்பிச் சென்று பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. கற்பனை செய்ய முடிகிறதா? அனைவரும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள்.

எல்லாத் திசைகளிலும் வண்டிகளுடனும் மிருகங்களுடன், குடும்பங்கள் பயணித்ததால் சாலைகளில் குழப்பம் நிலவியது.

மரியாளுக்குப் பிரசவ காலம் நெருங்கியிருந்தது, ஆனால் ரோம சாம்ராஜ்யம் கட்டளையிட்டால் அதற்கு விதிவிலக்கு இல்லை. எனவே நான் கழுதையை ஆயத்தப்படுத்தினேன், நாங்கள் இருவரும் என்னுடைய பூர்வீக ஊராகிய பெத்லெகேமை நோக்கிப் பயணம் செய்தோம்.

இதுவும் தேவனுடைய திட்டத்தில் ஒரு பகுதி என்பதை நான் பின்னரே உணர்ந்தேன். மேசியா பெத்லெகேமிலிருந்து வருவார் என்று மீகா தீர்க்கதரிசி சொல்லியிருந்தார். இயேசு பிறக்கவிருந்த நேரத்தில், பெத்லெகேமுக்கு நாங்கள் செல்லும்படி ஒரு ரோமச் சக்கரவர்த்தி கட்டளையிட தேவன் சிந்தை வைத்தார். இது என்ன ஒரு ஆச்சரியம்!.

நாங்கள் வந்தபோது பெத்லெகேம் நிரம்பி வழிந்தது, சத்திரத்தில் எங்களுக்கு இடமில்லை. அதனால் நாங்கள் மிருகங்களுடன் தஞ்சம் புகுந்தோம். சில வைக்கோல்களைச் சேர்த்து, மரியாளுக்காக ஒரு படுக்கை செய்தேன், அங்கேதான் இயேசு பிறந்தார்.

அந்த மகிழ்ச்சியான தருணத்தை என்னால் உங்களிடம் விவரிக்க முடியாது. தேவனுடைய அற்புதமான பரிசை முதன்முதலில் தொட்டவன் நான். என் கைகள் அவரை உலகிற்குக் கொண்டு வந்தன, அவரை என் கைகளில் முதன்முதலில் பிடித்த பாக்கியம் எனக்கு கிடைத்தது .

ஞானிகள்

இயேசு பிறந்த பிறகு, நான் ஒரு வீட்டைக் கண்டுபிடித்து பெத்லெகேமில் வழக்கமான எங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தோம். ஆனால் ஒரு நாள் இரவு, எங்கள் அமைதியான வாழ்வில் ஒரு இடையூறு ஏற்பட்டது. அது என்னவென்றால் மூன்று பேர் வந்து, தாங்கள் ராஜாக்கள் என்றும், இயேசுவைப் பார்க்க வந்திருப்பதாகவும் சொன்னார்கள். இந்த ராஜாக்கள் கிழக்கிலிருந்து வந்தவர்கள். அவர்கள் அந்நிய தேசத்தினர் (புறஜாதியார்), ஒரு நட்சத்திரத்தின் மூலமாக தேவன் அவர்களுடன் பேசியிருந்தார், அது பெத்லெகேமுக்கு நீண்ட தூரப் பயணத்தில் அவர்களை வழிநடத்தியது. அந்த ராஜாக்கள் இயேசுவைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து, அவரை ஆராதித்தார்கள். பின்னர் அவர்கள் அவருக்காகக் கொண்டு வந்த பரிசுகளைத் திறந்தார்கள் — பொன், தூபவர்க்கம் மற்றும் வெள்ளைப்போளம்.

அவர்களது வருகையைப் பற்றி நான் நினைக்கும்போது இன்னும் சிரிக்கிறேன். இந்த ராஜாக்கள் மிகவும் உயர்வான நிலையில் இருந்தனர் , நாங்களோ தாழ்மையான நிலையில் இருந்தோம் . தேவன் பணக்காரர்களையும் ஏழைகளையும் இயேசுவின் மூலம் ஒன்று சேர்த்தார், நாங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு அவரை ஆராதித்தோம்.

மீண்டும் பயணம்

ராஜாக்கள் எங்களை விட்டுச் சென்றபோது, ஒரு கர்த்தருடைய தூதன் மறுபடியும் கனவில் என்னுடன் பேசினார். “எழுந்திரு,” என்று அவர் சொன்னார். “குழந்தையையும் அவருடைய தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்கு ஓடிப் போய்விடு;

ஏனென்றால் ஏரோது குழந்தையைக் கொல்லும்படி அவரைத் தேடப் போகிறான்.”

அவரைக் கொல்லவா? உலகத்தின் இரட்சகரைக் கொல்ல ஏரோது ஏன் விரும்ப வேண்டும்? மற்ற தேசங்களின் ராஜாக்கள் அவரை ஆராதிக்கும்போது, நம்முடைய ராஜா ஏன் அவரைக் கொல்ல வேண்டும்?

அது எனக்குப் புரியவில்லை, ஆனால் தேவன் பேசிவிட்டார், நாங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்று எனக்குத் தெரியும். எனவே எங்களால் முடிந்ததை எடுத்துக்கொண்டு, இரவின் மறைவிலே பெத்லெகேமை விட்டு வெளியேறி, இயேசுவையும் அவருடைய தாயையும் எகிப்துக்கு அழைத்துச் சென்றேன். ஒரு காலத்தில் தேவன் தன்னுடைய மக்களை விடுவித்த அந்த இடமாகிய எகிப்து எங்களுடைய மூதாதையர்கள் அடிமைகளாக இருந்த இடமாகும். அது இயேசுவுக்குப் பாதுகாப்பான இடமாக மாறியது எவ்வளவு விசித்திரமானது !.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு, ஏரோது மரித்துவிட்டான் என்று கேள்விப்பட்டோம். வீட்டிற்குத் திரும்புவது பாதுகாப்பானது என்பதால் , நாங்கள் நாசரேத்துக்கு திரும்பி என் தச்சு வேலையை தொடர்ந்தேன்.

என் கதையில் இன்னும் நிறைய இருக்கிறது, ஆனால் இப்போதைக்கு நான் இங்கே நிறுத்த வேண்டும். நான் நிறுத்துவதற்கு முன் இன்னும் ஒரு விஷயம்: இயேசுவின் கன்னிப்பிறப்பை விசுவாசிப்பது கடினம் என்று நீங்கள் நினைத்தால், முதலில் அது எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள் ?

என்னைவிட வேறு யாருக்கும் இதை விசுவாசிப்பது மிகவும் கடினமானதாக இருக்கப்போவதில்லை. ஆனால் அவர் ஒரு கன்னிகையால் பிறந்தவர் என்று என்னால் சொல்ல முடியும்.

அது ஏன் முக்கியம் என்றால்: இயேசு ஒரு கன்னிகைக்கு பிறந்ததினால் , இந்த உலகில் வாழ்ந்த எந்த மனிதர்களாலும் செய்யமுடியாதவைகளை அவர் நமக்காக செய்து முடித்தார்.

ஜெபம் – பிதாவே, உம்முடைய குமாரனாகிய இயேசுவை உலகிற்கு அனுப்பியதற்காக உமக்கு நன்றி. அவருடைய பிறப்பைப் பற்றி நீர் எங்களுக்குச் சொன்ன அனைத்தையும் எங்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது, ஆனால் அவருடைய மகத்துவத்தையும் மகிமையையும் நாங்கள் சிந்திக்கையில், ஆச்சரியத்தால் நிறைந்து முழங்கால்படியிட்டு உம்மை ஆராதிக்கிறோம் ! ஆமென்.

Series : கிறிஸ்துமஸ் கதைகள்

கிறிஸ்துமஸ் கதைகள்

காபிரியேலின் கதை

உலகிற்கு இயேசு கிறிஸ்து வரவிருப்பதை அறிவிக்கும் விசேஷித்த சிலாக்கியம் எனக்குக் கொடுக்கப்பட்டது. அங்கே எத்தனை தூதர்கள் இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் அப்போஸ்தலனாகிய யோவான்…
கிறிஸ்துமஸ் கதைகள்

சிமியோனின் கதை

நான் பெத்லெகேமில் இல்லை. நான் தூதர்களைக் காணவில்லை. மேலும் நான் சத்திரத்திற்கும் செல்லவில்லை. ஆனால், இயேசு பிறந்த நாற்பது நாட்களுக்குப் பிறகு நான் அவரை என் கைகளில்…
கிறிஸ்துமஸ் கதைகள்

ஏரோதின் கதை

வரலாற்றிலேயே மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட தலைவனாக இருக்கக்கூடும் என்று நான் அடிக்கடி உணர்கிறேன், அப்படியே அநேகர் என்னை குறித்து நினைத்தனர். என்னுடைய வாழ்க்கையின் மாபெரும் சாதனைகள் பற்றி…
கிறிஸ்துமஸ் கதைகள்

மரியாளின் கதை

என் வாழ்க்கையை என்றென்றைக்கும் மாற்றிய அந்த நாள் வேறு எந்த ஒரு நாளையும் போலவேதான் ஆரம்பித்தது. நான் என் வழக்கமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன், திடீரென்று, என் அருகே…

யோசேப்பின் கதை

உலக வரலாற்றில் இதுவரை நடந்த மாபெரும் நிகழ்வுக்கு எனக்கு ஒரு சிறப்பு இடம் கிடைத்தது. நான் மரியாளோடு திருமணம் செய்ய நியமிக்கப்பட்டிருந்தேன். அவள் உலகத்தின் இரட்சகரைப் பெற்றெடுக்க தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியாது. மரியாளினுடைய பிள்ளையைப் பற்றி நீங்கள் முதலில்…