மரியாளின் கதை

என் வாழ்க்கையை என்றென்றைக்கும் மாற்றிய அந்த நாள் வேறு எந்த ஒரு நாளையும்…

என் வாழ்க்கையை என்றென்றைக்கும் மாற்றிய அந்த நாள் வேறு எந்த ஒரு நாளையும் போலவேதான் ஆரம்பித்தது. நான் என் வழக்கமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன், திடீரென்று, என் அருகே வேறு யாரோ ஒருவர் நிற்பதை உணர்ந்தேன்.

மெதுவாக நிமிர்ந்து பார்த்தபோது, அங்கே அவர் இருந்தார். தேவன் ஒரு தூதனை என்னிடம் அனுப்பினார், அவர் தோன்றியபோது, நான் மிகவும் அச்சத்தினால் நிறைந்தேன் என்று உங்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும். என் இருதயம் படபடத்தது, என் முழங்கால்கள் நடு நடுங்கின, நான் உட்கார்ந்திருக்காவிட்டால், ஒருவேளை மயக்கமடைந்திருப்பேன்.

தேவன் நம் அருகில் வரும்போது, நமக்குள் எதோ ஒருவிதமான அச்ச உணர்வு ஏற்படுமல்லவா. தேவன் தூரமாய் இருக்கும்போது நாம் பாதுகாப்பாக இருப்பதாக உணருகிறோம், ஆனால் அவர் நமக்கு மிக நெருக்கமாக வந்தால் நாம் பிரச்சினையில் அகப்படுவோமே என்று பயப்படுகிறோம்.

ஆனால் அந்தத் தூதன் என்னிடம், “மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய்” என்று சொன்னான். கிருபை என்றால் “இரக்கமும் – தேவதயவும்”, நாம் அவற்றை பெற்றுக்கொள்ள தகுதியற்றவர்கள், ஆனால் தேவன் அதை நமக்கு இலவசமாக அளிக்கிறார். அந்த நாளில் தேவன் என்மேல் கிருபை காட்டினார்.

தேவனுடைய வல்லமையைக் காணுதல்

தேவதூதன் சொன்ன காரியம் முற்றிலும் திகைப்பூட்டுவதாக இருந்தது: “மரியாளே, நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக, அவர் பெரியவராயிருப்பார்,  உன்னதமானவருடைய குமாரன் என்று அழைக்கப்படுவார். கர்த்தர் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மேல் என்றென்றைக்கும் ராஜ்யம்பண்ணுவார்.”

ஒரு குழந்தையா ? அது எப்படி ஆகும்? நான் ஒரு கன்னிகையாயிற்றே.

என் பிள்ளை தாவீதின் சிங்காசனத்தில் விற்றியிருப்பது எப்படி நடக்கும்? நான் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். நாங்கள் அரண்மனைகளில் வாழ்பவர்களோ அல்லது ராஜாக்களுடன் பழகுபவர்களோ இல்லை.

என்றென்றைக்கும் ராஜ்யம் பண்ணும் ஒரு பிள்ளையா? இந்த உலகத்தில் எதுவும் என்றென்றைக்கும் நீடிப்பதில்லை, அப்படியிருக்க, அது எப்படிச் சாத்தியமாகும்?

ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, குழப்பத்தை உண்டாக்கிய சொல் என்னவென்றால், பிறக்கப்போகும் அந்தக் குழந்தை “உன்னதமானவருடைய குமாரன்”

என்று தூதன் சொன்னதுதான் , என்னுடைய குழந்தைகளில் எவராவது தேவனுடைய குமாரனாக எப்படி இருக்க முடியும்?அந்தத் தூதனிடம் அதற்கான பதில் இருந்தது: “பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும். ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் குழந்தை பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்”.

தேவனால் சொல்லப்பட்ட இந்த இரகசியத்தைக் குறித்து நான் இன்னும் ஆச்சரியப்படுகிறேன். தேவன், என் கர்ப்பத்திலே ஒரு புதிய ஜீவன் கருத்தரிக்கக் காரணமானார், அந்த ஜீவன் அவருடைய சொந்த குமாரனின் ஜீவன் ஆகும். என் மூலமாகவே, தேவன் சரீரமெடுத்து, உதவியற்ற குழந்தையாக இந்த உலகத்தில் பிறந்தார்.

இன்னும் ஒரு விஷயம், பல வருடங்களாகக் ஒரு குழந்தைக்காக காத்திருந்த என்னை விட வயதில் மூத்த சகோதரியான எலிசபெத், இப்பொழுது ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறாள் என்று தூதன் என்னிடம் சொன்னான். மேலும் அந்தத் தூதன்,,. “தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை” என்றும் சொன்னான்.

எனக்கு எப்படிப் பதிலளிப்பது என்று தெரியவில்லை. எனக்கு வாக்களிக்கப்பட்டவைகள் என் புரிதலுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது, மேலும் என்னிடமிருந்து தேவனுக்கு என்ன தேவைப்படும் என்று நான் நினைக்கக்கூடத் துணியவில்லை. ஆனாலும், அந்தத்தருணமே , தேவனுடைய ஆவியானவர் என்னுடன் இருக்கிறார் என்பதையும், எனக்குத் தேவையான அனைத்தையும் அவர் எனக்குக் கொடுப்பார் என்று நான் அறிந்திருந்தேன்.

இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை; உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்று சொன்னேன்.

பின்னர் அந்தத் தூதன் மறைந்துவிட்டான்.

ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.”

எலிசபெத்தும் யோசேப்பும்

நான் என் சகோதரி எலிசபெத்துடன் சென்று தங்க முடிவுசெய்தேன், நான் அவளின் வீட்டிற்கு வந்த போது, நாங்கள் இருவருமே ஆனந்தத்தினால் நிரப்பப்பட்டோம். “இத்தனை வருடங்களாகக் குழந்தைகாக ஏங்கி எதிர்பார்த்த பிறகு, தேவன் இந்த அற்புதமான குழந்தைச்செல்வத்தால் உன்னை ஆசீர்வதிப்பார் என்று யார் கற்பனை செய்திருப்பார்கள்?” என்று நான் சொன்னேன்.

எலிசபெத், தான் வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் குழந்தையைத் தன் உள்ளங்கைகளால் மெதுவாகத் தடவியவாறு, வாசலில் பிரகாசமாக நின்றாள். “மேலும் உன் வாழ்த்துதலின் சத்தம் என் காதில் விழுந்தபோது, என் வயிற்றிலிருக்கிற பிள்ளை சந்தோஷத்தினால் துள்ளியது” என்று அவள் சொன்னாள். இதன் பொருள், நாங்கள் மூவரும் களிகூர்ந்தோம், பரலோகத்தில் உள்ள தேவனும் களிகூர்ந்தார் என்பதில் எந்தச் சந்தேகமும் என் மனதில் இல்லை.

பின்னர் தேவனுடைய ஆவியானவர் எலிசபெத்தின்மேல் வந்தார், அவள் உரத்தசத்தமாக என்னிடம்: “ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது” என்று சொன்னாள்.

நான் கர்ப்பமாய் இருக்கிறேன் என்று அவளுக்கு எப்படித்தெரியும்? நான் இன்னும் எலிசபெத்திடம் நான் சுமக்கும் குழந்தையைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே! அவள் அறிந்து கொள்ள ஒரே வழி, தேவனே அவளுக்கு வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்பதுதான்!

பின்னர் எலிசபெத், நான் ஒருபோதும் மறக்க முடியாத சில வார்த்தைகளைச் சொன்னாள்: “கர்த்தரால் உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்று விசுவாசித்தவளே பாக்கியவதி!”, என்பதாகும்.

தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று நான் ஏற்கனவே விசுவாசித்திருந்தேன். ஆனால் எலிசபெத்தை நான் சந்தித்ததின் மூலமாக அவள் என் விசுவாசத்தை உறுதிப்படுத்தினாள்: “மரியாளே, அந்த வாக்குத்தத்தம் நிறைவேறும். தேவன் சொன்னது நிச்சயம் நிறைவேற்றப்படும்”, என்பதே.

நான் உணர்ந்த சந்தோஷத்தை என்னால் அடக்கமுடியவில்லை. தேவனுடைய குமாரன் உலகிற்கு வருகிறார், நான் அவருடைய ஜீவனை எனக்குள் சுமக்கிறேன். என் முழு உள்ளமும் துதியால் நிரம்பியது; அது எனக்கு அளிக்கப்பட்ட வார்த்தைகளாக வெளிப்பட்டுப் பொங்கி வழிந்தது:

என்ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது;

என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.

அவர் தமது அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்.

இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.

வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. “

 நான் எலிசபெத்துடன் இருந்த காலம் முழுவதும், யோசேப்பு என்ன செய்துகொண்டிருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் திருமணம் செய்ய நியாயப்படி நிச்சயிக்கப்பட்டிருந்தோம், எங்கள் திருமண நாளை நாங்கள் இருவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். யோசேப்பு ஒரு நல்ல மனிதர், மேலும் என்னை ஆழமாக நேசிக்கிறார் என்று எனக்குத் தெரியும், ஆனால் தேவன் என் வாழ்வில் என்ன செய்கிறார் என்பதை அவர் எப்படி புரிந்துகொள்வார் என்று நான் குழம்பினேன். மேலும் அவர் என்னைத் தள்ளி திருமண உறவை ரத்து செய்வாரோ என்று பயந்தேன். இதுவே தேவன் என் வாழ்க்கையில் வைத்த அழைப்பின் விலையாக இருக்குமானால், அதைக் கொடுக்கவும் நான் தயாராக இருந்தேன்..

ஒரு தூதன் கனவில் அவரிடம் பேசினார் என்று யோசேப்பு என்னிடம் சொன்னபோது, என் சந்தோஷத்தை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். “உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே” என்று தூதன் சொல்லியிருந்தார். “ஏனென்றால், அவளிடத்தில் உண்டாயிருக்கிறது, பரிசுத்த ஆவியினால் உண்டானது,” மேலும் ஒரு காரியம் என்று யோசேப்பு சொன்னார்.

நான்அவருக்கு இயேசு என்று பெயரிடவேண்டுமாம்.”

தூதன் யோசேப்பிடம் சொன்னதும், தூதன் என்னிடம் சொன்னதும் சரியாகப் பொருந்திப்போனது. அது தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு மற்றுமொரு உறுதிப்பாடாக எனக்கு காணப்பட்டது .

உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே

பெத்லகேமும் மேய்ப்பர்களும்

குழந்தை பிறப்பதற்குச் சற்று முன்பு நாட்டில் உள்ள அனைவரும் தாங்கள் பிறந்த ஊருக்கு சென்று தங்கள் பெயர்களைப் பதிவுசெய்ய வேண்டும் என்று ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன் பொருட்டு, நான் யோசேப்புடன் பெத்லகேமுக்குப் பயணம் செய்ய வேண்டியிருந்தது.

அந்தச் சிறிய ஊரில் ஒரே ஒரு சத்திரமே இருந்தது, நாங்கள் வந்தபோது அது ஏற்கெனவே நிரம்பியிருந்தது. எனவே நாங்கள் விலங்குகள் இருந்த இடத்தில் அடைக்கலம் கண்டோம், அங்கேதான் இயேசு பிறந்தார்.

நாங்கள் மூவர் மட்டுமே அங்கே இருப்பது விசித்திரமாகத் தோன்றியது. உலகத்திலேயே நிகழ்ந்த மாபெரும் அற்புதம் என் கரங்களில் இருந்தது. எனக்குத் தெரிந்தவரை, தேவன் செய்த மாபெரும் அற்புதத்தை யோசேப்பும் நானும் மட்டுமே அறிந்திருந்தோம்.

ஆனால் அது விரைவில் மாறியது. அவர் பிறந்த இரவு முடிவதற்குள், சிலர் எங்களின் தங்குமிடத்தை நோக்கிவரும் சத்தம் எனக்குக் கேட்டது. அவர்களில் ஒருவர், ஒரு தூதன் தங்களுக்கு தோன்றியதாகவும், அவர்கள் அனைவரும் பயத்தால் நிறைந்ததாகவும் எங்களிடம் சொன்னார். அவர்கள் என்ன உணர்ந்து இருப்பார்கள், என்று நான் அறிந்திருந்ததினால் புன்னகைத்தேன்.

பின்னர் அவர்களில் மற்றுமொருவர் முன்னே வந்து சொன்னார்: “ஆதலால் தூதன், எங்களிடம் பயப்படாதீர்கள் என்று சொல்லி, ‘இதோ, எல்லா ஜனங்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்கு இரட்சகர் பிறந்திருக்கிறார்; இவரே கிறிஸ்து என்னும் கர்த்தர்’ என்றுசொன்னார்.”

ஒரு தூதன் யோசேப்பிடம், “அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார், ஆகையால் அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக” என்று சொல்லியிருந்தார்.

தேவன் இந்த மேய்ப்பர்களுடன் பேசியதை , அவர்கள் சொன்னபோது நான் கவனமாகக் கேட்டேன். இயேசுவே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா என்றும், அவருடைய பிறப்பு எல்லா மக்களுக்கும் நற்செய்தி என்றும், அவரே எல்லாருக்கும் கர்த்தர் என்றும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினார்கள்.

அவர்கள் சொன்ன அனைத்தும் யோசேப்புக்கும் எனக்கும் வெளிப்படுத்தப்பட்டவற்றுடன் பொருந்தியது. எனவே நான் இந்த எல்லாக் காரியங்களையும் என் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, என் இருதயத்திலே சிந்தித்துக்கொண்டிருந்தேன் .

தேவாலயமும் சிலுவையும்

இயேசு பிறந்த சில வாரங்களுக்குப் பிறகு, நாங்கள் எருசலேமிலுள்ள தேவாலயத்திற்கு சென்று ஒரு பலியைச் செலுத்தவும், இயேசுவைக் கர்த்தருக்கு முன்பாக நிறுத்தவும் சென்றோம்.

நாங்கள் அங்கிருக்கும்போது, ஒரு வயதானவர் எங்களிடம் வந்து, குழந்தையைத் தன் கைகளில் ஏந்தவேண்டும் என்று கேட்டார். அவர் தம் வாழ்நாள் முழுவதும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவுக்காகக் காத்திருந்ததாகவும், அவர் இறப்பதற்கு முன் இந்தக் குழந்தையைப் பார்ப்பார் என்று தேவன் அவரிடம் சொல்லியிருந்ததாகவும் கூறினார்.

இயேசுவைத்தன் கைகளில் ஏந்திக்கொண்ட அந்த முதியவர், அவரை ஆசீர்வதித்தார், பின்னர் யோசேப்பையும் என்னையும் ஆசீர்வதித்தார். பரிசுத்த ஆவியானவரால் தெளிவாக அவருக்குக் கொடுக்கப்பட்ட வார்த்தைகளைப் பேசிய அவர்: “இதோ, இவர் அநேகரை விழவும், அநேகரை எழும்பவும், விரோதிக்கப்படும் அடையாளமாகவும்வைக்கப்பட்டிருக்கிறார்” என்று சொன்னார். பின்னர் தன் கண்களில், துக்கத்துடனும் பரிவுடனும் என்னை நேராகப் பார்த்து, “உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும்” என்றும் சொன்னார்.என் குழந்தை விரோதிக்கப்படுவாரா? என் ஆத்துமாவைப் பட்டயம் உருவிப்போகுமா?

இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா, அவருடைய பிறப்பு எல்லா ஜனங்களுக்கும் நற்செய்தியாகும், மேலும் அவரே அனைவருக்கும் ஆண்டவர் ஆவார்.

இந்த வார்த்தைகளை நான் அடிக்கடி யோசித்துப்பார்ப்பேன், வேதனையுடன் கூடிய இந்த வார்த்தைகள் உண்மையாயிற்று . அவர் தம்முடைய சொந்தங்களிடம் வந்தார், ஆனால் அவருடைய சொந்தங்கள்அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்திலேயே அவருக்கு விரோதமான சதித்திட்டங்கள் தொடங்கின, முடிவில் அவர்கள் அவரைச் சிலுவையில் தொங்கவிட்டார்கள்.

நான் அங்கே இருந்தேன். அவர்கள்அவருடைய கைகளில். ஆணிகளை அறைந்தபோது, என் ஆத்துமாவை ஒரு பட்டயம் உருவிப் போனது போலிருந்தது. இதைத்தான் அந்த வயதான முதியவர் என்னிடம் முன்பே கூறியிருந்தார். ஆனால் நான் அனுபவித்த வேதனையை, அவர் அனுபவித்த வேதனையுடன் ஒப்பிடமுடியாது. இயேசு சிலுவையில் பாடுபட்டபோது நம்முடைய பாவங்களை அவர் சுமந்தார். நாம் மன்னிக்கப்படவும், இரட்சிக்கப்படவும், தேவனுடன் ஒப்புரவுஅடையவும் அவர் நம் பாவங்களைத் தம்மேல் ஏற்றுக்கொண்டார்.

 மூன்றாம்நாளில், அவர் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் பரலோகத்திற்கு பரம் ஏறினார் , எனக்காகவும், அவரை நம்புகிற அனைவருக்காகவும் பரலோகத்தின் வாசல்களைத் திறந்து வைத்தார்.

இயேசு மரித்தபோது நான் துக்கத்தால் நிரம்பிப்போனேன். ஆனால் அது ஒரு முடிவல்ல . மூன்றாம் நாளில், அவர் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் பரலோகத்திற்கு பரம் ஏறினார், எனக்காகவும், அவரை நம்புகிற அனைவருக்காகவும் பரலோகத்தின் வாசல்களைத் திறந்து வைத்தார்.

ஜெபம் – பிதாவே, இயேசு கிறிஸ்துவின் வருகையினால் எங்களுக்குக் கிடைத்த உம்முடைய கிருபைக்காக உமக்கு நன்றி.  அவர் உலகிற்கு வந்து எங்களை இரட்சிக்கவும், காப்பாற்றவும் வந்ததற்காக உமக்கு நன்றி. அவரில் என் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வைக்க எனக்கு உதவி செய்யும்.  உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று விசுவாசிக்க எங்களுக்கு உதவி செய்யும்!      ஆமென்.

Series : கிறிஸ்துமஸ் கதைகள்

கிறிஸ்துமஸ் கதைகள்

காபிரியேலின் கதை

உலகிற்கு இயேசு கிறிஸ்து வரவிருப்பதை அறிவிக்கும் விசேஷித்த சிலாக்கியம் எனக்குக் கொடுக்கப்பட்டது. அங்கே எத்தனை தூதர்கள் இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் அப்போஸ்தலனாகிய யோவான்…
கிறிஸ்துமஸ் கதைகள்

யோசேப்பின் கதை

உலக வரலாற்றில் இதுவரை நடந்த மாபெரும் நிகழ்வுக்கு எனக்கு ஒரு சிறப்பு இடம் கிடைத்தது. நான் மரியாளோடு திருமணம் செய்ய நியமிக்கப்பட்டிருந்தேன். அவள் உலகத்தின் இரட்சகரைப் பெற்றெடுக்க…
கிறிஸ்துமஸ் கதைகள்

ஏரோதின் கதை

வரலாற்றிலேயே மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட தலைவனாக இருக்கக்கூடும் என்று நான் அடிக்கடி உணர்கிறேன், அப்படியே அநேகர் என்னை குறித்து நினைத்தனர். என்னுடைய வாழ்க்கையின் மாபெரும் சாதனைகள் பற்றி…
கிறிஸ்துமஸ் கதைகள்

சிமியோனின் கதை

நான் பெத்லெகேமில் இல்லை. நான் தூதர்களைக் காணவில்லை. மேலும் நான் சத்திரத்திற்கும் செல்லவில்லை. ஆனால், இயேசு பிறந்த நாற்பது நாட்களுக்குப் பிறகு நான் அவரை என் கைகளில்…

மரியாளின் கதை

என் வாழ்க்கையை என்றென்றைக்கும் மாற்றிய அந்த நாள் வேறு எந்த ஒரு நாளையும் போலவேதான் ஆரம்பித்தது. நான் என் வழக்கமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன், திடீரென்று, என் அருகே வேறு யாரோ ஒருவர் நிற்பதை உணர்ந்தேன். மெதுவாக நிமிர்ந்து பார்த்தபோது, அங்கே அவர்…