கர்த்தர் கற்றுக்கொடுத்த ஜெபத்தின் ஆறு விண்ணப்பங்களும் “எங்கள் பிதாவே” என தொடங்கி பிதாவிடம் விண்ணப்பிப்பது போலவே உள்ளது.
பிதாவே,உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக
பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக
பிதாவே, உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக.
பிதாவே, எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை எங்களுக்குத் தாரும்.
பிதாவே, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
பிதாவே, தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்,
இவையெல்லாம் தேவனுடைய பிள்ளைகள் செய்யும் ஜெபம். தேவனை தங்களுடைய பிதாவாக தெரிந்துகொண்டவர்கள் யாராயிருந்தாலும். இந்த ஜெபத்தை தங்களுடைய ஜெபமாக தாராளமாக செய்யலாம். இது அவர்களுக்கே உரியதாகும்.
வீழ்ந்த மனுக்குலத்தின் இயல்பான நிலை என்னவென்றால், நாம் தேவனிடத்திலிருந்து தூரமாயிருக்கிறோம். இயல்பாகவே நாம் அவரை அறிந்திருக்கவும் இல்லை, அவரை நேசிக்கவும் இல்லை. இயல்பாகவே, நாம் தேவனுடைய நாமம் மகிமைப்படவேண்டும் என்பதை விட நமது சொந்த பெயர்களைப் பற்றியே அதிக அக்கறை கொண்டவர்களாக உள்ளோம். தேவ சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுப்பதை காட்டிலும் நமது சொந்த சித்தத்தின்படி செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறோம்.
ஆனால் இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வந்ததின் நோக்கமே, நமக்கும் பிதாவுக்கும் இடையே ஒரு புதிய உறவை ஏற்படுத்துவதற்காகதான். தேவன், இயேசுவின் பிதாவாக இருக்கிறார், அவர்மீது கொண்ட விசுவாசத்தினாலேயே நாமும் தேவனை நம்முடைய பிதாவாக அறிந்திருக்கிறோம். நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்பொழுது. அவர் நம்மை பிதாவுடனான புதியதொரு உறவுக்குள் அழைத்துச் செல்கிறார். அந்த உறவின் மூலம் நாம் அவரில் அன்புகூருகிறோம், அவரை விசுவாசிக்கிறோம், அவரை ஆராதிக்கிறோம், அவருக்கு ஊழியம் செய்கிறோம் மற்றும் அவருக்கு கீழ்படிகிறோம். நமது பிதாவாகிய தேவனோடு நாம் ஒப்புரவாகும்பொழுது, நாம் ஒரு புதிய சமாதானத்தை, புதிய பெலத்தை, புதிய நம்பிக்கையை மற்றும் புதியதொரு மகிழ்ச்சியை காண இயலும்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை உங்கள் வாழ்வில் ஏற்றுக்கொள்ளும் அந்த தருணத்தில், தேவனை உங்கள் பிதாவாக நீங்கள் ஏற்றுக்கொள்ள துவங்குகிறீர்கள். மேலும் இதை நீங்கள் அவருடைய நாமத்தின் மீது வைக்கும் விசுவாசத்தினால் செய்கிறீர்கள்.
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோவான் 1:12
நாம் இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளானபடியினால். கிறிஸ்துவின் மூலமாய், நாம் தேவனுடைய குடும்பத்தில் இணைக்கப்படுகிறோம். இதனால் தேவன் அவரை “அப்பா பிதாவே!” என அழைக்கக்கூடிய ஆவியை நமக்கு தந்திருக்கிறார். (கலா 4 : 4 – 6) , “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள் (1 யோவான் 3:1).”
தியானத்திற்கு உரிய கேள்விகள்
தேவனை உங்கள் பிதாவாக நினைப்பது உங்களுக்கு கடினமாகத் தோன்றுகிறதா? அப்படித் தோன்றினால், அதன் காரணம் என்ன? இல்லையெனில், ஏன் இல்லை ? அப்படி தேவன் உங்கள் பிதாவானால், நீங்கள் ஜெபிக்கும்போது எந்த மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் ?
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்
ஒரு தேவனுடைய பிள்ளை எப்படி ஜெபிப்பார் ?