ஜெபத்திற்க்கான ஒரு மாதிரி

கர்த்தருடைய ஜெபம், நாம் செய்யும் ஜெபத்திற்கான ஒரு மாதிரி. ஜெபத்திற்கான ஒரு திட்டத்தையும்,…
Day 1

கர்த்தருடைய ஜெபம், நாம் செய்யும் ஜெபத்திற்கான ஒரு மாதிரி. ஜெபத்திற்கான ஒரு திட்டத்தையும், ஒரு வடிவமைப்பையும், ஒரு கட்டமைப்பையும் அது அளிக்கிறது. புத்தகத்தில் ஒரு பக்கத்தை எடுத்து அதை ஆறு பகுதிகளாக பிரியுங்கள். அவற்றிற்கு “தேவனுடைய நாமம்,” “தேவனுடைய ராஜ்யம்,” “தேவனுடைய சித்தம்,” “தேவனுடைய ஐசுவரியம்,” “தேவனுடைய மன்னிப்பு,” மற்றும் “தேவனுடைய விடுதலை” என்று பெயரிடுங்கள். இப்போது நீங்கள் ஒரு நிறைவான ஜெபத்திற்கான வடிவமைப்பை பெற்றிருக்கிறீர்கள்.

இவ்வடிமைப்பை நாம் இரண்டு முறைகளில் பயன்படுத்தலாம். தலைப்புகளில் துவங்கி, பின்பு ஒவ்வொன்றின் கீழும் நாம் ஜெபிக்க வேண்டிய காரியங்களை  நிரப்பலாம். அல்லது உங்கள் மனதில் தோன்றுகிறவற்றிலிருந்து எழுத துவங்கி, “இந்த ஆறு தலைப்புகளில் எதற்குக் கீழ் இந்த ஜெபம் பொருந்துகிறது?” என்று நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளலாம். இரண்டு முறைகளுமே உங்களுக்கு பயன்தரும், காலப்போக்கில் இரு முறைகளையும் நீங்கள் பயன்படுத்தி ஜெபிப்பீர்கள்.

கர்த்தருடைய ஜெபத்தை குறித்து பார்க்கும்போது, ஆறு ஆணிகளில், ஆறு விதமான ஜெப குறிப்புகளை தொங்கவைப்பதாக சிந்தியுங்கள். உதாரணமாக, நீங்கள் உதவி அல்லது ஆதரவு தேவைப்படும் உங்கள் நண்பருக்காகவோ அல்லது உங்கள் உறவினருக்காகவோ ஜெபிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இது “தேவனுடைய ஐசுவரியம்” என்ற தலைப்பின் கீழ் வரும்.

ஜெபத்தை இவ்வாறு துவங்கிய பின், அந்த நபருக்காக இன்னும் வேறு எந்தெந்த தலைப்பின் கீழெல்லாம் ஜெபிக்க வேண்டும் என சிந்தியுங்கள். உதாரணமாக, அந்த நபர் எதிர்கொள்ளும் சவால்களில் எந்தெந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும்? தேவனுடைய சித்தத்தை செய்வதில் எங்கு அவர்களுக்கு கடினமாக இருக்கும் ?  இதைப்போன்ற கேள்விகளை உங்கள் ஜெப வடிவமைப்பில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கர்த்தருடைய ஜெபத்தை ஒரு கட்டமைப்பாகப் பயன்படுத்துவது ஒரு புதிய அணுகுமுறை அல்ல. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்ட்டின் லூதர் தனது வாழ்நாள் முழுவதும் இதனைச் செய்தார். மேலும் ஒருமுறை அவரது சவரகர் (முடி திருத்தும் தொழிலாளி) அவரிடம் எப்படி ஜெபிப்பது என்பதைப்  பற்றி ஆலோசனை கேட்டபொழுது. லூதர், இவ்வாறாக ஜெபிக்கும் அணுகுமுறை, “ஜெபிப்பதற்கான ஒரு எளிய வழி” என்று கர்த்தருடைய ஜெபத்தை குறித்து விவரித்தார்.

கர்த்தருடைய ஜெபத்தை, ஜெபத்திற்கான ஒரு கட்டமைப்பாகப் பயன்படுத்துவது மார்ட்டின் லூதருக்கு பயனளித்தது, அதுமட்டுமின்றி அவரது சவரகருக்கும் பயனளித்தது. அது உங்களுக்கும் பயனளிக்கலாம்.

தியானத்திற்கு உரிய கேள்விகள்

உங்கள் வாழ்க்கையில் உள்ள ஒருவருக்காக, இந்த ஆறு தலைப்புகளை  பயன்படுத்தி, இப்போது ஜெபிக்க முயற்சிக்கவும்.

Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்

ஜெபத்திற்க்கான ஒரு மாதிரி

கர்த்தருடைய ஜெபம், நாம் செய்யும் ஜெபத்திற்கான ஒரு மாதிரி. ஜெபத்திற்கான ஒரு திட்டத்தையும், ஒரு வடிவமைப்பையும், ஒரு கட்டமைப்பையும் அது அளிக்கிறது. புத்தகத்தில் ஒரு பக்கத்தை எடுத்து அதை ஆறு பகுதிகளாக பிரியுங்கள். அவற்றிற்கு “தேவனுடைய நாமம்,” “தேவனுடைய ராஜ்யம்,” “தேவனுடைய…