தேவனை அடையாளம் காணும் வேளை

கிறிஸ்துவ வாழ்க்கை

கடந்த சில ஆண்டுகள், நாம் வேலை செய்கிற விதத்தைப் பல்வேறு வழிகளில் மாற்றியிருக்கின்றன. உலகளாவிய லாக்-டௌன் உச்சத்தில் இருந்தபோது, வீட்டிலிருந்தே வேலை செய்வது என்ற ஏற்பாடு, உலகம் தழுவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாயிருந்தது. இருப்பினும், இப்பொழுது மக்கள் இயல்பு வாழ்க்கை மற்றும் வேலைக்குத் திரும்பி வந்துள்ள நிலையில், வீட்டிலிருந்தே பணியாற்றுவதைப் புதிய இயல்பு வாழ்க்கை முறையாக நாம் மாற்றியிருக்கிறோம் என்பது, ஆச்சரியமானதாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, நீண்ட காலத்துக்குப் பிறகு நான் அலுவலகத்துக்குச் சென்றபோது, அநேக மக்களை முகமுகமாய்ச் சந்திப்பது என்பது மிகவும் வித்தியாசமானதாய்த் தோன்றியது.

அங்கே, பல மாதங்களாய் எண்ணற்ற காணொளி அழைப்புக்களின் மூலம் நான் சந்தித்த மக்களை, முதன்முறையாக நேரில் சந்திக்க நேர்ந்தது. அது ஒரு வித்தியாசமான உணர்வு. ஏனெனில், நான் அவர்களுடன் சில காலங்களாகப் பணியாற்றி வந்திருக்கிறேன்ளூ அவர்களது குரலை நான் அறிவேன் என்றும், அவர்களது முகங்களை நான் அடையாளம் காணமுடியும் என்றும் மற்றும் அந்த நிறுவனத்தில் அவர்களது பங்களிப்பு என்ன என்றும்கூட நான் அறிந்திருந்தேன். நன்கு பரிச்சயமான ஓர் உணர்வு அங்கே நிலவியதுளூ இருப்பினும், அவர்களை நேரில் நான் கண்டபோது, ஒரு புதுவிதமான உணர்வால் நான் நிரப்பப்பட்டேன்.

இதுவேதான், இயேசுவை முகமுகமாய்ப் பார்க்கும்போதும்; நான் அடையக்கூடிய உணர்வாக இருக்குமோ என்று என்னை யோசிக்கவைத்தது. நாம், பல வழிகளில் தேவனின் குணாதிசயத்தை அறிந்திருக்கிறோம்ளூ பரமண்டலங்களில், அவர் கொண்டிருக்கும் ஸ்தானத்தையும், அவர் எவ்வளவு அதிகமாய் நம்மில் அன்புகூர்கிறார் என்பதையும் நாம் அறிந்துள்ளோம். அவரது வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம்ளூ அவரது கிரியைகளை நாம் அறிந்துள்ளோம் மற்றும் அவரைப்பற்றி நமது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும் நாம் பேசுகிறோம். இருப்பினும், இதே பரிச்சயமான உணர்வு, நாம் அவரை முகமுகமாய்ச் சந்திக்கும்போதும் நமக்கிருக்குமோ?

இது, நாம் தேவனை முகமுகமாய்ப் பார்க்கும்போது, அவரை நாம் எப்படி அடையாளம் காணமுடியும் என்பதைப்பற்றி வேதாகமத்திலுள்ள வார்த்தைகளை, நான் தேடும்படிச் செய்தது. பிரசங்கியார்கள், தேவனைத் தாங்கள் தினமும் எப்படிச் சந்திக்கிறார்கள் என்பதுபற்றிப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். ஒருவேளை, நாம் அந்நியர்களை உபசரிக்கும்போது நாம் தேவனைச் சந்திக்கலாம்ளூ அல்லது ஒருவேளை, வஸ்திரமற்றோருக்கு வஸ்திரம் தரிப்பித்து, பசித்தோர்க்கு ஆகாரமளித்து, அல்லது உறைவிடமற்றோர்க்குத் தங்குமிடம் தரும்போதுகூடத் தேவனை நாம் சந்திக்கலாம். அத்தகைய சூழ்நிலைகளில், நம்மால் உதவியளிக்கப்படுகிற நபரின் முகம், தேவனின் முகமாகவே மாறுகிறது. ஆனாலும், தேவன் மெய்யாகவே அப்படித்தான் தோற்றமளிக்கிறார் என்பதுதான் அதன் உண்மையான அர்த்தமா?

இதற்கான பதில், என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஏனெனில், தேவன் எப்படித் தோற்றமளிக்கிறார் என்று வேதாகமத்தில் விளக்கப்பட்டிருப்பதை, எங்குமே என்னால்
காணமுடியவில்லை. வேதாகமம், தேவனுடைய சரீரப்பிரகாரமான அம்சங்களைப்பற்றிப் பேசுவதில்லை. தேவன், மோசேயினிடத்தில் என்ன கூற விரும்பினார் என்பதைப் புரிந்துகொள்ளும்படியாக, நான் மீண்டும் மீண்டும், தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்த ஒரு வசனம்தான், யாத்திராகமம் 33:20. நிச்சயமாகவே தேவன், நாம் அவரது முகத்தைக் காண விரும்பினால், நம்மை அடித்து நொறுக்குகிற, கொடூரமான தேவன் அல்லர். காரணம் நாமனைவரும் மீண்டும் உயிர்த்தெழும்போது, அவரை நாம் முகமுகமாய்ச் சந்திப்போம் என்று நான் நிச்சயித்திருக்கிறேன். ஆனால் அதற்கு மாறாக, அது இங்கேயே, இப்பொழுதே, தேவனை அடையாளம் கண்டுகொள்வதைப்பற்றியது. அதுவும், தோற்றத்தின் அடிப்படையில் அல்லளூ அவருடன் நாம் நடப்பதன் அடிப்படையில், அவரை அடையாளம் கண்டுகொள்வதைப்பற்றியது ஆகும்.

நிச்சயமாக, இந்நாட்களில் நாம் தொடர்பில் இருக்கப் பழகியிருப்பதுபோல, நம்மை அவருடன் இணைக்கிறதான, எந்தவொரு தொழில் நுட்பமும் நமக்கு ஒருபோதும் இருக்காது. அதற்குப் பதிலாக, தேவனுடைய வார்த்தையை வாசித்துத் தியானிப்பதன் மூலம், நாம் அவரை நெருங்கிக் கிட்டிச் சேர்வதால், அவரை அடையாளம் கண்டுகொள்ளமுடியும்.

தேவனுடைய சத்தத்தைக் கேட்க, அவரது வார்ததையை வாசிப்பதுதான் மிகச்சிறந்த வழியாகும். இதை யோவான் 10:3, “வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்ளூ ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான். அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது,” என்று சொல்கிறது.
உண்மையில், நாம் அவருடைய மந்தையின் ஆடுகளாகவும், அவரது சத்தத்தை அறிந்தவர்களாகவும் இருக்கின்ற காரணத்தால், நாம் அவரை அடையாளம் கண்டுகொள்ளமுடியும். நாம் அவரோடு அனுதினமும் உறவாடும்போது, நாம் நமது இருதயங்களை அவரோடு இசைந்திருக்கச்செய்து, அவரது சத்தத்தைக் கேட்டு, அதை அடையாளம் காண்கிறோம். இந்த உலகத்தின் குளறுபடிகளில், இவ்வுலகம் சார்ந்த அறிவினாலும், செல்வாக்குள்ளவர்களின் குரல்களினாலும், நமது இருதயங்களும், மனங்களும், தொடர்ச்சியாய்த் தாக்கப்பட்டுவரும் நிலையில், அவரது அமர்ந்த, மெல்லிய சத்தத்தைக் கேட்கும்படி, நாம் நமது இருதயங்களை அவருடன் இசைந்திருக்கச்செய்யவேண்டும்.

தேவனின் பிரசன்னம்

தேவன் நம்;மை எப்படி அறிந்திருக்கிறார் என்பதையும், அவர் எவ்வாறு எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதையும்பற்றிச் சங்கீதம் 139 பேசுகிறது. அவரது கண்களுக்கு மறைக்கப்பட்டதோர் இடம் என எதுவுமே இல்லை. மேலும், அவரது பிரசன்னத்தைவிட்டு நாம் எவ்வளவுதான் தொலைவில் இருந்தாலும்கூட, அவரது கரங்கள் நம்மைப் பிடித்திருக்கும். இந்த வசனம் என் மனதை அப்படியே அதிசயிக்கச்செய்துவிட்டது. இந்தச் சங்கீதத்தை நான் அனுதினமும் வாசிக்கிறேன்ளூ இருப்பினும், நான் அவரை அடையாளம் கண்டுகொள்ளும் பின்னணியில்வைத்து அதை வாசித்தபோது, அது விவாதத்துக்குரிய ஒரு கருத்தைப்போல் காணப்படுகிறது. ஏனெனில், நான் அவரது பிரசன்னத்தை இன்னும் அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை எனில், அதில் ஏதோ ஒன்று சரியில்லை என்று அர்த்தம். அவர் தொடர்ந்து நம்முடனும், நமக்குள்ளும் தங்கியிருக்கிறார்.

இயேசு, அதரிசனமான தேவனின் தற்சுரூபமானவர்

வேதாகமக் காலங்களில் நான் வாழ்ந்திருப்பேனானால், நான் தேவனைக் கண்டிருக்கிறேன் என்ற உண்மையினால் நான் ஆறுதல் பெற்றிருப்பேன். ஏனெனில் இயேசு, அதரிசனமான தேவனின் தற்சுரூபமானவர் என்று, கொலோசெயர் 1:15-ல் பவுல் எழுதுகிறார். இது, கிறிஸ்து அவரது பூமிக்குரிய வாழ்க்கையின் காலத்தில், அவர் சரீரப்பிரகாரமாக மனிதர்கள் மத்தியில் தங்கியிருந்தபோது, அவரைக் கண்டு, அவரது மகிமையைத் தரிசித்தவர்கள் மீது என்னைப் பொறாமைகொள்ளச் செய்கிறது (யோவான் 1:14).

இவையனைத்துமே, அவரை அடையாளம் கண்டுகொள்ளுதல் என்னும் அந்த மையப்புள்ளிக்கே என்னை மீண்டும் கொண்டுவந்து நிறுத்துகின்றன. அவரைச் சரீரப்பிரகாரமாகக் காண்பது மிகவும் பாக்கியமான ஒன்றுதான்ளூ இருப்பினும், இதை நான் எவ்வளவு அதிகமாகத் தியானிக்கிறேனோ, அவ்வளவு உறுதியாக, அவரை அடையாளம் காண்பதென்பது, சரீரப்பிரகாரமான ஒன்றல்ல என்ற முடிவுக்கே நான் மீண்டும் வருகிறேன். எப்படியிருப்பினும் அது, அவரது வார்த்தைகளுக்குக் கவனமாய்ச் செவிகொடுப்பதைப்பற்றியதே ஆகும். அவரை நாம் அடையாளம் காணக்கூடிய ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது, அவரது வார்த்தைகளை வாசித்துத் தியானிப்பதன் மூலமும், அவரது வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்வதன் மூலமுமே ஆன வழியாகும்.

மேலும், நாம் ஒரு காணொளி அழைப்பில் இணைப்பைத் துண்டித்தபின், நாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாதிருக்கும் நமது உடன்பணியாளர்கள் நிறைந்த நம் பணியிடங்கள்போல் அல்லாமல், அவரது பிரசன்னம் நமது மகிழ்விலும், நமது துயரத்திலும், நமது வெற்றியிலும், நமது சோதனைகளிலும், நமது வாழ்வில் எப்போதுமே தங்கியிருக்கிற ஒன்றாகும். அந்தத் துயரங்களும், சோதனைகளுமான தருணங்களில்தான், யோவான் 14:27-ல் உள்ள வார்த்தைகள்: “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்ளூ உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக,” என்று நம்பிக்கையை வழங்குகின்றன. அவர் நம்மில் எப்பொழுதுமே தங்கி, வாசம்செய்யும் காரணத்தால், நாம் அவரை அறிந்து, அடையாளம் கண்டுகொள்கிறோம்.

ஆசிரியர்

மேலும் படிக்க

No results found.