நான் பெத்லெகேமில் இல்லை. நான் தூதர்களைக் காணவில்லை. மேலும் நான் சத்திரத்திற்கும் செல்லவில்லை. ஆனால், இயேசு பிறந்த நாற்பது நாட்களுக்குப் பிறகு நான் அவரை என் கைகளில் ஏந்தினேன்.
நான் எருசலேமில் வாழ்ந்த ஒரு சாதாரண மனிதன். சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் மரிப்பதற்குள் மேசியாவைக் காண்பேன் என்று தேவன் எனக்கு வெளிப்படுத்தியிருந்தார்.
அதை விளக்கச் சொல்லி கேட்காதீர்கள். நான் உங்களுக்கு சொல்லக்கூடியவைகள் என்னவென்றால், உலகமே ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த மீட்பரைக் காணும்வரை நான் மரிக்கமாட்டேன் என்பதுதான், அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ஒரு சுவாரசியமான அனுபவம் எனக்கு கிடைத்தது, அது என்னவெனில் ஒரு எதிர்கால நிகழ்வை காண நான் உயிருடன் இருப்பேன் என்பதே. நான் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த நேரங்கள் இருந்தன. மக்கள் நான் குணமடைவேனா என்று யோசித்ததுண்டு. ஆனால் எனக்கு ஒருபோதும் சந்தேகம் இல்லை. நான் கிறிஸ்துவைக் காண்பேன் என்று தேவன் எனக்கு வாக்குப்பண்ணியிருந்தார். அதனால் அவர் வரும்வரை நான் சாவாமையுள்ளவனாயிருந்தேன்!
நான் அவரைக் கண்டால் எப்படி அறிந்து கொள்வேன் என்று சில சமயங்களில் யோசித்தது உண்டு. ஆனால் எப்படியாவது நான் அறிந்து கொள்வேன் என்று எனக்குத் தெரியும்.
அது நடந்த நாள்
சரி, அது நடந்த நாளைப்பற்றி உங்களுக்குச் சொல்கிறேன். என் முழு வாழ்க்கையுமே அந்த நாளுக்காக தயாரானது போலவே இருந்தது.
விசித்திரமான விஷயம் என்னவென்றால், அது மற்ற நாட்களைப்போலவே ஒரு சாதாரணமான நாளாகும் . நான் என் வழக்கமான வேலையில் ஈடுபட்டிருந்தேன், அப்போது தேவாலயத்துக்குப் போகவேண்டும் என்ற ஒரு உள் உந்துதலை நான் உணர்ந்தேன். தேவன் பொதுவாக என்னுடன் இப்படிப் பேசுவதில்லை, ஆனால் என் மனதில் ஒரு சத்தம், “சிமியோனே, தேவாலயத்துக்குப் போ” என்று சொன்னது போலிருந்தது.
வேலை முடிந்த பிறகு வீட்டிற்குச் செல்லும் வழியில் போகலாம் என்று தான் என் முதல் எண்ணம் இருந்தது, ஆனால் அது கீழ்ப்படியாமை என்பதை நான் அறிந்திருந்தேன். நான் செய்துகொண்டிருந்ததை விட்டு விட்டு, உடனடியாகத் தேவாலயத்துக்குச் செல்ல வேண்டும் என்று நான் அறிந்திருந்தேன்.அதின்படி நான் சென்றதற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன்!.
பொதுவாக, வியாபாரிகள் மிருகங்களை விற்கும் காட்சி, ஆசாரியர்கள் பலிகளைச் செலுத்துதல், மக்கள் தங்கள் பாவங்களைஅறிக்கையிடுதல் மற்றும் பெற்றோர்கள் தங்கள் முதற்பேறான மகன்களைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தல் போன்றவற்றால் தேவாலய வளாகம் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
நான் வந்தபோது, ஒரு இளம் தம்பதி தங்கள் குழந்தையுடன் ஆசாரியருக்கு முன் நின்று கொண்டிருந்தார்கள். ஆசாரியருக்கு அவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் நான் பார்த்தபோது, அவரே மேசியா என்று எனக்குத் தெரியும்.
அது எனக்கு எப்படித் தெரியும் என்று என்னிடம் கேட்காதீர்கள். தேவனுடைய பரிசுத்த ஆவியானவரே இதை எனக்கு வெளிப்படுத்தினார் என்று சொல்வதைத் தவிர வேறு எதையும் என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது. என் வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் நான் இவ்வளவு உறுதியாக இருந்ததில்லை. இந்தக்குழந்தையைத்தான் முழு உலகமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
எவரும் தங்கள் சொந்த முயற்சியில் இதைக் கண்டு பிடிக்கவில்லை. தூதர்கள் மேய்ப்பர்களுக்கு சொன்னார்கள், ஞானிகள் ஒரு நட்சத்திரத்தால் வழி நடத்தப்பட்டார்கள், மற்றும் பரிசுத்த ஆவியானவர் அவரை எனக்கு வெளிப்படுத்தினார்.
இயேசுவே கிறிஸ்து என்பதற்கான ஆதாரம் அவரைத் தேடும் அனைவருக்கும் இருக்கிறது, ஆனால் சத்தியத்தைக்காண உங்கள் கண்களைத் திறப்பவர் தேவனே.
எனக்கு அருளப்பட்ட வார்த்தைகள்
நான் அந்தக் குடும்பத்திடம் நடந்துசென்று, அங்கே என்ன நடக்கிறது என்று பார்க்கக் கூடியிருந்த சிறிய கூட்டத்துடன் நின்றேன்.
என் வாழ்க்கையில் வேறு எந்த விஷயத்திலும் நான் இவ்வளவு உறுதியாக இருந்ததில்லை. இந்தக் குழந்தையே உலகம் முழுவதும் எதிர்பார்த்தவர் ஆவார்
அப்போதுதான் அது நடந்தது. அந்த நேரத்தில் பேசப்பட வேண்டிய வார்த்தைகளைத் தேவன் எனக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார் என்று நான் அறிந்தேன். எனவே நான் யோசேப்பின் கையை மெதுவாகத் தட்டினேன். நான் சொல்ல எனக்கு வார்த்தைகள் அருளப்பட்டிருப்பதாகவும், குழந்தையை என் கையில் ஏந்தமுடியுமா என்று நான் கேட்டேன்.
நான் ஒரு அந்நியன், ஆசாரியன் கூட இல்லை, அதனால் அவர் ஆச்சரியமடைந்தது போல் தோன்றியது, ஆனால் அவர் சம்மதித்தார், நான் அந்தக் குழந்தையை என் கைகளில் ஏந்தினேன்.
பின்னர் வார்த்தைகள் எனக்கு கொடுக்கப்பட்டது . நான் பேசிக்கொண்டிருந்தேன், ஆனால் நான் பேசிய வார்த்தைகள் எனக்குக் கொடுக்கப்பட்டன என்று எனக்குத் தெரியும். பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு நான் பேசினேன் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்.
குழந்தையை என் கைகளில் ஏந்திக்கொண்டு, நான் பிரகடனம் செய்தேன்: “சர்வவல்லமையுள்ள ஆண்டவரே, இப்போது உமது அடியேனை உமது வார்த்தையின்படி சமாதானத்தோடே போகவிடுகிறீர்; ஏனென்றால், சகல ஜனங்களுடைய சமூகத்திலும் ஆயத்தம் பண்ணின உமது இரட்சிப்பையே என் கண்கள் கண்டது. இது புறஜாதிகளுக்குப் பிரகாசமுண்டாக்குகிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும் இருக்கும்.”
“சர்வவல்லமையுள்ள ஆண்டவரே, உம்முடைய இரட்சிப்பையே என் கண்கள் கண்டது; இதை சகல ஜனங்களுடைய சமூகத்திலும் ஆயத்தம் பண்ணினீர்.”
நான் குழந்தையை மரியாளிடம் திருப்பிக் கொடுக்கவிருந்தேன், ஆனால் மேலும் தெய்விக வார்த்தைகள் எனக்குள் வந்தன. ஒரு காற்று என் சரீரத்திற்குள் வீசுவதைப்போல, இந்த வார்த்தைகள் எனக்குள் பாரமாக இருந்தது, நான் அவற்றைப் பேச வேண்டியிருந்தது.
“இதோ, இவர் இஸ்ரவேலில் அநேகர் விழுகைக்கும் எழுச்சிக்கும் ஏதுவாக…” இருப்பார் என்ற வார்த்தைகள் எனக்கு விசித்திரமாகத் தோன்றின. ‘எழுச்சி’ என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது, ஆனால் ‘வீழ்ச்சி ‘ ஏன் ?
வார்த்தைகள் வந்து கொண்டேயிருந்தன. “…விரோதமாய்ப் பேசப்படும் அடையாளமாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்; அதினால் அநேகருடைய இருதயத்திலுள்ள சிந்தனைகள் வெளியரங்கமாக்கப்படும்.” நான் பேசும் வார்த்தைகளை என்னால் நம்பவே முடியவில்லை. வாக்குப்பண்ணப்பட்ட இந்தக் குழந்தைக்கு விரோதமாக எப்படி பேச முடியும்?
நான் மரியாளைப் பார்த்தேன். அவளுடைய ஆழமான ஆத்துமாவிலிருந்து வெளிப்பட்ட ஒரு அழகு அவளுடைய கண்களில் இருந்தது. அவளை நான் பார்க்கையில், என் உள்ளுணர்வு சொல்லிற்று : “உம்முடைய ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும்.”
நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் உறைந்துபோய் நின்றோம்.
இதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?
அன்னாளிடம்அருளப்பட்ட வார்த்தைகள்
அந்த சமயத்தில் , ஒரு வயதான பெண்மணி அங்கு வந்தார். அவள் பெயர் அன்னாள், அவள் ஒரு ஜெபவீராங்கனை. உபவாசம், ஜெபம் , ஆராதனை ஆகியவற்றில் தன்னை அர்ப்பணித்திருந்தாள். தேவாலயத்திற்குத் செல்கின்றவர்கள், அவளை தேவாலய வளாகத்தில் தவறாமல் காணலாம் என்று அறிவார்கள்!.
மரியாளுடைய ஆத்துமாவுக்கு வரவிருக்கும் வலியைப் பற்றி நான் பேசி முடித்தபோது, அன்னாள் வந்து, தேவனைத் துதிக்க ஆரம்பித்தாள். அது மிகவும் விசித்திரமான விஷயமாகும் . இயேசுவுக்கு விரோதமாய் அநேகர் எழும்புவார்கள் என்றும், மரியாளின் ஆத்துமா எவ்வளவு வேதனைப்படும் என்றும் நான் கூறியதை புரிந்துகொள்ள முயன்று கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தேவன் அன்னாளுக்கு துதி மற்றும் ஸ்தோத்திரத்தின் வார்த்தைகளைக் கொடுத்தார்.
குழந்தைக்கு விரோதமாய்ப் பேசப்பட்டால், மரியாளின் ஆத்துமா உருவப்பட்டால், தேவன் ஏன் அன்னாளுக்கு ஸ்தோத்திர வார்த்தைகளைக் கொடுக்க வேண்டும்?
நான் இப்போது புரிந்துகொண்டதை அவள் அப்பொழுதே கிரகித்திருப்பாள் என்று நினைக்கிறேன். விவரிக்கமுடியாத வலியின் மூலம் இயேசு நம்மை விடுவிப்பார்.
நம்முடைய மீறுதல்களுக்காகத் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர், காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களுக்காக நொறுக்கப்படுவார் என்றும், அவர் அனுபவிக்கும் தண்டனை நமக்கு சமாதானத்தைக் கொண்டு வரும் என்றும் சொல்லப்பட்ட, ஒரு பழைய தீர்க்கதரிசனம் என் நினைவுக்கு வந்தது.
நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை
நான் கடைசியாக உங்களுக்கு சொல்ல விரும்பிய விஷயம் இதுதான். நான் அவரை என் கைகளில் ஏந்தினபோது சமாதானத்தோடே மரிக்கலாம் என்று உணர்ந்தேன்.
கிறிஸ்துவானவர் என்ன செய்வார் என்பதைப்பற்றி மக்களுக்கு பலவித நம்பிக்கைகளும் கனவுகளும் இருந்தன, ஆனால் அதில் எது மிகப்பெரியது என்பதில் என் மனதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை.
அவர் தம்முடைய ஜனங்கள் அனைவருக்கும் மரணத்தைப் பாதுகாப்பானதாக்கினார். அவர் அதை வலியற்றதாக்கினார் அல்லது விரும்பத்தக்கதாக்கினார் என்று நான் சொல்லவில்லை. அது இன்னமும் நம்முடைய பெரிய சத்துருதான், ஆனால் அவர் அதை பாதுகாப்பானதாக்கினார்.
என் மரணம் இந்த பழைய, சோர்வுற்ற சரீரத்திலிருந்து ஒரு விடுதலையாக இருக்கும் என்று நான் அறிந்தேன். அதுதான் சிறிது காலத்திற்குப் பிறகு நடந்தது.
நான் மரித்தபோது நித்தியத்திற்குள் பிரவேசித்தேன். அதாவது மயக்கமடைந்து விழித்திருப்பது போல உணர்ந்தேன். நான் எவ்வளவு காலம் அங்கே இருந்தேன் என்று எனக்குத் தெரியாது, நித்தியத்தில் நேரம் வேறு விதத்தில் இருக்கும் . ஆனால் என்னுடைய முடிவை நான் நன்கு அறிந்திருந்தேன். அந்த நாளை எப்படி மறக்க முடியும் .
அவர் தம்முடைய ஜனங்கள் அனைவருக்கும் மரணத்தைப் பாதுகாப்பானதாக மாற்றினார்.
திடீரென்று எல்லாம் அசைந்தது. நாங்கள் இயேசுவைக் கண்டோம். அவர், “இங்கே வாருங்கள்,” என்றுசொன்னார், உடனடியாக நாங்கள் பயமின்றி, பெருமகிழ்ச்சியுடன் தேவனுடைய சந்நிதிக்குள் பிரவேசித்து, உங்களுக்கான நற்செய்தி என்னவென்றால், நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் மரிக்கும்போது உங்கள் ஆத்துமா உடனடியாக கர்த்தருடைய சந்நிதிக்குச் செல்லும். சரீரத்தை விட்டு நம் ஆத்துமா விலகி இருப்பது தேவனோடு தங்குவதற்கான உன்னத வாய்ப்பு , அதுவே மிகச்சிறந்த அனுபவம்.
நான் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே இருக்கிறேன், அதை ஒருவரும் கணக்கிட்டு பார்த்ததில்லை. மேலும் என் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது என்பதையும் நான் கண்டறிந்தேன்.
முப்பதாவது வயதில் இயேசு தம்முடைய ஊழியத்தைத் தொடங்கினார். தேவனுடைய மகிமை வெளிப்படுத்தப்பட்டது— குருடர்கள் பார்வையடைந்தார்கள், சப்பாணிகள் நடந்தார்கள், மரித்தோர் எழுப்பப்பட்டார்கள், ஏழைகளுக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது.
குருடர்கள் பார்வையடைந்தார்கள், சப்பாணிகள் நடந்தார்கள், மரித்தோர் எழுப்பப்பட்டார்கள், ஏழைகளுக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது.
ஆனால் பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தியபடி, மக்கள் அவருக்கு எதிராக எழுந்தார்கள், அவருக்கு விரோதமாகச் சதி செய்தார்கள், கடைசியில் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். இயேசு மரித்தார், ஆனால் மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுந்தார். அவர் என்றென்றும் ஜீவிக்கிறார், மேலும் அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் நித்திய ஜீவனைக் கொடுக்கிறார்.
அவருடைய வருகை, உண்மையில் அநேகருடைய வீழ்ச்சிக்கும், உயிர்மீட்சிக்கும் ஏதுவாக அமைந்தது. இந்த உலகில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதரும், அவர் நிமித்தம் வீழ்வார்கள் அல்லது எழுவார்கள் என்ற ஒரு கருத்து இருக்கிறது. அவர் ஒரு பெரிய கல்லுக்கு ஒப்பானவர். அவிசுவாசத்துடன் அவர் மீது இடறினால், அவர் உங்களைக் கீழே தள்ளுவார். ஆனால் நீங்கள் விசுவாசத்துடன் அவரை பற்றிக்கொள்ளும்போது , அவர் உங்களை உயர்த்துவார்.
ஜெபம் பிதாவே, இயேசு சிலுவையில் பட்டபாடுகளின் மூலமாக எங்கள் பாவங்களிலிருந்து எங்களை விடுவித்ததற்காக உமக்கு நன்றி.
ஒவ்வொரு மனிதரின் வீழ்ச்சிக்காகவோஅல்லது உயிர்மீட்சிக்காகவோ நீர் அவரை உலகிற்கு அனுப்பினீர். விசுவாசத்தினாலே நாங்கள் அவரைப் பற்றிக்கொண்டு உயர்த்தப்பட எங்களுக்கு உதவி செய்யும்! ஆமென்.
Series : கிறிஸ்துமஸ் கதைகள்
ஏரோதின் கதை
காபிரியேலின் கதை
மரியாளின் கதை
சிமியோனின் கதை