ஆபேலின் இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் மேன்மையானவைகளைக் கிறிஸ்துவின் இரத்தம் பேசுகிறது

கிறிஸ்துவ வாழ்க்கை

2020, அக்டோபரில், சாத்தான்குளம் பகுதியிலிருந்து, தந்தை-மகன் ஆகிய இருவர் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு, இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள், அதிர்ச்சியடைந்தார்கள். அவர்கள் இருவரும், காவல்துறையினரின் கட்டுப்பாட்டின்கீழ்ச் சித்திரவதை செய்யப்பட்டு, நேர்மையற்ற காவலர்களால் கொல்லப்பட்டனர். பல மணி நேரங்களுக்கு நீடித்ததான, இந்த இரக்கமற்ற செயல்களால், அளவுக்கதிகமான இரத்தம் வெளியேறி, அவர்கள் இறந்ததாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. இந்தக் கொடூரக் கொலையானது, உலகெங்கிலுமிருந்தும், சமூக ஊடகத் தளங்களிலிருந்தும் மாபெரும் கூக்குரலைத் தூண்டியெழுப்பியது.

அப்பாவி மக்களுக்கு இத்தகைய அநீதியை இழைக்கும் அக்கிரமக்காரர்களை நினைத்து, நாம் அச்சம்கொள்கிறோம். ஆனால் இந்தக் கொடுமையானது, காலாகாலமாகத் தொடரும் பழைமையானதொரு பிரச்னையாகும். இதன் வழித்தடம், ஆதாம், ஏவாளின் மகன்களது காலம் வரை கண்டறியப்பட முடியும்.

அந்த முதல் கொலை:

ஏதேன் தோட்டத்தில், ஆதாம் மற்றும் ஏவாள் ஆகிய இருவருமே, தங்கள் சிருஷ்டிகருடன் பூரணமான ஐக்கியம் கொண்டிருந்தனர். அவர்களது கீழ்ப்படியாமையினிமித்தம், அவர்கள் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டுத் தேவனைவிட்டுப் பிரிக்கப்பட்டனர். இப்பொழுது, சர்வ ஞானியும், சர்வத்தையும் அறிந்தவருமான, தேவனுடனான பூரணமான ஐக்கியத்தை இழந்துவிட்டதால், அவர்கள் வழிகளிலேயே நடக்கும்படி விடப்பட்டனர். காயீன் மற்றும் ஆபேல் என்கிற பெயர்களுள்ள இரு குமாரர் அவர்களுக்குப் பிறந்தனர். காயீன் ஒரு விவசாயியானான்ளூ அவனது இளைய சகோதரனாகிய ஆபேல், ஒரு மேய்ப்பனானான். இரு சகோதரர்களுமே காணிக்கைகளைப் படைத்தனர். ஆனால் தேவன், ஆபேலின் காணிக்கையின்மட்டில் தயவாயிருந்தார்ளூ காயீனுடைய காணிக்கையை அங்கிகரிக்கவில்லை (ஆதியாகமம் 4:4-5).

அந்தப் புறக்கணிப்பு, காயீனைச் சீற்றமடையச் செய்தது. அவன் ஆபேலின்மேல், ஆத்திரம் கொப்பளிக்கத் திரிந்தான். தேவன், இரக்கமுள்ளவராகக் காயீனுடன் இடைபட்டு, ‘அவன் நன்மைசெய்யாதிருந்தால், அவனைக் கட்டுப்படுத்தும்
ஆவலோடு, பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்’ என்று அவனிடம் கூறினார். இருப்பினும் காயீன், தேவனுடைய சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை. ஆனால், அதற்குப் பதிலாகத் தன் சகோதரனைக் கொல்லும் திட்டத்திலேயே ஆழ்ந்திருந்தான். ஒரு நாள், அவன் ஆபேலுடன் பேசி, அவனைத் தன்னுடன் வயல்வெளிக்கு வருமாறு அழைத்தான். அவர்கள் அங்கே சென்றவுடன், காயீன் தன் சகோதரனைச் சிறிதும் ஈவு, இரக்கமின்றித் தாக்கிக் கொலைசெய்தான். ஆபேலின் இரத்தநாளங்களிலிருந்து பாய்ந்த, செந்நிறமான, ஜீவ இரத்தத்தால் பூமி நனைந்தது.

அங்கு முதல் மனிதக் கொலை, நிகழ்ந்துவிட்டது.

ஆபேலின் இரத்தம், பழிவாங்குதலின் செய்தியைப் பேசுகிறது:

இந்தக் கொலைக்குப்பின்பு, தேவன் காயீனை எதிர்கொள்கிறார்.

அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.” (ஆதியாகமம் 4:9-10).

இரத்தம் ஏன் கூப்பிடுகிறது? அதன் பொருள் என்ன? வெளிப்படையாகப் பார்த்தால், ஆபேலின் இரத்தம் தேவனை நோக்கிக் கூப்பிடவில்லை. வேதாகமத்தில் இவ்வகையான மொழி நடை, “இழைக்கப்பட்ட அநீதியின் கூக்குரலைக்” குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுவதாயிருக்கிறது. இதேபோன்றதொரு மொழி நடையை நாம், வெளிப்படுத்தல், 6-ஆம் அதிகாரத்தில் பார்க்கிறோம்: “அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்” (வசனம் 10).

இங்கே, இயேசுவுக்காக இரத்தசாட்சிகளானவர்கள், தங்கள் இரத்தத்தைக் குறித்துப் பழிவாங்கும்படியாகவும், தங்களது படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது நியாயத்தீர்ப்புச் செய்யும்படியாகவும், தேவனை நோக்கிக் கூக்குரலிடுகிறார்கள். யாரொருவருடைய இரத்தமும் சிந்தப்படும்போதெல்லாம், தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட அவர்களது மாம்ச சரீரமானது, அழிக்கப்படுகிறது. பூமியில் அவர்களது எதிர்காலம் குறைக்கப்படுகிறது. அவர்களுக்கான வாழ்வின் அனைத்துச் சாத்தியக்கூறுகளும், எதிர்பாராதவிதமாகத் திடீரென்று முடிந்துவிடுகின்றன. இந்தக் கொடூரமான 2
அநீதியானது, அவர்களது இரத்தம் தேவனை நோக்கி, நீதிக்காகக் கூக்குரலிடுகிற பிரகாரமாய்ச் சித்திரிக்கப்படுகிறது.

தேவகுமாரனுடைய மரணம்:

இப்பொழுது நாம், மனித வரலாற்றிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரத்தஞ்சிந்துதலாகிய, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நோக்கி, நம் கவனத்தைத் திருப்புவோம். இது, பன்முகத்தன்மை கொண்டது. அத்துடன், பலதரப்பட்ட குழுவினர், இயேசுவின் மரணத்திற்குப் பொறுப்பாளிகளாய் இருந்தார்கள். பிரதான ஆசாரியர்களும், யூத மக்களின் மூப்பர்களும் அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை (மத்தேயு 26:3-4). அவர்கள், இயேசுவின் உயிரைப் பறிக்கத் தொடர்ந்து சதியாலோசனை செய்து, திட்டம் தீட்டினார்கள். ஆனால் பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தின்கீழ், உண்மையாய் அவரைச் சிலுவையில் அறைந்தவர்கள், ரோமர்களே ஆவர். “அவனைச் சிலுவையில் அறையும், அவனைச் சிலுவையில் அறையும்!” என்று கூக்குரலிட்டதன் மூலம், தேவனுடைய பரிசுத்தரைக் கொலைசெய்ததில், இஸ்ரவேல் ஜனங்களும் உடந்தையாய் இருந்தனர்.

கடைசியில், திகைப்பூட்டும் விதமாக, உலகத் தோற்றத்துக்கு முன்பதாகவே, பிதாவாகிய தேவன், இந்த இரட்சிப்பை நிர்ணயித்திருந்தார் என்றும் நாம் வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 2:23). மேலும், இயேசு தாமே மனதாரத் தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 10:14-18), என்றும் வேதாகமம் குறிப்பிடுகிறது.

இவை எல்லாவற்;றையும் நாம் எப்படி ஒன்றாக இணைப்பது? இயேசுவின் சிலுவை மரணமானது, தேவனின் பிந்தைய சிந்தனை அல்ல. பாவத்திற்கு மனுக்குலம் வீழ்ச்சியடைவதற்கு முன்பே, இயேசுவின் மரணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு, அக்கிரமக்காரர்கள் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவர் அனுமதித்ததன் மூலம், தமது இரட்சிப்பின் திட்டத்தை இவ்வுலகிற்குக் கொண்டுவருவதை நிறைவேற்றி முடித்தார். “அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்த அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்” (அப்போஸ்தலர் 2:23).

கிறிஸ்துவின் இரத்தம், வித்தியாசமான ஒரு செய்தியைப் பேசுகிறது:

இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, அவரது இரத்தநாளங்களிலிருந்து இரத்தமானது, பூமியின் மீது ஊற்றப்பட்டது. எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், ஆபேலின் இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் வித்தியாசமானதொரு செய்தியை – மேன்மையானதொரு செய்தியைக் கிறிஸ்துவின் இரத்தம் பேசுகிறது என்கிற, வியக்கவைக்கக்கூடிய ஓர் அறிக்கையைத் தருகிறார்.

இந்தச் செய்தி, எவ்வாறு ஆபேலின் இரத்தத்தினுடைய செய்தியிலிருந்து வேறுபடுகிறது? எவ்விதத்தில் அது மேலானது? அந்த வேறுபாடுகளை நாம் விளக்கமாகக் காண்போம். பிரதானமாக, அது 3 கோணங்களில் வேறுபட்டிருக்கிறது என்று நாம் சொல்லலாம்.

முதலாவது, ஆபேலின் இரத்தம், தன் சகோதரன் காயீனின் மீது, தெய்வீகப் பழிவாங்குதலுக்காகப் பேசுகிறது. ஆனால் கிறிஸ்துவின் இரத்தமோ, தமது சத்துருக்களின் மீது மன்னிப்புக்காகப் பேசுகிறது.

அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (எபேசியர் 1:7).

இரண்டாவது, ஆபேலின் இரத்தம், தேவனுடைய பிரசன்னத்திலிருந்து காயீனைப் பிரித்துவிடுவதற்காகப் பேசுகிறது. ஆனால் கிறிஸ்துவின் இரத்தமோ, தமது சத்துருக்கள் (நாம்), தேவனோடு நித்தியகாலமாய் ஒப்புரவாக்கப்படுவதற்காகப் பேசுகிறது.

“ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் . . . அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,” (எபிரெயர் 10:19-20).

கடைசியாக, ஆபேலின் இரத்தமானது, காயீனின் மனச்சாட்சி, குற்றவுணர்வால் நிரம்பும்படியாகப் பேசுகிறது. ஆனால் கிறிஸ்துவின் இரத்தமோ, தமது இரத்தம் தெளிக்கப்படுவதனால் சுத்திகரிக்கப்படுகிற ஒரு மனச்சாட்சிக்காகப் பேசுகிறது.

அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே . . . துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், 4 உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்” (எபிரெயர் 10:20-22).

இயேசு, தமது கல்வாரிச் சிலுவையின் மரணம் வரை சென்றது, நமது பாவங்களுக்காகத்தான். ஆகையால், அவரது மரணத்திற்கு நாம் அனைவருமே பொறுப்பாளிகளாயிருந்தோம். குற்றவுணர்வின் பாரத்தால் அழுத்தப்பட்டு, நாம் தேவனைவிட்டுத் தூரமாய் ஓடிக்கொண்டிருந்தோம். நித்தியகாலமாய் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டுமிருந்தோம். ஆனால் கிறிஸ்து, தமது மரணத்தின் மூலம், நம்மை மீண்டும் தேவனிடத்தில் கொண்டுவந்தார். அவரது இரத்தம், நமக்கான மேன்மையானதொரு செய்தியைப் பேசுகிறது.
நீங்கள் பாவத்தில் போராடிக்கொண்டிருக்கிற ஒரு விசுவாசியா? இயேசு உங்களுக்காகப் பரிந்து பேசுகிறவர். “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்ளூ ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்” (1 யோவான் 2:1). அவரது இரத்தம் உங்களுக்காக மேன்மையானவைகளைப் பேசிக்கொண்டிருக்கிறது – அவரிடமிருந்து தூரமாய் ஓடுவதற்குப் பதிலாக, அவரிடத்துக்கு ஓடுங்கள்.
நீங்கள் ஒருபோதும் கிறிஸ்துவை விசுவாசிக்காத ஒருவரா? அவரது இரத்தம், உங்களிடத்தில் பேசுகிறது. நீங்கள் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் அவரிடம் திரும்பும்போது, அவர் தமது இரத்தத்தின் மூலமாக, உங்களது பரலோகப் பிதாவுடன், நித்திய நித்தியமாய் உங்களை ஒப்புரவாக்குவார். “இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” (மத்தேயு 26:28).

ஆசிரியர்

மேலும் படிக்க