வரலாற்றிலேயே மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட தலைவனாக இருக்கக்கூடும் என்று நான் அடிக்கடி உணர்கிறேன், அப்படியே அநேகர் என்னை குறித்து நினைத்தனர். என்னுடைய வாழ்க்கையின் மாபெரும் சாதனைகள் பற்றி பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. இது எனக்கு பிரமிப்பாக தோன்றுகிறது. நான் செய்த பலகாரியங்கள் இன்று மிகச் சிறியதாகக் கருதப்படுவது எப்படி?.
நான் ஆட்சிக்கு வந்தவிதம் எப்படி
என்னைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்லவிரும்புகிறேன் . என் காலத்தில் “ஏரோது” என்பது ஒரு பொதுவான பெயர்தான், ஆனால் நான் “மகா ஏரோது” என்று அழைக்கப்பட்டேன், அந்த பட்டத்திற்கு நான் தகுதியானவன்தான்.
யூதர்களின் நாடு பல ஆண்டுகளாகப் போர்கள், படுகொலைகள், பகைகள் என – முழுவதுமாக ஒரு குழப்பமாக இருந்தது. பின்னர் ரோமப் பேரரசு எழுந்தது. ரோமர்கள் நிலைத்தன்மையை விரும்பினார்கள், அது எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது.
அகஸ்து சீசர் என்னை யூதேயா மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள முழுப்பகுதிக்கும் பொறுப்பாளராக நியமித்தார்.
நான் யூதர்களின் ராஜாவாக இருந்தேன். நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தேன், அந்தக் காலம் முழுவதும் நாட்டில் சமாதானமும் நிலைத்தன்மையும் இருந்தது.
அமைதியான சூழ்நிலையை நிலைநாட்ட சிறிது காலம் எடுத்தது. நான் முதலில் செய்ய வேண்டியது மதத் தலைவர்களுக்கு இடையே இருந்த சண்டையைச் சரி செய்வதுதான். பெரும்பாலும் மதத் தீவிரவாதிகளால் தான் தொந்தரவுகள்ஆரம்பிக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
நான் என்ன செய்தேன் என்றால்: ஆலோசனை சங்கம் என்று அழைக்கப்பட்ட ஓர் ஆளும் குழுவில் 72 ஆசாரியர்கள் இருந்தார்கள். நான் அவர்களில் 45 பேரை அகற்றினேன், அது மற்றவர்கள் தங்கள் வேலையில் கவனம் செலுத்த உதவியது.
என் வாழ்வின் சாதனைகள்
என் தலைமையின் கீழ் எருசலேம் நகரம் மாற்றியமைக்கப்பட்டது. எனக்குக் கட்டிடக்கலை மிகவும் பிடித்திருந்தது, மேலும் நான் பெரிய அளவில் கட்ட விரும்பினேன்.
தேவாலயம்தான் எருசலேமில் உள்ள மிக முக்கியமான கட்டிடம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். முதலில் இருந்த தேவாலயம் கம்பீரமாக இருந்தது, ஆனால் என் காலத்தில் இருந்த தேவாலயம் சற்றுப்பொலிவிழந்தது போல் காட்சியளித்தது. எனவே நான் அதை மீண்டும் மாபெரும் தேவாலயமாக மாற்றவேண்டும் என்று தீர்மானித்தேன். அது ஏரோதின் தேவாலயம் என்று அறியப்படும். அது மக்களின் இதயங்களைக் கவர்வதுடன், உலகின் சிறந்த அதிசயங்களில் ஒன்றாகவும் அது நிலைத்திருக்கும்.
என் ஆட்சியின் போது, வேறு எந்த ராஜாவையும்விட நான் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அதிக கட்டிடங்களைக் கட்டினேன். என் முன்னோடிகளை விட அதிக சமாதானத்தையும் நிலைத்தன்மையையும் நான் கொண்டு வந்ததால், நான் “மகா ஏரோது” என்று அறியப்பட்டேன்.
என் சாதனைகள் அனைத்தையும் வைத்துப்பார்த்தால், நான் வரலாற்றில் மிகவும் பாராட்டப்பட்ட ராஜாவாக இருப்பேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நடந்தது என்னவென்றால், எனக்குத் தகுதியான அங்கீகாரம் ஒருபோதும் கிடைக்கவில்லை.
அதற்குப் பெரும்பாலும் காரணம் என்னுடைய பின்னணியம்தான். நான் ஒரு ஏதோமியன், இனத்தால் அரேபியன், மதத்தால் யூதன், அனுதாபத்தால் ரோமன். நான் எல்லாராலும் அஞ்சப்பட்டேன் ஆனால், யாராலும் நேசிக்கப்படவில்லை.
இயேசு பிறந்த கதை
எருசலேம் ஒரு பெரிய நகரம், சரியான தகவல்களை பெற்றுக்கொள்வது என்பது ஒரு மாபெரும் பொக்கிஷம், தகவல்கள் என்னிடம் வந்தடைய பலவழிகளை நான் ஏற்படுத்தினேன்.
இயேசுவின் பிறப்பைப் பற்றி நான் முதலில் அறிந்து கொண்டது, சில அந்நிய நாட்டு ராஜாக்கள் எருசலேமுக்கு வந்து, அவர்கள் ஒரு நட்சத்திரத்தைப் பின் தொடர்ந்து வந்ததாகவும், யூதர்களின் ராஜாவாகிய ஒரு குழந்தையைத் தேடுவதாகவும் சொன்னபோது தான்.
நான் ஒருவன் மட்டுமே ராஜாவாக இருக்க முடியும். போட்டியான ஒரு ராஜாவைப் பற்றிய செய்தியை நான் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் மட்டும் அப்படியிருக்கவில்லை. எங்கள் வரலாற்றில் தங்களைத் தாங்களே “மேசியாக்கள்” என்று பிரகடனப்படுத்திக் கொண்டு, ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு பல தொந்தரவுகள் ஏற்படுத்தியவர்கள் நிறைந்திருந்தார்கள். எருசலேமில் உள்ள யாரும் மீண்டும் அந்த நிலைக்குச் செல்ல விரும்பவில்லை.
ஒரு பெரிய பிரச்சனை வரப்போகிறது என்பதை நான் காணமுடிந்தது, அதை நான் உறுதியுடன் சமாளிக்கத் தீர்மானித்தேன். நான் முதலில் செய்தகாரியம் என்னவென்றால், பிரதான ஆசாரியர்களையும் வேதப்போதகர்களையும் ஒன்றாக அழைத்தது தான். “மேசியா எங்கே பிறப்பார்?” என்று நான் அவர்களிடம் கேட்டேன்.
“யூதேயாவிலுள்ள பெத்லெகேமில்,” என்று அவர்கள் சொன்னார்கள். பின்னர் அவர்கள் வேதாகமத்திலிருந்து அதிகாரத்தையும் வசனத்தையும் கொடுத்தார்கள். மீகா தீர்க்கதரிசி 800 ஆண்டுகளுக்கு முன்பே இதைப் பற்றிக் கூறியிருந்தாராம்: “யூதா தேசத்திலுள்ள பெத்லெகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார்.”
என்னுடைய முயற்ச்சியினால் இடத்தை கண்டுபிடித்தேன். அடுத்தகேள்வி, எந்த வருடத்தில் இந்த ராஜா பிறப்பார் என்பது. இதை அறிந்துகொள்ள நான் அந்நிய ராஜாக்களை அரண்மனைக்கு அழைத்தேன், ஒரு ராஜகுழந்தை பிறந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டதாக அவர்களிடம் கூறினேன் . மேலும் “மேசியா பிறந்திருந்தால், நானும் அவரைப் பனிந்து ஆராதிக்க விரும்புகிறேன்” என்றேன் .
“ஒரு வேளை மேசியா வந்திருந்தால், அவருக்குச் சத்துருக்கள் இருப்பார்கள். நான் அவரைக் காப்பாற்ற முடியும். ஆகவே அவருடைய சத்துருக்கள்அவரைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நான் அவரைக் கண்டுபிடிக்க வேண்டும்.”என்று கூறினேன்.
அந்த ராஜாக்களிடம் குழந்தையைத் தேடிக் கண்டுபிடித்தவுடன் எனக்குத் தெரிவிக்குமாறு சொன்னேன். பின்னர், அவர்கள் புறப்படும்போது, “நீங்கள் பார்த்த அந்த நட்சத்திரம் முதன் முதலில் எப்பொழுது தோன்றியது?” என்று கேட்டேன்.
“நாங்கள் அதை முதன் முதலில் பார்த்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகிறது” என்று அவர்கள் சொன்னார்கள். அதன்பின்பு அவர்கள் போய்விட்டார்கள், ஆனால் எனக்கு தேவைப்பட்ட தகவலை கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.
இரண்டு ஆண்டுகள்! இப்போது எனக்கு பிறந்த இடமும் காலமும் கிடைத்துவிட்டது. பெத்லெகேம் நகரத்தில் இரண்டு வயதிற்குட்பட்ட ஓர் ஆண் குழந்தையை நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம்.
ராஜாக்கள் மீண்டும் வந்து எனக்குத் தகவல் தெரிவிப்பார்கள் என்று நான் காத்திருந்தேன், ஆனால் அவர்கள் ஒருபோதும் திரும்பவில்லை. நான் ஏமாற்றப்பட்டேன் , அது என்னைக் கோபப்படுத்தியது. அதனால் பெத்லெகேமில் இரண்டு வயதிற்குட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று ஒரு மதிப்பீட்டைக் கேட்டேன்.
அது ஒரு சிறிய நகரம், சுமார் பன்னிரண்டு, அதிகபட்சம் இருபது அல்லது முப்பது சிறுவர்கள் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளன என்று எனக்கு கூறப்பட்டது.
நான் என் அதிகாரிகளை அழைத்தேன், அங்கே தேசியப் பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பெத்லெகேமில் இரண்டு வயதிற்குட்பட்ட ஒரு குழந்தை இருப்பதாகவும் சொன்னேன். அவர்கள் என்னை நம்பமுடியாமல் பார்த்தார்கள். ஆனால் பிரச்சினையைச் சமாளிக்க அவர்களை அனுப்பி வைத்தேன், அவர்களும் தங்கள் வழக்கமான செயல்திறனுடன் அதைச் செய்துமுடித்தார்கள் .
அந்த நிகழ்வுக்கு பின்னர் சில காலத்திலே நான் மரித்துவிட்டேன். அது நடந்து 2,000 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, அதனால் சிந்திக்க எனக்கு நிறைய நேரம் கிடைத்தது.
எனக்கு ஒரு சில தகவல்கள் கிடைத்தது , அது அந்தக் குழந்தை அவருடைய பெற்றோர்களால் எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார் என்று என்னிடம் சொல்லப்பட்டது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு பொது ஊழியத்தைத் தொடங்கினார் என்றும், நான் முன்னதாகச் செய்ய முயன்றதை என் ஆட்களும், பரிசேயர்களும் இணைந்து செய்து முடித்தார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.
கடைசியில் , அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்று என்னிடம் சொல்லப்பட்டது. அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று ஒரு வதந்தி நிலவுகிறது, இங்கேயிருக்கும் யாரும் அதை நம்புவதில்லை.
உண்மையான மகத்துவம்
அவர் பிறப்பதற்கு முன்பு, ஒரு தூதன் அவருடைய தாயாருக்குத் தோன்றி, “அவர் பெரியவராயிருப்பார்” என்று சொன்னதாக யாரோ என்னிடம் சொன்னார்கள். அந்தச்செய்தி என்னைத் தொந்தரவு செய்கிறது, ஏனென்றால் அதுதான் என்னுடைய வாழ்வின் நோக்கமாக இருக்கவேண்டும் என்று நான் நினைத்தேன். உங்களுக்குத் தெரியுமே, “மகா ஏரோது!”
நான் சாதித்த எதையும் யாரும் பெரியதாக நினைக்கவில்லை என்பது எனக்குப் பெரும் மன உளைச்சலை அளிக்கிறது. தேவாலயத்திற்கான வேலை முடிவதற்கு முன்பே நான் இறந்துவிட்டேன், அது கட்டி முடிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே, ரோமர்கள் அதைத் தரைமட்டமாக்கினார்கள். அவர்கள் ஒரு கல்லைக்கூட மற்றொன்றின் மேல் வைக்கவில்லை. என் சாதனையும் நிலைக்கவில்லை.
இயேசுவுக்கு எதிரான நான் செய்த எனது செயலுக்காகவே நான் இன்றும் நினைக்கப்படுகிறேன். இன்றும் கோபம், விரக்தி, வருத்தத்துடன் என் பாவங்களுக்கான குற்றவுணர்வுடன் வாழ்கிறேன். இந்த விஷயங்கள் ஒவ்வொரு நாளும் என்னை ஆட்கொள்கின்றன, அதிலிருந்து எனக்கு எந்த விடுதலையும் கிடைக்கவில்லை.
அதேசமயம், பெத்லெகேமில் நான் கொன்ற எல்லாச் சிறுவர்களும் இப்போது இயேசுவுடன் பரலோகத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும், அவர்களுடைய வாழ்க்கையின் நோக்கங்கள் அங்கே நிறைவேற்றப்படுகிறது என்றும் என்னிடம் சொல்லப்பட்டது.
பரலோகம் ஏராளமான மக்களால் நிரம்பியுள்ளது என்றும், இன்னும் பலர் பரலோகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் நான் கேள்விப்பட்டேன். ஆனால் நான் அவர்களில் ஒருவனாக இருக்க வாய்ப்பு இல்லை. நான் ஒரு பெரிய வீட்டிற்கு வெளியே மழையில் நின்று, உள்ளே விருந்தாளிகள் மகிழ்ச்சியில் இருப்பதைக் கண்ணாடி வழியாகப் பார்ப்பவனைப்போல இருக்கிறேன்.
முன்னொரு காலத்தில் நான் இயேசுவை வரவேற்று, ஞானிகளுடன் அவரை ஆராதித்திருக்க முடியும், ஆனால் நான் வேறு ஒரு செயலை செய்தேன். இயேசுவை உலகிலிருந்து அகற்ற முயற்சிப்பதன் மூலம், நான் தேவனுக்கெதிராகப் போராடினேன் என்பதை இப்பொழுது நினைத்து பார்க்கிறேன். நான் இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறேன், இப்பொழுது என்னால் அந்த போராட்டத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை . இதுதான் என்னுடைய கதை. எனக்கு இப்போது மிகவும் காலதாமதமாகிவிட்டது.
ஜெபம் – இயேசுவே ராஜாவென்ற நல்ல செய்திக்காக பிதாவே உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
உம்மை நான் ராஜாவாக தாமதிக்காமல் விசுவாசிக்க தந்த தருணத்திற்காக நன்றி.
என் வாழ்நாள் முழுவதும், என்றென்றும், அவரது ராஜ்யத்தின் ஆசிர்வாதங்களினால் வாழும்படி எனக்கு உதவி செய்யும். ஆமென்!.
உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
யோவான் 1:9-14
Series : கிறிஸ்துமஸ் கதைகள்
மரியாளின் கதை
காபிரியேலின் கதை
சிமியோனின் கதை
ஏரோதின் கதை