தேவன் தரும் விடுதலைக்கான ஒரு ஜெபம்

பரலோகத்திலிருக்கிற பிதாவே,
உம்மீது எங்களுக்குள்ள முழுமையான சார்பை
ஆழமாக உணர்ந்தவர்களாக,
இன்றைய நாளில் உம்முன் வருகிறோம்.
உமது நாமம் மகிமைப்படாததையும்,
உம்முடைய சித்தம் நிறைவேறாததையும்
நினைத்து வருந்துகிறோம்,
உம்முடைய ராஜ்யம்
வல்லமையோடும் மகிமையோடும் வருவதை
காண நாங்கள் ஆவலோடு இருக்கிறோம்.
பிதாவே,
“தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்”
என்று இன்று நாங்கள் ஜெபிக்கிறோம்.
இந்த உலகத்தில் பலவிதமான
போராட்டங்கள் காணப்படுகிறது.
சண்டைகளிலிருந்து, பேராசையிலிருந்து,
வெறுப்பிலிருந்து, பெருமையிலிருந்து
எங்களை விடுவியும்.
வாழ்வின் அனைத்து பகுதியிலும்
நேர்மையாக, இரக்கம் காண்பிக்கிற,
ஞானமுள்ள, பெலசாலிகளான
மனிதர்களை எழுப்பும்.
சில நேரங்களில், நாங்கள் பிடிவாதமாகத்
தேர்ந்தெடுத்த பாவங்களுக்கு
நீர் எங்களை ஒப்புக்கொடுத்து விடுவீரோ
என்று அஞ்சுகிறோம்.
தேவனே, எங்களை விட்டுக்கொடுத்து விடாதேயும்.
உமது கோபத்தின் நடுவிலும்
உமது இரக்கங்களை நினைத்தருளும், என்று ஜெபிக்கிறோம்.
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாதிரும்.
பாவம் எங்களுக்குள் ஆழமாக வேரூன்றியிருப்பதினால்
நாங்கள் விழித்திருந்து ஜெபிக்க எங்களுக்கு உதவும்.
பாவம் செய்யவேண்டும் என்கிற எண்ணங்கள்
எங்களுக்குள் எழும்பும் போது,
உமது கிருபையால் அதை ஆரம்பத்திலேயே
எதிர்கொள்ள எங்களுக்கு உதவும்.
இதை நடப்பிக்க உமது பரிசுத்த ஆவியானவரின்
உதவி வேண்டி ஜெபிக்கிறோம்.
பிதாவே, நீர் அனைத்து கிருபைக்கும்
தேவனாய் இருக்கிறபடியினால்
உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
எங்களுடைய எல்லா நம்பிக்கையும்
உம்மேலேயே உள்ளது.
உமது பொது கிருபையினால்,
எங்கள் சமூகத்திலும், எங்கள் தேசத்திலும்,
எங்கள் உலகத்திலும் உள்ள பலவிதமான தீமையை அடக்கி,
நன்மையை பெருகச் செய்யும்.
நாங்கள் சோதிக்கப்படுகிற இடங்களில்,
அந்த சுமைகளை சுமக்கக் கூடிய
விசேஷித்த கிருபையை எங்களுக்கு அளியும்.
நாங்கள் விழுந்த இடங்களில்,
எங்களை மீண்டும் எழுப்பும்.
நீர் எங்களுடைய வெளிச்சமாயிருக்கிறபடியினால்
நாங்கள் மீண்டும் திரும்பி எழும்பச் செய்யும்.
நாங்கள் விசுவாசிக்கிறவைகளை காணும்
அந்த நாளை துரிதப்படுத்தும்,
அந்த நாள் வரும்வரை நாங்கள்
உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தவும்,
உம்முடைய ராஜ்யத்தை முதலாவது தேடவும்,
உம்முடைய சித்தத்தை செய்யவும்
எங்களுக்கு உதவி புரியும்.
எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும்
நீர் தருவீர் என்கிற நம்பிக்கையில் நாங்கள் வாழ
எங்களுக்கு உதவி செய்யும்.
உமது மன்னிப்பை அறிந்து, மற்றவர்களையும் மன்னித்து
சமாதானமாய் வாழ எங்களுக்கு உதவி புரியும்.
எங்களுடைய போராட்டங்களின் மத்தியில்
உம்முடைய வல்லமையை தருவீர் என்பதையும்,
நீர் எங்களை எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுவிப்பீர்
என்ற நம்பிக்கையோடு வாழ எங்களுக்கு உதவி புரியும்.
ராஜ்யமும், வல்லமையும், மகிமையும்
என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்.
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்
தேவன் தரும் விடுதலைக்கான ஒரு ஜெபம்

பரலோகத்திலிருக்கிற பிதாவே,
உம்மீது எங்களுக்குள்ள முழுமையான சார்பை
ஆழமாக உணர்ந்தவர்களாக,
இன்றைய நாளில் உம்முன் வருகிறோம்.
உமது நாமம் மகிமைப்படாததையும்,
உம்முடைய சித்தம் நிறைவேறாததையும்
நினைத்து வருந்துகிறோம்,
உம்முடைய ராஜ்யம்
வல்லமையோடும் மகிமையோடும் வருவதை
காண நாங்கள் ஆவலோடு இருக்கிறோம்.
பிதாவே,
“தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்”
என்று இன்று நாங்கள் ஜெபிக்கிறோம்.
இந்த உலகத்தில் பலவிதமான
போராட்டங்கள் காணப்படுகிறது.
சண்டைகளிலிருந்து, பேராசையிலிருந்து,
வெறுப்பிலிருந்து, பெருமையிலிருந்து
எங்களை விடுவியும்.
வாழ்வின் அனைத்து பகுதியிலும்
நேர்மையாக, இரக்கம் காண்பிக்கிற,
ஞானமுள்ள, பெலசாலிகளான
மனிதர்களை எழுப்பும்.
சில நேரங்களில், நாங்கள் பிடிவாதமாகத்
தேர்ந்தெடுத்த பாவங்களுக்கு
நீர் எங்களை ஒப்புக்கொடுத்து விடுவீரோ
என்று அஞ்சுகிறோம்.
தேவனே, எங்களை விட்டுக்கொடுத்து விடாதேயும்.
உமது கோபத்தின் நடுவிலும்
உமது இரக்கங்களை நினைத்தருளும், என்று ஜெபிக்கிறோம்.
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாதிரும்.
பாவம் எங்களுக்குள் ஆழமாக வேரூன்றியிருப்பதினால்
நாங்கள் விழித்திருந்து ஜெபிக்க எங்களுக்கு உதவும்.
பாவம் செய்யவேண்டும் என்கிற எண்ணங்கள்
எங்களுக்குள் எழும்பும் போது,
உமது கிருபையால் அதை ஆரம்பத்திலேயே
எதிர்கொள்ள எங்களுக்கு உதவும்.
இதை நடப்பிக்க உமது பரிசுத்த ஆவியானவரின்
உதவி வேண்டி ஜெபிக்கிறோம்.
பிதாவே, நீர் அனைத்து கிருபைக்கும்
தேவனாய் இருக்கிறபடியினால்
உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
எங்களுடைய எல்லா நம்பிக்கையும்
உம்மேலேயே உள்ளது.
உமது பொது கிருபையினால்,
எங்கள் சமூகத்திலும், எங்கள் தேசத்திலும்,
எங்கள் உலகத்திலும் உள்ள பலவிதமான தீமையை அடக்கி,
நன்மையை பெருகச் செய்யும்.
நாங்கள் சோதிக்கப்படுகிற இடங்களில்,
அந்த சுமைகளை சுமக்கக் கூடிய
விசேஷித்த கிருபையை எங்களுக்கு அளியும்.
நாங்கள் விழுந்த இடங்களில்,
எங்களை மீண்டும் எழுப்பும்.
நீர் எங்களுடைய வெளிச்சமாயிருக்கிறபடியினால்
நாங்கள் மீண்டும் திரும்பி எழும்பச் செய்யும்.
நாங்கள் விசுவாசிக்கிறவைகளை காணும்
அந்த நாளை துரிதப்படுத்தும்,
அந்த நாள் வரும்வரை நாங்கள்
உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தவும்,
உம்முடைய ராஜ்யத்தை முதலாவது தேடவும்,
உம்முடைய சித்தத்தை செய்யவும்
எங்களுக்கு உதவி புரியும்.
எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும்
நீர் தருவீர் என்கிற நம்பிக்கையில் நாங்கள் வாழ
எங்களுக்கு உதவி செய்யும்.
உமது மன்னிப்பை அறிந்து, மற்றவர்களையும் மன்னித்து
சமாதானமாய் வாழ எங்களுக்கு உதவி புரியும்.
எங்களுடைய போராட்டங்களின் மத்தியில்
உம்முடைய வல்லமையை தருவீர் என்பதையும்,
நீர் எங்களை எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுவிப்பீர்
என்ற நம்பிக்கையோடு வாழ எங்களுக்கு உதவி புரியும்.
ராஜ்யமும், வல்லமையும், மகிமையும்
என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்.






