தேவனுடைய ராஜ்யம் வரும்போது

“உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று ஜெபிக்கும்போது, தேவனுக்கு விரோதமாக எழும்பும் எதிரியின் கிரியைகளை அவர் முறியடிக்கவும், உலகத்தை நீதியோடு நியாயம்விசாரிக்கவும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், நாம் தேவனிடம் கேட்கிறோம். தேவனுடைய ராஜ்யம் வருவதாக என்று நாம் ஜெபிக்கும்போது, நாம் கேட்கிற இந்த காரியம் சிலருக்கு அச்சமூட்டுவதாயும், சிலருக்கு மகிழ்ச்சியளிப்பதாயும் இருக்கும்.
கர்த்தருடைய ஜெபத்தைப் பற்றிய தனது புத்தகத்தில், பீட்டர் லூயிஸ் இப்படிச் சொல்கிறார், ” நாம் ஜெபிக்கும்போது சில கதவுகள் அடைக்கப்படவும், சில வாசல்கள் திறக்கப்படவும் நாம் ஜெபிக்கிறோம்… மனந்திரும்புதற்கான காலஅவகாசமும், அதனுடன் வரும் வேதனையும் கண்ணீரும் நிறைந்த பழைய நிலை முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காகவும் நாம் ஜெபிக்கிறோம்.”
நாம் அனுபவிக்கும் வேதனையும் கண்ணீரும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என நாம் ஏங்குகிறோம். ஆனால் அவை ஒரு முடிவுக்கு வரும்போது மனம்திரும்புவதற்கு நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பும் காலமும் முடிவுக்கு வரும். ஆண்டவருடைய ராஜ்யம் வரும்போது கிருபையின் காலம் முடிவு பெரும்.
திருமணத்திற்கு வர தாமதமான ஒரு மணவாளனை குறித்த ஒரு உவமையை இயேசு சொன்னார், அந்த மணவாளன் நள்ளிரவில் வந்தபோது, ஆயத்தமாக இருந்தவர்கள் மணவாளனோடுகூட திருமணவீட்டிற்குள் பிரவேசித்தனர். பின்பு கதவு அடைக்கப்பட்டது, ஆயத்தமாக இல்லாதவர்களோ வெளியேவே விட்டுவிடப்பட்டார்கள் (மத்தேயு 25 : 1 – 13).
இந்த உலகில் நாம் வாழும்வரை, தேவனுடைய ராஜ்யத்திற்கான கதவு நமக்காக திறந்திருக்கிறது. ஆனால் ராஜாவாகிய அவர் வரும்போது, கதவுகள் அடைக்கப்படும், வெளியே இருப்பவர்கள், சதாகாலமும் வெளியே இருப்பார்கள். ஆகவே தேவனுடைய ராஜ்யம் வரும்படி நாம் ஜெபிக்கும் ஜெபமானது, காலம் தாமதிப்பதற்கு முன்னும், ராஜா வருவதற்குமுன்னும் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்து வெளியே நிற்பவர்களை தேவனுடைய ராஜ்யத்திற்குள் அழைத்து வந்தாகவேண்டும் என்ற ஒரு வைராக்கியம் நம்முடைய இருதயங்களை பற்றிப்பிடிக்க வேண்டும்.
தியானத்திற்கு உரிய கேள்விகள்
ராஜா வருவதற்கு முன், சிலரை தேவனுடைய ராஜ்யத்திற்குள் கொண்டு வர நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்