தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பது எப்படி

ஒரு இரவு இயேசுவை சந்திக்க நிக்கொதேமு என்கின்ற அறிவாளியான ஒரு மனிதன் வந்தார் . இயேசுவிடம் அவர் கண்ட காரியங்கள் அவரை ஈர்த்ததனால், அவரை பற்றி இன்னும் அறிந்துகொள்ள விரும்பினார். நிக்கொதேமு ஒரு பக்தியுள்ள ஒரு மனிதன். அவர் நியாயப்பிரமானங்களை கடைபிடிப்பவரானபடியினால், தேவனுடைய சட்டதிட்டங்களுக்கு கீழ்படிவதாக எண்ணிக்கொண்டிருந்தார். தேவன் வாக்களித்த ராஜ்யத்தைக்குறித்து அவர் அறிந்திருந்தார். அதில் தனக்கு நிச்சயமாக ஒரு இடம் உண்டு என்று நம்பிக்கொண்டிருந்தார். ஆனால் இயேசு அவனிடம் கூறியது என்னவென்றால், “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்” என்றார்
தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது என்பது, ஒருவரின் உள்ளான வாழ்வில் அடிப்படையான ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்குவது ஆகும். இயல்பாகவே நாம் நமக்கென ஒரு ராஜ்யத்தையே தேடுகிறோம். நமக்கு ஏற்றாற்போல் சட்டதிட்டங்களை வடிவமைத்து அதன் கீழ் வாழ விரும்புகிறோம். ஆனால் இயேசு சொல்கிறார், உங்கள் உள்ளத்தில் உள்ள ஆழமான நேசங்களிலும், ஆழமான விருப்பங்களிலும் ஒரு அடிப்படை மாற்றம் இல்லாவிட்டால் உங்களால் தேவனுடைய ராஜ்யத்தை காணவும் முடியாது; அதில் பிரவேசிப்பதை பற்றி நினைப்பதற்கு இடமும் கிடையாது என்று.
ஒருவரின் உள்ளான வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த இயேசு ஒருவரால் மாத்திரமே முடியும். சிருஷ்டிகர் ஒருவரால் மாத்திரமே நம்மை புதிய சிருஷ்டிகளாக மாற்ற முடியும். இதைத்தான் இயேசு கிறிஸ்துவின்மூலம் தேவன் நமது வாழ்வில் செய்கிறார் (2 கொரி. 5:17).
இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
கொலோசெயர் 1 : 13 – 14
தேவனை அறியாத காலத்தில் நமக்குள் ஆட்கொண்டிருந்த, தேவனுக்கு எதிரான வல்லமையை அவர் உடைத்து, கிறிஸ்துவின் ஆளுகைக்கு கீழ் இருக்கிற சுதந்தரத்தையும், மன்னிப்பையும், நமக்கு தருகிறார்.
“உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று நாம் ஜெபிக்கும்போது, நம்முடைய வாழ்வை முழுமையாக ராஜாவாகிய கிறிஸ்துவிற்கு சமர்ப்பிக்கிறோம். நம் உள்ளத்தில் மறைந்திருக்கும் விக்கிரகங்களை அகற்றி, கிறிஸ்துவின் ஆளுகைக்குள் நம்மை முழுமையாக கொண்டுவருமாறு, நாம் பிதாவிடம் கேட்கிறோம்.
தியானத்திற்கு உரிய கேள்விகள்
உங்கள் உள்ளான வாழ்வில் இந்த அடிப்படையான மாற்றத்தை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா?அப்படியானால், உங்களை புதிய சிருஷ்டியாக மாற்றிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்! அல்லது இந்த மாற்றத்திற்கு இணக்கம் கொடுக்காமல் உங்களை தடுத்து நிறுத்துவது என்ன?
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்