எப்படி உங்களால் பிதாவின் நாமத்தை மகிமைப்படுத்த முடியும்?

சிலுவையில் அனுபவிக்க வேண்டிய பாடுகளுக்காக தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும்போது, இயேசு தேவனுடைய நாமம் மகிமைப்படவேண்டும் என்று ஜெபித்தார்.
“இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ, ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார்.”
யோவான் 12 : 27 – 28
சொல்லமுடியாத வேதனைகளை நம்முடைய தேவன் சந்திக்க வேண்டிய நேரம் வந்ததால் அவருடைய ஆவி கலங்கினது. அவர் கடுமையாக அடிக்கப்பட்டு , இகழப்பட்டு, சிலுவையில் அறையப்பட வேண்டியிருந்தது. நம்முடைய பாவங்களின் சாபங்களையெல்லாம் அவர் சுமக்க வேண்டியிருந்தது. நரக இருளின் ஆழத்தை அவர் அனுபவிக்க வேண்டியிருந்தது.
இந்த எல்லா வேதனைகளும், இயேசு கிறிஸ்துவை இந்த வேளையிலிருந்து தம்மை காப்பாற்றும்படி பிதாவிடம் கேட்க வைக்குமா? இல்லை, இந்த வேளைக்காக தான் அவர் இந்த பூமிக்கு வந்தார். அதனால் தான் அவர், “பிதாவே, உம்முடைய நாமம் மகிமைப்படட்டும்” என்று ஜெபித்தார்
உங்கள் வாழ்விலும், இப்படி மிகுந்த வேதனைகளை எதிர்கொள்ள கூடிய ஒரு காலம் வரலாம். இதில் தேவனுடைய நாமம் எப்படி மகிமைப்படப்போகிறது? என்று நீங்கள் வியக்கலாம். துன்பங்களின் மத்தியிலும் நீங்கள் பரலோக பிதாவை, நேசித்து, விசுவாசித்து, அவருக்கு கீழ்ப்படியும்போது அவருடைய நாமத்தை மகிமைப்படுத்த முடியும்.
இயேசு இந்த ஜெபத்தை ஜெபித்தபோது, உடனடியாகவே அவருக்கு பதில் கிடைத்தது. “அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று” (யோவான் 12:28). இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் தேவனுடைய நாமம் மகிமையடைந்தது அதுமட்டுமன்றி, பிதா அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினதாலும் பிதாவினுடைய நாமம் மகிமைப்படுத்தப்பட்டது.
இன்றும் தேவ பிள்ளைகள் கடினமான பாதை வழியே கடந்து செல்லும்போது, பிதாவை நேசித்து, விசுவாசித்து, அவருக்கு கீழ்ப்படிவதின்மூலம் தேவனுடைய நாமம் மகிமைப்படுத்தப்படுகிறது. அவரை நேசித்து விசுவாசிக்கிற அனைவருக்கும் அவர் வாக்குக்கொடுத்த நித்திய மகிழ்ச்சிக்குள் நிச்சயமாக ஒரு நாள் கொண்டுசெல்வார். அந்த நாளில் அவருடைய நாமம் மீண்டுமாக மகிமைப்படுத்தப்படும்.
தியானத்திற்கு உரிய கேள்விகள்
உங்கள் வாழ்க்கையில் கடினமான நேரங்களை நினைத்துப் பாருங்கள். அந்த சமயத்தில், ‘உம்முடைய நாமம் மகிமைப்படட்டும்’ என்று உங்களால் ஜெபிக்க முடிந்ததா? இப்போது நீங்கள் அப்படி ஒரு கடினமான காலத்தில் இருப்பீர்களானால், இன்று இந்த ஜெபத்தைச் செய்வீர்களா?
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்