இந்த ஜெபத்திற்கு கர்த்தர் எப்படி பதிலளிக்கப் போகிறார்.

கர்த்தருடைய ஜெபத்தில் வரும் ஒவ்வொரு விண்ணப்பங்களும் நிச்சயமாக பதிலளிக்கப்படும். ஆகையால் உங்களுடைய ஜெபங்களை, கர்த்தருடைய ஜெபத்தை மையமாக வைத்து ஜெபிக்கும்போது நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி தான் ஜெபிக்கிறீர்கள் என்பதை உறுதியாக நம்பலாம்.
தேவன் திரும்பி வரும்பொழுது நிச்சயமாக இந்த ஆறு விண்ணப்பங்களும் பதிலளிக்கப்படும். அதுமட்டுமின்றி இதில் ஒவ்வொரு விண்ணப்பங்களுக்கான பதில்களை நம்மால் இப்போது, இங்கேயே கூட காண முடியும். இதில் “இப்பொழுதே” என்ற பதிலும் உள்ளது, “பிறகு” என்ற பதிலும் உள்ளது.
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வல்லமையோடும், மகிமையோடும், திரும்பி வரும்போது, தேவனுடைய நாமம் பரிசுத்தப்படுத்தப்படும், கனப்படுத்தப்படும், மகிமைப்படுத்தப்படும் மேலும் உயர்த்தப்படும்: “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” (ஆபகூக் 2:14 ).
நிச்சயமாக ஒரு நாள் இந்த பூமி நீதியின் வாசஸ்தலமாகும். தேவனுடைய நாமம் பரலோகத்தில் மகிமைப்படுவது போலவே பூமியிலும் மகிமைப்படுத்தப்படும். ஆனால்,தேவனுடைய நாமம் தூஷிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய உலகில், இப்பொழுதே இந்த ஜெபத்திற்கு எப்படி பதில் கிடைக்கும்? இந்த கேள்விக்கான பதிலை ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் தேவன் நமக்கு தந்திருக்கிறார்.
நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார். இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்
ஏசாயா 52 : 5 – 6
உலகம் தேவனுடைய நாமத்தை இகழும்போது, அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தம்மை அறிந்து, நேசிக்கும் ஜனத்தை கர்த்தர் கூட்டி இணைக்கிறார். “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று நாம் தேவனிடம் ஜெபிக்கும்போது, தம்மை முழு மனதோடு நேசித்து, எல்லாவற்றிற்கும் மேலாக அவரை கனப்படுத்துகிற ஜனங்களை சேர்க்கும்படி கேட்கிறோம். இதன்மூலம் அவரை இகழும் இந்த உலகில் தேவ நாமம் மகிமைப்படுகிறது.
கிறிஸ்த்தவர்கள் இந்த உலகில் தேவனுடைய நாமத்தை சுமந்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவருடைய நாமத்தை சுமந்துகொண்டிருக்கும் ஒரு நபர், தாம் கொண்டிருக்கும் விசுவாசத்திற்கு எதிர்மறையாக நடந்துக்கொள்ளும்பொழுது, தேவனுடைய நாமம் பெரிதாய் அவமதிக்கப்படுகிறது. இந்த ஜெபத்தை ஜெபிப்பதன் மூலம் பரலோகத்தில் இருக்கிற நம்முடைய பிதாவை மகிமைபடுத்துகிற ஒரு வாழ்வை நான் வாழும்படி, நம்முடைய இருதயங்களில் ஒரு வைராக்கியம் ஏற்படுகிறது: ” தேவரீர் உம்முடைய நாமம் பரிசுத்தப்படவேண்டும், ஒருக்காலும் உம்முடைய நாமத்தை இகழாதபடி காத்தருளும்.
தியானத்திற்கு உரிய கேள்விகள்
இந்த ஜெபத்திற்கு தேவன் எனக்கு உடனே பதிலளிப்பார் அல்லது பிறகு பதிலளிப்பார் என்று முழு நிச்சயத்துடன் உங்களால் ஜெபிக்க முடியுமா?
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்