தேவனின் இறுதி விடுதலை

நீதியின் வாசஸ்தலமான புதிய சிருஷ்ட்டிப்பில் ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் ஒரு மகிமையான எதிர்காலத்தை…
Day 30

நீதியின் வாசஸ்தலமான புதிய சிருஷ்ட்டிப்பில் ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் ஒரு மகிமையான எதிர்காலத்தை வாக்களித்திருக்கிறார். அந்த வாசஸ்தலத்தில் தேவன் நம்மோடு கூட வாசம் செய்வார், அதுமட்டுமின்றி நம்முடைய கண்களில் இருந்து வரும் ஒவ்வொரு கண்ணீரையும் துடைப்பார்.

இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின

வெளிப்படுத்தின விசேஷம் 21:4

கர்த்தருடைய ஜெபத்திலுள்ள ஆறு விண்ணப்பங்களும் தேவனுடைய புதிய சிருஷ்டிப்பில் முழுவதும் பதிலளிக்கப்படும். இந்த உலகில் வாழும் காலம் வரை, சோதனை நம்முடைய வாழ்க்கையில் இடம் பெற்றுக்கொண்டே தான் இருக்கும். பவுல், “ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது” (கலாத்தியர் 5:16,17) என்று சொல்கிறார்.

ஆனால் புது சிருஷ்டிப்பில் இந்த போர் நிறைவுபெறும். உங்கள் உயிர்த்தெழுந்த சரீரம், உங்கள் மீட்கப்பட்ட ஆத்துமாவைப் போலவே கடவுளின் சித்தத்தைச் செய்ய ஆர்வமாக இருக்கும். இதற்குமுன் உங்கள் வாழ்க்கையில் சாத்தியமாகாத மாபெரும் சமாதானத்தை நீங்கள் காண்பீர்கள்.

இனி நீங்கள் சோதனைக்குட்படப்போவதில்லை, தீமையானது சதாகாலங்களிலும் அக்கினிக் கடலுக்குள் தள்ளப்படுவதால், தீமையின் வல்லமையிலிருந்தும் அதிகாரத்திலிருந்தும் நீங்கள் முழுமையாக விடுவிக்கப்படுவீர்கள்.

தேவனுடைய புதிய படைப்பில் மன்னிப்பும், நல்லிணக்கமும் முழுமையாக நிறைவேறும். அனைத்து பாவங்களும் முழுமையாக மன்னிக்கப்படும், நாம் அனுபவித்த வேதனைகளும் பிறருக்கு நாம் ஏற்படுத்திய காயங்களும் குணமடையும்.

தேவனுடைய பிரசன்னத்தில் நடைபெறும் விருந்தில் நம்முடைய அன்றாட அப்பம் மட்டுமல்லாமல் அதிகமான அநேக காரியங்களும் நமக்கு அற்புதமாக பரிமாறப்படும். நமது விருப்பங்கள் தேவனுடைய விருப்பங்களோடு முற்றிலும் ஒத்துப்போவதினால், அவருடைய சித்தமே நிறைவேறும்.

தேவனுடைய புதிய சிருஷ்டிப்பில் தேவனுடைய ராஜ்யம் முழுவதுமாக வரும், அங்கே அவருடைய நாமம் சதாகாலமும் பரிசுத்தப்பட்டு, மதிக்கப்பட்டு, உயர்த்தப்படும். அந்த நாள் சமீபத்தில் இருக்கிறது. ஆனால் அது வரும்வரை நாம் கர்த்தருடைய ஜெபத்தை செய்ய வேண்டும்.

தியானத்திற்கு உரிய கேள்விகள்

இன்று நீங்கள் ஜெபிக்க வேண்டிய ஒரு விண்ணப்பத்தை உங்களால் கண்டறிய முடியுமா? மற்றும் தேவனிடம் நன்றி சொல்லிவிட்ட ஒரு விண்ணப்பம் ஒரு நாள் உங்களுக்கு தேவைப்படாமல் இருக்கலாம். அதைக் கண்டறிய முடியுமா?

Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்

தேவனின் இறுதி விடுதலை

நீதியின் வாசஸ்தலமான புதிய சிருஷ்ட்டிப்பில் ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் ஒரு மகிமையான எதிர்காலத்தை வாக்களித்திருக்கிறார். அந்த வாசஸ்தலத்தில் தேவன் நம்மோடு கூட வாசம் செய்வார், அதுமட்டுமின்றி நம்முடைய கண்களில் இருந்து வரும் ஒவ்வொரு கண்ணீரையும் துடைப்பார். “இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை,…