நீங்கள் தோல்வியடையும்பொழுது தேவன் தரும் விடுதலை

மீட்டெடுக்கும் கிருபை என்றால் என்ன? தேவனின் மாபெரும் கிருபையினால் தோல்வியடையும்பொழுது தேவனால் மீட்டெடுக்கப்படுவதே ஆகும். தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இரவிலே இயேசு தமது சீஷர்களிடம், “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்” (மத்தேயு 26:41) என்று சொன்னார், ஆனால் பேதுரு விழித்திருக்கவுமில்லை, ஜெபிக்கவும் இல்லை.
பேதுரு சோதிக்கப்படுவான் என்பதை இயேசு அறிந்து, “சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்”(மத்தேயு 26:34) என்றார். பின்னும் கர்த்தர்: “சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன், நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்” (லூக்கா 22 : 31 – 32).
பேதுரு தோல்வியடைவான் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆனாலும் அவர் பேதுருவினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி ஜெபித்தார். அதனால்தான் பேதுருவினுடைய வாழ்வில் பாவம் கடைசி வார்த்தையாக இருக்கவில்லை. பேதுரு மீண்டும் தேவனிடத்தில் திரும்பினான். இதுதான் மீட்டெடுக்கும் கிருபை.
இயேசு பேதுருவை போன்றும் நம்மை போன்றும் உள்ள பாவிகளுக்காக மரித்தார். பின்பு அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து பரமண்டலத்துக்கேறி நமக்காக பரிந்து பேசுகிறார் என்று வேதாகமம் சொல்கிறது (எபிரேயர் 7:25). பேதுருவைப்போல நீங்கள் தோல்வியடைந்தாலும் நீங்கள் மீண்டும் தேவனிடத்தில் திரும்புவீர்கள். நீங்கள் மனந்திரும்பும்பொழுது மீட்டெடுக்கப்படுவீர்கள். ஏன் மீட்டெடுக்கப்படுவீர்கள்? ஏனென்றால் கிறிஸ்து உங்களுக்காக ஜெபித்திருக்கிறார்.
மீகா புஸ்தகத்தில் ஒரு அற்புதமான வசனம் இருக்கிறது, குறிப்பாக உங்கள் தோல்விகளால் நீங்கள் மீண்டும் மீண்டும் வீழ்த்தப்படுவதாக உணர்ந்தால், இந்த வசனம் உங்களுக்கு உதவக்கூடும்.
“என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே. நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன். நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.”
மீகா 7 : 8
அதுதான் மீட்டெடுக்கும் கிருபை !
தேவன் உங்கள் இருளில் வெளிச்சமாயிருக்கிறார். கர்த்தர் உங்கள் மேய்ப்பராயிருக்கிறார்; அவர் உங்கள் ஆத்துமாவை மீட்டெடுப்பார். சத்துரு உங்களை விழத்தள்ளியிருக்கலாம். ஆனால் தேவனுடைய கிருபையினால் நீங்கள் மீண்டும் திரும்புவீர்கள். உங்கள் வாழ்வில் பாவம் கடைசி வார்த்தையாக இருக்காது. இயேசு உங்களுக்காக பரிந்து பேசுகிறார், மேலும் தேவனுடைய கிருபை உங்களை போக விடாது.
தியானத்திற்கு உரிய கேள்விகள்
மீட்டெடுக்கும் கிருபை உங்களுக்கு தேவையா ? மீட்டெடுக்கும் கிருபை தேவைப்படுகிற வேறு யாரையாவது நீங்கள் அறிந்திருக்கிறீர்களா ?
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்