விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்

இயேசு தம்முடைய சீஷர்களுடன் கெத்செமனே தோட்டத்தில் இருக்கையில் இந்த வார்த்தைகளை கூறினார். அவருடைய…
Day 28

இயேசு தம்முடைய சீஷர்களுடன் கெத்செமனே தோட்டத்தில் இருக்கையில் இந்த வார்த்தைகளை கூறினார். அவருடைய சீஷர்கள் சோதிக்கப்படுவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். சோதனைகள் வரும்பொழுது அது அவர்களை மேற்கொள்ளாதிருக்க இயேசு சீஷர்களிடம் விழித்திருந்து ஜெபிக்கும்படி அழைத்தார்.

சோதனைக்கு உட்படுவது என்றால் என்ன?

ஒரு வியாபாரி உங்கள் வீட்டுக் கதவைத் தட்டுகிறார் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். நீங்கள் கதவைத் திறந்தவுடன், அவர் விற்கும் பொருளைப் பற்றி விளக்கத் தொடங்குகிறார். அந்த நேரத்தில், உங்களுக்கு அதில் ஆர்வம் இல்லையெனில், “மன்னிக்கவும், எனக்கு விருப்பமில்லை, பக்கத்து வீட்டில் உள்ளவர்களை அணுகுங்கள்” என்று எளிதாகச் சொல்லலாம்.

ஆனால், நீங்கள் அந்த நபரை உங்கள் வீட்டிற்குள் அழைத்தால், அவர் உங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் வந்து அமர்ந்து தனது உரையை தொடங்குவார். தனது பொருளைக் காட்டி, அது உங்களுக்கு எவ்வளவு தேவை என்றும், அந்தப் பொருள் உங்களிடம் இருந்தால் உங்கள் வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்றெல்லாம் சொல்வார். உங்கள் மனதிலும், இருதயத்திலும் ஒரு விருப்பம் இருக்கும் அந்த சமயத்தில் உங்களால் “இல்லை” என்று சொல்வது கடினம்.

இயேசு, “விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்” என்று சொன்னார். இவ்விரண்டையும் சேர்த்து கைக்கொள்வது மிகவும் முக்கியம்.

நீங்கள் விழித்து மட்டும் இருந்து ஜெபிக்காமல் இருப்பீர்களானால், அது மருத்துவரிடம் சென்று நோயை அறிந்துவிட்டு மருந்துசீட்டு வாங்காமல் வருவது போன்றதாகும். உங்கள் ஆத்துமாவைக் குறித்து அறிந்து பின்னர் அதனை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கும்பொழுது இதுதான் நடக்கிறது. ஜெபிக்காமல் விழித்திருப்பது மனதைச் சோர்வடையச் செய்கிறது. நீங்கள் பிரச்சனையை மட்டும் காண்கிறீர்கள் ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருக்கிறீர்கள்.

நீங்கள் ஜெபம் மட்டும் செய்து விழித்திருக்கவில்லையென்றால், அது உங்கள் நோய் என்னவென்று அறியாமலேயே மருந்தகத்திற்கு செல்வது போன்றதாகும். உங்களுக்கு தேவையான மருந்து அலமாரியில் உள்ளது; அது உங்களைப் போன்றவர்களுக்காகவே வைக்கப்பட்டுள்ளது; ஆனால் என்ன கேட்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியாததால், அது உங்களுக்குப் பயனில்லாமல் போய்விடுகிறது.

இதில் ஆபத்து என்னவென்றால் சாத்தான் உங்கள் வாழ்வில் செய்கிற காரியங்களும் நீங்கள் ஜெபிக்கும் ஜெபங்களும் வேறுபாடுடன் காணப்படுவதுதான். இயேசு சொல்கிறார் “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்” (மத்தேயு 26 : 41) என்று. இந்த வாரமே உங்களுக்கு சோதனைகள் வரலாம். அவை உங்களை மேற்கொள்ளாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.

தியானத்திற்கு உரிய கேள்விகள்

நீங்கள் ஜெபமின்றி விழித்திருக்கிறீர்களா? அல்லது விழித்திராமல் ஜெபிக்கிறீர்களா?

Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்

விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்

இயேசு தம்முடைய சீஷர்களுடன் கெத்செமனே தோட்டத்தில் இருக்கையில் இந்த வார்த்தைகளை கூறினார். அவருடைய சீஷர்கள் சோதிக்கப்படுவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். சோதனைகள் வரும்பொழுது அது அவர்களை மேற்கொள்ளாதிருக்க இயேசு சீஷர்களிடம் விழித்திருந்து ஜெபிக்கும்படி அழைத்தார். சோதனைக்கு உட்படுவது என்றால் என்ன? ஒரு…