நீங்கள் சோதனைக்குட்படும்பொழுது தேவன் தரும் விடுதலை

“எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாதிரும்” என்று நாம் ஜெபிக்கும்பொழுது, அவருடைய விசேஷமான கிருபையாகிய தமது இரக்கத்தின்…
Day 27

“எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாதிரும்” என்று நாம் ஜெபிக்கும்பொழுது, அவருடைய விசேஷமான கிருபையாகிய தமது இரக்கத்தின் மூலம் நாம் சோதிக்கப்படும்பொழுது நமக்கு பதிலளிக்கிறார். நமது வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பலவிதமான சோதனைகளை எதிர்கொள்ளக்கூடிய விசேஷமான பெலத்தை தேவன் நமக்கு தருகிறார்.

அப்போஸ்தலனாகிய பவுல், தனது வாழ்வில் தேவன் அருளிய விசேஷ உதவியை குறித்து கூறுகிறார்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13). சில சமயங்களில் அவரிடம் அதிகமாய், நிறைவாய்  இருந்தது , அதேபோல் சில நேரங்களில் அவர் மிகவும் குறைவுபட்டிருந்தார். இவ்விரண்டு சூழ்நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய விசேஷித்த உதவியை தேவன் பவுலுக்கு அளித்தார்.

பவுல் நீண்ட காலமாக ஒரு பெரிய சோதனையைச் சகித்துக்கொண்டிருந்தார், அதனை அவர் “என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று விவரித்தார் (2 கொரி. 12:7). அது எப்போதும் அவரோடு இருந்து அவருக்கு ஆழ்ந்த வேதனையை உண்டாக்கியது என்று விவரிக்கிறது. தேவன் அந்த சோதனையை எடுத்துப்போடவில்லை அதற்குப் பதிலாக பவுலுக்கு இவ்வாறாக வாக்களித்தார்:

என் கிருபை உனக்குப்போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்.”

2 கொரிந்தியர் 12:9

பவுல் எதிர்க்கொண்ட கடினமான சோதனைகளை தாங்கக்கூடிய  பெலனை தேவன் அவருக்குத் தந்தார். அதுபோலவே, தேவன் உங்களுக்கும் செய்வார். நீங்கள் எதிர்க்கொள்ளும் பலவிதமான சோதனைகளிலும், பரீட்சைகளிலும் தேவையான எல்லாவற்றையும் தேவன் உங்களுக்கு தருவார்.

இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது என்ற நிலைக்கு நீங்கள் வரும்பொழுது, தேவனுடைய கிருபை உங்களுக்குப் போதுமானதாக இருக்கும். நீங்கள் சோதனையை தாங்கிக்கொள்ளும்படி உங்கள் பெலவீனத்தில் அவர் பெலன் தருவார்.

தியானத்திற்கு உரிய கேள்விகள்

இப்போது நீங்கள் ஏதேனும் ஒரு சோதனையையோ அல்லது பரிட்சையையோ எதிர்கொண்டு இருகிறீர்களா? அதேபோல் ஒரு சோதனை அல்லது பரீட்சையைச் எதிர்க்கொண்டிருக்கும் வேறு யாரையாவது நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இன்று இந்த ஜெபத்தை நீங்கள் ஜெபிப்பீர்களா?

Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்

நீங்கள் சோதனைக்குட்படும்பொழுது தேவன் தரும் விடுதலை

“எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாதிரும்” என்று நாம் ஜெபிக்கும்பொழுது, அவருடைய விசேஷமான கிருபையாகிய தமது இரக்கத்தின் மூலம் நாம் சோதிக்கப்படும்பொழுது நமக்கு பதிலளிக்கிறார். நமது வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பலவிதமான சோதனைகளை எதிர்கொள்ளக்கூடிய விசேஷமான பெலத்தை தேவன் நமக்கு தருகிறார். அப்போஸ்தலனாகிய பவுல், தனது…