உலகத்தில் காணப்படும் தீமைகளிலிருந்து தேவன் தரும் விடுதலை

“தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்”, என்று நாம் ஜெபிக்கும்பொழுது, தேவன் எல்லா ஜனத்துக்கும் மற்றும்…
Day 26

“தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்”, என்று நாம் ஜெபிக்கும்பொழுது, தேவன் எல்லா ஜனத்துக்கும் மற்றும் தம்மை எதிர்ப்பவர்களுக்கும் கூட அவர் காட்டும் தயவாகிய தம்முடைய பொதுவான கிருபையின் மூலம் நம்முடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார்.

ஏன் பல அவிசுவாசிகள் அமைதியான, மகிழ்ச்சியான, பயனுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள்? ஏன் தேவனை நம்பாதவர்களிடமும் கூட அன்பு, பொறுமை, கருணை காணப்படுகிறது? இதற்கான பதில் பொதுவான கிருபை. அதின் அர்த்தம் என்னவென்றால், எல்லா ஜனத்துக்கும் மற்றும் தேவனுக்கு தங்களுடைய வாழ்வில் இடம் கொடுக்காதவர்களுக்கும் கூட, தேவன் காண்பிக்கும் இரக்கம்:

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள், இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள், அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.

மத்தேயு 5 : 44,45

இந்தப் பொதுவான கிருபையை குறித்து வேதம் சொல்லுவது என்னவென்றால், “கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர், அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின் மேலும் உள்ளது”  (சங்கீதம் 145 : 9). தேவன் தம்முடைய தயவால் அனைவருக்கும் நன்மையை மட்டும் தருவதில்லை, அவர் உலகில் காணப்படும் தீமைகளையும் கட்டுப்படுத்துகிறார்.

இந்த உலகம் மிகவும் மோசமாகத் தான் உள்ளது, ஆனால் இன்னும் அதிகமாக மோசமாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இவ்வுலகில் வாழும் மிக மோசமான மனிதர்கள், நரகத்தில் வாழும் பேய்களை விட மோசமானவர்கள் அல்ல, இதற்குக் காரணம் தேவனுடைய பொதுவான கிருபையின் கட்டுப்பாடுகளே. தேவன் தீமைகளை கட்டுப்படுத்துகிறார், இதை அவர் மனசாட்சியின் மூலமாகவும், அரசாங்கத்தின் மூலமாகவும், நல்லெண்ணம் கொண்ட மனிதர்கள் மூலமாகவும், மேலும் தமது பரிசுத்த ஆவியின் நேரடியான செயற்பாட்டினாலும் கட்டுப்படுத்துகிறார்.

தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” என்று நாம் ஜெபிக்கும்பொழுது, தேவனுடைய பொதுவான கிருபையை கேட்கிறோம். கர்த்தாவே, உமது இரக்கத்தினால் எங்களிலும், எங்கள் சமுதாயத்திலும், நாட்டிலும், உலகிலும் உள்ள மிகவும் மோசமானவற்றை கட்டுப்படுத்தும். நல்லெண்ணம் கொண்ட ஜனங்களை எழுப்பும். சமாதானமும் நீதியும் நிலைபெற செய்யும்.”

தியானத்திற்கு உரிய கேள்விகள்

இந்த வாரத்தில் நீங்கள் தேவனுடைய பொதுவான கிருபையின் உதாரணம் ஒன்றை கவனித்தீர்களா?

Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்

உலகத்தில் காணப்படும் தீமைகளிலிருந்து தேவன் தரும் விடுதலை

“தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்”, என்று நாம் ஜெபிக்கும்பொழுது, தேவன் எல்லா ஜனத்துக்கும் மற்றும் தம்மை எதிர்ப்பவர்களுக்கும் கூட அவர் காட்டும் தயவாகிய தம்முடைய பொதுவான கிருபையின் மூலம் நம்முடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார். ஏன் பல அவிசுவாசிகள் அமைதியான, மகிழ்ச்சியான, பயனுள்ள வாழ்க்கையை…