நாம் எப்படி மன்னிப்பை பெற்றுக்கொள்ளமுடியும் ?

ஒரு பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனால், தாம் கட்டளையிட்டதை மீண்டும் மீண்டும் செய்யத் தவறுகிற நம்மை, எவ்வாறு மன்னிக்க முடியும்?
இயேசுவானவர் ஒரு பரிபூரண அன்பின் வாழ்வையும், தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கும் அனைத்தையும் நிறைவேற்றும் வகையிலும் வாழ்ந்தார், அதுமட்டுமன்றி நமது பாவங்களுக்காக தம்முடைய ஜீவனை பலியாகக் கொடுத்து, நமது கடனைச் செலுத்தினார்.
விசுவாசத்தோடும் மனந்திரும்புதலோடும் இயேசுவை நோக்கிப் பார்க்கும்பொழுது, தேவன் பாவிகளை மன்னிக்கிறார். “எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது, அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது” (லூக்கா 24:46,47). தேவன் நமக்கு அளித்திருக்கும் தம்முடைய வார்த்தை என்னவென்றால்:
“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”
1 யோவான் 1:9
தேவன் நமது பாவங்களை நமக்கு மன்னிக்கிறார், ஏனென்றால் தேவன் தமது வாக்குத்தத்ததை நிறைவேற்ற உண்மையுள்ளவராயிருக்கிறார். அவர் நீதியுள்ளவர் ஆதலால் நம்மை மன்னிக்கிறார். நம்முடைய பாவங்களினால் நமக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகள் அனைத்தையும் இயேசு தம்மீது ஏற்றுக்கொண்டார். தேவன் உங்கள் பாவங்களை இயேசுவின்மீது சுமத்தியதினால் தேவன் உங்களுக்கு நீதியோடும், இலவசமாகவும் மன்னிக்கிறார்.
தேவன் நம்மிடம் எதிர்ப்பார்க்கும் எல்லாவற்றையும் இயேசு நிறைவேற்றினார். நாம் மனந்திரும்பி விசுவாசத்துடன் அவரிடம் வரும்பொழுது, அவர் முற்றிலுமாகவும், இலவசமாகவும், என்றென்றும் நமக்கு மன்னிப்பை அருளுகிறார்.
தந்தையை எதிர்த்து வீட்டைவிட்டு வெளியே போன ஒரு மகனை பற்றின ஒரு உவமையை இயேசு சொன்னார். அவன் தன் தகப்பனுடைய பணத்தை வீணாக செலவழித்து, கடைசியில் மனமுடைந்தவனாய் தன தகப்பனிடத்தில் திரும்பி செல்ல தீர்மானித்தான்(லூக்கா 15 : 11 – 32). அவன் திரும்பி சென்றால் அவனுக்கு ஒரு அன்பான வரவேற்பு இருக்காது என்று நினைத்தான். ஆனால் அவன் வெகு தூரத்தில் வருகிறபொழுதே அவனுடைய தகப்பன் அவனை கண்டு ஓடிவந்து அவனை அரவணைத்து மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வரவேற்றுச் சென்றார்
இது தேவன் நம்மை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார் என்பதற்கான ஓர் அழகான மாதிரி. நாம் மனந்திரும்பி விசுவாசத்தோடு அவரிடத்தில் வரும்பொழுது, அவர் நம்மை அணைத்துக்கொண்டு, மன்னிப்பை ஒரு பரிசாக வழங்குகிறார்.
தியானத்திற்கு உரிய கேள்விகள்
தேவனிடமிருந்து இப்படிப்பட்ட வரவேற்பை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? இல்லையெனில், இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள்? இதுதான் நீங்கள் வீட்டிற்குத் திரும்ப வேண்டிய தருணமாக இருக்கலாம்.
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்