ஜீவ அப்பமாகிய இயேசு

ஒரு நாள் திரளான ஜனங்கள் இயேசுவின் பிரசங்கத்தை கேட்க ஆவலோடு ஒரு வனாந்தரத்தில் கூடினார்கள். அங்கு அவர்களுக்கு உணவு இல்லாதிருந்தது. அவரோடு இருந்த சீஷர்கள் இயேசுவை நோக்கி, உணவு வாங்கிக்கொள்ளும்படி ஜனங்களை அனுப்பிவிடும்படி கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அதற்கு இயேசு, பிரம்மிக்கத்தக்க ஒரு கட்டளையைக் கொடுத்தார் : “நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார்” (மாற்கு 6 :37).
பின்னும் இயேசு சீஷர்களிடம், தேவன் ஏற்கனவே ஆயத்தப்படுத்தியுள்ளவற்றை பார்க்கும்படி கூறினார் : “உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார்” (மாற்கு 6 : 38). அவர்கள் எதிர்ப்பார்த்த வண்ணம் பெரிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை. “இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான்” (யோவான் 6 : 9).
சுவிசேஷத்தில் யோவான் குறிப்பிடுவதென்னவென்றால், “இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்: சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்” (யோவான் 6 : 11). இயேசு அப்பத்தை பிட்க்கையில் அது அவர் கையிலேயே பெருக துவங்கியது. ஆயிரக்கணக்கானோர் உணவை சாப்பிட்டு திருப்தியடைந்தனர். கிறிஸ்துவின் கரங்களிலில் கொடுக்கப்பட்டதால் அந்த ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் அனைவருக்கும் போதுமானதாக இருந்தது.
இயேசு தம்முடைய கரங்களில் அப்பத்தை எடுத்ததாக வேறொரு நிகழ்வையும் நாம் சுவிசேஷங்களில் காண்கிறோம். காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இரவு,
“இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: ‘நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது’ என்றார்.”
மத்தேயு 26 : 26
மெய்யான அப்பமாகிய இயேசுவே நம்முடைய ஆத்துமாக்களுக்கு ஜீவனை அளித்து நித்திய ஜீவக்கரையில் நம்மைக் கொண்டுச்செல்வார். “என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்” (யோவான் 6 :57). அப்பம் உங்கள் சரீரத்துக்கு என்ன செய்கிறதோ அதை இயேசு உங்கள் ஆத்துமாவுக்கு செய்வார். அவர் உங்களை போஷிப்பார், வளரச்செய்வார், பாதுகாப்பார். “இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்” (யோவான் 6 :58).
தியானத்திற்கு உரிய கேள்விகள்
தேவன் நமக்கு ஜீவ அப்பமாகிய இயேசு கிறிஸ்துவை தந்திருக்கும்பொழுது, நமக்கு தேவையான அனைத்தையும் அவர் தரமாட்டாரா? உங்கள் சரிரம் உணவின்மேல் சார்ந்திருக்கிறதுபோல, உங்கள் ஆத்துமாவும் இயேசுவின்மேல் சார்ந்திருக்கிறதா?
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்