அன்றன்றுள்ள அப்பம்

இயேசு ஜெபிக்க கற்றுக்கொடுத்தபொழுது, “எனக்கு வேண்டிய ஆகாரத்தை எனக்கு தாரும்” என்று நமக்கு கற்பிக்கவில்லை, மாறாக “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்று கற்பித்தார். “எங்களுக்கு” மற்றும் “எங்கள்” என்ற வார்த்தைகள் கர்த்தரின் ஜெபம் முழுவதிலும் காணப்படுகிறது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்.
உங்கள் தேவைகளை விட அதிகமான தேவை உள்ளவர்களிடம் நீங்கள் கரிசனையோடு காணப்படுவதற்கு, கர்த்தருடைய ஜெபம் உங்களுக்கு உதவி செய்யும். இங்குதான் பசியோடு இருக்கும் ஏராளமான ஜனங்களுக்காக ஜெபிக்க நம்மை நினைப்பூட்டும்படி நாம் தேவனிடம் ஜெபிக்கிறோம்.
உலகின் பல கண்டங்களில் வாழும் கோடிக்கணக்கான ஜனங்களை தேவன் போஷிக்கிறார். இதை அவர் தினந்தோரும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார்! தேவன் நம்பத்தகுந்தவர் என்று உறுதியாக நம்புவது பயத்தை போக்கும் ஒரு மருந்தாகும். இயேசு சொன்னார்:
“ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
மத்தேயு 6:25
ஏன் நாம் கவலைப்படாமல் இருக்க வேண்டும்? இயேசு சொல்கிறார்,“ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்” (மத்தேயு 6 : 26). அவர் என்ன சொல்கிறார் என்று கவனித்தீர்களா? நம்முடைய பரம பிதா உண்மையுள்ளவர். அவர் பறவைகளை போஷிக்கிறவர், அவர் காட்டுப் புஷ்ப்பங்களை கூட உடுத்துவிக்கிறவர். அந்த பறவைகள் மற்றும், காட்டுப் புஷ்ப்பங்களை காட்டிலும் நீங்கள் அவருக்கு விசேஷித்தவர்கள். அவர் உங்களுடைய தேவைகளையும் சந்திப்பார் என்று விசுவாசியுங்கள்.
நமக்கு தேவையானதை தரும்படி நாம் தேவனிடத்தில் கேட்கும்போது நாம் அவரிடம் அசாதாரணமான காரியங்களை கேட்கப்போவதில்லை. தேவன் தமது ஜனங்களை போஷிக்கிறார், அவர் உங்களையும் போஷிப்பார் என்று விசுவாசியுங்கள்.
தியானத்திற்கு உரிய கேள்விகள்
மற்றவர்களின் தேவையை உங்களுக்கு நினைப்பூட்டும்படி ஜெபியுங்கள். இன்றைக்கு உங்கள் தேவையை தேவன் சந்தித்திருந்தால், பிறரின் தேவைகளை சந்திப்பதற்கு, ஆவியானவர் உங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவாராக.
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்