எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தைத் தாரும்

“அன்றன்றைக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும்,” என்று நாம் ஜெபிக்கும்போது தேவன்மேல்…
Day 15

அன்றன்றைக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும்,” என்று நாம் ஜெபிக்கும்போது தேவன்மேல் நாம் சார்ந்திருக்கிறோம் என்பதை அறிக்கையிடுகிறோம். ஒரு நிமிடம் நிதானித்து இதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்களிடம் ஒரு நல்ல வேலை, சொந்தமாக ஒரு வீடு, நல்ல ஆரோக்கியமான உடல்நலம், ஒரு வாரத்திற்கு போதுமான உணவு இவையெல்லாம் உங்களிடம் இருந்து, மேலும் எதிர்காலத்திற்க்கென சேமித்து வைக்கக்கூடிய ஒரு ஞானமான நிர்வாகியாக நீங்கள் இருக்கும் பட்சத்தில் ஏன் நீங்கள், “அன்றன்றுள்ள அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும்” என்று ஜெபிக்க வேண்டும்?

ஏனெனில், இன்று உங்களிடம் உள்ள அனைத்தையும் எளிதில் இழந்து போகலாம்.

நம்மிடம் உள்ளவை திடீரென்று இல்லாமல் போகலாம். யோபுக்கு பெரிய குடும்பமும், ஆடுகள், ஒட்டகங்கள், மாடுகள், கழுதைகள் எனப் பெரும் செல்வங்கள் இருந்தன. ஆனால் அவை அனைத்தையும் அவர் ஒரே நாளில் இழந்தார். பகைஞர்கள் யோபுவின் வேலையாட்களை தாக்கினர். மின்னல் தாக்கி அவரது ஆடுகள் அழிந்தன. திருடர்கள் அவரது ஒட்டகங்களை அபகரித்தனர். மேலும், யோபுவின் பிள்ளைகள் கூடியிருந்த வீட்டை ஒரு பெருங்காற்று வந்து, இடித்ததினால் அவர்கள் அனைவரும் அங்கேயே உயிரிழந்தனர்.

நம்முடைய வாழ்வில் ஒரு நற்செய்தி உண்டு. அது என்னவென்றால், தேவன் தமது ஜனத்தை போஷிக்கிறார். தேவனுடைய ஜனங்கள் வனாந்தரத்தில் இருந்தபோது, அவர்களுக்கு அன்றாட அப்பத்தை தேவன் தந்து போஷித்தார். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி;

நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன். ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.”

யாத்திராகமம் 16  : 4 

ஜனங்கள் இந்த அப்பத்தை மன்னா என்று அழைத்தார்கள். “இரவிலே பாளயத்தின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும்” (எண்ணாகமம் 11:9). இந்த மன்னாவானது, “கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஓப்பாயிருந்தது” (யாத்திராகமம் 16:31)

“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்று இயேசு நமக்கு ஜெபிக்க கற்ப்பித்ததின் அர்த்தம், வனாந்தரத்தில் இருந்த ஜனங்கள் எப்படி உணவுக்காக தேவனையே சார்ந்திருந்தார்களோ, அப்படியே நாமும் அவரை சார்ந்திருக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையானதை எல்லாம் தேவன் தந்தது போல, நம்முடைய தேவைகளையும் தேவன் சந்திப்பார்.

தியானத்திற்கு உரிய கேள்விகள்

இன்றைய தினத்தில், எந்த விஷயத்தில் நீங்கள் தேவன்மேல் முழுமையாக சார்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள்?

Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தைத் தாரும்

“அன்றன்றைக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும்,” என்று நாம் ஜெபிக்கும்போது தேவன்மேல் நாம் சார்ந்திருக்கிறோம் என்பதை அறிக்கையிடுகிறோம். ஒரு நிமிடம் நிதானித்து இதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களிடம் ஒரு நல்ல வேலை, சொந்தமாக ஒரு…