இயேசு ஜெபித்த ஜெபம்

கெத்சமனே தோட்டத்தில், தமக்கு முன் இருந்த இருண்ட சூழ்நிலையை நோக்கி நின்றபோதிலும், தேவனுடைய…
Day 14

கெத்சமனே தோட்டத்தில், தமக்கு முன் இருந்த இருண்ட சூழ்நிலையை நோக்கி நின்றபோதிலும், தேவனுடைய சித்தமே நிறைவேற வேண்டும் என்று இயேசு ஜெபித்தார்.

தேவன் பழைய ஏற்பாட்டில் மேசியா சந்திக்க வேண்டிய வேதனைகளை, ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தார்.

என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி

சங்கீதம் 22 : 7

என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.

சங்கீதம் 22 : 16

என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?

சங்கீதம் 22 : 1

இந்த வசனங்களை வாசிக்கும் போதே, அவற்றில் கூறப்பட்ட அனைத்தும் தமக்கே நிகழப்பப்போகிறது என்பதை இயேசு அறிந்திருந்தார்.

ஏசாயா 53 – ஆம் அதிகாரத்தை வாசிக்கும்போது இயேசுவிற்கு எப்படியிருந்திருக்கும்? அதன் வசனங்களை வாசிக்கையில் அவருக்கு நன்றாக தெரியும் இவையெல்லாம் தம்மை குறித்த தமது பிதாவின் சித்தம் என்று.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு,

ஏசாயா 53 : 5

கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

ஏசாயா 53 : 6

கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி,

ஏசாயா 53:10

நமது ஆண்டவர்மீது சுமக்க முடியாத அளவிற்கு பாரம் சுமத்தப்பட்டது. “உமது சித்தமே நிறைவேறட்டும்” என்று அவர் கூறுமளவிற்கு அவரது ஆத்துமாவில் ஒரு கடுமையான போராட்டம் நடந்தது. இயேசு இரண்டு முறை முகங்குப்புற விழுந்து, “என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்” (மத்தேயு 26 : 39, 42).

நம்முடைய இரட்சகர் சுமந்த பாரத்தைப் போல நாம் ஒருவரும் ஒருபோதும் சுமக்க அழைக்கப்படப் போவதில்லை. ஆனால் கடவுள் தம்முடைய பிள்ளைகளுக்கு அவர்கள் சுமக்க வேண்டிய சுமைகளை கொடுக்கிறார். அதுமட்டுமின்றி நாம் எதிர்கொள்ள விரும்பாதவற்றையும் கொடுக்கிறார். “உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக” என்று நாம் ஜெபிக்கும்போது, நம்முடைய பாரங்களை சுமக்க தேவையான பெலத்தை தந்தருளும்படி நாம் தேவனிடம் கேட்கிறோம்.

அநேக நேரங்களில் ஜெபத்தை குறித்த நமது எண்ணம் என்னவென்றால், நாம் விரும்பியதை எல்லாம் தேவனை செய்ய வைப்பதற்கான வழி தான் ஜெபம் என்று. ஜெபத்தின் நோக்கமானது நம்முடைய சித்தத்தை தேவன் செய்யவேண்டும் என்பதல்ல, அவருடைய சித்தத்தை நாம் செய்யவேண்டும் என்பதுதான். உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக.

தியானத்திற்கு உரிய கேள்விகள்

இன்றைக்கு நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் பாரங்களை நினைத்துப் பார்க்கும் போது, ” உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக” என்று ஜெபியுங்கள். அவற்றைச் சுமக்க தேவையான வலிமையை தேவன் அளிக்கும்படி கேளுங்கள்.

Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்

இயேசு ஜெபித்த ஜெபம்

கெத்சமனே தோட்டத்தில், தமக்கு முன் இருந்த இருண்ட சூழ்நிலையை நோக்கி நின்றபோதிலும், தேவனுடைய சித்தமே நிறைவேற வேண்டும் என்று இயேசு ஜெபித்தார். தேவன் பழைய ஏற்பாட்டில் மேசியா சந்திக்க வேண்டிய வேதனைகளை, ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தார். என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி சங்கீதம்…