தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தம்

மூன்றாவதாக, தேவனுடைய சித்தத்தைக்குறித்து பேசுகையில், அதை தேவனுடைய வெளிப்பபடுத்தப்பட்ட சித்தம் என குறிப்பிடுகிறோம். இதைகுறித்து தேவன் நமக்கு வேதத்தில் தெரியப்படுத்தினதினாலே இது தேவனுடைய இரகசிய சித்தத்திலிருந்து முற்றும் மாறுபட்டதாயிருக்கிறது. மேலும் இது தேவனுடைய பகுத்தறியப்பட்ட சித்தத்திலிருந்தும் முற்றிலும் மாறுபட்டது, ஏனெனில் தேவனுடைய சித்தத்தை பரிசோதித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
நமக்கான தேவனுடைய சித்தமானது பிரதான கட்டளையின் மூலம் நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது:
“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக…உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக”
மாற்கு 12:30 ,31
நமக்கான தேவனுடைய சித்தமானது கடைசி கட்டளையின் மூலம் நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது:
நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி..
மத்தேயு 28:19
நமக்கான தேவனுடைய சித்தமானது பத்து கட்டளைகள் மூலம் நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது:
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்…களவு செய்யாதிருப்பாயாக…பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக…பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக
யாத்திராகமம் 20 : 3, 15, 16, 17
தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்திற்கு கீழ்ப்படிவது தான் நமது முதன்மையான கரிசனையாக இருக்க வேண்டும். தேவன் இரகசியமாக வைத்துள்ளவற்றுக்காக நம்மிடம் கணக்குக் கேட்க மாட்டார். ஆனால் அவர் தெளிவாக வெளிப்படுத்திய சித்தத்திற்கு நாம் கீழ்ப்படிகிறோமா இல்லையா என்பதைக் குறித்து அவர் நிச்சயமாகக் கணக்குக் கேட்பார்.
“தேவனுடைய சித்தத்தை நான் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று நீங்கள் விரும்பும்போது, அவர் வேதாகமத்தில் நாம் எப்படிப் வாழ வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே அதின்படி நாம் வாழ வேண்டும் என்று நம்மை நாமே நினைப்பூட்டிக் கொள்ள வேண்டும். மற்ற காரியங்களில் உங்கள் ஞானத்தையும் தகவலறிவையும் வைத்து தீர்மானங்களை எடுங்கள்.
தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்திற்கு நாம் எப்படி இணக்கம் அளிக்க முடியும்?
தேவன் வேதாகமத்தில் தெளிவாகத் தம்முடைய வார்த்தைகளை கொண்டு நாம் செய்ய வேண்டிய காரியங்களை கட்டளையிட்டிருக்கிறாரோ அந்த இடங்களில், பிறர் கருத்து என்னவென்று கேட்க வேண்டியதில்லை; அது உங்கள் அனுபவத்தோடு பொருந்துகிறதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியமுமில்லை. தேவன் வெளிப்படுத்தியவைகள் எல்லாம் உங்கள் நன்மைக்காகவே, ஆதலால் தேவனுடைய சித்தமும் உங்கள் விருப்பமும் மாறுபாடாக இருக்கும்பொழுது, நீங்கள் அவருக்கு கீழ்ப்படிய அவருடைய உதவியை நாடும்பொழுது தேவனுடைய சித்தம் நிறைவேறும்.
தியானத்திற்கு உரிய கேள்விகள்
தேவன் வெளிப்படுத்திய சித்தமும் உங்கள் விருப்பமும் எதிர் மாறாக இருக்கும் ஏதாவது
ஒரு பகுதியை உங்களால் கண்டறிய முடியுமா ?
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்