தேவனுடைய பகுத்தறியப்பட்ட சித்தம்

இரண்டாவதாக, தேவனுடைய சித்தத்தை குறித்து கிறிஸ்தவர்களிடம் காணப்படும் ஒரு முறை, ” தேவனுடைய பகுத்தறியப்பட்ட சித்தம்.” தேவனுடைய பகுத்தறியப்பட்ட சித்தமானது இரகசியமானதும் அல்ல வெளிப்படுத்தப்பட்டதும் அல்ல, அது இவை இரண்டிற்கும் இடையேயான ஒன்று.
ஒவ்வொருவருடைய வாழ்விலும் கடினமான, சவால் நிறைந்த கேள்விகள் காணப்படுகிறது: நான் எந்தக் கல்லூரியில் படிக்க வேண்டும்? எங்கே வாழ வேண்டும்? நான் திருமணம் செய்ய வேண்டுமா? அப்படியானால், யாரை திருமணம் செய்ய வேண்டும்? எந்த வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? பணத்தை எதில் செலவிட வேண்டும், எதைச் சேமிக்க வேண்டும், எதைத் தாராளமாய் கொடுக்க வேண்டும்? எந்தச் சபையில் சேர வேண்டும்? எந்தப் பொறுப்புகளை ஏற்க வேண்டும், எந்த அழைப்புகளை மறுக்க வேண்டும்?
இவ்வாறான கேள்விகளை எதிர்கொள்ளும்போது, தேவனுடைய சித்தம் என்ன? என்று கேட்கிறோம். ஆனால் இதற்கான பதிலை நேரடியாகச் சொல்லும் வசனம் வேதாகமத்தில் இல்லை. அது வெளிப்படுத்தப்படவுமில்லை. ஆனால் நம்மால் இவற்றை உணர்ந்து அறிந்துக்கொள்ளமுடியும்.
ஒரு கடினமான தீர்மானத்தை நீங்கள் எடுக்கும்போது, என்ன செய்யவேண்டும் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் உங்களுக்கு தோன்றுகிறபடி செய்வதற்குமுன், உங்கள் உள்ளுணர்வை ஒருமுறை கூட நீங்கள் சோதித்துப்ப்பார்க்கலாம். இந்த சூழ்நிலையில் உங்களைக் காட்டிலும் அனுபவம் நிறைந்த சிலரின் ஆலோசனையை கேட்பதோ, உங்கள் முன்னனுபவத்தை வைத்தோ, உங்களுக்கு தேவன் அளித்த திறமைகளை வைத்தோ, அல்லது இப்போது உங்களுக்குள்ள பொறுப்புகளோடு, புதிய வாய்ப்புகளை ஒப்பிடுவதின் மூலமாகவோ உங்கள் தீர்மானத்தை நீங்கள் சோதித்துப் பார்க்க முடியும்
பவுல் நமக்கு கூறுவது என்னவென்றால் : தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள நமக்கு உதவுவது புதிதாக்கப்பட்ட மனம். தேவனுடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்ட ஞானமே நாம் புதிதாக்கப்படுவதற்கு உதவுகிறது.
தேவனுடைய பகுத்தறியப்பட்ட சித்தத்திற்கு நாம் எவ்வாறு இணக்கம் அளிப்பது?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகளுக்கு வேதாகமம் நேரடியாக பதில் அளிக்கவில்லை. ஆனால் தேவனுடைய வார்த்தையை நாம் கவனித்து வாசிக்கும்போது எல்லா சூழ்நிலையிலும் எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு ஞானத்தோடு செயல்பட வேண்டும் என்று கற்றுக்கொள்கிறோம். தேவனுடைய வார்த்தையில் தினமும் நடவுங்கள் அப்பொழுது ஞானத்தில் விருத்தியடைவீர்கள். அப்படி ஞானத்தில் நீங்கள் வளரும்போது, தேவனுடைய சித்தத்தை சோதித்து புரிந்து கொள்ள உங்களால் கூடும்.
தியானத்திற்கு உரிய கேள்விகள்
இப்பொழுது நீங்கள் ஒரு பெரிய தீர்மானத்தை எடுக்கும் சூழ்நிலைக்கு நடுவில் இருக்கலாம். தெளிவையும் ஞானத்தையும் அளிக்கும்படி கர்த்தரை நாடுங்கள். அவருடைய சித்தம் நிறைவேறவேண்டும் என்று ஜெபியுங்கள்.
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்