தேவனுடைய இரகசிய சித்தம்

தேவனுடைய சித்தம் என்ன? இந்தக் கேள்வி உங்களுக்கு கடினமானதாகத் தோன்றினால், நீங்கள் தனித்து…
Day 11

தேவனுடைய சித்தம் என்ன? இந்தக் கேள்வி உங்களுக்கு கடினமானதாகத் தோன்றினால், நீங்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல. அதற்கான ஒரு காரணம் கிறிஸ்தவர்கள் தேவனுடைய சித்தத்தைப் பற்றி பெரும்பாலும் மூன்று விதங்களில் பேசுகிறார்கள்.

முதலாவது, தேவனுடைய இரகசியமான சித்தம். “தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே…” என்று வேதாகமம் சொல்லுகிறது (எபேசியர் 1 : 12). நமது வாழ்வில் நிகழும் அனைத்தும் தேவனுடைய திட்டத்தோடு பின்னிப்பிணைந்து நடக்கின்றது. தேவனுடைய திட்டங்களை யாராலும் தடுக்க இயலாது.

தேவன் சர்வ வல்லவர், அவருடைய திட்டங்கள் எப்பொழுதும் நிறைவேறும். இதன் உச்சகட்ட வெளிப்பாட்டை  நம்மால் சிலுவையில் காணமுடியும். இயேசுவின் சிலுவை மரணத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகள் சாத்தானால் தூண்டப்பட்டவைகளாக இருந்தாலும் இவ்வுலகத்தை மீட்பதற்கான தமது திட்டமாக தேவன் அதை பயன்படுத்தினார்.

ஒரு விசுவாசியின் வாழ்வில் நடப்பவை எல்லாம் தேவனுடைய சித்தத்திற்கும், அவருடைய கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்டவை அல்ல என்பதை அறிவதில் எத்தனை சுகம். இதில் சவால் என்னவென்றால், நம்முடைய வாழ்வின் புரியாத புதிரான சம்பவங்கள் மற்றும் கடினமான நிகழ்வுகளை அவர் தமது பரிபூரணத் திட்டத்தில் எவ்வாறு இணைக்கப்போகிறார் என்பதை தேவன் நமக்கு வெளிப்படுத்துவதில்லை. இவையெல்லாம் இரகசியங்களாகவே இருக்கின்றன, மேலும்…

மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்”

உபாகமம் 29:29

ஆகையால், நாம் அடிக்கடி “ஏன்?” என்று கேட்பது ஆச்சரியத்திற்குரியதல்ல. ஆண்டவரே, ஏன் என்னுடைய வாழ்வில் இதை அனுமதித்தீர்? அவனை விட்டுவிட்டு அவளை மட்டும் ஏன் காப்பாற்றினீர்? இதிலிருந்து என்ன நன்மை எனக்கு கிடைக்கப்போகிறது? இவையெல்லாம் தேவனுடைய இரகசிய சித்தத்தை குறித்த கேள்விகள். அந்த இரகசியங்கள் எல்லாம் கர்த்தருக்கே உரியவை.

தேவனுடைய இரகசிய சித்தத்திற்கு நாம் எப்படி பதிலளிப்பது?

அவர் இரகசியமாய் வைத்திருக்கிற காரியங்களில் நாம் அவரை விசுவாசிக்கவேண்டும். நாம் அவரை காணும் நாளில் இரகசியமானவை அனைத்தும் வெளிப்படுத்தப்படும். அதுவரை தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்க வேண்டும். அதனால் புரியாத காரியங்களை நீங்கள் எதிர்கொள்ளும்போது, உங்களுடைய விசுவாசத்தை வலுப்படுத்தும்படி தேவனிடம் கேளுங்கள். அவருடைய சித்தம் நிறைவேறுமாறு ஜெபியுங்கள்.

தியானத்திற்கு உரிய கேள்விகள்

உங்கள் வாழ்வின் எந்த பகுதியில் தேவனுடைய இரகசிய சித்தத்தை விசுவாசிப்பது கடினமாக உள்ளது?

Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்

தேவனுடைய இரகசிய சித்தம்

தேவனுடைய சித்தம் என்ன? இந்தக் கேள்வி உங்களுக்கு கடினமானதாகத் தோன்றினால், நீங்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல. அதற்கான ஒரு காரணம் கிறிஸ்தவர்கள் தேவனுடைய சித்தத்தைப் பற்றி பெரும்பாலும் மூன்று விதங்களில் பேசுகிறார்கள். முதலாவது, தேவனுடைய இரகசியமான சித்தம். “தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக…