உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக

பரலோகத்தில் தூதர்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்கிறார்கள். ஆகவே, உம்முடைய சித்தம் “பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல” பூமியிலேயும் உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக, என்று நாம் ஜெபிக்கும்போது நமது கீழ்ப்படிதல் தூதர்களின் கீழ்ப்படிதலைப் போலவே இருக்க வேண்டும் என்று கேட்கிறோம்.
தேவ தூதர்கள் எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும், எந்த நோக்கத்திற்கும் செயல்பட தயாராக உள்ளனர். இயேசு ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும், அவர் சொல்வதை அவர்கள் செய்வார்கள். “நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?” (மத்தேயு 26:53).
தேவன் தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும்…செய்கிறார் (எபிரெயர் 1 : 7). காற்று வேகமாகச் செல்லுவது போலவே, தூதர்களும் விரைவாகச் செயல்படுகிறார்கள். தேவன் பேசும்போது தூதர்கள் உடனடியாக பதில் அளிக்கிறவர்களாக இருக்கிறார்கள். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற காற்றைப் போல பறந்து செல்கிறார்கள். இதை அவர்கள் மகிழ்ச்சியாக செய்கிறார்கள். பரம எருசலேமிலிருக்கும் ஆயிரம் பதினாயிரமான தேவ தூர்களை பற்றி வேதாகமத்தில் காண்கிறோம் (எபிரேயர் 12 : 22). அவர்களுடைய சேவையில் எந்த தயக்கமும் இல்லை. தேவன் கட்டளையிடுவதை அவர்கள் மகிழ்ச்சியோடு செய்வார்கள்.
பரலோகத்தில் தூதர்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்கிறார்கள்; ஆனால் பூமியில், நாம் தேவனுடைய சித்தத்தை செய்தால், அது எவ்வாறு காணப்படும்? இதை தான் தேவன் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்கு வெளிப்படுத்துகிறார்.
“எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால்…என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன்”.
யோவான் 5 : 30 , 6 : 38
இயேசுவைப் போலவே, நாமும் தேவனுடைய சித்தத்தை செய்ய வாஞ்சிக்க வேண்டும். என்னுடைய சித்தத்திற்கு பதிலாக தொடர்ந்து தேவனுடைய சித்தத்தை தெரிந்தெடுப்பது எனக்கு மனசோர்வை ஏற்படுத்தாதா? என நீங்கள் வியக்கலாம். இயேசுவுக்கு அது சலிப்பை தந்ததா?
இல்லை. பிதாவின் சித்தத்தை செய்வது அவருக்கு போஜனமாய் இருந்தது. “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது”(யோவான் 4 : 34). அறுசுவை உணவைப்போல அது அவருக்கு திருப்தி அளித்தது. அதுபோலவே தேவனுடைய சித்தத்தை செய்வது உங்களுக்கும் ஊட்டமளிக்கும். நீங்கள் எந்த அளவிற்கு அவருக்கு கீழ்படிகிறீர்களோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியாய் இருப்பீர்கள். எந்த அளவிற்கு அவருடைய சித்தத்தை செய்ய நாடுகிறீர்களோ அந்த அளவிற்கு திருப்தி அடைவீர்கள்
தியானத்திற்கு உரிய கேள்விகள்
நீங்கள் கடைசியாக தேவனுடைய சித்தத்தின்படி செய்து திருப்தியாக உணர்ந்தது எப்போது?
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்