தேவ வசனம் உங்களுக்குள்ளே பரிபூரணமாக வாசமாயிருப்பதாக
தவறான கருத்துக்கள் மற்றும் உண்மையற்ற தன்மை ஆகியவற்றையே அடையாளமாகக்கொண்டதொரு காலத்தில் நாம் வாழ்கிறோம். வரலாற்றில் வேறு எந்தவொரு காலக்கட்டத்தினின்றும் இது வேறுபட்டதல்ல எனினும், இப்பொழுது நாம் இதை மிகப்பரவலாகக் காண்கிறோம். சில திருச்சபைகள், நிலையற்ற உலகக் காரியங்களில் ஈடுபட்டு, சமூகக் கூடுகைத்…