காபிரியேலின் கதை

உலகிற்கு இயேசு கிறிஸ்து வரவிருப்பதை அறிவிக்கும் விசேஷித்த சிலாக்கியம் எனக்குக் கொடுக்கப்பட்டது. அங்கே…

உலகிற்கு இயேசு கிறிஸ்து வரவிருப்பதை அறிவிக்கும் விசேஷித்த சிலாக்கியம் எனக்குக் கொடுக்கப்பட்டது. அங்கே எத்தனை தூதர்கள் இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் அப்போஸ்தலனாகிய யோவான் எங்களைப் பற்றிய ஒரு காட்சியைப் பெற்றபோது, பத்து கோடிக்கும் அதிகமான தூதர்களைக் கண்டதாக எழுதினார்; அவர் கண்டது அவ்வளவு மட்டுமே. உண்மையிலேயே, அவர்களை எண்ணுவதை விட எனக்கு வேறே மிகவும் முக்கியமான பணிகள் உள்ளன. ஆனாலும் உலகில் உள்ள மனிதர்களின் எண்ணிக்கைக்கு இணையாக தூதர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

தூதர்களால் ஈர்க்கப்படும் மனிதர்கள் பொதுவாகக் காரியத்தைத் தவறவிட்டு விடுகிறார்கள். அது என்னவென்றால், நாங்களோ தேவனிடமே ஈர்க்கப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பதே ஆகும். என் வாழ்க்கையின் மாபெரும் சிலாக்கியம் என்னவென்றால், தேவனுடைய சமூகத்தில் நிற்பதும், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் மத்தியில் காணப்படும் அன்பையும் மற்றும் அவர் மூலமாக நம் அனைவருக்கும் அந்த அன்பு எவ்வாறு கிடைக்கிறது என்பதை காண்பதுமே ஆகும்.

நான் என் கதையைத் தொடங்குவதற்கு முன், என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். வேதாகமத்திலே பெயர் சொல்லி குறிப்பிடப்பட்டிருப்பது இரண்டு தூதர்கள் மட்டுமே என்று உங்களுக்குத் தெரியுமா? ஒருவர், பிரதான தூதனாகிய மீகாவேல், மற்றவர் காபிரியேலாகிய நான். எனக்கு ஒருமுறை அல்ல, மூன்று முறை தேவனுடைய தூது சொல்ல தெரிந்து கொள்ளப்பட்டேன்!

நான் தீர்க்கதரிசியாகிய தானியேலிடம் அனுப்பப்பட்டேன். அவர் ஒரு தரிசனத்தைப் பெற்றிருந்தார், ஆனால் அது அவருக்கு விளங்கவில்லை, அதை அவர் புரிந்துகொள்ள உதவுவதற்காக நான் அனுப்பப்பட்டேன்.

நான் அவருக்குத் தோன்றியபோது, அவர் மிகவும் கலக்கமடைந்து, தரையிலே நடுங்கிக்கொண்டு விழுந்தார், அதிலிருந்து அவர் தேறிவரச் சில நாட்கள் ஆயிற்று.

எனது இரண்டாவது பணி, தேவாலயத்தில் ஊழியஞ்செய்து வந்த ஆசாரியனாகிய சகரியாவை சந்தித்து யோவான் ஸ்நானகரின் பிறப்பை அறிவிப்பதே ஆகும் . நான் சகரியாவுக்குத் தோன்றியபோது, அவரும் பயத்தினால் பீடிக்கப்பட்டார். தேவன் என்ன செய்யப் போகிறார் என்று நான் அவரிடம் சொன்னேன், ஆனால் அவர் அதை நம்பவில்லை.

ஆவிக்குரியத் தலைவர்கள் அவிசுவாசத்தைப் பரப்புவது உசிதமல்லவே; எனவே, அந்தக் குழந்தை பிறக்கும் வரை பேசுவதற்கான திறன் அவரிடமிருந்து எடுக்கப்பட்டது. அவருக்குப் பேச்சு திரும்பியபோது, அவர் அதைப் பயன்படுத்திக் கர்த்தரைத் துதித்து ஆராதித்தார்.

தானியேல் மற்றும் சகரியவை நான் சந்திக்க சென்றபோது அவர்கள் திகைப்படைந்தனர். அப்படியிருக்க இளம் பருவத்திலிருக்கும் ஒரு கிராமத்துப் பெண்ணிடம் ஒரு பணி நிமித்தம் நான் அனுப்பப்பட்டபோது, “இந்த ஊழியத்திற்கு நான் சரியான நபரா?” என்று சந்தேகிப்பது தான் எனது முதல் உள்ளுணர்வாக இருந்தது.

நீ இந்தச் செய்தியை ஒரு இளம் பெண்ணிடம் கூற வேண்டும்,” என்று நான் கட்டளையிடப்பட்டேன். “நான் இதுவரை கொடுத்த அறிவிப்புகளில் இதுவே மிக முக்கியமானது. உலகின் எதிர்காலம் இதில்தான் பற்றிக்கொண்டிருக்கிறது.”

அந்தச் செய்தியைக் கேட்டபோது, என்னால் பேச முடியாமல் போனது. என்னால் அதைக் கிரகிக்கவே முடியவில்லை. உண்மையென்னவென்றால், என்னால் இன்னமும் அதைக் கிரகிக்க முடியவில்லை.

நான் விவரங்களைக் குறித்துக்கொண்டு புறப்பட்டேன் – எருசலேமுக்கல்ல, தேவாலயத்திற்கல்ல, பிரதான ஆசாரியன் காய்பாவின் மகளிடமும் அல்ல, மாறாக புறக்கணிக்கப்பட்ட சிறிய ஊராகிய நாசரேத்திலிருந்த ஒரு ஏழைப் பெண்ணிடமே சென்றேன். அவள் ஏன் தெரிந்துகொள்ளப்பட்டாள் என்று என்னால் கூற முடியாது ஆனால் தெரிந்துகொள்ளும் உரிமை அவருக்கே உண்டு என்பதை தான் என்னால் சொல்லக்கூடும்.

மரியாளுடன் ஒரு சந்திப்பு

அந்த இளம் பெண்ணின் பெயர் மரியாள், அவள் கன்னிகையாயிருந்தாள்; யோசேப்பு என்பவருடன் திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவர்களுடைய திருமணம் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அது இன்னும் நடக்கவில்லை.

நான் மரியாளிடம் தோன்றியபோது, எனது மிகவும் அன்பான வாழ்த்துக்களை சொன்னேன்: “தேவனால் மிகவும் கிருபை பெற்றவளே, வாழ்க! கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.”

யார் அதிகமாய்ப் பயந்தோம் என்று எனக்குத் தெரியவில்லை. என்னை கண்ட அவளா? அல்லது அவள் எப்படி தேவ திட்டத்தை ஏற்றுக்கொள்வாள் என்ற என்னுடைய கலக்கமா?. ஒருவேளை அவள் என்னைக் கண்டு அலரியடித்துக்கொண்டு ஓடிவிட்டால் என்ன ஆகும்? ஆனால் அவள் விசுவாசமுள்ள ஒரு பெண் என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்தது, மேலும் நான் கர்த்தரிடமிருந்து வந்த தூதன் என்பதை அவள் உணர்ந்ததாகவே தோன்றியது.

அவள் மிகவும் கலங்கியிருப்பதைக் கண்டு, நான், “மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய்” என்று சொன்னேன். ‘கிருபை’ என்னும் வார்த்தைக்கு ‘தயை’ என்று பொருள். “உனக்கு தேவனிடத்திலிருந்து தயை அளிக்கப்பட்டிருக்கிறது ” — இதைத்தான் நான் அவளிடம் சொன்னேன்.

பின்னர் நான் அவளிடம் அந்தச் செய்தியைக் கொடுத்தேன்: “இதோ, நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்று அழைக்கப்படுவார். கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மேல் என்றென்றைக்கும் ராஜ்யம்பண்ணுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவே இராது” என்று சொன்னேன்.

அவள் என்ன சொல்லுவாள் என்று ஆச்சரியத்துடன் காத்திருந்தேன். நித்தியத்தில் இருப்பது போலவே, நேரம் உறைந்துபோனது போலிருந்தது. பின்னர் அவள் பேசினாள்: “இது எப்படி ஆகும்? நான் புருஷனை அறியேனே”.

நான் சொன்னதை அவள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. தானும், தனது வருங்காலக் கணவரும் ஒரு குமாரனைப் பெறுவார்கள் என்றும், அவர் மனித வரலாற்றில் ஒரு சிறந்த நபராக மாறுவார் என்றும் அவள் நினைத்தாள்.

ஆகவே நான் விளக்க முயற்சி செய்தேன். மாபெரும் இரகசியத்தை வெளிப்படுத்த வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கவில்லை. “பரிசுத்த ஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்” என்று சொன்னேன்.

தேவன் எப்படி மனித உருவை எடுத்து, இவ்வுலகில் ஒரு உதவியற்ற குழந்தையாகப் பிறக்க முடியும் என்பது தூதர்களாகிய எங்களால் கூடப்புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயமாகும். நான் மரியாளிடம் சொன்னதை மட்டுமே என்னால் உங்களுக்குச் சொல்ல முடியும் : “தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.”

தேவன் தமது சித்தத்தை முழுமனதுடனும் மனப்பூர்வமாகவும் கீழ்ப்படிந்து செய்கிறவர்கள் மூலமாகவே செயல்படுகிறார். ஒரு மணமகனைப் போல நம்முடைய சித்தத்தை அவர் வசீகரிக்கும் வழியைக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் தமது சித்தத்தை யாருடைய வாழ்விலும் கட்டாயப்படுத்துவதில்லை.

மரியாள் எதைத் தேர்வு செய்வாள் என்று காத்திருந்தபோது நான் கலங்கினேன். பின்னர் அவள், “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்றாள்.

இயேசு

அந்தப்படியே, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இயேசு பிறந்தார். அந்தக் குறிப்பிட்ட இரவில், எனது சகாக்களின் ஒரு முழுக்கூட்டமும் வானத்தில் தோன்றி, தேவனைத் துதித்து, மனிதர்களுக்கு இந்த நற்செய்தியை அறிவித்தது.

நாங்கள் அவருடைய வாழ்க்கையைப் பார்த்து ஆச்சரியப்பட்டோம். ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினாரோ, அப்படியே அவர் இருந்தார். மேலும் அவருடைய ஊழியமானது முழு மனித வரலாற்றிலும் நாங்கள்  கண்ட எல்லாவற்றையும் விட, மூன்று ஆண்டுகளில் உலகிற்கு அதிக நன்மைகளைக் கொண்டுவந்தது.

ஆகையால்தான், அடுத்தடுத்து நடந்ததை நாங்கள் பார்த்தபோது எங்களால் நம்பவே முடியவில்லை: நீங்கள் அவரைச் சிலுவையில் அறைந்தீர்கள்.

அந்த நாளை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். அவர் கசையடிகளுக்கு உட்பட்டு, கட்டப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டபோது, நாங்கள் கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் எங்களைக் உதவிக்கு கூப்பிடமாட்டாரா என்று காத்திருந்தோம், ஆனால் அவர் ஒருபோதும் கூப்பிடவில்லை.

அவர் சிலுவையிலே அறையப்பட்டபோது, நாங்கள் பிதாவிடம்: “தயவுசெய்து, நாங்கள் சென்று அவரைக் காப்பாற்றட்டுமா!” என்று கேட்டோம். ஆனால் பிதாவானவர் எங்களைத் தடுத்து நிறுத்தினார்.

மனிதர்கள் பயங்கரமான பாவ காரியங்களைச் செய்திருக்கிறார்கள். இது எல்லாவற்றிலும் மிகவும் மோசமானதாகும். தேவனுடைய நியாயத்தீர்ப்பு அன்று நிறைவேறவேண்டியதாயிருந்தது. ஆனால் எங்களால் கிரகித்து கொள்ளமுடியாதவண்ணம் அது இயேசுவின் மீது விழுந்தது!. அவர் உங்களுக்காகவே, தேவனுடைய நியாயத்தீர்ப்பைத் தம்முடைய சரீரத்திலே ஏற்றுக் கொண்டார். அவர் உங்களுடைய பாவங்களுக்காகத் தம்மையே பலியாகக் கொடுத்தார்.

அவர் மரித்தபோது, பரலோகம் நிசப்தமானது.

மூன்றாம் நாள் வரை தேவன் என்ன செய்யப்போகிறார் என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவில்லை. அந்த மகிமைப் பொருந்திய அதிகாலையை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.

வைக்கப்பட்ட கல்லறையிலே வைக்கப்பட்டிருந்த இயேசுவின் சரீரம் அவருடைய ஜீவனால் மீண்டும் உயிர் பெற்றது. அவருடைய மனித சரீரம் , நித்தியத்திற்கு ஏற்றதாக மாறியது.

அவருடைய சரீரத்தைத் தேடிப் பெண்கள் கல்லறைக்கு வந்தபோது, இன்னொரு தூதன் அனுப்பப்பட்டு, அவர்களிடம், “அவர் உயிர்த்தெழுந்தார்!” என்று சொன்னான். அதன்பிறகு, அவர் தம்முடைய சீஷர்களுக்குப் பலமுறை தோன்றினார், பின்னர் அவர் பரலோகத்திற்கு ஏறினார். அவர் மீண்டும் பரலோகம் வந்ததினால் எங்களுக்கு கிடைத்த சந்தோஷத்தை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம்.

ஆனால் உங்களுடைய சந்தோஷம் எங்களுடையதை விட இன்னும் பெரியதாக இருக்க வேண்டும். ஏனென்றால், இயேசு தூதர்களாகிய எங்களுக்காக மரிக்கவில்லை. அவர் உலகிற்கு வந்தபோது, தூதர்களின் சுபாவத்தை எடுத்துக்கொள்ளவில்லை. தேவன் மனிதனானார். அவர் உங்களைப் போன்ற மக்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்தார்.

பரலோகத்திலே ஒரு மனிதர் இருக்கிறார், அவருடைய பெயர் இயேசு. அவர் உங்களுக்காக அங்கே இருக்கிறார். அவரே முன்னோடி — நித்திய காலமெல்லாம் தேவனுடைய சமுகத்திலே என்றென்றும் களிகூரப் போகிறவர்களின் முதல் பலன் அவரே ஆவார்.

தேவன் மனிதனானார். அவர் உங்களைப் போன்ற மக்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்தார்.

 இங்கே, பரலோகத்தில், இப்போது பேசப்படும் விஷயமெல்லாம் அவருடைய இரண்டாம் வருகையின் நாளைப் பற்றியே. அன்று நான் அவரோடு இருப்பேன், அவரில் அன்புகூர்ந்து அவரை நம்புகிற அனைவரும் அவருடன் இருப்பார்கள், நீங்களும் அங்கே இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

பரலோகத்தில் ஒரு கொண்டாட்டம்

உங்களுக்குத் தெரியாத சில காரியங்கள் எனக்குத் தெரியும், அதேசமயம் எனக்குத் தெரியாத சில காரியங்கள் உங்களுக்கும் தெரியும். உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருப்பதும், நீங்கள் தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டிருப்பதும், தேவனுடைய ஆவி உங்களுக்குள்ளே வாசம் பண்ணுவதும் எவ்வளவு பெரிய சிலாக்கியம் என்று உங்களுக்குத் தெரியுமா?

நான் ஒருபோதும் தொலைந்து போனதில்லை, எனவே மீட்கப்பட்டதின் சந்தோஷம் எனக்குத் தெரியாது. நான் ஒருபோதும் பாவம் செய்ததில்லை, எனவே மன்னிப்பைப் பெறுவது எப்படி இருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடியாது. உங்களுக்குக் கிடைத்த தேவனுடனான அந்த நெருக்கம் எனக்கு மலைப்பாக இருக்கிறது. என்னால் ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாத வழிகளில் நீங்கள் தேவனுடைய அன்பை அனுபவிக்க முடியும்.

ஆனால் எனக்குத் தெரிந்த, உங்களுக்கு மறைக்கப்பட்ட மற்ற விஷயங்களும் உள்ளன. நீங்கள் பரலோகத்தையோ அல்லது நரகத்தையோ கற்பனை செய்ய முடியாது. இயேசு உங்களை எதிலிருந்து காப்பாற்றினார் அல்லது எதற்காகக் காப்பாற்றினார் என்பதை நீங்கள் கற்பனை செய்ய முடியாது.

எனக்கு மலைப்பாக இருப்பது என்னவென்றால், அநேக மனிதர்கள் தங்களுடைய நித்திய எதிர்காலத்தைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல், மாயையான உலகவாழ்வு தான் சிறந்தது என்று வாழ்ந்து, தங்கள் பார்வைக்கு அப்பால் இருக்கும் நித்தியத்தைப் பற்றி முற்றிலும் அறியாதிருக்கிறார்கள்.

ஆனால் ஒரு பாவி மனந்திரும்பும்போதெல்லாம், பரலோகத்தில் ஒரு பெரிய கொண்டாட்டம் நடக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். தேவன் உங்களுக்காக இருக்கிறார், இன்று நீங்கள் அவரிடமிருந்து எவ்வளவு தூரம் விலகி இருந்தாலும், நீங்கள் மீண்டும் வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

அதற்காகத் தான் இயேசு கிறிஸ்து இந்த உலகிற்கு வந்தார். காணாமல் போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே அவர் வந்தார். அநேகரின் மீட்புக்காகத் தம்முடைய ஜீவனையே நமக்காக கொடுக்க வந்தார். அவரை விசுவாசியுங்கள், நீங்கள் ஏமாற்றமடையமாட்டீர்கள். அவரைப் பின்பற்றுங்கள், அவர் உங்களை மாபெரும் மகிழ்ச்சிக்குள் வழிநடத்துவார்.

பிதாவே, எங்களுக்காக இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பியதற்காக உமக்கு நன்றி. மேலும், இயேசுவே பரலோகத்தின் மாபெரும் சந்தோஷமென்று, இன்று எங்களுக்கு நினைவூட்டியதற்காக உமக்கு நன்றி. அவரே எங்களுடைய மாபெரும் மகிழ்ச்சியாக இருப்பாராக!

ஆமென்.

Series : கிறிஸ்துமஸ் கதைகள்

கிறிஸ்துமஸ் கதைகள்

சிமியோனின் கதை

நான் பெத்லெகேமில் இல்லை. நான் தூதர்களைக் காணவில்லை. மேலும் நான் சத்திரத்திற்கும் செல்லவில்லை. ஆனால், இயேசு பிறந்த நாற்பது நாட்களுக்குப் பிறகு நான் அவரை என் கைகளில்…
கிறிஸ்துமஸ் கதைகள்

யோசேப்பின் கதை

உலக வரலாற்றில் இதுவரை நடந்த மாபெரும் நிகழ்வுக்கு எனக்கு ஒரு சிறப்பு இடம் கிடைத்தது. நான் மரியாளோடு திருமணம் செய்ய நியமிக்கப்பட்டிருந்தேன். அவள் உலகத்தின் இரட்சகரைப் பெற்றெடுக்க…
கிறிஸ்துமஸ் கதைகள்

மரியாளின் கதை

என் வாழ்க்கையை என்றென்றைக்கும் மாற்றிய அந்த நாள் வேறு எந்த ஒரு நாளையும் போலவேதான் ஆரம்பித்தது. நான் என் வழக்கமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன், திடீரென்று, என் அருகே…
கிறிஸ்துமஸ் கதைகள்

ஏரோதின் கதை

வரலாற்றிலேயே மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட தலைவனாக இருக்கக்கூடும் என்று நான் அடிக்கடி உணர்கிறேன், அப்படியே அநேகர் என்னை குறித்து நினைத்தனர். என்னுடைய வாழ்க்கையின் மாபெரும் சாதனைகள் பற்றி…

காபிரியேலின் கதை

உலகிற்கு இயேசு கிறிஸ்து வரவிருப்பதை அறிவிக்கும் விசேஷித்த சிலாக்கியம் எனக்குக் கொடுக்கப்பட்டது. அங்கே எத்தனை தூதர்கள் இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் அப்போஸ்தலனாகிய யோவான் எங்களைப் பற்றிய ஒரு காட்சியைப் பெற்றபோது, பத்து கோடிக்கும் அதிகமான தூதர்களைக் கண்டதாக…