10. பரமேறினார்

உயிர்த்தெழுதலுக்குப்பின் எருசலேமில் நிகழ்ந்த, முதல் தரிசனங்களுக்குப் பிறகு, சீஷர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினார்கள். ஓரிரவில் பேதுரு, மற்ற ஆறு சீஷர்களுடன் மீன்பிடிக்கப்போனான். அந்த முழு இரவையும் அவர்கள் படவிலே கழித்தார்கள். ஆனாலும் அவர்கள் மீன்கள் ஏதும் பிடிக்கவில்லை. விடியற்காலமானபோது, கரையிலே…
Previous Post
9. உயிர்த்தெழுந்தார்
Next Post
9. पुनर्जीवित – शिक्षण
பரமேறினார்

உயிர்த்தெழுதலுக்குப்பின் எருசலேமில் நிகழ்ந்த, முதல் தரிசனங்களுக்குப் பிறகு, சீஷர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினார்கள். ஓரிரவில் பேதுரு, மற்ற ஆறு சீஷர்களுடன் மீன்பிடிக்கப்போனான். அந்த முழு இரவையும் அவர்கள் படவிலே கழித்தார்கள். ஆனாலும் அவர்கள் மீன்கள் ஏதும் பிடிக்கவில்லை. விடியற்காலமானபோது, கரையிலே ஒரு மனிதர் நிற்பதைக் கண்டார்கள். அவர் அவர்களிடம், “உங்களிடத்தில் மீன்கள் ஏதாகிலும் உண்டா?” என்று கேட்டார்.

அவர்கள், “இல்லை,” என்று பதில் சொன்னார்கள்.

“அப்பொழுது அவர், நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள். ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதிருந்தவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான். மற்றச் சீஷர்கள் . . . . படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டுவந்தார்கள். . . . . இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார்” (யோவான் 21:6-8, 12).

சீஷர்களை விசுவாசத்துக்குள் கொண்டுவருவதே, உயிர்த்தெழுதலுக்குப்பிறகு நிகழ்ந்த முதல் தரிசனங்களுடைய தெளிவான நோக்கம். உயிர்த்தெழுந்த கர்த்தரை, மூன்று சந்தர்ப்பங்களில் பேதுரு கண்டான். யாக்கோபும், யோவானும் அவரை இரண்டு முறைகள் கண்டார்கள். ஒரு முறை தோமா அவரைக் கண்டு, “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று அறிக்கையிட்டான். ஆகவே, இந்நேரத்துக்குள், இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்று சீஷர்கள் அறிந்திருந்தனர்.

அவிசுவாசம் என்பது இவர்களுக்குக் கடந்தகாலத்துக்குரிய ஒரு காரியமாய் இருந்தது. இவர்கள், கடந்த காலத்தில்தான் அவிசுவாசிகளாய் இருந்தார்கள். எனவே, இயேசு உயிரோடெழுந்துவிட்டார் என்று இந்தச் சீஷர்கள் ஏற்கெனவே விசுவாசித்தார்களெனில், ஏரிக்கரையில் நிகழ்ந்த தரிசனம் எதற்காக?

பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோர், இந்த அற்புதத்தின் முக்கியத்துவத்தைத் தவறவிட்டிருக்கமுடியாது. இயேசு முதன்முதலாகத் தம்மைப் பின்செல்லும்படி அவர்களை அழைத்தபோது அவர் பேதுருவிடம், மீன்பிடிக்கும்படி அவனது வலைகளைப் போடுமாறு கூறினார். பேதுரு ஏற்கெனவே இராமுழுவதும் பிரயாசப்பட்டும், ஒன்றுகூடப் பிடிக்கவில்லை. ஆனால் அவன் இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, வலைகளைப் போட்டபோது, பிடிபட்ட மீன்களை இரண்டு படவுகளில் கொண்டுவரமுடியாத அளவுக்கு, வலைகள் மிகுதியாய் நிரம்பியிருந்தன. பின்பு இயேசு பேதுருவிடம், “பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்,” என்றார் (லூக்கா 5:10).

இயேசு தமது சீஷர்களை அழைத்ததன் நோக்கம் என்னவென்றால், இவர்கள்மூலமாக ஜனங்கள் தம்மை விசுவாசிக்கிறவர்களாய்க் கொண்டுவரப்படவேண்டும் என்பதுதான். அற்புதவிதமான மீன்பிடித்தலை மறுபடியும் நிகழ்த்தியதன்மூலம், அவர்களது அழைப்பை உயிரோடெழுந்த கர்த்தர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இயேசு நாம் செய்வதற்கான பணியை வைத்திருக்கிறார்
சிறிதுகாலத்திற்குப் பின்னர் இயேசு, கலிலேயாவிலுள்ள ஒரு மலையின்மீது மீண்டும் சீஷர்களுக்குத் தரிசனமானார். மத்தேயு, “அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்” (மத்தேயு 28:17), என்று நமக்குக் கூறுகிறான். இயேசுவை விசுவாசிக்கும்போது, நமக்கு ஒருபோதும் எவ்விதச் சந்தேகமும் வராது என்பது தவறான எண்ணமாகும். இந்த நபர்கள் உயிர்த்தெழுந்த கர்த்தரைக் கண்டார்கள், இருப்பினும் அவர்களில் சிலருக்குச் சந்தேகங்கள் இருந்தன.

ஆனால் இயேசு, அவர்கள் பூரண விசுவாசத்தைப் பெறும்வரை காத்திருக்கவில்லை. அவர்கள் செய்வதற்கான பணியை அவர் வைத்திருந்தார்:
“வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” (மத்தேயு 28:18-20).

இயேசுவின் மூன்று முன்னுரிமைகளைக் கவனியுங்கள்: சீஷராக்குதல், அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்தல், மற்றும் அவரது வார்த்தைகளையும், வாழ்வின் உதாரணத்தையும் பின்பற்றி வாழும்படி அவர்களுக்கு உபதேசித்தல். இந்தப் பொறுப்பு, இயேசுவின் முதல் சீஷர்களுக்குரியது மட்டுமல்ல, மாறாக ஒவ்வொரு சந்ததியிலுமுள்ள அவரது அனைத்துச் சீஷர்களுக்கும் உரியதாகும். நாம் அவரது ஆணையைப் பின்பற்றும்போது இயேசு:

“இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத்தேயு 28:20), என்கிற இந்த வாக்குத்தத்தத்தை நமக்கு வழங்குகிறார்.

இயேசு பரலோகத்தில் இருக்கிறார்
கடைசி முறையாக இயேசு, எருசலேமிலுள்ள ஒலிவமலையின்மீது தமது சீஷர்களுக்குத் தரிசனமானார். அவர்களுக்கு அவர் கூறிய கடைசி வார்த்தைகள், அவர் அவர்களுக்குக் கொடுத்த பணியையும், மற்றும் அதைச் செய்வதற்கு அவர் வழங்கவிருந்த வல்லமையையும் பற்றியனவாகும்.

“பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” (அப்போஸ்தலர் 1:8).

பின்பு அதை லூக்கா,
“இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்ள; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது” (அப்போஸ்தலர் 1:9), என்று பதிவுசெய்கிறான்.

சீஷர்கள் கண்டதைச் சித்திரிக்க முயற்சியுங்கள்: இயேசுவின் பாதங்கள், அவர்கள் கண்களுக்கு முன்பாகப் பூமியைவிட்டு எழும்ப, அவர் பத்து அடிகள், இருபது அடிகள், முப்பது அடிகள் மேலே ஏறிச் சென்று, அதன்பின்பு ஒரு மேகத்திற்குள் எழும்பி, மேலும் அவர்களது பார்வைக்குப் புலப்படும் எல்லைக்கு அப்பால் எடுத்துக்கொள்ளப்பட்டார்.இயேசுவின் பரமேறுதல், அவர் எங்கிருந்து வந்தாரோ, அந்தப் பரலோகத்திற்குள் மீண்டும் இயேசுவைக் கொண்டுசெல்கிறதான, பிதாவாகிய தேவனின் கிரியையாகும். இயேசு, “உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்” (அப்போஸ்தலர் 1:9). அவர், “எடுத்துக்கொள்ளப்பட்டார்” (அப்போஸ்தலர் 1:2); அவர், “பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்” (லூக்கா 24:51). இயேசு, “நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன்,” என்று சொன்னார் (யோவான் 16:28).இயேசுவின் பிரிவால், சீஷர்கள் நிலைகுலைந்து, ஒன்றுமில்லாமையாய்ப் போயிருப்பார்கள் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவர்களைக்குறித்து, “மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பி வந்(தார்கள்),” என்று லூக்கா நமக்குக் கூறுகிறான் (லூக்கா 24:52).

சீஷர்கள், இயேசு தங்களைவிட்டுப் பிரிந்துசென்றபோது, ஏன் மகிழ்ச்சியடையவேண்டும்?

நீங்கள் ஒரு கடுங்குற்றம் சாட்டப்பட்டவராய்ச் சிறையிலிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களது வழக்கறிஞர் மிகச்சிறந்த, மனதுருக்கமுள்ளதொரு நபர். அவர் சிறையறையில் உங்களைச் சந்திக்கும்போது, அவரது வருகையினால் நீங்கள் ஆறுதலைப் பெற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் உங்கள் வழக்கறிஞரிடமிருந்து, சிறையறைக்குள் கிடைக்கும் ஆறுதலைவிடவும் மேலானதொன்று உங்களுக்குத் தேவை. நீதிமன்ற அறைக்குள் உங்களது பிரதிநிதியாக வழக்காடவே அவர் உங்களுக்குத் தேவைப்படுகிறார்.

பரலோகத்தில் நம்முடைய பிரதிநிதியாயிருக்க, இயேசு நமக்குத் தேவை. மேலும், அவர் எங்கே நமக்கு மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறாரோ அங்கே, பிதாவாகிய தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருப்பவராக இருக்கிறார்.
யோவான், “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்,” என்று சொல்கிறான் (1 யோவான் 2:1).இயேசு பரமேறினபோது, சீஷர்கள் சந்தோஷத்தினால் நிரப்பப்பட்டார்கள். ஏனெனில் அவர்
பரலோகத்தில், தங்கள் சார்பாகப் பிதாவினிடத்தில் (பரிந்து) பேசுவார் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். எபிரெயருக்கு எழுதப்பட்ட நிருபம்,

“… தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் (இயேசு) எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபிரெயர் 7:25), என்று நமக்குக் கூறுகிறது.

இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார். அப்படி இயேசு கேட்பதைப் பிதாவானவர் அருளுகிறார். அவர் பரலோகத்தில் இருக்கிறவராகையால், உங்கள் வாழ்வின் சவாலான சூழ்நிலைகள் ஒவ்வொன்றையும் சந்திக்கத் தேவையான கிருபைகள் அனைத்தையுமே நீங்கள் பெற்றிருப்பீர்கள்.

இயேசு திரும்பவும் வருவார்
இயேசு பரமேறினபோது, ஒரு தேவதூதன் சீஷர்களுக்குத் தரிசனமாகி,

“கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்” (அப்போஸ்தலர் 1:11), என்று சொன்னான்.

இயேசு இப்பொழுது பரலோகத்தில் இருக்கிறார். ஆனால் அவர் மறுபடியும் வருவதாக வாக்குப்பண்ணியிருக்கிறார்: “நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (யோவான் 14:3). இயேசு பரலோகத்துக்குள் பிரவேசித்தபோது, அவர் நமக்காகப் பரலோகத்தைத் திறந்தார். ஆகவே அவர் மீண்டும் வரும்போது, நம்மைப் பரலோக வீட்டிற்குள் கூட்டிச்செல்வார்.

தியானிப்பதற்கும் கலந்துரையாடுவதற்குமான கேள்விகள்
1. இயேசு பரலோகத்திலிருந்துகொண்டு, நம் சார்பில் பிதாவினிடத்தில் (பரிந்து) பேசிக்கொண்டிருக்கிறார் என்பதைக் கேட்கும்போது, உங்கள் மனதில் முதலாவது தோன்றுவது என்ன?
2. சில சீஷர்களுக்குத் தோன்றியதைப்போல, உங்களுக்கும் இயேசுவைப்பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருக்கின்றனவா? அவற்றுள் எதையேனும் உங்களால் தற்போது அடையாளம் காணமுடியுமா?
3. பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்று நீங்கள் எடுக்கும் அடுத்த அடியாக இருக்கக்கூடுமா?
அ. ஒரு சீஷராக மாறி, இயேசுவைப் பின்செல்ல உங்களையே அர்ப்பணிப்பீர்களா?
ஆ. ஞானஸ்நானம் பெற்று, இயேசுவைப் பின்பற்றுகிற ஒருவராக உங்களையே பகிரங்கமாக அடையாளப்படுத்திக்கொள்வீர்களா?
இ. தேவனுடைய வார்த்தை போதிக்கப்படுகிறதைக் கேட்கக்கூடிய ஒரு சபையில்
நீங்கள் சேர்ந்துகொள்வீர்களா?
4. உங்கள் வாழ்க்கையின் எந்தச் சூழ்நிலையைத் தேவனுக்குமுன்பாக ஜெபத்தில் கொண்டுவர நீங்கள் விரும்புவீர்கள்?
5. அடுத்த வாரத்தில் இயேசு வருவதாக இருந்தால், அவரைச் சந்திக்க ஆயத்தமாயிருப்பதாக நீங்கள் உணர்வீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை?

Series : வேதாகமத்தின் கண்ணோட்டம்