தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இரண்டு பக்கங்களில் நடைபெறும் போராட்டம் ஆகும். ஒரு பக்கம்…
Day 25

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இரண்டு பக்கங்களில் நடைபெறும் போராட்டம் ஆகும். ஒரு பக்கம் நம்முள் மறைந்திருக்கும் சோதனைகள்; மற்றொரு பக்கம் நம்மைச் சூழ்ந்திருக்கும் தீமைகள். இந்த இரண்டு பக்கங்களில் நடைபெறும் போராட்டத்தைக் குறித்து  ஜெபிக்க ஆண்டவர் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.

“எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்” என்ற ஜெபம், ஒரு கிறிஸ்தவ விசுவாசியின் மாம்சத்தில் இருக்கும் பாவத்தின் நாட்டத்தை மேற்கொள்வதற்கான பெலனை தரும்படி ஜெபிக்கும் ஒரு ஜெபமாகும். “தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” என்ற ஜெபம், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளிலிருந்து தேவன் நம்மை மீட்க வேண்டும் என்பதற்கான ஜெபமாகும்.

நாம் ஏன் பலவிதமான சோதனைகளுடன் போராடுகிறோம்? பாவம் ஏன் நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகிறது? யாக்கோபு கூறுகிறார்,

அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.

யாக்கோபு 1:14

கிறிஸ்தவர்கள் உலகத்தில் உள்ளவர்களை பார்க்கும்பொழுது, தங்களை மிகவும் சிறந்தவர்களாக பார்க்கக்கூடாது. பாவத்தின் வேர் இன்னும் நமக்குள்ளே இருக்கிறது. நம்முடைய மாம்சமானது ஒரு ஊற்றைப்போல இடைவிடாமல் தொடர்ந்து சோதனைகளை நமக்குத் தருகிறது, ஆகையால் இவைகளோடு நாம் போராட வேண்டியதாயிருக்கிறது.

ஆனால் சோதனைகள் மட்டுமே நம்முடைய ஒரே பிரச்சினை அல்ல. தீமையின் அதிகாரங்களுடனும் நமக்கு போராட்டமுண்டு. இதைப் பற்றி ஜே.. பேக்கர், “I Want to Be a Christian” என்ற தனது புத்தகத்தில் ஒரு அருமையான கருத்தைக் கூறியுள்ளார்.

உங்களுடைய வாழ்வில் பலவிதமான தீமைகளினால் அச்சுறுத்தப்பட்டு ஒவ்வொரு நொடியும் ஆபத்தில் உள்ள நிலையை நீங்கள் காண்கிறீர்களா? இந்த சூழ்நிலையில் தேவன் தரும் விடுதலை உங்களுக்கு தேவை என உணருகிறீர்களா? இந்த நிலையை எப்படி ஒப்பிடலாம் என்றால் இரு திசைகளிலும் போக்குவரத்து ஓடும் ஒரு நகரச் சாலையின் நடுவில், கண்கள் கட்டப்பட்டு, காதுகள் அடைக்கப்பட்ட நிலையில் அலைந்து திரிபவரைப் போலவே நீங்கள் இருக்கிறவர்களாக ஒப்பிடலாம்.”

நாம் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தவும், அவருடைய ராஜ்யத்தின் முன்னேற்றத்திற்காக வாழவும், அவருடைய சித்தத்தைச் செய்யவும் வேண்டுமென்றால், நாம் நிலைநிறுத்தப்பட்டு மன்னிக்கப்படுவது மட்டுமல்லாமல், நாம் விடுவிக்கப்படவும் வேண்டும். இதனால் தான் ஒவ்வொரு விசுவாசியும், “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” என்று ஜெபிக்க வேண்டும்.

தியானத்திற்கு உரிய கேள்விகள்

உங்களுடைய வாழ்வில் எதிர்கொண்ட சோதனையை உங்கள் நினைவிற்கு கொண்டு வாருங்கள். அதைப்போல உங்களை சூழ்ந்திருந்த ஒரு தீமையை நினைத்துப் பாருங்கள்.

Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்

தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இரண்டு பக்கங்களில் நடைபெறும் போராட்டம் ஆகும். ஒரு பக்கம் நம்முள் மறைந்திருக்கும் சோதனைகள்; மற்றொரு பக்கம் நம்மைச் சூழ்ந்திருக்கும் தீமைகள். இந்த இரண்டு பக்கங்களில் நடைபெறும் போராட்டத்தைக் குறித்து  ஜெபிக்க ஆண்டவர் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்”…