தேவனோடுள்ள ஐக்கியத்தை புதுப்பித்துக்கொள்ளுங்கள்

நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கும்பொழுது, பாவத்தினால் வரக்கூடிய ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து நாம் விடுவிக்கப்பட்டிருக்கிறோம்(ரோமர் 8:1).…
Day 22

நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கும்பொழுது, பாவத்தினால் வரக்கூடிய ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து நாம் விடுவிக்கப்பட்டிருக்கிறோம்(ரோமர் 8:1). ஆனால் பாவத்தின் மீதான விருப்பம், பரிசுத்தமாக வாழும் விசுவாசிகளிடமும் கூட காணப்படுகிறது. நீங்கள் தீர்மானத்துடன் பரிசுத்த வாழ்க்கையைத் தேடினாலும், இந்த உலகத்தில் முழுமையாக பாவமற்றவர்களாக உங்களால் இருக்க முடியாது. பாவம் இருதயத்தில் மறைந்திருந்து நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படுகிறது.

நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

1 யோவான் 1 : 8

அப்படியானால், ஒரு கிறிஸ்தவ விசுவாசி ஏன் தேவனிடம் மன்னிப்பைக் கேட்க வேண்டும்? எல்லாவற்றிற்கும் மேல், நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கும்பொழுது, முழுமையாக, முற்றிலும், சதாகாலத்திற்கும் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். கிழக்கிற்கும் மேற்கிற்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம் தேவன் நமது பாவங்களை அகற்றியிருக்கிறாரென்றால், “எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்று நாம் ஜெபிக்க வேண்டியதின் அவசியம் என்ன?

மேகங்கள் சூரியனிடமிருந்து வருகிற ஒளியை மறைப்பதுபோல, பாவம் தேவனுடனான ஐக்கியத்தைத் தடுக்கிறது.

ஒளியில் நடப்பவர்கள் அனைவருக்கும் தேவனுடனான ஒரு ஐக்கியம் அவர் அளிக்கும் பரிசாக இருக்கிறது. “அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்”(1 யோவான் 1:7). இருள் மறைத்து வைத்திருப்பதை ஒளி வெளிப்படுத்துகிறது, உங்களுக்கு சுத்திகரிப்பு அவசியம் என்பதை நீங்கள் உணர்வதுதான், நீங்கள் ஒளியில் நடக்கிறீர்கள் என்பதற்கான ஒரு உறுதியான அடையாளம்.

பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு, அவற்றை மேற்கொள்ள அவருடைய உதவியை நாடுவது, ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்வின் இயல்பான ஒரு பகுதியாகும். நீங்கள் ஒரு பாவி என்று ஒப்புக்கொள்வதோடு நின்றுவிடாதீர்கள். உங்கள் இருதயங்களில் மறைந்திருந்து உங்கள் வாழ்வில் தொடரும் பாவங்களை அடையாளம் காணுங்கள்(பெருமை, பொறாமை, இச்சை, மனக்கசப்பு, சோம்பல், சுய இரக்கம், போன்றவை.), அவைகளை தேவனிடம் அறிக்கையிட்டு அவரிடம் மன்னிப்பை கேளுங்கள் .

பாவமானது இந்த உலகில் மிகவும் பெலமுள்ளது அல்ல, அந்தப் பாவத்திலிருந்து நம்மை கழுவி சுத்திகரிக்கும் இயேசுவின் இரத்தமே மிகவும் பெலமுள்ளது.

தியானத்திற்கு உரிய கேள்விகள்

உங்களுக்கும் தேவனுக்குமான ஐக்கியத்தை ஏதாவது தடுக்கிறது என நினைக்கிறீர்களா? சிறிது நேரம் ஒதுக்கி, உங்களுக்கு தெரிந்த பாவங்களை தேவனிடத்தில் அறிக்கையிடுங்கள். தேவன் உங்களை சுத்திகரித்து அவருடனான ஐக்கியத்தை புதுபித்துக்கொள்ள ஜெபியுங்கள்.

Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்

தேவனோடுள்ள ஐக்கியத்தை புதுப்பித்துக்கொள்ளுங்கள்

நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கும்பொழுது, பாவத்தினால் வரக்கூடிய ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து நாம் விடுவிக்கப்பட்டிருக்கிறோம்(ரோமர் 8:1). ஆனால் பாவத்தின் மீதான விருப்பம், பரிசுத்தமாக வாழும் விசுவாசிகளிடமும் கூட காணப்படுகிறது. நீங்கள் தீர்மானத்துடன் பரிசுத்த வாழ்க்கையைத் தேடினாலும், இந்த உலகத்தில் முழுமையாக பாவமற்றவர்களாக உங்களால் இருக்க…