பிறர் உங்களை கைவிடும் நேரங்களில்

பிறரை நேசிக்க வேண்டிய கடமையை தேவன் நமக்கு தந்திருக்கிறார், அதைப்போல பிறரும் நம்மை நேசிக்க வேண்டும் என்ற கடமையை அவர்களுக்கு தந்திருக்கிறார். ஆனால் நாம் ஒரு வீழ்ந்து போன உலகில் வாழ்கிறோம், தேவனிடமும் மற்றவர்களிடமும் அன்புகூற தவறியது போலவே மற்றவர்களும் தேவனிடமும் உங்களிடமும் அன்புகூற தவறுவார்கள்.
உங்கள் வாழ்வில் உங்களை முழுமையாக நேசிக்க தவறிய மனிதர்கள் இருக்கலாம். அவர்கள் உங்களுக்கு கடன்பட்டவர்கள். மற்றவர்கள் உங்களை நேசிக்க தவறினாலும், அவர்களை நேசிக்க நீங்கள் கடன்பட்டிருக்கிறீர்கள்.
மற்றவர்களை நேசிப்பது என்றால் என்ன?
அன்பு மற்றவர்களிடம் செலுத்தும் அக்கறையின் மூலம் வெளிப்படுகிறது : “மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” (மத்தேயு 7 : 12) என்று இயேசு சொன்னார். மற்றவர்களின் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். அவர்களின் கண்ணோட்டத்தில் ஒரு சூழ்நிலையை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புவீர்களோ, அதேபோல் அவர்களையும் நடத்துங்கள்.
அன்பு பிறரை அனுதாபத்துடன் நடத்தும் விதத்தில் வெளிப்படுகிறது : சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படவும், அழுகிறவர்களுடனே அழவும் தேவன் நம்மை அழைக்கிறார். பிறரில் அன்புகூறும்போது அவர்களுடைய சந்தோஷங்களிலும் துக்கங்களிலும் பங்குபெறுவார்கள். மற்றவர்களின் சந்தோஷத்தை உங்களின் சந்தோஷமாக பார்ப்பதும், மற்றவர்களின் துக்கத்தை உங்களின் துக்கமாக பார்ப்பதுமே அன்பு பாராட்டுவது ஆகும்.
அன்பு பிறரிடம் இரக்கத்தோடு நடப்பதின் மூலம் வெளிப்படுகிறது : தேவன் உங்களை நீதிமான்களாக்கியபோது, உங்கள் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் இரத்தத்திற்கு கீழ்ப்படுத்தினார். தேவன் நமக்கு கிருபையளிக்கிறார், அது போலவே நாமும் வாழ அழைக்கப்படுகிறோம்.
அன்பு பிறரை மன்னிப்பதின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது: “கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (எபேசியர் 4:32). நாம் மன்னிப்பை பெற்றதினாலே, நமக்கு தீமை செய்தவர்களையும், நம்மை ஏமாற்றியவர்களையும், நமக்கு ஏமாற்றம் தந்தவர்களையும் நாம் மன்னிக்கவேண்டும்.
தியானத்திற்கு உரிய கேள்விகள்
உங்களுக்கு யாராவது கடன்பட்டிருக்கிறார்கள் என நினைக்கிறீர்களா? தேவன் உங்கள் மேல் காட்டும் அன்பை நினைத்து, அவர்களின் கடன்களை அவர்களுக்கு விரோதமாக எண்ணாமல், அந்த ஒரு நபரை நீங்கள் நேசிப்பதற்கு தீர்மானிக்க முடியுமா ?
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்