எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்

“கடன்கள்” மற்றும் “கடனாளிகள்” என்ற வாக்கியங்களை பயன்படுத்துவதன் மூலம், நாம் அனைவரும் உறவுகளால்…
Day 20

“கடன்கள்” மற்றும் “கடனாளிகள்” என்ற வாக்கியங்களை பயன்படுத்துவதன் மூலம், நாம் அனைவரும் உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளோம். மனித உறவுகளில் பொறுப்புகளும் கடமைகளும் இணைக்கப்பட்டுள்ளது. தேவனுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்கள் உள்ளது, மற்றவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்கள் உள்ளது, அதேபோல் மற்றவர்கள் நமக்கு செலுத்த வேண்டிய கடன்களும் உள்ளது.

கடமைகளால் இணைக்கப்பட்ட இந்த கட்டமைப்பிற்குள் வராத ஒருவர் நம் தேவன் மட்டுமே. “கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?”(ரோமர் 11:35). தேவன் நமக்கு கடன்பட்டவர் அல்ல. ஆனால் தேவனுக்கும் மற்றவர்களுக்கும் நாம் கடன்பட்டிருக்கிறோம்.

இந்த கடமைகளையெல்லாம் ஒரே வார்த்தையில் சுருக்கிக் கூறவேண்டுமென்றால் “அன்பு” என்று கூறலாம். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” (மத்தேயு 22:37). நாம் செய்த பாவங்களை குறித்து யோசிக்கும்பொழுது, முதலில் நம் நினைவிற்கு வருவது நாம் செய்த தவறுகள். ஆனால் முதலாவது நாம் யோசிக்க வேண்டியது நாம் செய்ய தவறிய காரியங்கள். நமது வாழ்வில் தேவனை முழு மனதோடு நேசிக்க கடன்பட்டிருக்கிறோம். இந்தக் கடமைகளை நாம் செலுத்த தவறுகிறோம்.

பிறரிடத்திலும் நமக்கு கடமைகள் இருகின்றது. “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” (மத்தேயு 22:39). அதாவது, மற்றவர்களின் நலனை நாம் எப்போதும் நாட கடமைப்பட்டிருக்கிறோம். உங்கள் கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள், அயலார்கள், நண்பர்கள், முதலாளி, உங்களிடம் பணிபுரிபவர்கள், சக பணியாளர்கள் மற்றும் உங்கள் எதிரிகளிடம் கூட அன்பு செலுத்த நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

ஒவ்வொரு நாளும் தேவனிடத்திலும், பிறரிடத்திலும் அன்புசெலுத்த நாம் கடனாளிகளாயிருக்கிறோம், நாம் எவ்வளவு அன்பு காட்டினாலும் இந்த கடனை முழுமையாக செலுத்த முடியாது. தேவன் நம்மேல் அன்புகூறுகிறது போல நாம் அவர்மேல் அன்புகூறவில்லை, மற்றும் நம்மை நாம் நேசிப்பது போல நம்முடைய அயலார்களை நாம் நேசிப்பதில்லை. எனவே, நம் கடன்களை மன்னிக்கும்படி நாம் தேவனிடம் கேட்க வேண்டும்.

தியானத்திற்கு உரிய கேள்விகள்

நீங்கள் ஒரு சில வினாடிகள் தேவனிடத்தில் உங்கள் கடன்களைப் பற்றி பேசுங்கள்.

Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்

எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்

“கடன்கள்” மற்றும் “கடனாளிகள்” என்ற வாக்கியங்களை பயன்படுத்துவதன் மூலம், நாம் அனைவரும் உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளோம். மனித உறவுகளில் பொறுப்புகளும் கடமைகளும் இணைக்கப்பட்டுள்ளது. தேவனுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்கள் உள்ளது, மற்றவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்கள் உள்ளது, அதேபோல் மற்றவர்கள்…