மன்னாவை அசட்டைப்பண்ணாதிருங்கள்

வனாந்தரத்தில், தமது ஜனங்களுக்கு தேவன் மன்னாவை அளித்தபோது. அவர்கள் அதை குறித்து குறைக்கூறினார்கள். தேவன் தந்த உணவு அவர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. அவர்கள் இன்னும் அதிகம் வேண்டும் என ஆசைப்பட்டனர்.
தேவனுக்கு விரோதமாய் முறையிட்ட ஜனங்களை மோசே ‘கலகக்காரர்கள்’ என்று அழைக்கிறார். அவர்கள் தாங்கள் பெற்றக் காரியத்தைக்குறித்து நன்றியுள்ளவர்களாக இருப்பதற்குப் பதிலாக, இல்லாததை நினைத்து துக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் மற்றவர்களையும் தூண்டிவிட்டார்கள். அவர்களின் குறைக்கூறும் குணம் பாளையமெங்கும் பரவியது (எண். 11:4).
அந்த ‘கலகக் கூட்டத்தார்’ அவர்கள் விரும்பியதைப் பெற்றுக்கொண்டார்கள். அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்தது (எண். 11:31). ஆனாலும் இந்த காரியம் சோகமாய் முடிந்தது, அவர்கள் கேட்ட உணவு ஒரு வாதையை உண்டாக்கியது. தேவனுக்கு விரோதமாய் புலம்பினவர்கள் நோயுற்று மரித்தார்கள் (எண். 11:33).
இந்த நிகழ்ச்சி, ஒரு எச்சரிப்பை நமக்கு தருகிறது. அது என்னவென்றால், ஒரு விஷயத்தை அளவுக்கு அதிகமாக நாம் விரும்பக்கூடும் என்று. இந்த கூட்டத்தாரின் இறைச்சிக்கான ஆசை இவர்களை “மிகுந்த இச்சையுள்ளவர்கள்” என குறிப்பிடவைத்துள்ளது (எண். 11:4). மேலும் இந்த அளவுக்கு அதிகமான ஆசை அவர்களின் மற்ற எல்லா விருப்பங்களைக் காட்டிலும் மேலோங்கி இருந்தது. வனாந்தரத்தில் இருந்த ஜனங்கள், தேவன் தந்த மன்னாவுக்கு நன்றி கூறி, அவர் தர மறுத்ததைப் பற்றி இவ்வளவு கடுமையாக முறையிடாமல் இருந்திருந்தால், அது எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!
புகழ், செல்வம், அல்லது மற்ற ஏதாவது வரங்கள், இவைகளை பெற்றுக்கொண்ட பலர், எவைகளுக்காக ஏங்கினார்களோ அவைகளாலேயே அவர்கள் அழிந்துபோன அநேக சோகமான சம்பவங்கள் உள்ளது. இது எதை நமக்கு நினைப்பூட்டுகிறது என்றால், அநேக நேரங்களில் நாம் விரும்பி கேட்கும் காரியங்களை தேவன் தரமறுத்தார் என்றால் அது நிச்சயமாகவே நம்மீது அவர் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடு ஆகும்.
தேவன், தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தவும், அவரது ராஜ்யத்தை பிரசித்தப்படுத்தவும், அவரது சித்தத்தை நிறைவேற்றவும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ தேவையான அனைத்தையும் அவர் உங்களுக்கு தருவார். தேவன் தந்தவைகளெல்லாம் நீங்கள் விரும்பியதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவருடைய கரத்தித்திலிருந்து வந்த மன்னாவை ஒருபோதும் அசட்டைப்பண்ணாதிருங்கள்.
தியானத்திற்கு உரிய கேள்விகள்
தேவன் இன்னும் உங்களுக்கு கொடுக்காத ஒன்றை நினைத்து அவர்மேல் வருத்தமாயிருக்கிறீர்களா? அதற்குப் பதிலாக, அவர் உங்களுக்கு கொடுத்ததற்காக நன்றி சொல்லுவதில் கவனம் செலுத்த முடியுமா?
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்