உம்முடைய ராஜ்யம் வருவதாக

ஒரு அரசனின் ஆட்சிக்கு உட்பட்ட இடமே ஒரு ராஜ்யம் என்று அழைக்கப்படும் . தேவன் பூமியனைத்தையும் ஆளுகிறவர்; ஆனால் இந்த உலகம் அதன் அரசனையும் அவருடைய ஆட்சியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த உலகில் தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டதாயிருக்கும்?
இதைக்குறித்து இயேசு பலமுறை உவமைகள் மூலம் சொல்லியிருக்கிறார்
“தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்?…அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது, அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது. விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து,சகல பூண்டுகளிலும் பெரிதாகி…”
மாற்கு 4 : 30 – 32
தேவனுடைய ராஜ்யம் எல்லா விதைகளை காட்டிலும் சிறிய விதையை போலிருக்கிறது. இயேசுவிடம் ஒரு சில சீடர்களே இருந்தார்கள். இவ்வளவு பெரிய உலகில் இந்த சிறு கூட்ட விசுவாசிகளால் என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?
தேவனுடைய ராஜ்யம் ஜீவனுள்ள விதையாயிருக்கிறது. அது சிறியதாயிருந்தாலும் அதற்கு ஜீவனிருக்கிறதினாலே அது வளரும். அது வளர்ந்து, தோட்டத்திலுள்ள சகல பூண்டுகளிலும் பெரியதாகும் (மாற்கு 4 : 32).இதன்மூலம் இயேசு நமக்கு கற்ப்பிப்பது, தேவனுடைய ராஜ்யத்தின் துவக்கம் சிரியதாயிருந்தாலும் நிச்சயமாக அது வளர்ந்து பெருகும் என்பதே. தேவன் உங்களில் செய்கிற காரியங்கள் உங்கள்மூலம் பிறருடைய வாழ்விலும் அது பரவும்.
தேவானால் மாத்திரமே வளரச் செய்ய முடியும், அதனால் தான் நாம், “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று ஜெபிக்கிறோம். தேவனுடைய சத்தியம் என்கின்ற விதையை நாம் விதைக்கலாம். நம்முடைய ஜெபங்களால் அதற்க்கு தண்ணீர் பாய்ச்சவும் செய்யலாம். ஆனாலும் தேவன் ஒருவரால் மாத்திரமே அதை வளரச் செய்ய முடியும். “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்பது தேவனை பற்றி இன்னும் அறியாத நம் அன்பிற்குரியவர்களுக்கான விண்ணப்பம். இது உலகமெங்கும் சுவிசேஷம் பரவுவதற்கான ஜெபமாக காணப்படுகிறது.
கிறிஸ்துவின் ஆளுகைக்கு கீழ் வாழ இந்த உலகத்திற்கு விருப்பம் இல்லை, இருப்பினும், “கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்” (சங்கீதம் 96 : 10) என்று தேசங்களுக்கும் ஜாதிகளுக்கும் நாம் சொல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். நமது உயிர்த்தெழுந்த ஆண்டவர் வல்லமையுடனும் மகிமையுடனும் திரும்ப வருவார். அப்படி அவர் வரும்போது, அவருடைய ராஜ்யத்தின் முழு ஆசிர்வாதங்களும் முழுமையாக வெளிப்படும்.
தியானத்திற்கு உரிய கேள்விகள்
இன்று தேவனுடைய ராஜ்யம் குறித்து நீங்கள் ஜெபிக்க விரும்பும் ஒரு விஷயம் எது?
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்